• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 53

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
51
43
Salem
அவரின் ஆதி என்ற வார்த்தை பெண்ணவளுக்கு பெரும் நம்பிக்கையை விதைத்திருக்க வேண்டும்.. தன் விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்து புது நம்பிக்கையுடன் எழுந்து கொண்டாள்.

ஆமாங்க நம்ம ஆதி வந்துட்டான்.. அதுவும் வீரனா வந்துட்டான்.. நாம மறைஞ்சி வாழ்ந்த வாழ்க்கை போதும்னு சொல்ல வந்துட்டான்ங்க.. நாம பட்ட கஷ்டமும் வலியையும் நம்மோட எதிராளிக்கு ரெண்டு மடங்கா கொடுக்கனும்ங்க.. நிச்சயம் நம்ம ஆதியும் மதுவும் கொடுப்பாங்க.." விழிகளில் தீட்சண்யத்துடன் பேசினாள் பெண்ணவள்.

அதற்குள்ளாகவே வெளியிலிருந்து ஒரு குரல், "ஆரா அக்கா கொஞ்சம் வெளிய வர்றீங்களா.. உங்களை தேடி நம்ம சுப்பன் வந்துருக்கான் கா.." பெண்ணின் குரல் கேட்டது.

அங்கே ஒரு பெண்ணுடன் இளைஞன் ஒருவன் நின்றிருந்தான்.

அவனைக் கண்டவள், "வா சுப்பா.. கண்ணம்மா நீ போ நான் பாத்துக்குறேன்.." என்று பெண்ணவளை அனுப்பி வைத்துவிட்டு அந்த ஆணை மட்டும் குடில் உள்ளே அழைத்து சென்றாள் அந்த பெண்ணால் அழைத்த ஆரா என்பவள்.


" வணக்கம் ஆத்தா.. பெரியாத்தா எப்படி இருக்காக ஆத்தா.." என்றான் வந்தவன்.

" ம்ம் இப்போ பரவாயில்லை சுப்பா.. நான் சொன்னது என்னாச்சி சுப்பா.. ஆதி எப்படி இருக்கான்.. மது எப்படியிருக்கா.. நான் சொன்னது பத்தி விசாரிச்சியா.." என்றாள் பதட்டத்துடன்.

"அதை சொல்லத்தான் ஆத்தா வந்தான்.. ஐயனும் அம்மனியும் நல்லாருக்காங்க ஆத்தா..அப்புறம் ஆத்தா.." மேற்கொண்டு அவளிடம் கூறிய விடயத்தில் பெண்ணவளின் முகம் பல வித உணர்வுகளை வெளிப்படுத்தியது.. கண்ணீரும் சிரிப்பும் நிறைந்திருந்தது.

இங்கே தன் குடியிருப்பில் சமைத்துக் கொண்டிருந்த கரனை காலிங்பெல் சத்தம் அழைத்தது.

அதை கேட்டு வெளியே வந்து கதவை திறந்தவன் அங்கே நின்றிருந்த நபரை கண்டு அதிர்ச்சியானான்.. அதுவும் சில நொடிகள் தான்.. அடுத்த நொடி ஒரு மென்புன்னகை கொண்டு வந்திருந்தவரை சிரிப்புடன்,

"வெல்கம் மை ஹோம் மிஸ்டர் ஆதவன்.." என்றான் கம்பீரமாய்.

அவனின் கம்பீரத்திற்கு சிறிதும் குறைவில்லாத ஆதவனும் புன்னகையுடன், "வணக்கம் மிஸ்டர் கரன்.." என்று இரு கை கூப்பினான்.

"வாங்க ஆதவன் உக்காருங்க.. சமைச்சிட்டு இருந்தேன்.. அடுப்பை அனைச்சிட்டு வந்துர்றேன்... ம்ம் அப்புறம் டீ ஆர் காபி.." என்றான் இயல்பாக.

" காபி.." என்றான் சிரிப்புடன்.

"யா ஜஸ்ட் ஏ மினிட்.." என்றான் உள்ளே சென்ற அடுத்த ஐந்து நிமிடத்தில் இரு காபி கோப்பைகளுடன் வந்தான்.


"வாவ் சூப்பர் காபி கரன்.. வென்டாஸ்டிக்.." என்று பாராட்டினான்.

"அட நீங்க வேற ஆதவன்.. எங்களை மாறி ஆளுங்க கண்ட இடத்துக்கு டிரான்ஸ்பர் பன்னா அப்புறம் சொந்த சமையல் தான.. அது தான் எதோ கொஞ்சம் போட தெரியும் சமைக்கவும் செய்வேன்.." என்றான் இயல்பாக.

" அப்புறம் என்னைத் தேடி இவ்வளவு தூரம் வரைக்கும் வந்துருக்கீங்க.. எதுவும் முக்கியமான விடயமா வந்தீங்களா.."

" ம்ம் ஆமா கரன்.. எனக்கு நீங்க ஒரு உதவி செய்யனும் கரன்.. அது வந்து.." என்று தன் குடும்பத்தில் நடந்ததை கூறியவன்,

"இதுக்கு பின்னாடி இருக்கற அந்த ஒருத்தர் யாருன்னு எனக்கு தெரியனும்.. அதுமட்டும் இல்லாம செய்யாத தப்புக்கு நான் தண்டனை அனுபவிச்சிருக்கேன்.. அதுமட்டும் இல்லாம என் குடும்பத்தை சார்ந்த யாரோ இன்னும் இருக்கற மாறி தோணுது.. இதையெல்லாம் நானே பண்ணிப்பேன்.. ஆனா இதுல நான் நேரடியாக இறங்கி தேட முடியாது.. எதிரி அலார்ட் ஆயிடுவான்.. ஆனா நீங்கே தேடுனா நிச்சயம் அதுக்கு ஒரு வழி கிடைக்கும்னு தான் உங்களை இங்கே வர வச்சேன்.." என்று முடித்தான்.

அவன் கூறியதை எல்லாம் மனதிற்குள் உள் வாங்கியவன் சிறிது யோசனைக்கு பின்னே, "ஏன் ஆதவன் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கா.. அப்படி இருந்தா அவங்களை கொஞ்சம் கண்காணிச்சா போதும் உண்மையை கண்டு பிடிச்சரலாம்.." என்றான யோசனையுடன்.

" ம்ம் இருக்கு கரன் இதுல அவங்க பத்தின டிடெயில் இருக்கு.." என்று தான் கையோடு கொண்டு வந்திருந்த ஒரு கவரை கரனிடம் கொடுத்தான்.

அதை வாங்கியவன் அங்கிருந்த டேபிளில் வைத்தவன், "இதை நான் அப்புறம் பாத்துக்குறேன் ஆதவன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சமைச்சி முடிச்சிட்டேன்.. சாப்பிட்டு போலாம்.." என்று எழுந்தான்.

"ஏன் கரன் என்கிட்ட வேற எதுவும் உங்களுக்கு கேட்க தோனலையா.. ஐ மீன் உங்களை இங்க வர வச்சதை பத்தி.." என்றான் தயங்கியபடி.


"ஹலோ பாஸ்.. நேத்து எனக்கு உங்க மேல கொஞ்சம் கோபமும் சந்தேகமும் இருந்துச்சி.. ஆனா நேத்து நைட் என் டார்லிங்கிட்ட பேசுனதுக்கு அப்புறம் இல்லை.. ஆமா அவங்களை எப்படி ஆதவன் உங்களுக்கு தெரியும்.." என்று
அவனிடம் இயல்பாக பேசியபடி எழுந்து சமையல்கட்டிற்கு சென்றான்.

" அது ஒரு பெரிய கதை கரன்.. இன்னொரு நாள் சொல்றேனே.." புன்னகைத்தபடியே.

"ஹலோ பாஸ் இப்போ இங்கே சமைக்க போறது நான் தான் நீங்க இல்லை.. சோ நீங்க அந்த கதையை சொல்லித்தான் ஆகனும்.. பொதுவா என் டார்லிங் யாருக்கும் இவ்வளவு ரெகமெண்ட் பண்ண மாட்டாரு.. ஆனா உங்களுக்கு பண்ணாரு.. சோ அதை நான் கண்டிப்பா தெரிஞ்சிக்கனும்.." என்றான் சமைத்தபடியே.

"நான் மிஸ்டர் வீ கே வ பார்த்தது சிறையில தான் கரன்.." என்றான் புன்னகைத்தபடி.

"வாட் மாம்ஸ் ஜெயிலுக்கு வந்தாரா... ஆனா எதுக்கு.." என்றான் அதிர்ச்சியாய்.

"கரன் உங்க கற்பனை குதிரையை தட்டி ஓடாதீங்க... அவரும் அவரோட மனைவியும் சுதந்திர தின சீஃப் கெஸ்டா வந்தாங்க.." என்றான் அவன் அதிர்ச்சியை குறைத்து.

" ஓஓ அப்படி சொல்றீங்களா நீங்க.." என்றான் சகஜமாக.

"நான் சின்ன வயசுலேயே ஜெயிலுக்கு போனேன்.. அதுவும் செய்யாத குற்றத்துக்கு.. அந்த வயசுல அது புரியலை.. அது புரியும் போது எல்லாம் என் கையை மீறி போயிடுச்சி.. என் குடும்பம் சிதைந்து போச்சி.. ஆனா விடமாட்டேன் இதுக்கெல்லாம் காரணமானவங்களை கருவறுக்காமல் விட மாட்டேன்.. அதோட முதல் படி தான் நான் ஜெயில்ல இருந்து படிச்சேன்... நான் படிக்க உதவி செஞ்சது ரூபவாஹினி மேடமும் வி கே வும்.. அதிலேயே ரெண்டு பெரும் எனக்கு குலோஸ் ஆயிட்டாங்க.. அப்புறம் என்னோட கதையை சொன்னதும் தான் எனக்கு எல்லா வகையிலும் உதவியா இருக்கேன்னு சொன்னாங்க..

நேத்து தான் அவங்ககிட்ட பேசுனேன் எனக்கு நம்பிக்கையா அதிகாரத்துல இருக்கற ஒருத்தர் இந்த ஸ்டேஷனுக்கு வேனும்னு கேட்டேன்.. அப்போ தான் உங்களை பத்தி சொன்னாங்க.. நீங்களும் வந்துட்டீங்க.." தன் கதையை சுருக்கமாய் சொன்னான் ஆதவன்.


"அதான் மாம்ஸ் இப்படி ஒரு வேலை செஞ்சாங்களா.. விடுங்க ஆதவன் பாத்துக்கலாம்.. உங்களுக்கு எப்பவும் நாங்க இருக்கோம்.. என் டார்லிங் சும்ம ஒரு விஷயத்துல இறங்க மாட்டா.. அவ இறங்கிட்டா அது மாஸ் தான்.." என்று கலகலப்பாய் பேசினான் கரன்.

அங்கே அழகான ஒரு தூய்மையான நட்பு உருவானது.




அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. அப்புறம் இந்த வி கே ரூபவாஹினி என்னோட என் தேடலானவளே கதையோட ஹீரோ ஹீரோயின்.. கரன் அதுல வர்ற ஒரு ஐபிஎஸ் ஆபிசர்.. சும்மா நட்புக்காக கொண்டு வரலாம்னு ஒரு ஆசை.. அதான்


இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்