• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 54

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
ஆதவனும் கரனும் தங்களுக்குள்ள நிறைய விடயங்களை விவாதித்து தனக்குள் தோன்றிய சந்தேகங்களை விவரித்தான் ஆதவன்.. அதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டான் கரன்.

" ம்ம் ஓகே ஆதவன்.. நீங்க நிம்மதியா உங்க வேலையை பாருங்க.. இனி இது என்னோட வேலை நான் பாத்துக்குறேன்.. உங்க குடும்பத்தை சேர்ந்தவங்க இருக்காங்களான்னு நான் தேடி கண்டு பிடிக்கிறேன் ஆதவன்.." என்று நம்பிக்கையை அவனுக்குள் விதைத்தான்.


இங்கே மருததுரை வீட்டில் கத்திக் கொண்டிருந்தான்.

"என்னடா நினைச்சிட்டு இருக்கான் அந்த ஆதவன்.. எப்படி டா போலிஸ் வந்துச்சி.. வீராவ பத்தி தெரிஞ்சிதுன்னா எனக்கும் ஆபத்து தான.. அவன் யாருன்னு தெரிஞ்சிதுன்னா என்னை நெருங்கிறது ஈசியா போயிடும்.. நோ அது மட்டும் நடக்க கூடாது.." என்று கத்திக் கொண்டிருந்தான்.

அதைக் கஜாவின் இதழ்கள் மர்ம புன்னகை பூத்தது.

அதை பரமனும் கண்டு அவனிடம் தலையாட்டி சிரிக்காதே என்றான். அதைக் கண்ட கஜாவும் தனக்குள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தான்.

அப்பொழுது அங்கே வந்த தாண்டவராயன், "மருது எப்படி அவன் செத்தான்.. முதல் நாள் உயிரோட இருந்தவன் அடுத்த நாள் எப்படி செத்தான்.. அவளை யாரு காப்பாத்தினது.." என்றான் படபடப்புடன்.

" நிச்சயம் இது அந்த ஆதவனோட வேலை தான்..கவலைப்படாதீங்க சீக்கிரம் இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.. அவன் குடும்பம் எப்படி கூண்டோடு அழிஞ்சிதோ அதே போல இவனையும் அழிக்க ரொம்ப நாள் ஆகாது.. நிச்சயம் அழிப்பேன்.." என்றான் கர்வமாய்.

" மருது எதோ தப்பாயிருக்கு.. என்னவோ எங்கேயோ தப்பு நடக்குது மருது.. பாத்து கவனமா இரு.. அந்த தகட்டை படிக்குற ஆள் வந்தாச்சா.." மருதுவை எச்சரித்தவன் தங்களின் விஷயத்திற்கு வந்தான்.

" ம்ம் இன்னும் ரெண்டு நாள்ல வர்றதா சொல்லியிருக்கான்.."

"அதை முதல்ல பாரு மருது.. அந்த புதையல் முதல்ல நம்ம கைக்கு கிடைக்கட்டும்.. அப்புறமா இந்த ஆதவனை பாத்துக்கலாம்.." சொல்லிவிட்டு சென்றான் தாண்டவராயன்.


அவன் சென்றதும் தன் பக்கத்திலிருந்த அடியாளிடம், "டேய் அந்த சாமியார் எப்படா வருவான்.. சீக்கிரம் கூட்டிட்டு வர சொல்லுடா.." என்று கட்டளையிட்டான்.

மற்றவனும், "சரிங்க ஐயா.." என சென்று விட்டனர்.

இங்கே வீட்டிற்கு வந்த ஆதவனின் கண்கள் வெண்மதியை தேடி அலைந்தன.

அப்பொழுது அங்கே வந்த வளவன், "அண்ணே யாரை தேடுறீங்க.." அவன் யாரை தேடுவான் தெரிந்தே வினவினான்.

அவனிடம் பதில் சொல்லாத ஆடவன் மீண்டும் தன் விழிகளை நாலாபுறமும் தேடினான் தான் தேடிவந்தவளை நாடி.

" அண்ணே நீங்க எத்தனை தேடினாலும் நீங்க தேடினவங்க உங்க கண்ல சிக்க மாட்டாங்க.." என்றான் சிரிப்புடன்.

ஏன் என்ற கேள்வியான பார்வையுடன் அவனின் புறம் திரும்பியவன், "நான் அப்படி யாரையும் தேடலையே.." என்றான் பொய் முகமூடி அணிந்து.

அவனின் பொய்யை கண்டு கொண்ட தமையனோ சிரிப்புடன், "அண்ணே இதை வெளியே யாருகிட்டாயாவது சொன்னீங்கன்னா நம்புவாங்க.. ஆனா என்கிட்ட சொல்றது ரொம்ப தப்பு ண்ணே.." என்றான் கிண்டலாக.

"டேய் அது தான் தெரியுது இல்லை.. எங்கேடா அவ.." என்றான அதற்கு மேலும் தாளாது.

"அப்படி வாங்க வழிக்கு.. அண்ணே அண்ணி தோப்புக்கு போயிருக்காங்க... இப்போ வர்ற நேரம் தான் வந்துருவாங்க.. வாங்க சாப்பிடலாம்.." என்று அவனின் கைப்பிடித்து அழைத்து சாப்பாட்டு மேஜையில் அமர வைத்தான்.

" தோப்புக்கு போயிருக்காளா.." என்றவனின் மனது எதுவோ தவறாக நடப்பது போல் தோன்றியது.

அடுத்த நொடி அங்கிருந்த வெண்மதியை தேடி வேகமாய் கிளம்பி விட்டான்.

அவனை கூப்பிட்டு பார்த்த வளவனின் குரலில் காதில் விழாதவாறு ஓடினான் மதியவளைத் தேடி.

அதைக் கண்டு சிரித்தவன் தன் தமையனை நினைத்து சிரித்தான்.

இங்கே தோப்புக்கு வந்த ஆதவன் வெண்மதியை தேடி ஓடினான்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவள் இருக்கும் இடம் தெரியவில்லை.

பதட்டத்துடன் நாலாபுறமும் அவளை தேடியவனின் விழிகளில் வள்ளி விழுந்தாள்.


தோப்பில் இருந்த கல் மேடையில் வள்ளி மட்டும் உட்கார்ந்திருந்தாள்.. அவளிடம் வேகமாய் ஓடியவன் மூச்சு வாங்கியபடி,

"வள்ளி வெண்மதி எங்கே.." என்றான் பதட்டத்துடன்.

அவனின் பதட்டத்தை உணர்ந்தவள், "ஐயா சின்னம்மா அங்கே கிணத்து மேட்டர்ல இருக்கற தொட்டியில குளிக்கிறாங்க ஐயா.." என்றாள் பதிலாய்.

"எவ்வளவு நேரம் ஆகுது.." என்றான் சுற்றிலும் பார்த்தபடி.

ஒரு மணி நேரம் ஆகுதுங்கய்யா. . நானும் தான் குளிச்சேன்.. என்னால தண்ணில ரொம்ப நேரம் இருக்க முடியலைன்னு வந்துட்டேனுங்க.. அம்மா தான் இன்னும் வராம இருக்காங்க ஐயா.."

அவளின் பதிலை கேட்டவன், "சரி நீ இங்கேயே இரு.. நான் போய் கூட்டிட்டு வர்றேன்.." என்றபடி கிணத்தை நோக்கி சென்றான்.

அங்கே போனவன் அடுத்த நொடி அதிர்ச்சியில் சிலையாய் நின்று விட்டான் பெண்ணவளை பார்த்து.

இயற்கையின் அழகா..? இல்லை பார்க்கும் பெண் அழகா..? என்பதற்கேற்ப தண்ணீருடன் இணைந்து ஆட்டம் போட்டிருந்தாள் வெண்மதி.

மனம் பாரமாய் இருந்த தருணத்தில் இயற்கையை ரசிக்க பிடிக்கவில்லை என்பதை விட அவை கண்களுக்கு தோன்றவில்லை.. இன்று ஏதோ எந்த பிரச்சனையும் முடியவில்லை என்றாலும் ஏனோ மனம் ஒரு நிலையில் நிம்மதியாய் இருந்ததாலோ என்னவோ பெண்ணவளுக்கு இன்று இயற்கையோடு இணைந்து விட்டாள்.

அவளைப் பார்த்த நொடியில் அவனுக்கு தோன்றியது இது தான் மேகத்தில் இருந்த நிலா மண்ணில் வந்ததோ என்று.




தங்கத் தாமரை மகளே வா அருகே

தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்

இவை எல்லாம் பெண்ணே உன்னாலே


செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே

என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே

உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே

காணாமல் நான் போனேனே

இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க

தொடட்டுமா தொல்லை நீக்க

தங்கத் தாமரை மகளே வா அருகே

தத்தித் தாவுது மனமே வா அழகே

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் கார்காலம்

நகம் கடிக்கும் பெண்ணே அடக்காத ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை

நெருக்கமே காதல் பாஷை

தங்கத் தாமரை மகளே வா அருகே

தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்

இவை எல்லாம் பெண்ணே உன்னாலே

தங்கத் தாமரை மகளே

தத்தித் தாவுது மனமே
தங்கத் தாமரை மகளே

தத்தித் தாவுது மனமே வா


அவளை பார்த்தவனின் கண்களுக்கு இந்த பாடல் தான் தோன்றியது.. அவளையே ரசித்திருந்தவனின் விழிகளில் அப்போது தான் அது விழுந்தது.

அதற்குள்ளாக பெண்ணவளின் அலறல் சத்தம் அந்த கானகத்தையும் தாண்டி எதிரொலித்தது.


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. முடிஞ்சவரைக்கும் இனி தொடர்ந்து கொடுக்க முயற்சி பன்றேன் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ணு பட்டூஸ்க்கு நன்றி