• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 50

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
51
43
Salem
னோ மனம் நிம்மதியில்லாமல் அலை பாய்ந்தது ஆதவனுக்கு.. அவனால் படுக்க முடியவில்லை.. வெண்மதியின் மதி முகம் அவனை நித்திரை கொள்ள முடியாமல் துடிக்க வைத்தது.. நேற்று நடந்தது அவளுக்கு தெரிந்தால் அவளின் மனம் என்ன பாடுபடும் என்றவனின் நினைவே அவனை கொன்றது.

'முன்னே உன்னை தவிக்க விட்ட மாறி இப்போ விட மாட்டேன் டா பட்டுமா..' என்று மனதினுள் நினைத்தவனுக்கு இப்பவே அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

அவளை பார்க்கவென்று அவளின் அறைக்கு வந்தவன் அங்கே கண்டதில் அதிர்ச்சியில் நின்று விட்டான்.

அவனின் நினைவுக்கு காரணமானவளோ அவளின் மார்போரம் எதையோ அழுத்தியபடி தூங்கியிருந்தாள்.

அது என்னவென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் பேச்சே வராமல் கண்களில் கண்ணீர் வந்தது.

அங்கே ஒரு நோட்டு தான் இருந்தது.. அதில் எதையோ எழுதி வைத்திருந்தாள்.. அதை கண்டு தான் அவன் கண்களில் கண்ணீர் நில்லாமல் வந்தது.

அவளின் அருகே குணிந்தவன், "பட்டு மா இன்னமும் இதெல்லாம் உனக்கு நினைவு இருக்கா டி.. மறக்கலையா பட்டு மா நீ.." என்று அவளின் தலையை தடவி கொடுத்தவன் அவளின் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

தன் நெற்றியை ஏதோ ஈரமான படியவும் தன் கையை எடுத்து துடைத்துக் கொண்டாள் தூக்கத்திலேயே.

அவளின் செயலை கண்டு ரசித்து சிரித்தவன் அவளின் கைகளுக்குள் தன் கையை பொருத்தி அவளின் பின்னங்கையில் முத்தமிட்டான்.

"இன்னும் எத்தனை நாளைக்கு டி உன்னை தெரியாதது போல நடந்துக்குறது.. கஷ்டமா இருக்குடா பட்டு.. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு டா.. கண்டிப்பா ஒரு நாள் எல்லாம் மாறும்.. " என்று அவளின் தலையை தடவி விட்டு அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றதும் ஏனென்று அறியாமல் தூங்கி கொண்டிருந்தவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வந்தது.. ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் அதை அறியவில்லை.


இருள் சூழ்ந்த நிசப்தமான வேளையிலே அந்த காட்டு பங்களாவிலே மருததுரையின் சத்தம் நாலாபுறமும் எதிரொலித்தது.

"எப்படி எப்படி டா அந்த ஆதவனுக்கு தெரிஞ்சது.. ச்சீய் அந்த வீரா மேல இருந்த நம்பிக்கையில நான் போயிட்டேனே.. இன்னைக்கு அவனை உருத்தெரியாம அழிச்சுட்டானே அந்த ஆதவன்.. இல்லை இது நடக்க கூடாது.. அந்த ஆதவனை நான் தான் ஜெயிக்கனும்.. அந்த புதையல் எனக்கு கிடைக்கனும்.. ஏய் கஜா அந்த சாமியாரு எப்போ வருவாருன்னு கேளு.. ம்ம் சீக்கிரம்.." என்று தன் ஆட்களுக்கு கட்டளையிடவன் முகத்தில் கோபம் கொப்பளிக்க ,

' ஆதவா உன்னை விட மாட்டேன்.. நீ திரும்பவும் எல்லாத்தையும் இழந்து அனாதையா நிப்படா.. உன்னை நான் அப்படி நிப்பாடுட்வேன் டா...' என்று தனக்குள் சூளுரைத்துக் கொண்டான்.

அப்பொழுது அவனை தேடி தாண்டவராயன் வந்திருந்தான்.. அவனை கோபத்துடன் முறைத்தபடியே,

"நீ என்ன காரியம் செய்யற துரை.. மறந்துட்டியா அவள எதுக்காக இப்போ கடத்திட்டு வந்த.. அவனை வளைக்க நமக்கு கிடைச்ச ஒரே ஆயுதம் அந்த வெண்மதி தான்.. ஆனா நீ என்ன பண்ணி வச்சிருக்கற துரை.. பகடைக்காயா யாராவது முதல்லையே ஆட்டத்துக்கு வெப்பாங்களா துரை.. கொஞ்சம் பொறுமையா இரு.. எல்லாம் நம்ம கைகூடி வரும்.. நமக்கு சேர வேண்டியது நமக்கு கண்டிப்பா சேரும்.. நேரம் பாத்து தான் அந்த ஆதவனை அடிக்கணும்.. நாம அடிக்க போறதுல அவன் திரும்ப எழுந்து வரக்கூடாது.. இந்த மேலூர்ல அப்புறம் எவனும் நம்மளை எதிர்த்து வரவே பயப்படனும்.." என்றான் கட்டளையாய்.

அதை ஏற்று அமைதியாய் இருந்த மருததுரை, "இருந்தாலும் அவனை இப்பவே எழ விடக் கூடாது ஐயா.. அவன் நம்மளை தேட ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கான் ஐயா.. அது தான் அவளுக்கு எதாவதுன்னா அவன் நொடிஞ்சி போயிடுவான்.. அப்போ அந்த கனகத்தோட உதவியால அவனை சாய்ச்சிடலாம் ன்னு நினைச்சேன் ஐயா.." என்றான் விவரமாய்.

"இல்லை மருது இதுல என்னவோ தப்பா இருக்குது.. எனக்கு அவனோட பரம்பரை நல்லாவே தெரியும்.. இப்படி அமைதியா போற ரகம் அவன் இல்லை.. இதுல எதுவோ இருக்குது.. நம்ம ஆளுங்களை அவனை நல்லா கண்காணிக்க சொல்லு.. அவன் எங்கே போறான் வற்ரான்னு.. சரி நா வந்து ரொம்ப நேரமாச்சு.. நா கிளம்புறேன்.. ஆஆ இப்போ எதுவும் புதுசா பண்ண வேணாம்.. இப்போ வந்துருக்குற ஐபிஎஸ் ஆபிசர் ரொம்ப ஸ்டிரிக்ட்ன்னு சொன்னாங்க.. எனக்கு என்னவோ தப்பா இருக்குது.. கொஞ்சம் நாள் எல்லாத்தையும் நிறுத்தி வை.. ஆஆ அந்த ஜோசியகாரனை இப்போ தேட வேண்டாம்.. ஒரு வாரம் கழிச்சு அவன் எப்ப வற்ரான்னு பாக்க சொல்லு.. நான் வற்ரேன்.." என்று அங்கிருந்து சென்றான் தாண்டவராயன்.

வெள்ளியவன் ஒளி வீசிட துவங்கும் அந்த வேளையிலே மேலூர் கிராமமே தூக்கத்திலிருந்து விழித்து.

வெண்மதியினை ஆதவனின் ஒளி முகத்திலடிக்க எழுந்தாள் பெண்ணவள்.. தன் முகத்தில் வீசிய ஆதவனை கண்டு கோபமுற்றாள்.

" உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் முகத்துல அடிச்சிருப்பே.. நீயும் அந்த ராட்சசன் மாறி தானே.. ஆமா நீ அவன் மாறியா..? இல்லை அவன் உன் மாறியா..? ரெண்டு பேரும் ஒரே பேரு தானே வச்சிருக்கீங்க.." ஒளிர்வீசிடும் ஆதவனை கண்டு சிடுசிடுத்தவள் எழுந்து தன் காலை கடன்களை முடித்து குளித்து விட்டு வந்தாள் பெண்ணவள்.

அவள் வெளியே வரும் நேரம் அவளுக்காகவே காத்திருந்தான் ஆதவன்.

ஹால் சோபாவில் அமர்ந்தவனை கண்டு தயங்கியவள் தலைகுணிந்த படியே அவனை தாண்டி செல்ல முயன்றாள்.

" வெண்மதி.." என்ற அவனின் அழுத்தமான அழைப்பில் அவளின் காலடி அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அப்படியே பூமியில் வேரூன்றி நின்று விட்டது.

அவள் நிற்கவும் அவளைப் பார்த்து, "போய் பூஜை ரூம்ல விளக்கேத்திட்டு வந்து காபி போடு.." என்று கட்டளையிட்டான்.

அவனை அதிசயமாய் நிமிர்ந்து பார்த்தாள் பெண்ணவள்.

இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து பூஜையறைக்கு அவள் சென்றதில்லை.. தவறி ஒரு முறை சென்றதற்கு கனகத்தின் கேவலமான வார்த்தைகள் தான் பரிசாய் கிடைத்தது.

தன் கவலைகளை அந்த கடவுளிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத அளவு அவளை சிறைக் கைதியாய் நடத்தினாள் கனகம்.

இதோ இவன் வந்து தான் சில விடயங்கள் மாறியிருக்கிறது.

அவன் சொல்லவும் கண்களில் கண்ணீர் வழிய அந்த வீட்டின் பூஜையறைக்கு சென்றாள்.

அங்கே எல்லாம் சுத்தமாக வைக்கப்பட்டிருக்க கட்டியணைத்து பூக்களை அங்கிருந்த சாமி படங்களுக்கு சாற்றியவள் அங்கேயிருந்த அந்த குடும்பத்தின் படங்களைக்கு பூவை போட அதிலிருந்த ஒரு போட்டோ அவளின் மூளௌயை சென்று தாக்கியது.. ஆனாலும் அதை ஒதுக்கி தள்ளி விட்டு அங்கிருந்து லஷ்மி விளக்கையும் குத்து விளக்கையும் துடைத்து திரி போட்டு தீபமேற்றினாள்.

அந்த தீபத்தின் ஒளி அங்கிருந்த படங்களில் பட பட அவள் கண்ணிலும் சில காட்சிகள் நிழலுறுவமாய் தோன்றியது.

அந்த காட்சிகள் கண் முன்னே தோன்ற தோன்ற அவளின் உடலின் வியர்வை பூக்கள் பூக்க கண்கள் இருட்ட மயங்கி சரிந்தாள் பெண்ணவள்.


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. என்னபா கதைக்கு ஒரு ரெஸ்பான்ஸும் இல்லை.. நல்லாருக்கா இல்லையா..? தொடரலாமா வேண்டாமா பா.. சொல்லிட்டு போங்க பா