• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 40

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
249
230
43
Salem
தன் கண்முன்னே நடந்து கொண்டிருப்பதை தடுக்கும் வழியறியாது நின்றிருந்தான் துருவன்.

மழை ஏதோ இன்று பொய்ந்து தீருவது போல் வெள்ளமாய் கொட்டியது.

அவனின் கோபம் அனைத்தும் இப்பொழுது ஜானகியின் மேல் திரும்பியது.

எப்படி அவளால் துரித கதியில் இதை சாத்தியபடுத்த முடிந்தது என்று மனதில் மேலும் வன்மம் உண்டாகியது.


'இல்லை நான் நினைத்தது போல் இவர்கள் அனைவரையும் அழித்தே தீர வேண்டும்.. ஆனால் அதற்கு இந்த ஜானகியை ஒழித்து கட்ட வேண்டும்.. அவளை என்ன செய்வது..' யோசித்தவனின் சிந்தனையிலும் விழியிலும் கோதை விழுந்தாள்.

அவளையே பார்த்தவனின் விழிகளில் வஞ்சகம் மின்னியது.

எல்லோரின் எண்ணமும் ஜானகியிடம் இருக்கும் போது மெதுவாய் கோதையின் பின்புறம் சென்றவன் அவளின் வாயை பொத்தி தூர இழுத்து வந்தான்.

ஜானகியின் உடலிலிருந்து உதிரம் நிறுத்தாமல் வந்து கொண்டே தான் இருந்தது.

கருவில் ஒரு உயிரை சுமப்பவளின் உடலில் இருந்து நிற்காமல் உதிரம் வந்தால் அவளின் உயிரும் சூழில் உரு கொண்டிருக்கும் உயிருக்கும் அல்லவா ஆபத்து.


எல்லோருக்கும் பயம் தான் உண்டானது.. அடுத்து என்ன செய்வது வைத்தியரிடமும் அழைத்து செல்ல முடியாமல் சோவென பெயும் மழை இடி என எங்கும் செல்ல முடியாமல் கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது.

அவ்வளவு நேரமும் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த சந்திரமதி என்ன நினைத்தாளோ ஜானகியின் புடவை முந்தானையில் இருந்த குங்குமத்தை எடுத்து அவளின் உதிரம் கொட்டும் இடங்களில் தடவினாள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஆறாய் வழிந்து கொண்டிருந்த உதிரம் நின்றது.

உதிரம் நின்றதுமே ஜானகியின் கண் திறந்தது.. அப்பொழுது தான் அங்கிருந்த அனைவருக்கும் உயிரே வந்தது.

எழுந்தவள் தன்னவனை பார்த்து ஒரு புன்னகை சிந்தி விட்டு சந்திரமதியை கட்டி அணைத்தாள்.

சந்திராவின் காதுகளில் எதையோ பேசியவள் தர்மாவிடம் திரும்பி, "தர்மா மதிக்கு இப்பொழுது உன் துணை மிகவும் அவசியம்.. நான் சொல்வதை கேள்.." என்று அவனிடமும் எதையோ கூறியவள் அப்பொழுது தான் கோதையை தேடினாள்.

அங்கே அவள் இல்லையென்று அவள் சிந்தைக்கு எட்டியவுடன் தன்னவனிடம் திரும்பி,

"அத்தான் கோயை எங்கே.." என்றாள் அதிர்ச்சியாய்.

உதிரம் சென்ற வலி இருந்தாலும் தன் மக்களை காப்பாற்ற ஒவ்வொரு பெண்ணும் தாங்க வேண்டிய வலி தானே அது.

அப்பொழுது தான் அனைவரும் கண்டனர் அங்கே கோதை இல்லாததை.

எல்லோரும் கோதையை தேடும் நேரத்தை தனக்கென பயன்படுத்தி கொண்டவன் அவளின் கழுத்தில் கத்தியை வைத்து அவளை பணயமாக்கி,

"என்ன ஜானகி தேவி தங்களின் பெண் வாரிசை தேடுகிறீர்கள் போல.." நக்கலான குரலுடன் வந்தான் கோழையவன்.

அவன் கைகளில் கோதையின் உயிர் இருக்க முதலில் உதிர்ந்தாலும் அடுத்த நொடி சாதரணமாகி,

"துருவா எங்கே உன்னால் முடிந்தால் அவளை கொல் பார்க்கலாம்.." என்றாள் வஞ்சக புன்னகையுடன்.

அவனின் மந்திரம் இப்பொழுது வேலை செய்யாது என்பதை கண்டு கொண்டவன் தான் கோதையை பணயமாக்கினான்.

ஆனாலும் இப்பொழுதும் அவளின் சிரிப்பு ஏதோ தவறென அவனுக்கு தோன்றியது.

ஆனாலும் ஏனோ அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற வன்மம் மட்டும் அவனுக்கு குறையவில்லை.

அப்பொழுது தான் அங்கே கண்டான் சந்திமதியும் தர்மனும் இல்லையென்பதை.

எங்கே சென்றார்கள் என சுற்றிலும் பார்க்கும் போது அவர்கள் ஒரு தூணின் பின்னால் இருந்து வந்தார்கள்.

வந்தவர்களை கண்டவனின் விழிகள் தெறித்து விடும் அளவு விழி பிதுக்கினான்.

அவர்கள் இருவரும் தனித்தனியாய் வரவில்லை.. அர்த்தநாரிஸ்வரராய் ஆண் பெண் பேதமில்லாமல் வந்தனர்.

அதைக் கண்டு தான் ஆணவன் அச்சம் கொண்டான்.

இவர்களுக்கு எப்படி இது தெரியும் என்றவனின் யோசனையில்,

"என்ன துருவா அதிர்ச்சியாக உள்ளதா.. எப்படி உன் சாபம் தெரியும் என்று எண்ணுகிறாயா.. நான்காக யார் தெரியுமா..

உனக்கு தெரிந்த வரையில் பாண்டியர் வம்சத்தின் இளவரசி.. ஆனால் நான் தேவி துர்க்கையின் தீவிர பக்தை.. அவளின் ஆசி பெற்றவள்..

ஏன் இதோ உன் தமக்கையாய் வளர்ந்தவளும் துர்க்கையின் பக்தை தான்.. அந்த தாய் துர்க்கையின் ஆசி பெற்றவர்கள் நாங்கள் இருவரும்.

என்ன தான் உன் அடிமை வளர்ப்பில் அவளை வளரத்திருந்தாலும் இயல்பாக அவளுக்கும் இருக்கும் இந்த ஜமீனின் வீரம் மறைந்து கிடக்கும் என்பதை மறந்து போனாயோ துருவா..?

எனக்கு தெரியும் என் பரம்பரையின் உறை வாளின் அம்சம் என்ன என்று.. மற்றவர்கள் அறியாமல் போனாலும் யாம் அறிவோம் அனைத்தையும்..

என்னவருக்கு தெரியாத ரகசியம் கூட எனக்கு தெரியும்.. ஏன் என் குடும்பம் யாரும் அறியாத ரகசியம் நான் அறிவேன்.

உன் பிறப்பின் ரகசியம் முதல் அனைத்தும் நாங்கள் அறிவோம்.. என்ன நாங்கள் என்று சொல்கிறோம் என்று பார்க்கிறாயா..

நாங்கள் என்றாள் நானும் சந்திரமதியும் தான்.

என்ன பார்க்கிறாய்.. என்ன உன் அடிமையானவளுக்கு எப்படி தெரியும் என்று பார்க்கிறாயா..

மூடனே உன் சக்திக்கு முன் தெய்வ சக்திக்கு உள்ள மகிமையை தெரிந்து கொள்..

நம்மை மீறிய சக்திக்கு என்றுமே வலிமை உள்ளது.

அந்த தெய்வ சக்தி தான் எங்களை இணைத்தது.

எங்களின் பந்தம் இன்று தீர்மாணிக்கப்பட்டதல்ல.. அது எங்களின் விதியோடு படைக்கப்பட்டது.


இந்த குடும்பத்தில் நாங்கள் இணைவது என்று என் தாய் துர்க்கை எங்களுக்கு அருளிய வாக்கு.


இந்த உறைவாளை காப்பாற்ற நாங்கள் அனைவரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

எங்களின் வம்சத்தில் உதிரத்தில் வந்தவள் தான் சந்திரமதியும்.

என்ன பார்க்கிறாய்.. பார்ப்பனன் நீ தந்திரம் செய்யும் போது உன்னை படைத்தவன் தந்திரம் செய்யக் கூடாதா என்ன..?

எம்மை படைத்தவன் செய்த சூழ்ச்சி பிறந்த சில மணி நேரத்திலே உன் தமக்கையானவள் இறந்து விட்டாள்.. தாயை இழந்து தந்தையும் சுயநினைவை இழந்து அனாதையாகிவிட்ட சந்திராவை உன் தாய்க்கு பிரசவம் பார்த்த பெண் இவளை அங்கே கொண்டு சேர்த்தாள்.

தாய் தந்தை இல்லாது வளர்வதற்கு பதிலாக தாய் தந்தை பாசத்துடன் வளரட்டும் என்ற எண்ணத்தில்..

ஆனால் நீ என்ன செய்தாய் இவளின் மனதில் தாழ்வுணர்ச்சியை கொண்ட வந்து இவளை அடிமையாக நடத்தினாய்.

இவளின் பூர்வ ஜென்ம கர்மாவும் உனக்கு துணையிருந்துவிட்டது.

ஆனால் இவளின் உதிர சொந்த பந்தம் பரம்பரை வழக்கமான துர்க்கையை வணங்கும் செயல் இவளை அதிலிருந்து பிரித்துக் காட்டியது.. அது தான் இவள் என் வம்சம் என விளக்கியது.." ஜானகி சொல்ல சொல்ல அங்கிருந்த அனைவருக்கும் ஏதோ அதிசயத்தை கண்டது போல் பார்த்தார்கள் என்றால் துருவனோ ஜானகி சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சியில் நின்று விட்டான்.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து விட்டு செல்லவும் பட்டூஸ்..

இது முழுக்க முழுக்க கற்பனை கதை மட்டுமே அன்றி வேறு யாரையும் புண்படுத்த எழுதவில்லை
 
  • Like
Reactions: Vathani