• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 48

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
249
230
43
Salem
அந்த தனியார் கல்லூரிக்கு வந்த இருவரும் அட்மிஷன் நடக்கும் இடத்திற்கு சென்றனர்.. தான் சேர வேண்டிய பட்டய படிப்புக்கு அட்மிஷன் படிவத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது அவளின் கையில் இருந்த பேனா எழுதவில்லை.. கீழே கொட்டி எழுதியும் எழுதவில்லை பேனா முனை.

அப்பொழுது ஒரு மென்கரம் அவளின் முன்னே பேனாவுடன் நீண்டது.. நிமிர்ந்து பார்த்தவளின் முன்னே ஒரு இளம் யுவதி நின்றிருந்தாள் புன்னகையுடன்.

அவளோ பேனாவை வாங்காமல் இருக்கவும், "இந்தாங்க சிஸ்டர் பேனா.. இது எழுதும் எழுதுங்க சிஸ்..." என்றாள் புன்னகையுடன்.

இவளும், "தேங்க்ஸ்.." என்று சொல்லியபடி பேனாவை வாங்கி கொண்டாள்.

அவளும் இவளருகிலே அமர்ந்து தனது படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தாள்.

இருவரும் ஒரே நேரத்தில் படிவத்தை நிரப்பி கொடுத்து விட்டு வெளியே வந்தனர்.

வெண்மதியுடன் வந்த யுவதி சிரித்தபடி, "ஹாய் சிஸ் ஐ ஆம் வந்தனா.. நானும் இதே மதுரை தான்ங்க.. நீங்க.." என்றாள் புன்னகையுடன்.

இதுவரை வெண்மதிக்கு தோழிகள் என்று பெரிதாக எவரும் இருந்ததில்லை.. இருந்து ஒருவர் இரண்டு பேரும் கனகத்தின் வாய்க்கு பயந்து அவளிடம் பேசவே பயப்படுவார்கள்.. ஏன் ஒரு கட்டத்தில் நம்மால் மற்றவர்களுக்கு சங்கடத்தை கொடுக்கக் கூடாது என்று தள்ளியே நின்றுவிடுவாள்.

நீண்ட நெடிய நாள் கழித்து ஒரு புதிய தோழி.. ஏனோ அவளின் சிரித்த முகம் பார்த்து மறுக்க தோன்றாமல்,

"நான் வெண்மதி.. மேலூர் ல இருந்து வர்றேன்.." என்றாள் சிறிது கூச்சத்துடனே.

கிராமத்தில் வளர்ந்தவள் பெரிதாய் எல்லோரிடமும் பேசி பழகவில்லை.. ஆதலால் சிறிது கூச்சத்துடனே பேசினாள்.

அதை கண்ட வந்தனா, "வாவ் சிஸ் உங்களோட அந்த கூச்சம் கூட செம்ம அழகு போங்க.. " என்று அவளின் கண்ணத்தை வருடினாள்.

அவளின் இயல்பான பேச்சும் புன்னகையும் வெண்மதிக்கு மிகவும் பிடித்து விட்டது.. ஏனோ அவள் அசலாள் போலவும் அந்நிய தன்மையும் அவளுக்கு தோன்றவில்லை..

"சிஸ் நீங்க என்ன கோர்ஸ் எடுத்துருக்கீங்க.." என்றாள் மேலும்.

" பி ஏ வரலாறு.. நீங்க.." என்றாள் இயல்பாய்.

" அச்சோ நானும் அது தான் சிஸ்.. அப்போ உங்களோட தான் சிஸ் நானும்.. இப்போ நாம ரொம்ப நெருங்கிட்டோம் இல்லை சிஸ்.. எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு சிஸ்.. அப்புறம் இன்னைக்கு தானே நாம பஸ்ட் மீட் பண்ணிருக்கோம்.. அதுக்கு ஒரு சின்ன செலிபிரேஷன்.. வாங்க கேண்டின் போலாம்.." என்று அவளை அழைத்தாள்.

ஏனோ அவள் அழைக்கும் போது அதை மறுக்கத் தோன்றவில்லை பெண்ணவளுக்கு.. இருவரும் கேண்டீனை நோக்கி சென்றனர்.

அவர்கள் இருவரும் சிறிது தூரம் தான் நடந்திருப்பார்கள்.. அதற்குள்ளாகவே அண்ணி என்ற அழைப்பு கேட்கவும் அப்படியே நின்று விட்டாள் வெண்மதி.

அங்கே வளவன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.. வெண்மதி நிற்கவும் வந்தனாவும் நின்று விட்டாள்.

அவன் யார் என்று வந்தனா முழுதாய் யோசிக்கும் முன்னே அவர்களருகில் வந்தவன் மூச்சு வாங்க அவர்களின் முன் நின்ற படி,

"அண்ணி விட்டுட்டே வந்துட்டீங்க.. வாங்க முதல்ல சாப்ட போலாம்.. டைம் ஆச்சு.. அண்ணனுக்கு தெரிஞ்சா என்னை தான் திட்டுவாரு.. வாங்க போலாம்.." என்று பக்கத்திலிருந்தவளை பார்க்காமல் அவன் போக்கில் வெண்மதியிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தான்.

அவன் அண்ணன் என்று சொன்னதுமே வெண்மதியின் செவ்விதழ்கள் 'ராட்சசன் ரொம்பத் தான் பயமுறுத்தி வச்சிருக்கான்..'என்று முணுமுணுத்தது.

அவளின் ராட்சசன் என்ற வார்த்தைக்கு சொந்தமானவனோ பண்ணை வீட்டில் மர்மம்மாய் சிரித்தபடி அமர்ந்திருந்தான்.

" வெல்கம் பேக் கரன்.." என்றான் வார்த்தையாய்.

அவனின் நினைவு நேற்று இரவு நடந்ததை நினைத்து பார்த்தது.

இரவு வெண்மதியை அழைத்து வந்து வீட்டில் விட்டவன் மீண்டும் அந்த காட்டு பங்களாவிற்கு சென்றான்.

அங்கே மயக்க நிலையிலே வீரா இருந்தான்.. அவனுக்கு காவலாக ஆதவனின் ஆட்கள் இருந்தனர்.

அவன் அங்கே வந்து கண்ணசைக்கவும் வீராவின் மேல் தண்ணீர் தெளித்தான் ஒருவன்.

சில்லென்ற நீர் தன் மேல் விழவும் கண்ணை சுருக்கிய படி எழுந்தான் வீரா.

அவனின் முன்னே அவனுக்கு காலனானவன் அமர்ந்திருந்தான் கம்பீரமாக.

அவனைக் கண்டவனின் விழிகள் தெறித்து விடும் அளவு விரிந்தது.

" ஆ ஆ ஆதவா.." அவனின் வார்த்தைகள் தடுமாறியது.

" பரவாயில்லையே இன்னும் என்னை நினைவுல வச்சிருக்கியா வீரா.. ஆனா என்னைப் பத்தி தெரிஞ்சும் எப்படி என் வீட்டு பொண்ணு மேல கை வைக்க துணிஞ்ச.. அதுவும் தெரிஞ்சே எவ்வளவு தைரியம் துணிச்சல் உனக்கு.." என்றான் கர்ஜனையாய்.

அவனின் குரலில் இருந்த அழுத்தமும் கர்ஜனையுமே சொல்லியது அவனின் கோபத்தின் ஆழத்தை.

அந்த குரலை கேட்டு வீராவின் உடல் நடுங்கியது.

"அது.." என்று வீரா பேசத் தொடங்கும் போதே ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷ் வாயில் ஒற்றை விரலை வைத்து பேசாதே என்றான் ஆதவன்.

போசாத வீரா என்கிட்ட பேசுற தகுதி உனக்கு எப்பவும் இல்லை.. இன்னைக்கு என் வீட்டு பொண்ணு மேல கை வைக்க பாத்துட்ட இல்லை.. இனி நீ எப்பவும் பேசவும் கூடாது.. பேச நீ உயிரோடு இருக்க மாட்டே.. பொண்ணுங்களை வெறும் சதைபிண்டமா பார்த்தே இல்லை.. உன்னோட இந்த அழகான உடம்பு தானே உனக்கு அந்த துணிச்சலை கொடுத்தது.. இனி எப்பவும் உனக்கு மன்னிப்பு இல்லை.. இத்தனை நாளா எனக்கு போக்கு காட்டிக்கிட்டு இருந்த இல்லை.. என்னைக்கும் மாட்ட மாட்டேன்னு நினைச்சியா.. ஆனா பாத்தியா என் வீட்டு பொண்ணால நீ எனக்கு கிடைச்சிட்ட..

எந்த உடல் அழகால பொண்ணுங்களை வளைச்சியோ இனி அந்த உடல் அழகா இருக்காது.. எப்படின்னு பாக்குறியா வீரா.. இதோ இப்படித்தான்.." என்றான் பக்கதிலிருந்தவனை பார்த்து கண்ணசைத்தான்.

அவன் ஒரு பாட்டிலில் எதையோ கொண்டு வந்து ஆதவனின் கைகளில் தினித்தான்.

அதை வாங்கியவன் வீராவின் முகத்தை பார்த்துக் கொண்டே திறந்தான்..

அதை திறக்கவும் உள்ளிருந்து புகையாய் வந்தது. அதை பார்த்ததுமே வீராவுக்கு நாவண்ணம் மேலே ஒட்டிக் கொண்டது போல் வார்த்தையே வரவில்லை.

பயத்துடனே ஆதவனை கண்டவன்,

"வே.. வே.. ணா.. ஆ.. த..வா.." என்று வார்த்தைகளை வெளியே வராமல் உயிர் பயம் கண்டது.


ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காத ஆதவனோ பழி வெறி மிண்ண அவன் கண்களில் பல முகங்கள் தோன்ற பல காட்சிகள் பரவ மேலும் வெறி மின்ன அந்த பாட்டிலில் இருந்த திரவத்தை அவன் உடல் முழுவதும் ஊற்றினான்.

அந்த காட்டு பங்களாவே அதிரும் அளவு வீராவின் சத்தம் ஓங்கி ஒலித்தது.





அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. இந்த கதை பிடிச்சிருந்தா கமெண்ட் லைக் பண்ணுங்க பட்டூஸ் .