வளவன் வெண்மதியை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு செல்லும் வழியில் ஏரிக்கரையில் உள்ள கூட்டத்தை பார்த்தனர்.
அங்கே இருந்த கூட்டத்தை கண்ட வெண்மதி ,
"வளவா வண்டியை நிறுத்துங்க அங்கே ஏதோ கூட்டமா இருக்கு.." என்று கூறினாள்.
அதை கண்டு, "இல்லை அண்ணி நாமா போலாம் நேரமாயிடுச்சி.. அதுமட்டுமில்லாம ஏரிக்கரை தானே.. எதாவது பசங்க விளையாண்டுகிட்டு இருப்பாங்க அண்ணி.. நாமா போயிட்டு வந்து பாக்கலாம் அண்ணி.." என்று அவளை சமாதானம் செய்து அழைத்து சென்றான்.
அவளும் போகும் விடயம் முக்கியமானாதால் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சென்றாள்.
அவள் அமைதியைடையவும் தான் வளவனுக்கு நிம்மதியாய் மூச்சி வந்தது. வரும் போதே ஆதவன் அவனிடம் சொல்லித்தான் அனுப்பினான் ஏரிக்கரையில் வண்டியை நிறுத்தக் கூடாது என்று.. அவன் கட்டளையை மீற முடியுமா என்ன அதை சிரமேற்கொண்டு நிறைவேற்றினான் தமையன்.
அவர்கள் இந்த பக்கம் செல்லவும் இந்த பக்கம் போலிஸ் வண்டி வந்து நின்றது.. அதை விட்டு கம்பீரமாய் இறங்கினான் ஒரு இளைஞன்.. அவனின் உடையே சொல்லியது அவன் காவலன் என்று.
தன் கண்களில் இருந்த கூலிங்கிளாஸை கலட்டி சட்டைப்பையில் மாட்டியவன் ஏரிக்கரை கூட்டத்தை நோக்கி சென்றான்.
அவனுடன் வந்த கான்ஸ்டபிள் இருவரும் கூட்டத்தை விலக்கி அவனுக்கு வழி விட்டனர்.
முன்னே சென்றவன் கண்டது அந்த கூட்டத்தின் நடுவே முகம் உடலெல்லாம் வெந்து இறந்து கிடந்த மனிதனின் உடலைத் தான்.
அதை பார்த்ததும் அவனுக்கு பெரிதாய் ஆச்சர்யம் இல்லை.. ஆனாலும் நகரத்தில் இது போல் நடப்பது சகஜம்.. ஆனால் கிராமத்தில் இது போலெல்லாம் நடக்குதா என்ற யோசனையுடன் சுற்றியும் தடயம் ஏதேனும் உள்ளதா என்று தேடினான்.
ஆனால் எந்த தடயம் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை அவ்விடத்தில்.. கூட்டத்தை பார்த்தவன் தன் குரலை செருமிக் கொண்டு,
"இறந்து போறது யாருன்னு யாருக்காவது தெரியுமா.. இவனோட பேரு என்ன.. யாரு இதை முதல்ல பார்த்தது.." என்றான் பொதுவாய்.
கூட்டத்தினர் அனைவரும் அமைதியாக இருக்க ஒருவன் முன் வந்து,
"ஐயா நான் தாங்க பாத்தேன்.. காத்தால மாடுகளை ஓட்டிட்டு ஏரிக்கு வந்தேனுங்க.. அப்போ தான் நாய் ஒன்னு இந்த பொனத்தை குதறிட்டு இருந்துச்சிங்க.. அது தான் ஊர் மக்களை கூப்பிட்டேன் ங்க.. நம்ம ஊர் இளந்தாரி பயலுங்க தான் பெரிய வீட்ல சொல்லி உங்களுக்கு தகவல் சொன்னாங்க சாமி.." என்றார் வயதான ஒருவர்.
அவரை பார்த்தவன், "அப்போ இவன் யாருன்னு உங்களுக்கு தெரியுமா ஐயா.." என்றான் விசாரனையாய்.
"இல்லைங்க சாமி.. இவன் முகமே சுத்தமா தெரியலைங்க.. இவனோட உடலமைப்பு வச்சி பாத்தாலும் தெரியலைங்க சாமி.." என்றார் அவர்.
அதை கேட்டவன் தலையசைத்தபடி கூட்டத்தை பார்த்து, "இங்கே இருக்கற யாருக்கும் இவன் யாருன்னு தெரியாதா.. நீங்க சொன்னா தான் நான் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க முடியும்.." என்றான் யோசனையாய்.
அங்கிருந்த யாரும் எனக்கு தெரியும் என்று முன்வரவில்லை.. தெரிந்தால் தானே சொல்வதற்கு.. அவனின் உடல் முகமெல்லாம் அழுகி அவனின் அடையாளமே இல்லாமல் அல்லவா இறந்து கிடந்தான்.
அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் கான்ஸ்டபிளிடம் திரும்பி, "பாரன்சிக் ஆளுங்களை வர சொல்லுங்க.. பாடிய போஸ்ட் மார்ட்டம் அனுப்ப சொல்லுங்க.." என்று கட்டளையிட்டவன் தன் வேலையை செய்ய துவங்கினான்.
அப்பொழுது கூட்டத்தில் சலசலப்பு கேட்டது.. சிறிது நேரத்தில் வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாய் வந்திறங்கினான் ஆதவன்.
அவனை கண்ட மக்கள் கையெடுத்து அவனை வணங்கினார்கள்.
அந்த காக்கி உடை அணிந்தவனும் யாரென்று பார்த்தவன் ஆதவனை கண்டதும் மீண்டும் தன் வேலையை பார்க்க சென்றான்.
அதே ஊரை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் வந்து வணக்கம் வைத்தான்.. அதை தலையாட்டி ஏற்றுக் கொண்டவன், "என்னாச்சி பாலா.. யாருன்னு கண்டுபிடிக்க முடிஞ்சுதா.." என்றான் கம்பீரமான குரலில்.
அதற்கு பாலா என்பவனோ, "ஐயா யாருன்னு தெரியலைங்க..இவரு நம்ம ஊருக்கு புதுசா வந்துருக்குற ஏசிபி கரன் ஐயா.." என்று ஆதவனிடம் அறிமுகப்படுத்தியவன் கரனிடம் திரும்பி,
"சார் ஆதவன் ஐயா.. பெரிய வீட்டு வாரிசுங்க.. எங்க கிராமத்துக்கு எல்லாம் ஐயா தானுங்க.." என்று கரனிடமும் அறிமுகப்படுத்தினான்.
"வணக்கமுங்க.." இரு கை கூப்பினான் ஆதவன்.
ஆதவன் முகத்தையே பார்த்த கரன் தன் இரு கை கூப்பி, "வணக்கம் ஆதவன் சார்.. உங்களை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே.. நாம இதுக்கு முன்னாடி மீட் பண்ணியிருக்கமா சார்.." என்றான் யோசனையாய்.
அதை கேட்ட ஆதவன் மௌனமாய் சிரித்தபடி, "இருக்கலாம் மிஸ்டர் கரன்.. யோசிச்சி பாருங்க.. அப்புறம் இதை யாரு பண்ணாங்கன்னு கண்டுபிடிங்க கரன்.." என்று மர்ம புன்னகையுடன் அங்கிருந்து சென்று விட்டான்.
அவனின் புன்னகையில் ஏதோ அர்த்தம் உள்ளதாக கரனின் உள்மனம் சொன்னது.
தற்சமயம் அதை ஒதுக்கி விட்டு தான் வந்த வேலையை பார்க்க சென்றான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த இடம் பழைய நிலைக்கு மாறியது.
ஆனாலும் ஊர்மக்களின் வாய்க்கு அவல் கிடைத்தது போல் இறந்து கிடந்தவன் யாரென்று ஆளுக்கொரு விதமாய் பேசினார்கள்.
கிராமத்தில் எப்பொழுதும் அப்படித்தானே ஒரு விடயம் கிடைத்தால் அதுக்கு ஆயிரம் கற்பனைகளை தீட்டி விடுவார்களே.
ஆதவன் கரனை பார்த்தபடியே அங்கேயிருந்து சென்றான்.
இங்கே அந்த தனியார் கல்லூரியில் தன் வலது காலை பதித்தாள் வெண்மதி வளவனுடன்.
"ஏன் வளவா உங்க அண்ணனுக்கு இந்த காலேஜ் லாம் தெரியுமா.. இல்லை இதுல என்ன பன்றாங்க ஏது பண்றாங்கன்னு தெரியுமா.." என்றாள் குறும்புடன்.
அவனைப் பார்த்து முதல் முறையாய் இயல்பாய் பேசுகிறாள் வெண்மதி.. இதை தந்த தன் தமையனுக்கு மனதால் நன்றி கூறினான் வளவன்.
"என்ன அண்ணி எங்க அண்ணனை பத்தி அப்படி சொல்லிட்டீங்க.. அவங்களை மாறி ஒருத்தர் வர முடியாது அண்ணி.."
அதை கேட்டவளும், 'ஆமாஆமா இது மாதிரி ராட்சசன் மாறி யாராலையும் இருக்க முடியாது தான்..' என்று ராட்சசனை எண்ணியபடி சென்றாள்.
அவளால் ராட்சசன் என்று அழைக்கப்பட்டவனோ பண்ணை வீட்டில் அமர்ந்தபடி,
'நீங்க எவ்வளவு முயற்சி பண்ணாலும் நானா சொல்ற வரைக்கும் அவனை உங்களால கண்டுபிடிக்க முடியாது மிஸ்டர் கரன்.. ஆனாலும் உங்களை வர வச்சதும் நான் தான்.. உங்களை வச்சி நான் சில விடயங்களை கண்டு பிடிக்கனும்.. உங்க மேல எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கு கரன்.. அதுக்கு தானே நான் அவங்ககிட்ட பேசுனேன்..'என்று மர்மமாய் புன்னகைத்துக் கொண்டான்.
இங்கே தனது காவலர் குடியிருப்புக்கு வந்த கரனோ அறையின் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி,
'ஆதவன் இவங்களை நான் எங்கேயோ பாத்திருக்கேனே.. ஆனா எங்கேன்னு தான் தெரியலையே..' என்று சிந்தித்தபடி நடந்தான்.
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. இந்த கதையை படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க பட்டூஸ்..