கனகம் வெண்மதியை திட்டுவது பொருக்காமல் அவரை அதட்டி அங்கிருந்து வெளியேற செய்தவன் கரனிடம் கண்களால் சைகை செய்தான்.
அதை புரிந்தார் போல் கரனும் கண்களை மூடி தலையாட்டினான்.
வெண்மதியை வஞ்சத்துடன் பார்த்துக் கொண்டே உள்ளே சென்ற கனகத்தின் சூழ்ச்சி அறியாமல் அவள் திட்டியதை மனதில் வைத்து அழுது கொண்டிருந்தாள் பெண்ணவள்.
அவளைப் பார்த்த ஆதவனுக்கு மனம் வலித்தது.. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி இருப்பாள்.. சில நேரங்களில் தெளிவாய் இருக்கிறாள்.. சில நேரங்களில் இப்படி குழந்தையாய் அழுகிறாள்.. இவளை எப்படித் தான் மீட்டெடுப்பது என்றே புரியாத புதிரில் ஸ்தம்பித்த நிலையில் இருந்தான் ஆதவன்.
அவனின் நிலை புரிந்த கரனும் அவனின் தோளில் தன் கையை வைத்து அழுத்திவிட்டு வெண்மதியிடம் திரும்பியவன்,
"சிஸ்டர் இன்னும் எவ்வளவு நேரம் அழுவீங்கன்னு சொன்னா நாங்க வெளியே போய் டீ சாப்பிட்டுக்குறோம்.. இவங்களை மாறி ஆளுங்க சொல்றதுக்குல்லாம் அழுதா நாம வாழ்க்கை முழுசும் தான் அழனும்.. இனி நீங்க தான் சிஸ்டர் முடிவு பண்ணணும்.." என்று அவளிடம் கூறியவன்,
"மிஸ்டர் ஆதவன் என்னை மதுரையில இறக்கி விட வர்றீங்களா.. அப்படியே நல்ல ஹோட்டல் பாத்து சாப்பிட்டும் வரலாம்.. ஏனா இன்னைக்கு பூரா சிஸ்டர் சமைக்க மாட்டாங்க.. அழத்தான் போறாங்க.. இல்லை சிஸ்டர்.." என்றவனின் கிண்டலில் தன் முகத்தை துடைத்து கொண்டு நிமிர்ந்தவள்,
"சார் ஒரு அஞ்சு நிமிஷம் டீ கொடுத்து விடுறேன்.. அப்புறம் பதினைஞ்சு நிமிஷத்துல டிபன் ரெடி பன்றேன்.. " என்று உள்ளே ஓடினாள்.
அவள் உள்ளே ஓடியதை நினைத்து இருவரின் முகத்திலும் சற்று புன்னகை வந்தது.
இருவரும் வந்து சோபாவில் அமர்ந்தனர்.
கரன் ஆதவனிடம், "மிஸ்டர் ஆதவன் நீங்க அவங்ககிட்ட உண்மையை சொல்லனும்.. எவ்வளவு சீக்கிரம் மூடியுமோ அவ்வளவு சீக்கிரம்.. இப்படியே இருந்தாங்கன்னா அது உவங்களோட மனநிலைக்கு நல்லது இல்லை.. உங்க சித்தியும் அவங்களை நிம்மதியா வாழ விடமாட்டாங்க போல.." என்றான் வேகத்துடன்.
" ஆமா கரன் சீக்கிரம் சொல்லனும்.. அது மட்டுமில்லாம அதுக்குண்டான காலமும் வரப்போவுது.." என்றான் எதையோ யோசித்தபடி.
அதற்குள்ளாகவே வெண்மதியும் காபி கோப்பைகளுடன் அங்கே வந்தாள்.
இருவரும் அதை எடுத்துக் கொண்டதும் சமைக்க சென்றவளை அழைத்த கரன்,
"சிஸ்டர் எனக்கு பூண்டு காரக்குழம்பு செஞ்சு தர்றீங்களா.. நீங்க சூப்பரா சமைப்பீங்கன்னு ஆதவன் சொல்லிருக்காரு.. சோ எனக்கு ஒன் வீக்குக்கு ஆகற மாறி செஞ்சு தாங்க.. நான் சாதம் மட்டும் வச்சிக்குறேன்.." என்று உரிமையாய் அவளிடம் கேட்டான்.
அவன் கேட்டதும் பெண்ணவள் ஆதவனைத் தான் கண்டாள்..அவன் எதுவும் தவறாக எடுத்துக் கொள்வானோ என்று.. ஆனால் அவனோ,
"என்னை என்ன பாக்குற.. அவரு கேக்குறதை சொஞ்சு குடு.." என்று அனுமதியளித்தான்.
'இந்த ராட்சசனுக்கு என்னோட சமையலை புகழ கூட செஞ்சிருக்கா..' என்ற யோசனையுடன் சமைக்க சென்றாள்.
அவள் உள்ளே சென்றதை உறுதி படுத்திக் கொண்ட இருவரும் சுற்றியும் பார்த்துத் யாரும் இல்லையென உறுதியானதும் ஆதவன் கரனை அழைத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்றான்.
அரை மணி நேரத்தில் அந்த அறைகுகுள்ளிருந்து இருவரும் வெளி வரவும் அங்கே வெண்மதியும் வளவனும் சரியாக இருந்தது.
கரன் சாப்பிட்டு விட்டு வெண்மதி கொடுத்த காரக்குழம்பை எடுத்துக் கொண்டு சென்றான்.
அவன் போனதும் ஆதவன் தன் அறைக்கு செல்ல இருந்தவனை வெண்மதியின் குரல் தடுத்து நிறுத்தியது.
"கொஞ்சம் நில்லுங்க... அது வந்து வந்து.." என்று இழுத்தவளை முழுதாய் சொல் என்பதை போல் பார்த்திருந்தான் ஆதவன்.
அவனின் பார்வையை கண்டவளுக்கு அவளின் பேச்சு தடைபட்டது.
அவளின் வார்த்தை தடுமாறவும் அப்படியே நின்றிருந்தாள்.. ஆனால் அவனும் பேசாமல் அவளையே அமைதியாய் பார்த்திருந்தான்.
அவள் பேசாமல் அவன் பேசமாட்டான் என்பதை போல்.
இதற்கு மேலும் தான் பேசாமல் இருந்தால் அவனும் பேசமாட்டான் என்பதை உணர்ந்த பெண்ணவள்,
"இல்லை ரொம்ப தேங்க்ஸ்..." என்றாள் தலைகுணிந்தபடியே.
அவனின் பார்வை அப்படியும் மாறாமலே இது எதற்கு என்ற ரீதியில் தான் இருந்தது.
அவனின் பார்வையின் பொருள் உணர்ந்தவள் ஒரு பெருமூச்சுடன், "இல்லை என்னை படிக்க வைக்கிறீங்க.. வெளியில என்னை நல்ல விதமாக பேசியிருக்கீங்க.. அதுக்கு தான் இந்த தேங்க்ஸ்.. ஆனால் இப்பவும் நீங்க யாரு உங்களை எப்படி கூப்பிடறதுன்னு ஒன்னும் புரியலை.." என்றாள் மென்மையாய்.
அதை கேட்டு மனதினுள் சிரித்தவன், "எனக்கு தெரியும் நீ யாருன்னு.. ஆனா அதை சொல்ற நேரம் இன்னும் வரலை.. அப்புறம் என்னை மாமூன்னு கூப்பிடலாம்.." என்று சொல்லவிட்டு சென்று விட்டான்.
இங்கே அந்த மாமூ என்ற வார்த்தையின் பின்னே நிழற்படமாய் சில உருவங்கள் ஓடியது.. அதில் ஒரு சிறுமி ஒரு சிறுவனிடம்,
"டேய் ஆது என்ன டா பன்ற.." என்ற ஒரு சிறு பெண்ணின் குரலும் அதைத் தொடர்ந்து,
"அடியே முதல்ல என்ன பேரு சொல்லி கூப்பிடறதை நிறுத்துடி.. மாமூன்னு ஒழுங்க கூப்பிடு.." என்ற சிறுவனின் குரலும் அவளின் காதில் தொடர்ந்து ஒலித்தது.
அதைத் தொடர்ந்து, "நீ மட்டும் என்னை டீ போட்டு கூப்பிடலாமா.." என்றாள் சிணுங்கியபடி.
" ம்ம் அப்போ சரி இனி நீ என்னை மாமூன்னு கூப்பிடு.. நான் உன்னை பட்டு மான்னு கூப்பிடுறேன்.. என்ன டீல் ஓகே வா.." என்ற நிழலான பேச்சுக் குரலில் தலை வின்னென்று வலிக்க இரு கைகளால் தலையை பிடித்தபடி, "அம்மா.." என்ற கதறலுடன் மயங்கி விழுந்தாள்.
இங்கே குகையில் பூஜையில் இருந்த மருதநாயகத்திடம் வந்த குருஜீயிடம்,
"குருஜீ ஏன் ஆதவன் கிட்ட முழுசா எதையும் சொல்ல வேண்டாம்னு சொன்னீங்க.. நமக்கு நேரம் குறைவா இருக்கு குருஜீ.. இந்த சமயத்துல ஆதவனுக்கு அவனை பத்தின உண்மைகள் முழுசா தெரியனும்.. ஆனா நீங்க சொன்ன ஒரு காரணத்துக்காக நான் என் பேரன்கிட்ட எதையும் முழுசா சொல்லலை குருஜீ.. இதுவும் நீங்க அவன் நன்மைக்காகன்னு சொன்னதால தான் நான் செஞ்சேன்..
இப்போ என்னன்னா அந்த துருவன் வந்துட்டான் சாமி.. என் பேரையும் பேத்தியையும் முதல்ல அவன்கிட்ட இருந்து முதல்ல காப்பாத்தனும் குருஜீ.." என்றார் அவசரமாக.
" யாருகிட்ட இருந்து யாரைடா காப்பாத்த போற கிழவா... உன் ஆயுளே இப்போ முடிய போகுது.." என்றான் சச்சிதானந்தன் உருவில் வந்த துருவன்.
அவனின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்த மருதநாயகம் அதிர்ச்சியுடன், "துருவா நீயா.. நீ எப்படி இங்கு வந்தே.." என்றார் அடுத்த வார்த்தை வெளிவராமல்.
"ஏன்டா இந்த மலையில நீ வந்து ஒழிஞ்சிகிட்டா என்னால உன்னை கண்டு பிடிக்க முடியாத.. நான் துருவன் டா துருவேந்திரன்.. அது மறந்துடாத.. இப்போ உன்னை அழிப்பேன் அடுத்ததா நீ யாரை காப்பாத்த நினைக்குறியோ முன் ஜென்மத்துல தர்மேந்திரனாவும் இந்த ஜென்மத்துல ஆதவனாகவும் பிறந்திருக்கும் அவனையும் போன ஜென்மத்துல சந்திரமதியும் இந்த ஜென்மத்துலேயும் மதியை கொண்டு பிறந்திருக்கும் ரெண்டு பேரையும் அழிப்பேன் டா.. போன ஜென்மத்துல என்னை ரெண்டு பேரும் சேர்ந்து அடிச்சாங்க இல்லை.. இந்த ஜென்மத்துல அவங்க வாழ்க்கையில இணைய முடியாத மாறி செஞ்சுருக்கேன்.. இந்த ஜென்மத்துல அவங்களோட மரணமும் என் கையால தான் நடக்கும்.. நடத்துவேன் நடத்தியே காட்டுவேன் இது சத்தியம் டா கிழவா.." என்றவனின் குரலில் அத்தனை வஞ்சம் இருந்தது.
கொடூரனின் கொடுங்கோலுக்கு பயந்த வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தாலும் வீரத்தை நிலைநாட்டி தலைநிமிர்ந்து வாழும் வாழ்க்கையை கொண்டிருக்கும் செங்கதிரோனை பேரின் கொண்டிருக்கும் வீரனை அழிக்க முடியுமா என்ன..?
அடுத்து பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி