• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 52

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
51
43
Salem
பசுமை நிறைந்த சோலையிலே அழகு கொட்டி கிடக்க பார்ப்பவரின் விழிகளுக்கோ விருந்தாய் அமைந்தது அந்த மலைவாழ் கிராமம்.

அந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே அறுபது பேர் தான்.. ஆனால் அங்கிருந்த மக்களின் வெகுளித் தனமும் அவர்களின் பாரம்பரிய விவசாயமும் அந்த கிராமத்தின் இயற்கை வளத்தை மேலும் அதிகரித்தது.

அங்கு வாழும் மக்கள் வெளி ஆட்களை அத்தனை சுலபமாய் தங்களின் கிராமத்தில் சேர்க்க மாட்டார்கள்.

வெளியே மக்களோடு மக்களாய் வாழ்வது அவர்களுக்கு முடியாத காரியம்.. வெளி ஆட்களை அவர்கள் அவ்வளவு சுலபமாய் நம்பவும் மாட்டார்கள்.

ஏன் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் எந்த வித சலுகையும் இவர்களை சென்று சேராது.. நமது அரசாங்கத்தின் இடைத்தரகர்கள் அதை சென்று சேரவும் விடமாட்டார்கள்.

ஒரு இந்திய குடிமகனுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய தேவை கூட அவர்களை சென்று அடைவதில்லை.

ஆனால் அப்படி ஒரு மலைவாழ் மக்களை அழிக்க பார்த்தவர்கள் தான் இங்கே அதிகம்.

ஒரு மனிதனின் இன்றியமையா தேவை உணவு உடை இருப்பிடம்.. ஆனால் அதன் கூடவே மருத்துவம் முக்கியமானது.. ஆனால் அதுவும் இங்கே இருக்கும் மக்களிடம் கிடைக்காது.. அவர்களே தங்களுக்கு தெரிந்த வரையில் இயற்கை மருத்துவத்தை செய்து கொள்கின்றனர்.

மிருகம் கூட தன் இனத்தை அடித்து வாழ நினைக்காது.. ஆனால் இரண்டு கால் ஆறறிவு கொண்ட மனிதன் தன் இனத்தையே அழித்து அதில் வாழத்தான் முனைகிறான்.

அதனால் இங்கே வாழும் மக்கள் வெளிமக்களை நம்ப மறுக்கின்றனர்.

அந்த முப்பது குடில்கள் மட்டும் வாழும் கிராமத்தில் ஒரு குடிலில் இருந்து அம்மா என்ற சத்தம் கேட்டது.

அந்த சத்தத்தை கேட்ட அங்கிருந்த மக்கள் அந்த குடிலை நோக்கி ஓடினார்கள்.

அங்கே வயதான நால்வர் மட்டும் உள்ளே சென்று பார்த்தனர்.

அந்த குடிலில் இருந்த கட்டிலில் ஒரு வயதான பெண் படுத்திருக்க அவரருகில் இருந்த நடுத்தர வயதுடைய ஆண் பார்வையை சுவற்றில் பதித்திருந்தார்.

அங்கே படுத்திருந்த பெண்ணின் விழிகள் அங்குமிங்கும் அசைய அம்மா என்று வலியில் துடித்தார்.

உள்ளே வந்த நால்வரில் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம்,

"வைத்தியரே கொஞ்சம் பாருங்க என்னாச்சின்னு.. இத்தனை வருசமா இல்லாம இப்போ ரெண்டு வாரமா இந்த அம்மா கத்துராங்க... ஆனா முழுசா கண்ணை திறக்கவே மாட்றாங்க. . பாருங்க..ஆமா எங்கே இங்கிருந்த அம்மனி காணோம்.. அய்யன் மட்டும் இருக்காரு.." என்று வைத்தியரிடம் உத்தரவிட்டவர் அங்கிருந்த பெண்ணிடம் கேட்டார்.


"அய்யா அந்த அம்மா சுள்ளி பொறுக்க போயிக்காங்க ஐயா.. ராவுக்கு கஞ்சி வைக்கோனும் இல்லைங்களா.." என்றார் பதிலாய்.

அதை கேட்டு தலையாட்டினார் அவர்.

அதற்குள்ளாகவே வைத்தியர் அந்த அம்மாவை சோதனை செய்து விட்டு வந்து, "ஐயா சீக்கிரமே அம்மனிக்கு நினைவு வந்துடுங்கய்யா.. அதுக்கான ஆரம்பமய்யா இது மாதிரி சத்தம் வர்றது.." என்றார் வைத்தியர்.

" சரிங்க வைத்தியரே வாங்க வெளியே போலாம்.. இந்தா பொன்னம்மா அந்த அம்மனி வந்ததுக்கு அப்புறமா நீ உன்ற குடிசைக்கு போ.. அதுவரைக்கும் இங்கே தங்கு மா.." என்று அந்த பெண்மணியிடம் உத்தரவிட்டு சென்றார்.

அந்த பெண்ணும் சரியென்று தலையசைக்கவும் மற்றவர்கள் அனைவரும் வெளியே வந்தனர்.

அவர்கள் அனைவரும் அந்த குடிசைக்கு வெளியே நிற்கவும் அங்கே அவசரமாய் தலையில் சுள்ளிக் கட்டை வைத்துக் கொண்டு வேகமாய் வந்தாள் நடுத்தர வயதுடைய பெண்.

" ஐயா என்னாச்சுங்க என்ற குடிசைக்கு முன்னாடி நிக்குறீங்க.." என்றாள் பதறியபடி.

அவரோ, "இல்லைங்க அம்மனி நம்ம பெரிய அம்மனி சத்தம் குடுத்தாங்க.. அது தான் அம்மனி பாக்க போனோமுங்க அம்மனி.. " என்றார் பெரியவர்.

"அச்சோ என்னங்கய்யா சொல்றீங்க.. அம்மாக்கு என்னங்க ஐயா ஆச்சி.." என்றாள் பதறியபடி.

"இல்லைங்க அம்மனி இப்போ நல்லாருக்காகன்னு நம்ம வைத்தியரு சொல்லிருக்காங்க அம்மனி.." என்றார் அவளை சாந்தப்படுத்தும் விதமாய்.

" நன்றிங்க ஐயா.. உங்க உதவிய உசுரு உள்ளவரை மறக்கமாட்டேனுங்க ஐயா.." என்றாள் கையெடுத்து வணங்கியபடி.

" ஐயோ அம்மனி என்ன செய்யறீங்க நீங்க.. இதுக்கு எங்க கிராமம் தான் அம்மனி குடுத்து வச்சிருக்கனுமுங்க.. நீங்க போய் இப்படி.." என்றார் தயக்கமாய்.

"இல்லைங்க ஐயா அன்னைக்கு நான் இருந்த சூழ்நிலை உயிருக்கு போராடுற ரெண்டு ஜீவன வச்சிக்கிட்டு நான் தவிச்ச தவிப்பு இன்னமும் என் கண்ணுல நிக்குதுங்கய்யா.." என்றார் மனம் கலங்கிய படி.

அம்மனி அதுக்கு நீங்க எங்க குல தெய்வத்துக்கு தான் தாயி நன்றி சொல்லனும்.. யாரையும் எங்க ஊருக்குள்ள அனுமதிக்காத எங்க தாயி உங்களை இங்கே அனுமதிக்கும் போதே நிச்சயம் உங்களால ஏதோ எங்களுக்கு நல்லது நடக்கப் போகுதுன்னு தான் தாயி நினைச்சோம்.. இல்லைன்னா நான் எப்படி தாயி உங்களை சேத்துருப்போம்.. எனக்கு எங்க கிராம மக்களோட சந்தோஷம் தான் தாயி முக்கியம்.. நீங்க கவலைப்படாதீங்க தாயி.. சீக்கிரமே எல்லாம் மாறும்.." என்று அவளுக்கு ஆதரவாக பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றார் அந்த மழை கிராம மக்களின் தலைவர்.

அவர்கள் அனைவரும் சென்றதும் இவளும் தன் குடிசைக்குள் நுழைந்தாள்.

இவளைக் கண்டதும் அங்கேயிருந்த பொன்னம்மா அவளிடம் விடைபெற்று வெளியே சென்றாள்.

அங்கிருந்த எல்லோரும் சென்றதும் தன் குடிசையின் படலை சாத்திவிட்டு படுக்கையில் இருந்த பெண்மணியின் அருகே சென்றவள்,

"அம்மா நீங்க எப்போமா பழையபடி சரி ஆகுவீங்க.. இன்னும் எத்தனை நாளுமா இந்த தலைமறைவு வாழ்க்கை.." என்றார் கலங்கியபடி.

அவளின் வார்த்தைகள் அந்த பெண்மணியின் காதை சென்றடைந்ததுவோ என்னவோ படுத்திருந்த வயதான பெண்ணின் விழிகளிலிருந்து கண்ணீர் வந்தது.

அதை தன் கரம் கொண்டு துடைத்தவள் அந்த நடுத்தர வயதுடைய ஆணின் பக்கத்தில் சென்று அமர்ந்தவள் எதுவும் பேசாமல் அவரின் தோளில் சாய்ந்து கொண்டார்.


தன் தோளில் அவள் சாய்ந்ததை உணர்ந்தாரோ என்னவோ அவரின் கைகள் அவரறியாமல் அவரின் கரம் அவளின் தலையை கோதியது.


பெண்ணவளுக்கு அதுவே போதும் என்பது போல அந்த கைகளை அழுத்தி பிடித்துக் கொண்டாள்.

என்னங்க எனக்கு இது போதுங்க. . உங்களுக்கு சுயநினைவு இல்லாம போனாலும் நான் தான்னு உணர்ந்து எனக்கு ஆறுதல் தற்ரீங்களே.. அதுவே போதுங்க எனக்கு போராட ஆயிரம் மடங்கு பலம் தருதுங்க.. நிச்சயம் என்னோட போராட்டதுல நான் ஜெயிப்பேன்.. நம்ம குடும்பத்தை பழைய படி மாத்துவேன்ங்க..

எனக்கு நம்பிக்கை இருக்குங்க.." என்று தனக்கு தானே ஆறுதல் கூறி கொண்டாள்.

அவளின் வார்த்தைகள் அவரின் மூளையை சென்றடைந்ததோ என்னவோ அவரின் வாய்,

"ஆதி.." என்று முனுமுனுத்தது.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. இந்த கதை பிடித்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்.