• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 42

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
249
230
43
Salem
அனைவரும் கோதையை எப்படி காப்பதென என பதட்டமான சூழ்நிலையை தனக்கு சாதகாம பயன்படுத்தி அங்கிருந்து தப்பியோடினான் துருவன்.

ஆனால் அதை ஜானகி பார்த்துவிட்டாள்.. அவளுக்கும் கோதையை நினைத்தும் வலி இருந்தாலும் அரக்கனை வதம் செய்வது அல்லவா முக்கியம் என்ற நிலையில் தர்மனையும் சந்திராவையும் அழைத்துக் கொண்டு துருவனை தொடர்ந்தாள் தன்னவனின் ஒப்புதலுடன்.

இங்கே கோதையை அவசரமாய் தூக்கிய பிலவேந்திரன் அவசரமாய் வைத்தியரிடம் அழைத்து சென்றான் கூடவே சந்திரமதியின் பெற்றோருடன்.

அவர்களுக்கும் வலி அதிகமாகவே இருந்தது.. இத்தனை ஆண்டுகளாய் சுயநினைவு இல்லாமல் அரக்கனின் கைப்பொம்மையாய் இருந்ததை நினைத்து முழுதாய் வருந்தினர்.

கூடவே தங்களின் வாரிசு இல்லாதது ஒரு வருத்தம் என்றாலும் தங்கள் வீட்டு சீமாட்டியாய் வலம் வந்தவளை அரக்கனின் சொல் கேட்டு அகதியாய் வளர்த்ததையும் நினைத்து மனம் வருந்தினர்.


இங்கே துருவனை பிடித்த தர்மாவிற்கு கோதையின் உயிர் துடிப்பில் உண்டான கோபத்தில் ஆத்திரம் கண்ணை மறைக்க தன் கைகளில் இருந்த உறைவாளை கொண்டு எதையும் சிந்திக்காமல் யாரின் குரலுக்கும் செவி சாய்க்காமல் ஆக்ரோஷத்தின் மொத்த வடிவமாய் நின்றவன் துருவனின் கழுத்தில் உறைவாளை வீசியிருந்தான்.

உடலும் தலையும் தனித்தனியாக துருவன் கிடந்த நிலை கண்டு தான் தன் கோபம் தனிந்தான். அவன் இயல்பு நிலைக்கு திரும்பவும்,

"தர்மா என்ன காரியம் செய்து வீட்டிர்கள்.. ஆத்திரத்தில் மதியிழந்து விட்டீர்களா என்ன.. இவன் உயிர் துறக்கும் சமயம் அந்திம நேரமாக இருத்தல் வேண்டும்.. அப்பொழுது தான் இவனின் ஆத்மாவும் சேர்ந்தே மரணிக்கும்.. ஆனால் தங்கள் செய்த காரியத்தில் அவனின் உடல் தான் அழிந்தது.. அவனின் ஆன்மா மண்ணிற்குள் அல்லவா மறைந்து போகும்..

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்னும் கூற்றை உண்மையாக்கிவிட்டாயே தர்மா.. இப்பொழுது இதற்கு தீர்வு தான் என்ன.. மண்ணிற்குள் மறைந்த அவனது ஆன்மா மீண்டும் வெளிவருவதற்கு அவனின் மறு ஜனனம் வேண்டுமே.." என்று புலம்பியவளை பார்த்து,

"அண்ணியாரே மன்னிக்கவும் என் தங்கையின் நினைவில் தான் இவனை கொன்றேன்.. ஆனால் இவனின் உடல் தான் அழிந்து விட்டதே.. இவனின் ஆன்மா என்ன செய்து விட முடியும்.." என்றான் எதுவும் புரியாமல்.


"அப்படி சுலபமாய் எண்ணிவிடாதே
தர்மா.. உடலுக்கு இல்லாத வலிமை ஆன்மாவுக்கு உண்டு.. அதுவும் இவனை போன்ற ஒரு தந்திரகாரனுக்கு அவனின் ஆன்ம அழிவு நடந்தால் தான் இத்தனை பெரிய அரக்கனை அழித்ததற்கு நாம் பெருமை பட வேண்டும்.. ஆனால் இவனின் ஆன்மா மண்ணிற்குள் மறைந்து அவனின் மறு ஜனனத்திற்காக காத்துக் கொண்டிருக்கும்..

இவனைப் போன்ற தீய ஆத்மாக்கள் மக்களிடையே உலவுவது மக்களுக்கு நன்மை இல்லை..

இதற்கு தீர்வு என்ற தாய் துர்க்கை தான் தர வேண்டும்.." என்றாள் கலக்கமுடன்.

சந்திராவும், "ஆமாம் அத்தான் அக்கா கூறுவது முற்றிலும் உண்மையே.. அக்கா வாருங்கள் நம் துர்க்கை தாய் நமக்கு வழியை காட்டுவாள்.." என்று மூவரும் முதலில் அங்கே இருக்கும் துர்க்கை ஆலயத்திற்குள் சென்றனர்.

அங்கே சென்ற சந்திராவும் ஜானகியும், "தாயே துர்க்கையம்மா ஏதோ அபத்தம் நடந்து விட்டது.. தங்களின் உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை.. இதற்கு ஒரு மாற்று வழியை தாருங்கள் தாயே.." மனமுவந்து வணங்கினார்கள்.

தர்மனும், "தாயே இது என்னால் நேர்ந்த அனத்தத்திற்கு மனம் வருந்துகிறேன்.. வழி இருந்தும் கோபத்தினால் யாம் செய்த செயலை மன்னியுங்கள் தாயே.." என்றான் மனம் கலங்கி.

மூவரும் மனம் கலங்கி துர்க்கையை வணங்கி கொண்டிருக்கும் போது அங்கே , 'ஆஆஆ மன்னிப்பு ஆஆஆஆ மன்னிப்பா என்ன தவறு செய்தாய் மன்னிப்பதற்கு.. உங்களின் விதி எழுதிய சதிக்கு நீயேன் மனம் வருந்துகிறாய்..

அரக்கனின் உடல் அழித்து தற்சமயம் மக்களின் துயரை துடைத்திருக்கிறாய்.. செல் உன் வீட்டு பெண் வாரிசு மீண்டு விட்டாள்..

செல் உனக்கான வாழ்வை வாழ்.. உங்களின் வாழ்வு மகிழ்வுடன் பெருகட்டும் இல்லறம்.." என்று ஒரு வயோதிகரின் அசரீரியான வார்த்தையை கேட்டதும் தான் அனைவருக்கும் சிறிது மனம் தெளிந்தது .அவரை மன மகிழ்ச்சியுடன் வணங்கி விட்டு சென்றனர்.


மூவரும் மகிழ்ச்சியுடன் வெளியே செல்லும் போது ஏனோ தர்மா மட்டும் மீண்டும் அந்த வயோதிகரை பார்த்தான். அவனுக்குள் ஏதோ ஒன்று உறுத்தியது.. ஆனால் என்னவென்று தான் புரியவில்லை.

பெண்கள் யாவரும் மகிழ்ச்சியுடன் முன்னே சென்று விட்டனர் கோதையை கான.

மனக் குழப்பத்தில் இருந்த தர்மன் மட்டும் மீண்டும் ஆலயத்திற்குள் வேகமாய் பிரவேசித்தான்.


அந்த துர்க்கையை கையெடுத்து வணங்கியவன் தன் விழிகளை நாலாபுறமும் சுழற்றியவனின் கண்ணிற்கு தூரத்தே தூணில் அமர்ந்து யோகநிலையில் இருந்தார் அந்த வயோதிகர்.

வெள்ளை நிற தாடியும் நெற்றியில் சந்தன குங்குமம் பூசி உடலில் விபூதியை பூசி கொண்டு செந்நிற வேட்டியில் யாக நிலையில் அமர்ந்திருந்தார் அவர்.

அவரின் அருகே சென்றவன், "சுவாமி தங்களின் வார்த்தை மகிழ்ச்சி அளித்தாலும் தங்களின் விழிகள் என்னை ஏதோ எச்சரித்தது போல் இருந்ததே.. அதை நான் நன்கு உணர்ந்தேன் சுவாமி.. என்னவென்று கூறுங்கள் சுவாமி.." என்றான் இரு கைகளையும் கூப்பி.


அவரோ மென்புன்னகையை சிந்தியபடி , " மகனே அரக்கனின் உடலை வதம் செய்து உன் குடும்பத்தின் வாரிசை அல்லவா அழித்து விட்டாய்.." என்றார் நிதானத்துடன்.

" சுவாமி என்ன கூறுகிறீர்கள்..எம் வம்சத்தின் வாரிசை அழித்து விட்டேனா.. அதுவும் நானா.. எனக்கு எதுவும் விளங்கவில்லையே சாமி.." கலங்கிய குரலில் கூறினான்.

"ஆம் மகனே உன் வம்சத்தின் வாரிசாக உன் தாயானவளின் வயிற்றில் ஜனித்த உயிரும் அல்லவா கலையப் போகிறது.."

" சுவாமி என்ன கூறுகிறீர்கள் இல்லை சுவாமி இது நடக்கக்கூடாது.. என் அண்ணியார் தன் குழந்தையின் வரவுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.. இது நடந்தால் என்னையே என்னால் மன்னிக்க முடியாது சுவாமி.." என்றான் கலக்கத்துடன்.

"வஞ்சகனின் சூது அறியாமல் ஆத்திரத்தில் மதியிழந்து நீ செய்த செயல் உன் அண்ணியாரின் கருவறைக்குள் விஷம் தாக்கியுள்ளது மகனே.. அது மட்டுமன்றி நீ உடலை அழித்தவன் ஆன்மா மண்ணுக்குள் அல்லவா மறைந்து உள்ளது.. அது வெளியே வராமல் இருக்க வேண்டுமானால் உன் உதிரத்தால் நான் கூறும் மந்திரத்தை கூறி அந்த இடத்தில் கட்டு கட்டு..

உன் செங்குறுதியை தாண்டி அந்த ஆன்மா வரவேண்டும் என்றாள் மீண்டும் அதே இடத்தில் உன் உதிரம் சிந்தினாள் ஒழிய அந்த கட்டுக்களை யாராலும் அவிழ்க்க முடியாது.." என்று கூறி அவனுக்கு மந்திரத்தையும் கூறினார்.

அதை மனதால் உள்வாங்கியவன் மீண்டும் தயங்கியபடி, "சுவாமி என் வம்சத்தின் வாரிசை காக்கும் வழியை கூறுங்கள் சுவாமி.." என்றான் யாசகமாய்.


"இல்லை மகனே காலம் கடந்து விட்டது.. இன்னேரம் அது உதிரமாய் வெளியேறி இருக்கும்.." என்று கைவிரித்து விட்டார் வயோதிகர்.

அதே நேரம் இங்கே கருசிதைந்து செங்குறுதி கால்களுக்கு இடையே வெளியேற மயக்கமடைந்தாள் ஜானகி.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்