• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 45

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
இருள் படர்ந்த வேலையிலே மங்கையிவளோ மயக்கத்தின் பிடியிலிருக்க..
மாதவனுக்கோ உள்ளம் அரித்ததன் காரணம் என்னவோ..
அவனவள் துயரத்தில் மூழ்கும் வேலையிலே..
மனாளனும் ஜென்மத்தின் பலனை கேட்டானே..
இது விதியா..? சதியா..?
காலத்தின் கையிலே காக்கும் கவசமாய் அமர்ந்தாளே பேரரசியும்..
உணர்ந்து காப்பானோ காவலனுமே..
மனிதனின் சதியோ விதியின் சதியோ
அனைத்தையும் காக்க வருவானே
அர்த்தநாரியாய்..


அதிகாலை வேலையில் மயக்கத்தின் பிடியில் நிர்மலமாய் உறங்கியிருந்தாள் வெண்மதி.

வாயில் புகையிலையை அதக்கிய கையோடு அழுக்குச் சட்டையும் அழுக்கு லுங்கியுமாய் இருந்தவன் பார்வையில் காமம் கொட்டிக் கிடந்தது.

இரண்டு மணி நேரத்துக்கு முன்பு அடித்த சரக்கு வாடை அந்த இடத்தையே அடைத்தது.. அவளையே பார்த்தவன் அவளின் முந்தானை சேலையை விளக்கி அவளின் பெண்மையை கண்களால் கற்பழித்தான்.

மேற் கொண்டு அவளின் ஜாக்கெட்டில் கை வைக்கும் நேரம் எங்கிருந்தோ வந்த சூரைக்காற்று அவனை தூக்கியடித்தது.

அதில் சுவற்றில் பல்லியாய் சென்று ஒட்டினான்..

கீழே விழுந்தவன் ஜன்னலை எல்லாம் பார்த்தான்.. அத்தனை ஜன்னலும் திறந்து கிடந்தது.

வேகவேகமாக எழுந்து போய் ஜன்னலை சாத்தியவன் மீண்டும் ஒரு கோணலான சிரிப்புடன் பெண்ணவளை நெருங்கினான்.

அவளின் முகத்தை நோக்கி குனியும் நேரம் எங்கிருந்தோ வந்த கட்டை ஒன்று அவனின் பின்மண்டையை பதம் பார்த்தது.

கோபத்துடன் எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.. ஆனால் அங்கே யாரும் இருப்பதற்கான அறிகுறி சுத்தமாய் இல்லை.. பின் மண்டையில் கைவைத்து பார்த்தான்.

அவனின் கையில் செங்குறுதி நனைந்தது.. திடுக்கிட்டவன் இங்கே தான் யாருமில்லையே.. அப்பொழுது நம்மை யார் தாக்கியது.. ஒரு வேளை இவளாக இருக்குமோ என்ற எண்ணத்தில் வெண்மதியின் முகத்தை பார்த்தான்.

நிர்ச்சலமான முகத்துடன் அமைதியாய் உறங்கி கொண்டிருந்தாள் பெண்ணவள்.

இவளும் இல்லையென்றால் பின் யார் தான் என்னை தாக்கியது.. என்று சுற்றும் முற்றும் பார்த்தான் அவன்.

அப்பொழுது தான் அங்கே, "டேய் வீரா என்னை அவளை முடிச்சிட்டியா.." என்ற குரலுடன் மருததுரை அங்கே வந்தான்.

பேசிக் கொண்டே வந்தவன் அங்கே குழப்பமாய் விழிகளை நாலாபுறமும் சுழற்றியவனை கண்டு ஆச்சர்யப்பட்டான்.

" டேய் வீரா என்னாச்சி.. ஏன் இப்போ இப்படி நிக்குற.. என்னடா இது உன் பின் தலையில ரத்தம் வருது.." என்று படபடப்புடன் கேட்டான் மருத துரை.

"ஒன்னுமில்லை அண்ணா.. இவ இங்கேயே இருக்கட்டும்.. நான் இதோ இப்போ வற்ரேன்.." என்று அவனிடம் சொல்லவிட்டு பின் தலையை அழுத்தி பிடித்தபடி அங்கிருந்து சென்றான்.

போகும் அவனை யோசனையாக பார்த்தவன் தன் அருகில் இருந்தவனிடம் திரும்பி, "பரமா இவளுக்கு அந்த மயக்க ஊசியை திரும்ப போட சொல்லு.. அவ மயக்கம் தெளியற மாறி இருக்கு.." என்று விட்டு சென்று விட்டான்.

பரமனும் மருத துரை சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு தலையை மட்டும் வெளியே காட்டி இருளில் பார்த்து கையாட்டினான்.

அங்கே தலையில் குல்லா அணிந்த ஒருவன் வேகமாய் வந்தவன் அங்கே வெண்மதியை கண்டு அதிர்ச்சியடைந்தான்.

" அச்சோ அம்மனி அம்மனி எழுந்திருங்க அம்மனி.." என்று பரபரப்பாய் அவளை தட்டி எழுப்பவதில் முனைப்பில் இருந்தான்.

அவனருகே வந்த பரமன், " இப்போ அம்மனிய எழுப்புற நேரமில்லை.. உடனே இந்த தகவலை ஆதவன் ஐயா கிட்ட முதல்ல சொல்லு.. ம்ம் சீக்கிரம் போ.. அதுக்குள்ள அவனுங்க வராம நான் பாத்துக்குறேன்.." என்று சொல்ல அவசர அவசரமாய் ஆதவனிற்கு வெண்மதியின் புகைப்படத்தை அனுப்பி வைத்தான்.

கூடவே அவள் இருக்கும் இடத்தின் லொகேஷனையும் அனுப்பி வைத்தான்.

இங்கே வெண்மதியை காணோம் என்று வளவன் சொன்ன நிமிடத்திலிருந்து மனமெல்லாம் பாரமாய் வலித்தது ஆணவனுக்கு.

அவனின் அதிர்ச்சி கலந்த நிலை கண்டு வளவன், " அண்ணே சீக்கரம் வாங்க அண்ணிய தேடுவோம்.." அவனை நிகழ்விற்கு கொண்டு வந்தான்.

இருவரும் வெண்மதியை தேடி புறப்படும் சமயம் ஆணவனின் மொபைலில் மெசேஜ் வந்ததற்கான டோன் கேட்டது.

அதை எடுத்து பார்த்தவனின் கண்கள் கோபத்தில் சிவந்தது.

"வளவா வெண்மதி இருக்குற இடம் தெரிஞ்சிடுச்சி.. நான் போய் வெண்மதியை கூட்டிட்டு வற்ரேன்.. நீ இங்கேயே இரு.." என்றான் கட்டளையுடன்.

"அண்ணே நானும் உங்க கூட வர்றேன்.." என்று தன் தமையனுடன் புறப்பட இருந்தவனை,

"வளவா நான் தான் சொல்றேன் இல்லை.. நீ இங்கேயே இரு.. நான் விடியறதுக்குள்ளே அவளுடன் தான் வருவேன்.." அவனை விடுத்து அவன் மட்டும் வெண்மதியை தேடி விழிகளில் கோபத்துடன்.

ஆத்திரம் தலைக்கேற, "என் குடும்பத்தின் பெண் மீதா கை வைத்தாய்.." என்ற கோபத்தில் வெண்மதியை கட்டி வைத்திருக்கும் இடத்திற்கு வந்தான் ஆதவன்.

இங்கே மீண்டும் வீரா வெண்மதியின் அருகே செல்லும் போது வெண்மதியின் முகம் பௌர்னமி நிலவாய் ஒளிர்ந்தது.

அந்த ஒளியில் வீராவின் கண்கள் கூசியது.

அங்கே வந்த மருத துரை, "வீரா இவ முழுசா அந்த ஆதவன் கையில கிடைக்க கூடாது.. சிதைச்சு உயிர் போற நிலையில தான் கிடைக்கனும்.. ம்ம் போ வீரா சீக்கிரம் அவளை நாசமாக்கிட்டு நம்ம இடத்துக்கு வந்துடு.." வீராவின் நிலையை அறியாமல் படபடத்து விட்டு சென்றான்.

அவனுக்கு நன்றாக தெரிந்தது ஆதவன் வருவது.. அவனிடமிருந்து தப்புவதற்காகத் முன்னே சென்று விட்டான் துரோகி.

இங்கே வீராவின் கண்கள் வெண்மதியிடம் நெருங்க முடியாமல் அந்த ஒளி தடுத்தது.

அதை மீறி பெண்ணின் மீது கொண்ட ஆசையினால் சென்றவனின் பின் தலை முடியை இரு வலிய கரம் இழுத்தது.

வீரா முரட்டு தனமான கட்டுமஸ்தான உடலுடன் இருப்பவனை அந்த இரு கரங்கள் கொடிய மிருகத்தினை பிடித்து இழுப்பது போல் இழுத்தது.

அதன் இழுப்புக்கு வலி தாங்க முடியாமல் கத்தினான் வீரா.. முன்பே அடிபட்ட இடத்தினையே அந்த கரங்களும் இருக்கி பிடித்ததால் வலி உயிர் போனது.

தன்னை தாக்குபவன் யாரென்று பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியில் சிலையாய் நின்று விட்டான்.

அங்கே உக்கிரமான விழிகளுடன் ஆதவன் நின்றிருந்தான்.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்..
போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி