சூரிய மைந்தன் சுடர்விட்டு பிரகாசிக்க தொடங்க சிவப்பு வர்ணம் பூசி கொண்டு வரும் போது கண் விழித்த வெண்மதிக்கு தன் தலையில் எதுவோ ஒட்டியிருப்பது போல் இருந்ததால் தொட்டு பார்த்தாள்.. அவளின் தலையில் எதுவோ தடவியிருந்ததை பார்த்து மீண்டும் தன் அறையை பார்த்தாள்.. அங்கே அவள் மட்டும் தான் இருந்தாள்.. வேறு யாரும் இருந்ததற்கான அடையாளம் துளியும் இல்லை.. ஆனால் அவளின் மனதில் அவளறியாமல் ஒரு நிம்மதி இருந்தது.
இரவு நடந்த எதுவும் அவளுக்கு முழுதாய் நினைவு இல்லை.. ஆனால் அவனின் பாடல் அவளுக்கு சுகமான சுமையாய் இருந்தது.
அதன் பின்பு அவளை அவளுக்கே தெரியாமல் நன்றாக பார்த்துக் கொண்டான்.. அவளும் கல்லூரி செல்ல ஆரம்பித்திருந்தாள்.. ஏனோ முன்பு போல் கனகம் அவளை வார்த்தையால் கடித்து குதறுவதில்லை.. அதன் முழு காரணம் ஆதவன் என்று அறிந்த பெண்மையும் அமைதியாய் சென்றாள்.
அவளின் கல்லாரி வாழ்வில் வந்தனா அவளுக்கு நிறைய சொல்லிக் கொடுத்தாள்.. இருவரும் இணை பிரியா தோழிகளாயினர்.. என்ன தான் தோழிகள் என்றாலும் வந்தனா வெண்மதியை மரியாதையாய்த் தான் அழைப்பாள்.
எத்தனையோ முறை வெண்மதி மறுத்தும் அவளை பேர் சொல்லி அழைக்கமாட்டாள்.
வற்புறுத்தி பார்த்த வெண்மதிக்கு பதிலாய் அக்கா என்று அழைக்கவா என்று கேட்டாள் வந்தனா.
அதைக் கேட்ட கோபத்தில் வேணாம் எப்படியோ கூப்பிட்டுக்கோ என்று முகத்தை திருப்பி சென்று விடுவாள்.
வெணுமதியை பெரும்பாலும் கல்லூரியில் விடுவது ஆதவன் தான்.
அவன் இல்லாத சமயங்களில் தான் வளவன் வருவான்.. அவனை பார்த்து வந்தனாவின் முகம் மலர்ந்து போகும்.. அதை கவனித்தாலும் வெண்மதி எதுவும் கேட்கமாட்டாள்.. அவளாக கூறும் வரை கேட்க கூடாது என்று எண்ணத்தில்.
இவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாய் போய் கொண்டிருக்கும் சமயம் மீண்டும் ஊர்த் திருவிழா என்று வந்தனர் ஊர்மக்கள்.
இந்த முறை நிச்சயம் தடுத்து நிறுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் நாளை ஊர் எல்லையம்மன் முன்பு வெண்மதி திருவிழாவிற்கான பூஜையை துவக்குவாள் என்று கூறினான்.
எல்லோரின் முகமும் யோசனையை தத்தெடுத்தது.. அவள் செய்வது யாருக்கும் எந்த விதமான பிரச்சனையும் இல்லை தான்.. ஆனால் அவளை குறுக வைக்கவென சில பேர் இருக்கிறார்களே அவர்களை எப்படி சமாளிப்பது என்பது தான் அவர்களின் யோசனை.
அதை உணர்ந்த ஆதவன், "நாளைக்கு நிச்சயம் பூஜை உண்டு.. அதை வெண்மதியின் கரங்களால் தான் துவக்கப்பட வேண்டும்.." என்று கட்டளையாய் கூறினான்
அவனின் பேச்சுக்கு யாரும் மறுத்து பேசவில்லை.. ஆனால் இந்த ஆண்டாவது திருவிழா நிறைவாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.
அமைதியாய் எல்லோரும் நாளைய பூஜைக்கு ஏற்பாடு செய்ய கிளம்பினார்கள்.
அதை எல்லாம் மறைந்திருந்த கேட்ட கனகத்திற்கு வந்த கோபத்தில் இந்த நொடியில் வெண்மிதயை கொன்று போடும் அளவுக்கு கோபம் கொப்பளித்தது.
எல்லோரும் கிளம்பவும் இங்கே ஆதவனும் வளவனை அழைத்துக் கொண்டு கோவில் வேலையாக மதுரைக்கு சென்றான்.
ஆனால் இதில் நடுவில் தத்தளித்தது வெண்மதி தான்.. நாளை நடக்கப் போகும் உத்தரவு கேட்கும் பூஜையில் தன்னால் எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்று அந்த பரமேஸ்வரனை மனதார வேண்டிக் கொண்டாள்.
அவளை வைத்து எந்த விதமான இடையூறுகளும் ஏற்படக்கூடாது.. ஆனால் தன்னை நிச்சயம் தன் மாமியார் கலந்து கொள்ள விடமாட்டார்.. இவர் வேற நான் உத்தரவு கேட்க வேண்டும் என்று உறுதியாய் கூறுகிறார்.
" உலகை ஆளும் பரமேஸ்வரா நீ தான் எந்த பிரச்சனையும் வராமல் தடுக்க வேண்டும் ஈசா.." என்று மனம் உருகி அந்த கைலாசநாதரிடம் வேண்டிக் கொண்டாள்.
இங்கே கனகமும் மருததுரையை நாடி வந்தாள் நாளைய பூஜை நடக்கக் கூடாது என்ற திட்டத்துடன்.
அதே நேரத்தில் தாணடவராயனும் அங்கே வந்தான் மற்றொரு ஆடவனுடன்.
மருதுதுரை கேள்வியாக புதிய ஆடவனை பார்க்கவும் தாண்டவராயன்,
"தம்பி நமக்கு தெரிந்தவர் தான் துரை.. நமக்கு யாரு எதிரியோ அவன் தான் தம்பிக்கும் எதிரி.. தம்பி பேரு துருவன்.. தம்பி நான் சொன்னேன் இல்லை அந்த ஆதவனோட உடன் பங்காளி தான் இந்த மருததுரை.. இதோ இந்த கனகமும் தான்.." என்று துருவனுக்கு இருவரையும் அறிமுகப்படுத்தினான்.
இங்கே மனது சரியில்லாமல் கோவிலுக்கு வந்த வெண்மதி மனம் நிறைய கடவுளை வணங்கிவிட்டு கோவில் தூணில் சாய்ந்து அமர்ந்து வேடிக்கை பார்த்தால்.. அப்பொழுது அங்கே ஒரு குரல் அவள் செவியில் தெளிவாக விழுந்தது.
பாகையாளிகள் அனைவரும் ஒன்றினைய உனை சுற்றிய பாதுகாப்பு வளையத்தை உடைக்க காத்திருக்கும் கோடாரி அவன் வந்துவிட்டான்.. உன்னவனின் வார்த்தைக்கு மதிப்பளித்து அவன் கூறுவதை செய்து விடு தேவி.. மீண்டு எழுவாய் இறந்து பிரிந்த உன் குடும்பம் ஒன்றினைய அரக்கனை அழிக்க அவதார காவலனாய் அந்த காவலனுக்கு காவலாய் காத்திடுவாய் தேவி.. அணைந்து போன நினைவுகள் மீட்டெழும் நேரம்.. காலத்தை விரயம் செய்து விடாதே.. அடிமட்ட மக்களும் அடிமையாகிவிடுவார்கள்.." என்று உத்தரவாய் கேட்டது.
சுலபமாய் புரிந்த விடயம் தான் என்றாலும் பகையாளிகள் என்பவர்கள் யார் என்ற கேள்வி.. இதில் மாமூ சொல்வதை உடனே செய்ய வேண்டும்.. இறைவா உன் துணையால் நாளைய பூஜை சிறப்பாய் முடிய வேண்டும்.
கடவுளை மனதார வேண்டிக் கொண்டு வீட்டிற்கு வரவும் அங்கை ஹாலில் ஆதவனும் வளவனும் அமர்ந்திருந்தனர்.
அவர்களை நின்று சற்று பார்த்தவள் அவர்களை கடந்து உள்ளே செல்லும் சமயம் , "மதி.." என்று அழைத்தான் ஆதவன்.
இப்பொழுது எல்லாம் அவளை வாய் நிறைய மதி என்று தான் அழைக்கிறான்.. சில நேரங்களில் மட்டும் 'பட்டு' .
அவனின் அமைப்பைக் கேட்டு நின்றவள் திரும்பி அவனை கேள்வியாய் பார்த்தாள்.. அவன் அவளின் கைகளில் ஒரு கவரை தினித்தான்.
அவளோ என்னது இது என்பது போல் அவனை பார்த்தாள்.. அவளின் விழி வழி கேள்வி ஆடவனுக்குள் உறங்கி கிடந்த ஆசைகளை தட்டியெழுப்பியது.
பொங்கியெழும் தன் மனதை தட்டி வைத்தவன்,
"நாளைக்கு பூஜைக்கு கட்டிக்க வேண்டிய துணி.. நாளைக்கு இதை கட்டிட்டு இந்த பாக்ஸில இருக்கற நகையை போட்டுக்கோ.."என்று கவருடன் கூடவே ஒரு நகைப் பெட்டியையும் கொடுத்தான்.
அவளோ அதை வாங்கி கொண்டு, "மாமூ.." என்று அழைத்தாள்.
அவளின் அழைப்பு எப்பொழுதும் போல் ஆடவனை சிலிர்க்க செய்தது.. அதே துள்ளலுடன், "என்ன பட்டூமா.. இன்னும் எதாவது வேணுமா.." என்று முகத்தில் வழியும் சந்தோஷத்துடன் கேட்டான்.
நாளைக்கு எதுவும் பிரச்சனை வேணாமே.. அவங்க யாரை சொல்றாங்களோ அவங்களே இந்த பூஜையை நடத்தட்டுமே.. நானும் ஒரு விதவை தானே.. என்னால எதுவும் ஆயிடுச்சி ன்னா.." என்றாள் தயங்கியபடி.
அவளின் வார்த்தை அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.. அதை கண் மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன், "நாளைக்கு நீ தான் உத்தரவு பூஜையை தொடங்குற.. அப்படி நடக்க தவறுச்சின்னா என் உயிர் போனதுக்கு சமானம்.." என்று அழுத்தமாய் கூறிவிட்டு சென்று விட்டான்.
" மாமூ.."
என்று கத்தியவள் தான் செய்து வைத்த சிலையாய் அங்கேயே நின்று விட்டாள்.. கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.. என்ன வார்த்தை கூறிவிட்டான்.. அவளின் மனம் சமாதானம் ஆக முடியாமல் தவித்தது.
இருவரும் இன்னும் நன்றாக பழகவில்லை தான்.. ஆனால் அவளுக்கு ஏனோ சில அவனின் அந்த அக்கறை மிகவும் பிடித்தது. ஆனால் இன்னும் ஏதோ அவன் தன்னிடம் மறைத்து வைத்துள்ளான் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது.
நாளைய விடியல் யாருக்கு என்ன வைத்திருக்கிறதோ பொறுத்து தான் பார்ப்போமே..
அடுத்த பாகத்தில் பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி பா..