• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 46

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
249
230
43
Salem
அய்யனார் வேட்டையாட கிளம்பும் ஆக்ரோஷம் ஆதவனின் கண்களில் இருந்தது. தன் முன்னே ருத்ரமூர்த்தியாய் நின்றவனை கண்டு உடலெல்லாம் நடுங்க தான் செய்தது.. பெண்ணிடம் மட்டும் வீரத்தை காட்டும் இவன் போல கோழைகள் உயிருடன் இருந்தாலும் செத்த பிணத்திற்கு சமன் தானே..

பெண்ணின் உடலை மட்டுமே புசிக்கும் மனித மிருகங்கள் தான் இவனைப் போன்ற விஷக்கிருமிகள்.

ஆதவனுக்கு வெண்மதியை சீரழிக்க நினைத்தவனை கொள்ளும் வெறி வந்தது.

ஆனால் முற்றிலும் இருள் விலகும் நேரத்தில் இவள் வீட்டிலிருப்பது மிகவும் அவசியம் என்று உணர்ந்தவன் தன் கோபத்தையெல்லாம் ஒன்றாக திரட்டி வீராவின் தலையில் அடித்தான்.

அடி ஒன்று தான் ஆனால் இடிபோல் அவனின் தலையில் இறங்கியது.. ஒற்றை அடிக்கே தாங்காமல் கீழே விழுந்தான் வீரா.. பெயரில் மட்டும் வீரத்தை கொண்டவன்.

அவன் கீழே விழுந்ததும் வெண்மதியை தன் கைகளால் அள்ளி கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினான் ஆதவன் யாரும் வரும் முன்னே.

பயந்து செல்லவில்லை.. வெண்மதியை காக்கும் கடமை அவனுக்கு உண்டு.. அவளின் மானத்தையும் சேர்த்து காக்கும் கடமையும் உண்டு.. அதற்க்காகத்தான் யாருமறியாமல் அங்கே இருந்து வேகமாய் சென்றான்.


முற்றிலும் இருள் விலகாத அதிகாலையிலே வெண்மதியை அவளறையில் விட்டவன் யாரும் அறியாமல் தன் அறைக்கு சென்று விட்டான்.

உயிர் ராகம் தானா..

உள் சோகம் தானா..
பழி பாவம் தானா..
இங்கே இங்கே..
தீயில் எறிந்தால் என்ன..
ஜீவன் கரைந்தால் என்ன..

காதல் வாழுமோ..

காலை வேலையில் காதில் ஒலித்த பாடலை கேட்டு கண் விழித்தாள் வெண்மதி.

இரவு நடந்தது எதுவும் அவளுக்கு விளங்கவில்லை.. ஏன் தெரியவில்லை.. மயக்கத்தின் பிடியில் இருந்ததாலோ என்னவோ தலைவலி மண்டையை சூடேற்றியது.

தன் தலையை பிடித்துக் கொண்டவளுக்கு எங்கிருந்தோ வந்த பாடல் ஏனோ மனதை வதைத்தது.

ஏனென்று தான் புரியவில்லை பாவையவளுக்கு.

அதை உதறி தள்ளிவிட்டு தன் காலைகடனை முடிக்க குளியலைறைக்குள் சென்றாள் பெண்ணவள்.


குளித்து முடித்து அன்றலர்ந்த மலராய் வந்தவளை வரவேற்றது சோபாவில் வேட்டியை சட்டையில் மீசையை அய்யனார் போல முறுக்கியபடி அமர்ந்திருந்த ஆதவன் தான்.

அவனிடம் எதுவும் பேசாமல் நேராக சமையலறைக்கு சென்றவள் அங்கிருந்த பாலில் காபியை போட்டு கொண்டு வந்து ஆதவனிடம் கொடுத்தாள்.

அதை அவளின் முகத்தை பார்த்தபடியே பெற்றுக் கொண்டான்.

பெண்ணவளும் தலைகுணிந்தபடியே அவனிடம் கொடுத்தவள் மீண்டும் சமையல் கட்டிற்கு சென்று விட்டாள்.

அதே நேரத்தில் அவனின் அலைபேசி சத்தம் எழுப்பியது.. அதை எடுத்து காதில் வைத்தவன் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ சமையல் கட்டை ஒரு பார்வை பார்த்தவன் எழுந்து வீட்டை விட்டு வெளியில் சென்று பேசினான்.

" ஆ ஆ சொல்லுங்க என்னாச்சி.." என்றான்.

"ஐயா நீங்க சொன்ன மாறி அந்த ஆளை ஏரிக்கரை ஓரமா போட்டுட்டேன் ஐயா.." என்றான் பவ்யமாய்.

" ம்ம் சரி இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே மீன் பிடிக்கறவங்க வருவாங்க அப்போ நீங்களும் அந்த கூட்டத்துல இருங்க.. அங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு அப்பப்போ இன்பார்ம் பண்ணுங்க.." என்று கட்டளையிட்டு விட்டு போனை அணைத்தான்.

மீண்டும் உள்ளே வரும் போது அங்கே வளவன் வெண்மதியிடம் எதையோ கூற அதை கேட்டு சத்தமாய் சிரித்துக் கொண்டிருந்தாள்.

உள்ளே வந்தவன் அவளின் சிரிப்பு சத்தத்தில் அப்படியே நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

' பட்டு மா நீ இப்படி சிரிச்சி எத்தனை வருசமாச்சு டா..' என்று அவளையே பார்த்து ரசித்தபடியே அங்கே வந்தான்.

அவனின் ரசனையான பார்வை யார் கண்ணில் விழுந்ததோ கனகத்தின் கண்ணில் விழுந்தது.

அதை பார்த்தவள் உள்ளுக்குள் எரிச்சலுடன் அங்கே வந்து வெண்மதியிடம், "அடியே அறிவு இருக்கா ஒரு பொம்பளை இப்படியா சிரிப்ப.. அதுவும் ஆம்பளைகிட்ட அப்படி என்ன இழிப்பு வேண்டிக் கிடக்கு.. என் ஒரு பையனை கொன்னது பத்தலையா.. இவனையும் கொல்லனுமா.. ச்சீய் போ மூதேவி.." யார் இருக்கிறார்கள் என்று பாராமலே வார்த்தையை விட்டாள்.

அவளின் பேச்சில் வெண்மதியின் விழிகள் தழும்ப கண்ணீர் இப்போ விழவா என்று கரை கட்டியிருந்தது.

அவளின் சிரித்த முகத்தை பார்த்தவன் மனம் அவளின் அழும் வதனத்தை காணும் போது அந்த அழுகையை கொடுத்தவர்கள் மேல் கொலைவெறி உண்டானது.

அதே கோபத்துடன் அங்கே வந்தவன், "சின்னம்மா யாருகிட்ட என்ன பேசுறீங்கன்னு பாத்து பேசுங்க.. அப்புறம் பொம்பளைங்க பேசக்கூடாது சிரிக்கக்கூடாதுன்னு எந்த சட்டமும் இல்லை... போய் முதல்ல உங்களுக்கு கொடுத்த வேலையை போய் பாருங்க.." என்று அவளை அனுப்பி வைத்தவன் அவள் முனுமுனுத்தபடியே சென்றதும் வளவன் வெண்மதியிடம் திரும்பி,

"நீங்க இன்னும் என்ன பன்றீங்க.. வளவா இவளோட காலேஜ்ல அட்மிஷன் போட்டுட்டு அங்கேயே ஹாஸ்டலும் பாத்துட்டு வந்துடு.. இன்னும் ஒரு மணிநேரத்துல நீங்க கிளம்பனும்.." என்று இருவரிடமும் கட்டளையிட்டு அங்கேயிருந்து சென்றான்.


அவன் சென்றது வளவன் வெண்மதியிடம் திரும்பி, "அண்ணி உங்க சர்டிபிகேட்ஸ் லாம் எடுத்து ரெடியா வச்சிருங்க.. நீங்களும் கிளிம்பியிருங்க.. நான் கிளம்பி வந்துர்றேன்.." என்று அவளிடம் சொல்லிவிட்டு அவன் கிளம்ப போகும் சமயம் அவளோ,

"வளவா அது வந்து இன்னும் சமைக்கல.. முடிச்சிட்டு கிளம்பவா.." என்றாள் தயக்கத்துடன்.

அவள் ஆசைப்பட்ட படிப்பு இப்பொழுது அவள் கையருகே அதை உதறித் தள்ள அவள் என்ன முட்டாளா என்ன.. அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டாள்.

ஏனோ அவனின் கட்டளையையும் மீறும் துணிவு அவளிடம் சுத்தமாய் இல்லை.

அப்பொழுது அங்கே வந்த வள்ளி ,

"அம்மா நீங்க போய் கிளம்புங்க.. இனி சமையல் எல்லாத்தையும் என்னைய பாத்துக் சொன்னாங்க மா ஐயா.." என்று விட்டு அங்கிருந்த காபி டம்ளரை எடுத்துச் சென்றாள்.

அவளும் அதை கேட்டு சந்தோஷமாய் கிளம்ப சென்றாள்.

இங்கே ஆதவன் அறைக்கு வந்த வளவன்,

"அண்ணா அண்ணி எங்கிருந்தாங்க.. நடந்த எதுவும் அவங்களுக்கு தெரியாதா.." என்றான் சந்தேகத்துடன்.

"இல்லை வளவா அவகிட்ட எதுவும் கேட்காத.. அவளுக்கு எதுவும் தெரியாது.. அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து தான் கடத்தியிருக்காங்க.. அவ இங்கே திரும்ப வர வரைக்கும் மயக்கத்துல தான் இருந்தா.. அவ இருந்த இடம் இன்னைக்கு எங்கேன்னு உனக்கு தெரியும்.." என்று கடைசி வரியை மட்டும் கோபத்துடன் கூறினான்.


அவனும் அதற்கு மேல் தன் தமையனை தோண்டி துருவாமல் அவன் கொடுத்த வேலையை செய்ய சென்றான்.

இங்கே ஏரிக்கரையில் அருகே மக்கள் கூட்டமாய் பதட்டத்துடன் நின்றிருந்தனர்.

சிறிது நேரத்தில் அங்கே போலிஸ் வேன் வந்தது.. அதிலிருந்து இறங்கிய ஒருவன் வேகமாய் அந்த கூட்டத்தை தாண்டி உள்ளே பார்த்தான்.

அங்கே முகமெல்லாம் தீயில் கருகி உடலெல்லாம் எதோ ஒரு திரவத்தால் எறிந்து யாரென்று அடையாளம் தெரியாமல் ஒருவன் இறந்து கிடந்தான்.


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்...