• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 43

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
249
230
43
Salem
கோதையை கண்ட ஜானகி கலங்கி தான் போனாள்.. ஆனால் வைத்தியரின் நம்பிக்கை வார்த்தை அவளுக்கு சற்று ஆறுதலாயிருந்தது.

கோதையின் விழிப்புக்காக காத்திருந்தவளுக்கு சட்டென அடிவயிற்றில் சுரீரென வலி கண்டது.. இத்தனை நேரமாய் உடலில் வலி இருந்தாலும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ள விடாமல் அடுத்தடுத்த விடயங்கள் அவளின் அந்த வலியை மறக்கச் செய்தது.

ஆனால் இப்பொழுது எல்லாம் முடிந்த நிலையில் வலி அதீதமாய் வலித்தது.. ஒரு நிலைக்கு மேல் வலியை தாங்கி கொள்ள முடியாமல் அடிவயிற்றை பிடித்துக் கொண்டவள்,

"அம்மா..." என்ற அலறலுடன் கீழே விழ இருந்தவளை அருகிலிருந்த சந்திரா தாங்கி பிடித்தாள்.

அவளின் அலறல் சத்தம் கேட்டு சந்திராவின் பெற்றோரும் பிலவனும் அவளருகில் வருவதற்குள்ளாகவே அவளின் கால்களுக்கு இடையில் இருந்து உதிரம் வெளியேறியது.

அதை கண்ட அனைவரும் பயந்து தான் போயினர்.. யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.. இரு உயிராய் இருப்பவளுக்கு அதீத அலைச்சல்.. உதிரம் வெளியேறியது என அனைவருக்கும் பயம் கண்டது அவளது நிலை.

அவளின் அலறல் சத்தம் அந்த கட்டிடம் அதிரும் அளவிற்கு கேட்டது.. ஆனால் யாராலும் அந்த வலியை வாங்க முடியாது அல்லவா.. அவளின் அலறல் கண்டு துடிதுடித்து போனான் பிலவன்.

அவளின் சத்தத்தில் அங்கிருந்த வைத்தியர் விரைவாக வந்தார்.. அதற்குள்ளாகவே உதிரத்தின் நடுவே மயக்கமுற்றாள் ஜானகி.

இங்கே தர்மனிடம் பேசிக் கொண்டிருந்த வயோதிகரோ, "மகனே உன்னை தாயாய் வளர்த்தவள் தற்சமயம் தன் தாய்மை நிலையை பறிகொடுத்துள்ளாள்.. அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது உன் கடமை.. விரைந்து செல் மகனே.." என்று கட்டளையிட்டார்.

அங்கிருந்த யாருக்கும் என்ன நடந்தது என்று எதுவும் புரியவில்லை.. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது.. இறந்தவனின் சதி தான் இது என்று.

விரைவாக வந்தவன் கண்டது என்னவோ தன் தாயானவளின் கதறலைத் தான்.

" அண்ணா என்னவாயிற்று அண்ணியாருக்கு.." என்றவனுக்கு பதில் கூட அளிக்காமல் தன்னவளின் நினைவில் மனம் கலங்கி நின்றான் பிலவேந்திரன்.

" மதி நீயாவது சொல் ஏன் அண்ணியார் இப்படி கதறுகிறார்கள்.." என்று தன்னவளிடமும் கேட்டான்.

அவளோ அழுது கொண்டே, "அத்தான் அக்கா அக்காவின் கரு கலைந்து விட்டது அத்தான்.. அக்காவும் இப்பொழுது உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்கள்.. எங்களுக்கு பயமாய் இருக்கிறது அத்தான்.. இப்பொழுது தான் கோதை மீண்டாள்.. இப்பொழுது அக்கா.." என்று தன்னை மீறி தன்னவனை கட்டிக் கொண்டு அழுதாள்.

எத்தனை பலமுள்ளவனாக இருந்தாலும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் வலிக்கு ஆறுதல் தேட முடியும்.

அதே நிலை தான் இப்பொழுது சந்திரமதிக்கும்.. ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சியை தாங்கி கொள்ள முடியும்.

உடன் பிறந்தவன் என்று எண்ணியவன் அரக்கர்களின் வம்சம் இருந்துள்ளான்.

இதோ இப்பொழுது தனக்கென்று ஒரு குடும்பம் அமைந்துவிட்டது என்ற எண்ணத்தில் அக்குடும்பத்தின் ஆணிவேரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

இதோ குடும்பமே கலக்கத்தின் பிடியில் நிற்கதியாய் நிற்கிறது.

"தாயே துர்க்கையம்மா எங்கள் குடும்பத்தின் ஆணிவேரை மீட்டுக் குடுங்கள் தாயே.. எங்களின் குலவதுவை தாருங்கள் தாயே.." கணவன் மனைவி இருவரும் அந்த துர்க்கை தேவியிடம் யாசகம் கேட்டனர்.

அவர்களின் வேண்டுதல் பலித்து விட்டனவோ என்னவோ அடுத்த அரை நாழிகையில் வைத்தியர் வந்து ஜானகியின் உயிர் காப்பாற்றபட்டதாக தெரிவித்தார்.. ஆனால் கருவை காப்பாற்ற முடியவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

தங்களின் குலம் தலைக்க வந்த தளிர் இல்லையென்றாலும் இந்த ஜமீனின் பெண்ணரசி மீண்டு வந்தாளே அதுவே சந்தோஷம் அல்லவா என்ற நினைவே போதும் என்று இருந்தனர்.

எல்லோரின் மனமும் மழலை சென்றதில் வருத்தம் இல்லையென்றாலும் ஜானகி மீண்டு வந்தது மகிழ்ச்சியை கொண்டு வந்தது.

மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக கோதையும் மீண்டு வந்தாள்.

இருவரும் உடல்நிலை சரியாக வந்த ஒரு வாரத்திலே சந்திரமதி தர்மனின் திருமணம் ஊரறிய உறவை அழைத்து விமர்சையாக நடத்தினாள் ஜானகி.

அந்த வீட்டின் மூத்த மருமகளாக இல்லாமல் தாயாய் தாங்கி அனைத்தும் செய்தாள்.

ஆனாலும் மனதோரம் அவளுக்கு வலி இருந்தது.. தனக்கென்று ஒரு பிள்ளை இல்லையே என்ற ஏக்கம்.. அவளின் ஏக்கம் அறிந்த அவளின் குடும்பத்தினரும் அவளை தனித்து விடாமல் அவளுடனே இருந்தனர். இதிலே தர்மன் மேலும் ஒரு படி மேலே போய் ஜானகியிடம்,

"அண்ணியாரே மழலைச் செல்வம் இல்லை என்று வருந்தாதீர்கள்.. இப்பிறவியில் தங்களின் கொழுந்தனாய் நான் பிறந்தாலும் தங்களின் மூத்த மகன் நான் என்பதை தாங்கள் மறவாதீர்கள்.. இனி வரும் அனைத்து ஜென்மத்திலும் நான் தான் தங்களின் புதல்வன் அண்ணியாரே இது என் தெய்வத்தின் மீது வாக்கு.. இடையக்கோட்டை இளைய ஜமீன் என்றும் வாக்கு தவறாதவன்.. எனக்கு தாங்கள் சொல்லித் தந்த நல்லவைகளை நான் மறக்கவில்லை அண்ணியாரே.." தன் தாயானவளை தேற்றினான் தர்மன்.

தன் வளர்ப்பு மகனை கண்டு பெருமிதம் தாங்க, "நிச்சயம் தர்மா இப்பொழுதும் எப்பொழுதும் நீ தான் எனது மூத்த புதல்வன்.. நான் வருந்தவில்லை மகனே.. இதோ என் மகன்.." என்று பெருமையுடன் தன் மகனாய் பறைசாற்றினாள் ஜானகி.

கோதைக்கும் வரன் பார்த்து விவாகம் செய்யப்பட்டது.

அவரவரின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாய் சென்று கொண்டிருக்கும் பொழுது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.


அன்று துர்க்கையம்மன் ஆலயத்திற்கு சந்திரமதியும் ஜானகியும் சென்றிருந்தனர்.. அவர்களின் பாதுகாப்பிற்காக தர்மனும் இன்னும் இரண்டு ஆட்களும் அவர்களுடன் சென்றிருந்தனர்.

முக்கியமான விடயமாக வெளியே சென்றிருந்த பிலவேந்திரன் நேரே ஆலயத்திற்கு வருவதாக கூறிவிட்டு தான் சென்றான்.


நீண்ட நேரமாகியும் பிலவன் வராததால் பயம் கொண்ட ஜானகி தர்மனை அழைத்து பார்த்து வரக் கூறினாள்.


தன் அன்னையானவளின் ஆணைக்கு கட்டுப்பட்டு தர்மனும் தன் தமையனை தேடி செல்லும் பொழுது அங்கே உடலில் செங்குறுதி நனைய வந்தான் பிலவன்.


அவனைக் கண்ட அனைவரும் பதட்டத்துடன் அவனருகே செல்ல பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு வில் அம்பு ஜானகியின் இருதயத்தை தாக்கியது.

அடுத்த நொடி அவர்கள் சுதாரிப்பதற்குள்ளாகவே எங்கிருந்தோ வந்த அம்பு கணைகள் சந்திரா தர்மன் அங்கிருந்த வேலை ஆட்கள் என அனைவரையும் பதம் பார்த்தது..


யார் அவர்களை தாக்கியது என்று கூட உணர முடியாமல் தாக்குதல் மேலும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தனர்.

யார் சிதைத்தார்கள் என தெரியாமலே இடையக்கோட்டை ஜமீன் அழிந்தது.


வீரம் படைத்தவன் நிச்சயமாக நேருக்கு நேர் தான் தாக்குவான்... கோழைகள் தான் முதுகுக்கு பின்னே தாக்குவார்கள்.. அது போல் யாரோ ஒரு கோழையால் அன்றைய இடையக்கோட்டை ஜமீன் அழிந்தது.

பின்னாளில் கோதையின் மூலமாக இடையக்கோட்டை ஜமீன் உயிர் பெற்றது.

தன் முன் ஜென்ம கதையை கேட்ட ஆதவன் அப்படியே சிலையாகி நின்று விட்டான்.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. நாளை முதல் மீண்டும் ஆதவன் மதி வருவார்கள் பட்டூஸ்.