தங்கள் இருக்கும் இடத்தில் இந்த துருவன் எப்படி வந்தான் அதுவும் தங்களின் குருஜீ உருவில் என்ற யோசனையில் இருந்தவரை பார்த்து எகத்தாளமாக சிரித்தவன்,
"என்ன மருதநாயகம் எப்படி இவன் இங்கே வந்தான்னு யோசிக்குறியா.. அது தான்டா துருவேந்திரன்.. நீ என்னை டா நினைச்ச.. இந்த ஜென்மத்துல உங்களை முழுசா அடிச்ச அந்த பாண்டியர்களோட பொக்கீஷங்களை கைப்பற்றுவேன்.
போன முறை மாறி இந்த ஜென்மத்துல அவ்வளவு சீக்கிரம் உங்களை விடமாட்டேன் டா.. என்னோட அழிவுக்கு காரணமா இருந்த யாரையும் விடமாட்டேன்.. முன்னை விட இப்போ பல மடங்கு சக்தியோட வந்திருக்கேன் மருதநாயகம்.. என்னை வீழ்த்தறது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.. இதோ இந்த இடத்திலேயே உன்னை அழிக்க போறேன் டா கிழவா.." என்று சபதமிட்டவன் காட்டு கத்தலாய் அந்த மலை குகையே அதிர கத்தினான்.
அதை கேட்ட மருதநாயகம் சற்று திகைத்தாலும் உடனே எதையோ யோசித்தவர்,
"துருவா ஒன்றை மறந்து விட்டாய்.. என்னை அழித்தால் நிச்சயம் உன் அழிவு உறுதி.. நான் இறப்பதற்காக வருந்தவில்லை.. ஆனால் உன் கைகளால் என் இறப்பு இல்லை துருவா.. ஆனால் உன் அழிவு உன்னை நெருங்கி கொண்டிருக்கிறது.. முந்தைய ஜென்மம் போல் அதே கணவன் மனைவி கையால் தான் உன் இறப்பு.. அது இந்த சர்வேஸ்வரனின் மேல் ஆணை.. இன்னும் சற்று நேரத்தில் எங்கள் குருஜீயின் உடலில் இருந்து வெளியேறி விடு.. இல்லையேல் உன் ஆன்மா தங்குவதற்கு ஒரு மனித உடலும் கிடைக்காமல் அழையும்.." என்றார் உறுதியாக.
அவரின் உறுதி அவனை யோசிக்க வைத்தாலும் இதற்கு அடங்கி போய் விடக்கூடாது என்ற கர்வத்தில் சிறிதும் யோசிக்காமல் தன் ஆடைக்குள் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்த மருதநாயகத்தில் நெஞ்சில் குத்த வந்தவனை எங்கிருந்தோ வந்த ஒளி அவனின் கையில் பட்டு அந்த கத்தியை கீழே விழ வைத்தது.
அதுமட்டுமல்லாமல் அவனின் கையையும் அசைக்க முடியாமல் அப்படியே அந்த ஒளியில் தன் கையினை எடுக்க முடியாமல் தவித்தான் சச்சிதானந்தன் உடலில் இருந்த துருவன்.
தன் இருகரத்தையும் இணைத்து அந்த சர்வேஸ்வரனை தொழுத மருதநாயகத்திற்கு துருவனின் கதறலில் கண் திறந்தவருக்கு எதிரே துருவன் வலியுடன் போராடியது கண்ணுக்கு தெரிந்தது.
அந்த சூரிய ஒளி அவனின் கைகளில் படபட அவனுக்கு எரிச்சல் அதிகம் ஆகியது.. ஆனால் அந்த ஒளியில் இருந்து அந்த கைகளை எடுக்கவும் முடியவில்லை.
சிறிது நேரத்தில் அந்த ஒளியின் வலி தாங்காது சச்சிதானந்தன் உடலில் இருந்து வெளியேறிய துருவனின் ஆன்மா மருதநாயகத்தை பார்த்து முறைத்தது.. மருதநாயகமும் அவனின் ஆன்மாவை எதிர்பார்வை பார்த்தார்.
அவனின் ஆன்மா வெளியேறவும் சச்சிதானந்தன் உடல் கீழே விழப் போகும் நொடியில் எங்கிருந்தோ வந்த தீப சுடர் அவரின் உடலில் புகுந்து கொண்டது.
சற்று நேரத்தில் தெளிந்து எழுந்த சச்சிதானந்தன் உடலில் மீண்டும் அவரே வந்து ஒளியின் வடிவில் புகுந்து கொண்டார்.
அங்கே இருந்த மருதநாயகத்தை பார்த்தவர், "நாயகம் என்னவாயிற்று நான் எவ்வாறு இங்கை வந்தேன்.. ஆழ்ந்த தியானத்தில் இருந்த நிலையில் என் உடலில் வேறொரு ஆன்மா புகுந்தது வரையில் தான் நினைவு உள்ளது.. ஆனால் மற்ற எதுவும் எனக்கு விளங்கவில்லையே.." என்றார் பதட்டமாக.
" சுவாமி தங்களின் உடலில் புகுந்து அந்த ஆன்மா அந்த துருவேந்திரன் தான்.. முதலில் என்னை அழித்தால் அவனுக்கு எல்லாம் கிடைத்து விடும் என நம்பி என்னை அழிக்க முயன்றான்.. ஆனால் இந்த சர்வேஸ்வரனின் தூய ஒளி பட்டு அவனை செயல்படுத்த முடியாது போனது.." என்று அங்கே நடந்ததை விவரித்தவர் ஆதவனிடம் கூறிய விடயத்தையும் அதில் பாதி மறைத்ததையும் கூறினார்.
அதே கேட்ட சச்சிதானந்தன் தன் மேவாயை தடவியபடி, "நாயகம் எல்லாம் அவன் செயல்.. மீண்டும் அதை ஆதவனுக்கு கூறும் வாய்ப்பை அந்த சர்வேஸ்வரன் தான் கொடுக்க வேண்டும்.. அப்படி இல்லையென்றால் அதை அந்த சர்வேஸ்வரனே ஆதவனுக்கு தெளிவு படுத்துவான்.. பார்க்கலாம் விதியா சதியா எது வெற்றி பெறப் போகும் என்பதை.." என்றார் அந்த சர்வேஸ்வரனை படித்தபடி.
இங்கே ஆதவனிடம் பேசிவிட்டு வந்த வெண்மதிக்கு பெரும் குழப்பம் தான் நிலவியது.
ஆதவன் சொல்லிச் சென்ற விடயம் தான் அவளின் மனதை அரித்தது.
அவன் சொல்லிச் சென்ற மாமூ என்ற வார்த்தை பல முறை அவள் சொல்லிய வார்த்தையாகவும் அதன் பின்னே சில நிழற்படங்கள் வந்து சென்றதும் அவளின் குழப்பத்திற்கு பெரும் காரணமாயிருந்தது.
அவள் அதிகமாய் யோசித்ததும் அவளின் பின் தலை அதிகமாய் வலிக்க ஆரம்பித்தது.
அதுவும் அவள் யார் என்று தெரியும் என்று சொல்லி சென்றது வேறு மனதை மேலும் குழப்பம் செய்தது.
தலைவலி தாங்காமல் படுக்கையில் படித்தவள் இரு கைகளையும் பிடித்து பின் தலையை அழுந்த பிடித்துக் கொண்டாள்.
அவளின் வலியை உணர்ந்தானோ என்னவோ அவளின் அறைக்கு வந்தான் கையில் எதையோ எடுத்தபடி.
அவளின் அறைக்கு வந்தவனுக்கு அங்கே அவள் தலையை பிடித்தபடி படுத்திருப்பது வலியை கொடுத்தது.
மெதுவாக அவளருகில் வந்தவன், "மதி மா கொஞ்சம் காட்டு டா மருந்து போடறேன்.. தலைவலி கொஞ்சம் சரியாகும்.." என்றான் மிருதுவாய்.
அந்த குரலில் என்ன இருந்ததோ அவனையே உற்று பார்த்தபடி, "மாமூ.." என்றாள் அரைகண்களை மூடியபடி.
அவள் முழுதாய் சுயநினைவில் இல்லை.. ஆனால் அவன் தான் என்பதை உணர்ந்திருந்தாள்.. அவன் கூறியபடி மாமூ என்று அழைத்தாள்.
தன் பிறவி பலன் அடைந்ததாய் சந்தோஷம் கொண்டான் ஆதவன்.. எத்தனை வருடமாய் இந்த வார்த்தையை கேட்க தவமிருந்தான்.. அவனையும் மீறி அவன் கண்கள் கலங்கியிருந்தது.
அவளின் தலைவலிக்கு மருந்தை கொடுத்தவன் அவள் தலையை தடவியபடி அவளருகே அமர்ந்தான்.
அவன் அமர்ந்ததும் என்ன நினைத்தாளோ பெண்ணவள் அவனின் மடியில் தன் தலையை வைத்து படுத்தாள்.
தன்னிடம் தஞ்சம் வேண்டி படுத்தவளின் தலையை வருடியவன் ,
"இன்னும் எத்தனை நாளுக்குடி நீ தவிப்பே.." என்றான் மனதோரம் அழுதபடி.
அவளோ அதை உணரும் நிலையில் இல்லாது அவனின் மோடியை சொர்க்கமாய் நினைத்து உறங்கினாள்.. ஏதோ தான் வந்து விட்ட கூடு சேர்ந்தது போல் நிம்மதியான தூக்கம்.
தாலாட்டு பாட வந்தேன்
தங்கரதம் தங்கரதம்..
தாய்மாமன் நானிருக்கேன்
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
அடி உருக்காத தங்கமே..
நீ கருக்காத வைரமே..
அடி உருக்காத தங்கமே..
நீ கருக்காத வைரமே..
தாலாட்டு பாட வந்தேன்
தங்கரதம் தங்கரதம்..
தாய்மாமன் நானிருக்கேன்
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
ஆத்தா தான் இல்லையின்னு
அம்மா நீ கலங்காதே..
நாத்தோட தண்ணீயைப் போல
நான் தானே துணையிருப்பேன்..
வைகாசி புது நிலவே
கண்ணே நீ அழலாமா..
கண்ணீரை நீரடிக்க உன் மாமன் விடுவேனா..
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ..
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.