• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 56

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
மருததுரையிடம் இருந்த பட்டயத்தை படித்த அந்த சாஸ்திரியர் சொன்னதை கேட்டு மருததுரையும் தாண்டவராயனும் அதிர்ச்சியில் சிலையாகிவிட்டனர்.

ஆம் அந்த செம்பு பட்டயத்தில் அந்த கால மன்னர்களும் மக்களும் குருமார்களும் தங்களின் சூழலுக்கேற்ப பயன்படுத்தினர்.

அதை தான் தன் கடைசி நாட்களில் அன்றைய மதுரையின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த பாண்டிய மன்னரின் ஆலோசனைக்கேற்ப பாண்டிய வம்சத்தின் புராதன வாளும் பாண்டியர் பரம்பரையின் செல்வங்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் என அனைத்து தகவல்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் குறி பாண்டியர்களின் வம்ச பரம்பரையில் வந்த ஆணின் முதுகில் மீன் மச்சத்தை கொண்டு வரையப்பட்டிருக்கும் ஓவியத்தில் அதன் ரகசியம் உள்ளது என இருந்தது.. அதன் சாந்தம் என்னவென்றாள் மீன் மச்சம் இயற்கையான ஓவியமாய் வர்ணம் பூசியபடி இருக்கும் என இருந்தது.

ஒருவரின் உடம்பில் இயற்கையாக ஓவியம் இருப்பது நிச்சயமில்லை.. யாரேனும் வரைந்தார் ஒழிய.. ஆனால் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி தான் அங்கிருந்தோருக்கு இருந்தது.

ஏன் இதை தன் ஒற்றர்கள் மூலமாய் அலைபேசியில் கேள்விப்பட்ட ஆதவனுக்குமே அந்த சந்தேகம் இருந்தது.

இப்பொழுது பெரிய கேள்வி என்றாள் முதுகில் மீன் மச்சம் இருக்கும் பாண்டியர்களின் வீரன் அந்த ஆடவன் யார் என்பது தான் அனைவருக்கும் இருந்தது.

அந்த ஆடவனை கண்டாள் ஒழிய அந்த வாளையும் புதையலையும் கண்டுபிடிப்பது அத்தனை எளிதானது அல்ல என்பது எல்லோருக்கும் புரிந்தது.

அந்த பட்டயத்தில் இருந்த மற்றொரு விடயம் அந்த ஆடவனை கண்டுபிடிப்பதும் அந்த பொக்கீஷ வாளையும் புதையலும் எடுப்பதற்குள்ளாக பல உயிர் பலி நிகழப்போவது நிச்சயம்.. அதை பெறுவதற்கு கடினமான பல படிகளை கடக்க வேண்டும் எனவும் அதற்கு ஒரு பெண்ணின் வழிகாட்டல் மிகவும் அவசியம்.

சிறு குறிப்பாய் அந்த ஆடவன் பாண்டியர்களின் வம்சம் மட்டும் அல்லாது அவர்களின் பேரன்பை பெற்றவனாகவும் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.. அவனை கண்டறிய வேண்டுமானால் அந்த மீனாட்சியம்மன் அருளும் எல்லையில் இருக்கும் எல்லையம்மன் அருளும் வேண்டும் என்று இருந்தது.. அந்த தாய் மனது வைத்தாள் தான் அவன் யாரென்று அறிய முடியும்.. அப்படியே இல்லையென்றாலும் ஏழு ஆண்டுக்கு ஒரு முறை தோன்றும் பௌர்னமி பிறை நட்சத்திர வடிவில் தோன்றும் நாளன்று அந்த ஆண்மகன் அந்த தாயாவளின் ஆசியுடன் அவன் பிறந்ததற்கான நோக்கம் நிறைவேற வெளி வருவான் என்பது ஐதீகம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

அதைப் படித்த அனைவருக்கும் பெரிய குழப்பம் தான் விளைந்தது.. எப்படி எப்படி இது சாத்தியம்.. ஆனால் அவர்கள் அறியாதது சாத்தியம் இல்லாத விடயத்தையும் சாத்தியமாக்க முடியும் நம்பிக்கை இருந்தால்.. அதுமட்டுமன்றி அந்த தெய்வத்தின் அருளும் வேண்டும்.

ஆதவனுக்கு அங்கே கூறிய செய்தி எங்கேயோ வழி தெரிந்ததை போல் இருந்தது.. ஆனால் எப்படி என்ற விடயம் தான் புரியவில்லை.. முதலில் தன் தாத்தாவை சந்திக்க வேண்டும் என்ற முடிவுடன் கிளம்பியவள் முன்பு வந்து நின்றாள் வெண்மதி.

அவனின் முன்பு தலைகுணிந்தபடி,

"நான் என் பிரண்ட் வந்தனாவை பாக்க போகட்டா.." என்றாள் சிறுபிள்ளையாய்.

அவளின் கேள்வி பத்து வயது பிள்ளை தன் தாயிடம், "அம்மா நான் என் பிரண்ட் வீட்டுக்கு போய் விளையாடிட்டு வரட்டா.." என்று கேட்பதை போல் இருந்தது.

அதை உணர்ந்து சிரித்தவன், "ம்ம் வளவன் கூட போயிட்டு வா.. அப்புறம் ரொம்ப நேரம் வெளியே இருக்கு கூடாது.. சீக்கிரம் வீடு வந்துரனும்.. நான் வர லேட் ஆகும் சரியா.." என்றான் கட்டளையாய்.

அவன் அன்பாய் தான் கூறினான்.. ஆனால் அவளுக்கு அது கட்டளை போல் இருந்தது. அரக்கன் என்று வாய்க்குள் முனுமுனுத்துக் கொண்டாள்.

சிறிது தூரம் சென்றவன் மீண்டும் உள்ளே வந்து, "வளவா.." என்று சத்தமாய் அழைத்தான்.

அவனின் அழைப்பு கேட்ட அடுத்த நொடி அங்கே வந்திருந்தான் வளவன்.

" அண்ணே சொல்லுங்க அண்ணே.." என்று கைகட்டியபடி.

"உங்க அண்ணி அவ தோழியை பாக்க போராலாம்.. நீயும் கூட போயிட்டு வா.." என்று விட்டு கிளம்பும் சமயம் மீண்டும் வளவனை பார்த்து ,

"வளவா பத்திரம்..." என்று கடைசி வார்த்தையை அழுத்திக் கூறி விட்டு சென்றான்.

அவனின் அழுத்தம் சொன்னது எதுவோ ஆபத்து உள்ளது என்பதை.

இவன் இங்கே காட்டுப் பகுதியை கடந்து மலைக்கு அருகில் வந்தவன் தன் பின்னே மீண்டும் திரும்பி பார்த்தான்.. யாரும் இல்லை என்பதை உறுதி செய்தவன் மீண்டும் அந்த மலையை பார்த்தான்.

அந்த மலையின் அடிப்பகுதி இரண்டாய் பிரிய அதன் உள்ளே சென்றதும் அடுத்த நொடி அது பழமையில் வந்தது.


அங்கே சிவனின் அருகே அமர்ந்த மருதநாயகம் பூஜை செய்து கொண்டிருந்தார்.

அவனின் நடை சத்தத்தை வைத்து ஆதவன் வந்ததை அறிந்தவர்,

"அய்யா ராசா வந்துட்டியா யா.." என்றார் வாஞ்சையாய்.

"அய்யா வந்துட்டேனுங்க.. அய்யா இன்னைக்கு என்ன நடந்துச்சின்னா.." என்றவன் மருததுரையும் தாணடவாராயனும் அந்த பட்டயத்தை ஆள் வைத்து படித்ததை கூறியவன்,

"எனக்கு பெரிய குழப்பமா இருக்குங்கய்யா.. இதுல எனக்கு ஒன்னுமே புரியலை.. இயற்கையா எப்படிங்க ஐய்யா இப்படி மீன் மச்சம் வரைந்த ஓவியமும் அதற்குள்ளே அந்த புதையலை அடையறதுக்கான வழியும் இருக்குன்னு சொல்லிருக்கு.." என்றான் யோசனையாய்.

"ஆமா ராசா.. உண்மை அது தானே.. மீன் மச்சம் இயற்கையான ஓவியமா வரைந்து இருக்கற ஆணால மட்டும் தான் அந்த புதையலையும் கண்டு பிடிக்க முடியும் ராசா.. இதுல இன்னும் ஒன்னு இருக்குது ராசா.. அந்த ஆண் யாரூன்னு எங்களுக்கே தெரியாது ராசா.. அது அந்த பரமேஸ்வரனும் மீனாட்சியும் எல்லையம்மன் மட்டுமே அறிந்த ரகசியம்.. ஆனால் அவன் மக்கள் போற்றும் மன்னனாக இருப்பான்.. ஏழைகளின் இளவரசன்.. அரக்கர்களை அழிக்க வந்த அசுரனாக இருப்பான்.. இது அந்த புதையலை பற்றி அறியப் போகும் ஆடவனின் பராக்கிரமம் ராசா.." என்றார் பூடகமாய்.

"ஐய்யா அப்போ எப்ப தான் அந்த ஆண் மகனை நாம் அறிய முடியும்.." என்றான் குழப்பமாய்.

"காலம் அறியும் நேரம் அறியும் மக்கள் அறியும் மகேசன் அறியும்.. அனைத்திற்கும் விடையாய் உலகையாளும் எம்பெருமானின் அருளுடன் எல்லையம்மனின் ஏற்றம் பெரும் திருவிழாவான சித்திரை திங்களில் புதுமை கொண்டு பூப்பான் ஆடவன்.. அவனுடனே குலக்கொழுந்தான நன்மகள் தேவியும் மீட்டெழும் நேரமும் கலந்தே வரும் ராசா.." என்றார் விதியின் பயனை.

இங்கே வந்தனாவை காண வந்த வெண்மதிக்கும் வளவனுக்கும் மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்தது..


அடுத்த பாகத்துல பாக்கலாம் செல்லம்ஸ்