• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 49

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
முகமெங்கும் ஆக்ரோஷம் பொங்க பழி உணர்ச்சியில் விழிகள் மின்ன தன் கையில் உள்ள திராவக பாட்டிலின் மூடியை கலட்டி பாவ புண்ணியம் பாராமல் அவனின் உடலெங்கும் ஊற்றினான்.. முகத்தையும் விடவில்லை.. இதே போல் ஒரு கொடூரனை மன்னிக்க முடியவில்லை அவனால்.. எத்தனை உயிர்கள் பயத்தில் உறைந்து கிடக்கின்றன இந்த அரக்கனால்.. எத்தனை பெண்கள் தன் மானத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. இவனால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான இன்றைய நிலை மனதை உறைய வைக்கிறது.

அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல தன் வீட்டு பெண்ணின் மானத்தையும் பறிக்க துணிந்த அரக்கனவன்.. அவனை இனியும் விட்டு வைத்தாள் ஊரில் உள்ள பெண்களின் நிலை கண்ணால் காண இயலாதது ஆகிவிடும்.

அந்த காட்டு பங்களாவே அதிரும் அளவு கத்திய வீராவின் கதறல்கள் ஏனோ மனதோரம் இசை வாசிப்பதாகவே தோன்றியது.. அவனின் உயிர் துடிப்பை ரசித்தான் ஆதவன்.. அவனின் கதறல்கள் அனைத்துப் பெண்களின் கண்ணீரில் காணாமல் போயிற்று.

பெண்ணை வெறும் போகப் பொருளாய் பார்க்கும் இவன் போல மனித மிருகத்திற்கு சரியான தண்டனை இது தான்..

ஆதவனின் மனக்கண்ணில் சில காட்சிகள் தோன்ற அவனின் விழிகளும் அவனறியாமல் கண்ணீர் மழை பொழிந்தது.

யாருமறியாமல் தன் கண்களை துடைத்தவன் தன் அருகில் இருந்தவனை அழைத்தவன் அவன் காதில் என்ன ஓதினானோ அடுத்த நொடி அங்கிருந்த சென்று விட்டான்.

வீரா உயிர் கொஞ்ச கொஞ்சமாய் அதே இடத்தில் துடித்துக் கொண்டிருந்தான். அவனின் துடிப்பில் ஒவ்வொரு பெண்ணின் கண்ணீரும் இருந்தது.. பாவத்தின் சம்பளம் மரணம்.. அவனின் மரணம் ஆதவன் கைகளில் தான் என்பது இறைவன் எழுதிய விதி.

இரவு நடந்ததை நினைத்த ஆதவனுக்கு மனமெல்லாம் குளிர் பரவியது போல் இருந்தது.. ஒரு உயிர் போனதிற்காக வருந்தவில்லை அவன்.. இந்த பூமியில் நடமாட கூடாது உயிர் தான் போயிருக்கிறது..

இது பயிர்களுக்கு நடுவே முளைத்திருக்கும் புல்லை போன்றது.. தக்க சமயத்தில் களையெடுக்கா விட்டால் தோட்டத்தையே அழித்து விடும்.. ஒரு புல்லா இல்லை தோட்டமா என்றால் தோட்டத்தை காக்க வேண்டியது காவலனின் கடமை தானே.. அதைத் தானே தான் செய்தேன் என்ற நிம்மதி கொண்டான். பின்னர் நேரம் ஆகவும் வளவனும் வெண்மதியும் வரும் நேரம் அறிந்து வீட்டிற்கு சென்றான் ஆதவன்.


இங்கே கல்லூரியில் வந்தனாவிடம் விடைபெற்று வந்தனர் வளவனும் வெண்மதியும்.

ஏனோ அங்கு இருந்த சிறிது நேரத்திலே அவள் இருவரிடமும் கொஞ்சம் நெருங்கி தான் விட்டாள்.. அதுவும் வளவனை அவள் கலாய்ப்பது போல் பேசியது வெண்மதிக்கு சிரிப்பை தான் வரவழைத்தது... அதை நினைத்து சிரித்தவளை பார்த்தவன்,

"என்ன அண்ணி உங்க தோழி என்னை கிண்டல் பண்ணது உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா இப்படி நினைச்சு நினைச்சு சிரிக்கிறீங்க.." என்றான் மனதாங்கலாய்.

அதுவும் அவள் எப்படி தன்னை அப்படி கிண்டல் செய்யலாம் என்ற எண்ணத்தில் வந்த மனத்தாங்கல் தான்.
ஆனாலும் அதிலும் ஒரு நன்மையாக வெண்மதி அவனுடன் இயல்பாக பேசுகின்றாள்.. அதற்காகவே அவன் அமைதியாக இருந்தான் என்றே சொல்லலாம்.. அது கன்னிகை அவளுக்கும் புரிந்ததால் அவனை கிண்டலடிப்பது போல் பேசினாள்.

ஆனால் முழுதாய் வெண்மதியிடம் அவள் எதுவும் தோண்டி துருவி கேட்கவில்லை.. அதுவே இருவரின் மனதிலும் தனித்து தெரிந்தாள் பெண்ணவள்.

கல்லாரி சென்று வேலை முடித்து வரவே அந்தி சாயும் நேரம் ஆகிவிட்டது.. காலையில் நடந்ததை இன்றைய அலுப்பில் மறந்து தான் போனாள்.. அவள் தான் மறந்தாளே ஒழிய ஆணவன் மறக்கவில்லை.. நேராய் சென்று நின்றது தன் தமையனிடம் தான்.

வளவன் கேட்காமலே இரவு நடந்ததை அனைத்தும் கூறினான் ஆதவன்.. அதனை கேட்டு மேலும் கொந்தளித்தான் வளவன்.

ஆதவன் அவனின் கோபத்தை தனித்து இன்று நடந்ததை கேட்டான்.. இன்று நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டு,

"அவன் கொன்னுட்டீங்க இல்லை அண்ணா.. அவனுக்கு என்ன தைரியம் இருந்தா நம்ம அண்ணிகிட்டயே இப்படி நடந்துப்பான்.. நீங்க நல்ல வேலை தான் அண்ணா செஞ்சீங்க.." தன் தமையனிடம் கூறிவிட்டு சென்று விட்டான்.

இங்கே தனது போலிஸ் குவார்ட்டர்ஸ் வந்த கரனுக்கு நினைவு முழுவதும் ஆதவனே நிறைந்திருந்தான்.

'இந்த ஆதவனை எங்கே பாத்திருக்கிறேனே ஆனா எங்கேன்னு நினைவில்லையே..' என்ற சிந்தனையில் இருந்தவனுக்கு தன்னை இங்கே அனுப்பியவரின் நினைவு வந்தது.. உடனே தன் அலைபேசியை தேடி எடுத்தவன் ஒரு நம்பருக்கு கால் செய்தான்.

அந்த இரவு நேரத்திலும் தெளிவாய் கம்பீரமாய் விழுந்தது அந்த பக்க குரல்,

"ஹலோ என்ன ஆச்சி என்ன நடந்தது.." என்றது மறுபக்க குரல்.

" உங்களுக்கு அப்போ இங்கே என்ன நடந்துச்சின்னு தெரியும் இல்லை.." என்றான் மறு கேள்வியாய்.

அந்த பக்கமோ எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாய் இருக்கவும் ஒரு பெருமூச்சுடன்,

"இப்போ எதுக்கு இப்படி மௌனமா இருக்கீங்க.. இப்போ என்ன நான் வேற எதுவும் கேட்க கூடாது.. நீங்க எந்த வேலைக்கு அனுப்பினீங்களோ நான் அதை முடிச்சிட்டு வற்ரேன்.. அப்புறம் எங்கே என்னோட டார்லிங்.." என்றான் சிரிப்புடன்.

எதிர் பக்கமோ இதுவரையில் இருந்த கம்பீரம் மாறி மென்மையாய், "ம்ம் நல்லாருக்கா டா.. இங்கே தான் இருக்கா கொடுக்கட்டா.." என்றது மறுப்பக்கம்.

"போதுமே யப்பா சாமி போதும்யா உங்களோட நடிப்பு.. அவ அதுனால தான உன் பேச்சு கேட்டு என்னை தொறத்துனா.. டார்லிங்ன்ன உடனே வாய்ஸ் பாருங்க பச்ச புள்ள மாறி வரதை.." என்று கிண்டலடித்தான்.

" அடேய் என்னடா என் புருசன கிண்டல் பன்ற.. இது மாதிரி பேசு அப்புறம் இருக்குடி உனக்கு.. இந்த ஜென்மத்துல கல்யாணம் இல்லை.." மறுபக்கம் பெண் குரல் மிரட்டியது.

"அடியேய் இதெல்லாம் உன் புருசன் கிட்ட வச்சிக்க.. உனக்கு அவன் தாண்டி பயப்புடுவான்.. நான் இல்லை.. எருமைங்களா ஒரு இடத்துக்கு அனுப்பிச்சமே அவனுக்கு முழுத் தகவலும் கொடுக்கனும்னு தோனுச்சா டி.. இப்போ அவனை சொன்ன உடனே உனக்கு கோபம் பொத்துட்டு வருதோ.." என்றான் கோபமாய்.


அச்சோ சாரிடா செல்லம்.. வெயிட் நானே எல்லாம் சொல்றேன்.. அந்த ஆதவனை நீ முன்னவே பாத்துருக்க.. எங்க தெரியுமா ஜெயில்ல.." என்று மேற்கொண்டு சிறிது நேரம் பேசியவன்

"ம்ம் ஓகே ரூபி இங்கே நான் இனி பாத்துக்குறேன்.. அப்புறம் அந்த ஆதவன் இன்னும் நமக்கு முழுசா எதுவும் சொல்லலைன்னு தோனுதுடி பாக்கலாம்.. சரி நான் பாத்துக்குறேன்.. நீ பத்திரம் டி உன் வயித்துல பாப்பா இருக்கு பாத்து இரு.. நேது வ கேட்டேன்னு சொல்லு.. நான் டைம் கிடைக்கும் போது கால் பண்றேன்.." என்று பேசிவிட்டு வைத்தவன் மேலும் சிறிது நேரம் யோசித்து விட்டு ஒரு முடிவுடன் சென்று படுத்தான்.


இங்கே தன் அறையில் உறக்கம் வராமல் நடந்தவனுக்கு ஏனோ வெண்மதியின் நினைவே வாட்டி வதைத்தது.

அவளை காண வேண்டும் போல் தோன்றவும் அவளின் அறைக்கு சென்றான்.

அங்கே சென்றவன் அதிர்ந்து தான் நின்றான்.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. இந்த கதை பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்