பெண்ணவள் நீண்ட நாள் கழித்து தண்ணீரில் நன்றாக ஆட்டம் போட அதை கண்ட ஆடவனின் மனம் தடுமாறித்தான் போனது.. அவனுக்கு நன்றாகவே தெரியும் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் நிறைய உண்டென்று.. ஆனால் பெண்ணவளின் உடல் வனப்பும் அவளின் அங்கங்களின் மேல் பித்தான ஆடவனின் மனமும் அவனுக்கு எதிராக சதி செய்தன.
அவளையே பார்த்தவனின் கண்களுக்கு அப்பொழுது தான் அது பட்டது.. ஆம் அவளின் அருகே பச்சை நிறத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. அதை பார்த்தவன் விழிகள் வெண்மதியையும் கண்டது.
அவளுக்கு தன் பக்கத்தில் என்ன உள்ளது என்று சுத்தமாய் தெரியவில்லை.. அந்த அளவுக்கு அவள் நீரில் தன்னை மூழ்கடித்திருந்தாள்.
அவன் அந்த பாம்பை கண்டு அவளிடம் செல்வதற்குள்ளாக அவளின் அலறல் சத்தம் அந்த காட்டையே அதிர வைத்தது.
அவளின் சத்தம் கேட்டு வேகமாய் வருவதற்குள்ளாகவே அந்த பாம்பு அவளை தீண்டியிருந்தது.
பாம்பை கண்டு அதிகமாய் பயந்து போயிருந்தவள் அது அவளை தீண்டவும் அப்படியே மயங்கி தண்ணீரில் விழ இருந்தவளை தன் கைகளில் ஏந்தியிருந்தான் ஆடவன்.
அவள் மயங்கி அவனின் மடியில் விழவும் பதட்டத்துடன் அவளை எழுப்ப முயற்சித்தான்.. அப்பொழுது தான் கண்டான் அவளின் காலில் பாம்பின் இரு பற்கள் இருந்ததை.
வேகமாக அவளின் புடவை முந்தானையை கிழித்து அவள் காலில் இறுக்கமாய் கட்டியவன் அவளின் இரு கண்டத்தையும் தட்டியவாறு,
"ஏய் பட்டு பட்டு எந்திரி டா.. இங்கே பாரு உனக்கு எதுவும் இல்லை டா நான் உன் கிட்ட தான்டா இருக்கேன்.. உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன் டா.. எழுந்திருடா.." அவளின் இரு கண்ணத்தையும் மாறி மாறி தட்டினான்.
ஆனால் அவள் தான் கொஞ்சமும் விழிக்கவில்லை.. அவனின் மனம் பதட்டம் அடைந்தது.. வேறு எதையும் யோசிக்க முடியாமல் அவளின் நிலை அவனின் கண்களில் கண்ணீரை வர வழைத்தது.
தன் கண்ணீரை துடைத்தவன் தன் இரு கையையும் கூப்பி தன் கடவுளை தொழுதான்.
" பரமேஸ்வரா என்னோட பட்டு வ எனக்கு மீட்டு கொடு.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி தண்டனையை குடுப்பே.. என் பட்டு எனக்கு குடு பரமேஸ்வரா.." என்று வாய்விட்டு வேண்டினான்.
அப்பொழுது அங்கே வந்தார் சித்தர் ஒருவர்.. அவனின் குரல் கேட்டு அவனருகில் வந்தவர் என்னவென கேட்க அவனும் மதியின் நிலையை கூற தன்னிடத்தில் உள்ள பச்சிலையை வைத்து அதை கசக்கி சாறு பிழிந்து அதை அவளின் வாயில் ஊற்ற கூறினார்.
அவர் கூறியபடி அவளின் வாயில் பச்சிலை சாற்றினை கசக்கி ஊற்ற சிறிது நேரத்தில் பெண்ணவள் கண் விழித்தாள்.
தன் இமை திறந்ததும் முதலில் கண்டது ஆதவனின் பதட்டமான முகத்தை தான்.
அவள் கண் விழிக்கவும் தான் ஆதவன் சற்று நிம்மதியடைந்தான்.
தக்க சமயத்தில் தனக்கு மூலிகையை குடுத்து உதவியருக்கு நன்றி கூற திரும்பியவனுக்கு மற்றொரு அதிர்ச்சியாய் அந்த இடம் வெற்றிடமாய் இருந்தது.
சற்று நேரத்திற்குள் தோப்பின் உள்ளே வந்த இருவரும் இன்னும் வராமலிருக்க அவர்களை கான வந்த வள்ளிக்கு கீழே மயங்கியிருந்த வெண்மதியை கண்டதும் பதட்டத்துடன் அவர்கள் அருகே வந்தாள்.
" ஐயா அம்மாவுக்கு என்னாச்சிங்க.." என்றாள் பதட்டத்துடன்.
"உங்க அம்மாவ பாம்பு கடிச்சிருச்சி வள்ளி.. பாத்து சூதானமா இருக்கறது இல்லையா என்ன..." என்றான் கண்டிப்புடன்.
" ஐயோ அம்மா.. ஐயா சீக்கிரம் வாங்க வைத்தியர்கிட்ட உடனே அழைச்சிட்டு போலாமுங்க.." என்றாள் வேகமாய்.
"அதெல்லாம் வேணாம் வள்ளி.. பச்சிலை ஊத்தியிருக்கேன்.. இப்போ பரவாயில்லை.. கொஞ்ச நேரம் இரு நான் வண்டியை வர சொல்றேன்.. வண்டியில போயிடுங்க.." என்று விட்டு தன் போன் எடுத்து வளவனிடம் தோட்டத்திற்கு வண்டியை அனுப்புமாறு கூறினான்.
அவன் மற்றவர்களிடம் பேசினாலும் அவனின் பார்வை வெண்மதியை சுற்றி தான் இருந்தது.. அதை கவனித்தவள் தன் உடலுடன் ஒட்டிய உடையுடன் அவன் முன்னே இருப்பது அவளுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.. அதனால் தன் உடலை வள்ளியின் பின்னே மறைத்துக் கொண்டாள்.
அதைக் கண்டவனின் முகம் சிரிப்பை கொண்டிருந்தது.. அவள் ஒளிந்த காரணம் தெரியும் ஆதலால் அமைதியாக அங்கிருந்து சென்றான்.
சற்று நேரத்தில் வண்டி வரவும் அவர்களை அனுப்பி விட்டு பின்னே தன் வண்டியை எடுத்துக் கொண்டு வந்தான் ஆதவன்.
ஏனோ வீடு சென்று சேரும் வரைக்கும் வெண்மதி தன் பின்னே வந்தவனைத் தான் பார்த்திருந்தாள்.
இன்னும் அவன் யாரென்று அவளுக்கு தெரியவில்லை தான்.. ஆனால் ஏனோ அவன் அருகாமையில் அவள் மனம் நிம்மதியடைந்ததை அவளால் தடுக்கவும் முடியவில்லை.
தனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் .. இறந்து போன தன் முன்னால் கணவன் கூறிய வார்த்தை.. தன்னை கனகம் நடத்திய செயல் என அனைத்தும் அவள் கண் முன்னே வந்து தான் யார் என்ற கேள்வியை அவளுக்குள் வியாபித்திருந்தது.
அவள் யாரிடமும் அந்த கேள்வியை கேட்கவில்லை.. ஏன் அவனிடம் கேட்கும் போகும் நேரம் எல்லாம் ஏதோ தட்டி கழிப்பதை போல் இருந்தது.
அவள் மனதிற்குள் பல கேள்விகள் வந்து அவளை புயலின் மையத்தில் சிக்கிய சூறாவளியாய் சுழற்றியடித்தது.
இதோ இன்று நடந்த சம்பவமும் அதற்கு சாட்சியாய் உள்ளதே.. பாம்பு கடித்த பயத்தில் தான் மயங்கினாளே ஒழிய முழுமையான மயக்கம் அவளை ஆட்கொள்ளவில்லை.
அதில் அவன் பேசிய வார்த்தைகள் அவளின் செவிகளுக்குள் விழுந்திருந்தது.. அதை கேட்டதிலிருந்து நிச்சயமே செய்து விட்டாள் தான் யார் என்று அவனுக்கு தெரியும் என்று.
ஆனாலும் தான் கேட்டாலும் அவன் சொல்ல மாட்டான் என்பதையும் அறிந்திருந்தாள் இந்த சிறிது நாட்களில்.
ஆனால் அதை தெரிந்து கொள்ளும் காலம் வெகு விரைவில் உள்ளது என்பதை பேதையவளுக்கு யார் சொல்வது.
இங்கே காட்டு பங்களாவில் மருததுரை எதிர்பார்த்த அந்த பட்டயம் படிக்கும் நபரும் வந்திருந்தார்.
ஆனால் அதை படித்து அவர் கூறிய செய்தி மருததுரைக்கும் தாண்டவராயனுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. ஏன் அதை தன் ஆட்கள் மூலம் கேட்ட ஆதவனுக்கும் அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை என்பது தான் உண்மை.
அது என்னன்னு அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி..