• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 41

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
ஜானகி சொன்னதை கேட்டு அதிர்ந்து தான் போனான் துருவன்.

"என்ன துருவா அதற்குள் அதிர்ச்சியாகி நின்று விட்டாயா.. இன்னும் உள்ளது கேள்.. இவள் உன் தமக்கையாக உன் அடிமையாக முன் ஜென்ம வினைகளை தீர்த்துக் கொண்டாள்.

நான் இடையக்கோட்டை ஜமீனை தேடி மணந்து கொண்டது எதற்காக தெரியுமா... என் வம்சத்தின் உறைவாளை காக்கும் காவலர்கள் இவர்கள் தான்..

நீ எத்துனை முயன்றும் என்னை மணந்து கொள்ள முடியாததற்கு காரணம் என்ன தெரியுமா.. என் அன்னை துர்க்கையின் மகிமை தான்..

உன் தந்திரமாக யாரும் அறியாமல் உன் இழி செயலை அரங்கேற்றும் பொழுதே எனக்கு தெரியப்படுத்தி விட்டாள் என் அன்னை.


அவளின் ஆசியுடன் தான் நான் இடையக்கோட்டையின் ராணி ஆனேன்.. என் பரம்பரையின் உறைவாளை மட்டுமல்லாமல் எம் குல பெண்களின் மானத்தை காக்கவும் நியமிக்கபட்டவர்கள் தான் இடையக்கோட்டை ஜமீன்.

என்னவருக்கே தெரியாத விடயம் என்ன தெரியுமா நான் அவருடன் இணைய வேண்டும் என்பது தான் எங்களின் விதி.

அதே போல் சந்திரா தர்மாவிற்குகாக படைக்கப்பட்டவள்.

அவள் பெண்ணென்று எண்ணி எதையெல்லாம் அவள் கற்றுக் கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்தாயோ அதை அவள் கற்க யாம் துணை நின்றோம்.

அதுவும் உனக்கு தெரியாமல்.. பேதையவளுக்கு உன் உண்மை குணம் தெரியாமல் தன் தமையனுக்கு தெரிந்தால் வருந்துவானே என்று அவள் கற்ற வித்தைகளை மறைத்து வைத்தாள்.

அவளுக்கு நான் துணை நின்றேன்.. ஆனால் நானே அறியாத ஒரு விடயம் என் மைத்துனர் சந்திராவை நேசித்தது.

அதுவும் நன்மைக்கு தான்.. இல்லையென்றால் உன்னை எதிர்க்க எனக்கு வலு சேர்ந்திருக்காது அல்லவா..

முழு பௌர்னமியில் ஜனித்தவள் இவள்.. ஆதலால் தான் சந்திமதி என்ற நாமத்துடன் அழைக்கப்பட்டாள்.

தர்மா தர்மத்தின் தலைவன்.. காக்கும் பொறுப்பும் காவலனுக்கு உண்டான வல்லமையும் கொண்டவன்.. இவர்கள் இருவரின் ராசி நட்சத்திரத்தின் படி இவர்கள் தம்பதியாய் ஆகும் அன்று உன் மரண சாசனம் உறுதி என்பது என் அன்னையின் ஆணை..

இந்த நேரத்திற்காகத்தான் நான் பல காலமாய் காத்திருந்தேன்.. கணவன் மனைவி என்ற உறவில் உடலிலும் சரிபாதியாய் இருக்கும் இவர்களால் மட்டும் தான் உன் அழிவு என்பது இறைவன் வகுத்த விதி.

இவள் சீறும் வேங்கையாய் மாற வேண்டும் என்றால் என் பரம்பரையின் உதிரம் இவளின் உடலில் கலக்க வேண்டும்.. அதற்காகத்தான் என் உதிரத்தை இவளின் மேனியில் சிதறினேன்.. ஆனால் நீ செய்த சூழ்ச்சி என் உடலில் உதிரம் நிற்காமல் வழிந்தது.. அதை நிறுத்தும் வல்லமை கொண்டவளும் இவள் தான்.. இவளால் தான் அது முடியும்..

துருவா உன் அழிவு ஆரம்பமாகிவிட்டது மூடனே.. இனி உன் உடலின் ஒவ்வொரு செல்லும் மண்ணுக்கு இறையாகப் போவது உறுதி.." கர்ஜனையுடன் அவனின் அழிவை காண ஆவலாய் காத்திருந்தாள் ஜானகி தேவி.


அவள் சொல்வதை கேட்டவன் சிறிது நேரத்தில் வானமே இடிந்து போகும் அளவு சிரித்தான் பைத்தியமாய்.

மற்றவர்களோ இவன் பைத்தியமா என்ற ரீதியில் அவனை பார்த்திருந்தனர்.

"என்ன சொன்னாய் ஜானகி தேவி என் அழிவு ஆரம்பமா... நல்ல கற்பனை வளம் தான் பாண்டிய வம்சத்தின் இளவரசிக்கு..

என்னை அழிப்பது என்ன அவ்வளவு சுலபம் என்று நினைத்தாயா..? நான் மனது வைக்காமல் என் அழிவு நடவாது ஒன்று..

தாங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள் போல.. யாம் அந்த மீனாட்சி சுந்தரேசனிடம் வரம் வாங்கியதை மறந்து விட்டாயா.. ஒரு மானுட கைகளில் என் மரணம் நிகழாது என்பதை.." என்றான் எள்ளலாய்.

அவனது வார்த்தையினை கேட்ட ஜானகி தேவி மெதுவாக சிரித்துவிட்டு,

"மூடனே மறந்தது நான் அல்ல நீ தான்.. நீ வாங்கிய வரத்தை மட்டும் கூறுகிறாயே உன் சாபம் என்னவென்று மறந்தாயா துருவா.. நான் நினைவுபடுத்தவா..

ஒரு ஆணோ பெண்ணை உன்னை மானுட அவதாரத்தில் அழிக்க முடியாது.. அதுவே மனதால் இணைந்த இருவர் அந்த துர்க்கை அம்மனின் ஆசி பெற்றவர்கள் என்றாள் அவர்களால் முழு ஆணாகவும் அல்லாமல் முழு பெண்ணாகவும் அல்லாமல் ஆண் பாதி பெண் பாதி என அர்த்தநாரிஸ்வரராய் இணைந்தவர்கள் உன்னை அழிக்கும் வரம் பெற்றவர்கள்.. அந்த வரம் பெற்றவர்கள் இவர்கள் இருவரும் தான்..

உன்னை அழிக்கும் வல்லமை இவர்களிடம் மட்டுமே உள்ளது.. ஆனால் இதன் சூத்திரதாரி என் தாய் துர்க்கை தான்.. இப்பொழுது உன் அழிவு நிச்சயம் தான் துருவா.." என்றாள் கர்ஜனையாய்.

அவள் சொன்னதை கேட்டு ஆத்திரத்துடன் ஜானகியை பார்த்த துருவன் தன் கண்களை மூடி எதையோ உச்சரித்தான்.

அவன் உச்சரித்த அடுத்த நொடி அங்கிருந்த தூண்களில் இருந்த சிலைகள் அனைத்தும் உயிர் பெற்று வந்தது.

அத்தனையும் கல் சிலைக்கு உயிர் வந்து ஜானகி குடும்பத்தினர் அனைவரையும் தாக்க வந்தது.

அதைப் பார்த்த துருவனின் கண்களில் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது.

"இதை கடந்து வா ஜானகி.. அப்பொழுது என்னை அழிக்கும் வழியை தேடு.." என்று செருக்குடன் கூறினான்.

அந்த கற்சிலைகளின் தாக்குதலை கண்ட ஜானகி தன் இருகரத்தையும் கூப்பி ,

"தாயே துர்க்கையம்மா இந்த கற்சிலைகள் மீண்டும் சிலையாகட்டும் தாயே.. இதன் உயிர் அதை கொடுத்தவனிடமே செல்லட்டும் தாயே.." என்று எதையோ சொல்லி துர்க்கையை வேண்டினாள்.


அவள் வேண்டிய அடுத்த சில நொடிகளில் அந்த கற்சிலைகள் மீண்டும் அந்தந்த தூண்களிலே சிற்பமாகிவிட்டன..

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த துருவன் கோதையை அழைத்து வரச் சொல்லி தன் ஆட்களிடம் கட்டளையிட்டான்.

அவர்கள் கோதையின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினான்.

அதில் அவளின் கழுத்திலிருந்து உதிரம் வெளியே வர ஆரம்பித்தது.

அதை கண்டவர்களுக்கு மனம் பதைபதைக்க அவளின் அருகே செல்ல முயற்சித்தனர்.

ஆனால் கொடுங்கோலனோ, "நில்லுங்கள் யாரும் இவளின் அருகே நெருங்க கூடாது.. அப்படி நெருங்கினாள் இவளின் கழுத்தில் கத்தியை அழுத்தமாய் பாய்ச்சிவிடுவேன்.." என்று பெண்ணை பணயமாய் வைத்து மிரட்டினான் கோழை.

அவனின் ஆத்திரம் கண் மண் தெரியாமல் கத்தியை அழுத்த பெண்ணவளின் கழுத்திலிருந்து உதிரம் அதிகமாய் பெருகியது.

அதை கண்டவர்களுக்கு வளர்த்த பாசம் கண்களில் நீரை கொண்டு வந்தது.

அவர்கள் அனைவரின் கவனமும் சிதைந்த அந்த நேரத்தை பயன்படுத்தி கோதையின் கழுத்தை அறுத்தவன் அடுத்த நொடி தப்பியோடினான்.

கோதை ரத்த வெள்ளத்தில் மிதக்க அனைவரும் அவளை காக்கும் வழியறியாது திகைத்து நின்றனர்.




அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. கதையை படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்..