• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 63

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
51
43
Salem
ஊர் எல்லையம்மன் கோவிலை தாண்டிய சிறிது தூரத்தில் இருந்த பாழடைந்த வீட்டில் இருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.. அவர்களை கரன் இருவரின் கண்ணங்களிலும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம் அங்கே வளவனுடன் ஆதவனும் வந்தான் கோபத்தீயில்.


" என்னாச்சு கரன் எதாவது சொன்னானா.." என்றான் அவர்களை முறைத்தபடி.

"இல்லை ஆதவா என்ன கேட்டாலும் அழுத்தமா தான் இருக்காங்களே ஒழிய எதுவும் சொல்ல மாட்றாங்க.. நமக்கு யாருன்னு தெரிஞ்சாலும் ஆதாரம் இல்லாம பிடிக்க முடியாது.." என்றான் கோபத்துடன்.

" கரன் இவங்களை விட்ரு.. இனி இவங்க தேவையில்ல.. ஆனா என் மதியை குளத்துல தள்ளி கொல்ல பாத்ததுக்கு நிச்சயம் என்னோட தண்டனை இருக்கு.." என்றவன் அவர்கள் இருவரின் அருகில் சென்றவன் அவர்கள் இருவரின் இடது கரத்தையும் தன் கைகளில் இருந்த கத்தியால் வெட்டினான்.

ஆதவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த வளவன், "என்ன அண்ணா சொல்றீங்க.. அண்ணிய கொல்ல பாத்தாங்களா.. எனக்கு தெரியாம இது எப்போ நடந்துச்சி.." என்றான் கோபமாய்.

ஆமா வளவா மதி குளத்துல தண்ணி எடுக்க போன போது இவனுங்க குளத்துக்குள்ள இருந்துருக்காங்க.. நாம் பக்கத்துல யாரும் போக கூடாது இல்லை.. நாம விலகி நின்ன நேரத்துல மதிய கொல்ல முயற்சி பண்ணிருக்காங்க.. ஆனா கரனுக்கு நம்மோட சம்பிராதாயம் எதுவும் தெரியாது இல்லை.. அப்போ கரன் ஆத்துக்கு பக்கத்துல போயிருக்காரு.. நாம யாரும் அவரை கவனிக்கல.. தண்ணி வழக்கத்தை விட அசைஞ்சது தெரிஞ்சதும் கடனுக்கு எதுவோ உறுத்தியிருக்கு.. அதனால நாம யாரும் பாக்காதவாறு அந்த பக்கம் போய் தண்ணியோட ஆழத்துல பாத்துருக்காரு.. அப்போ இந்த நாய்ங்க மதியோட காலை பிடிக்க போயிருக்காங்க.. மதிக்கும் நம்ம யார்க்கும் சந்தோகம் வராதாவாறு இவனுங்களை புடிச்சிட்டு இங்கே கொண்டு வந்துட்டு எனக்கு மெசேஜ் பண்ணாரு.." என்றான் நடந்ததை விவரித்தவாறு.

" ஆனா எப்படி அண்ணே இது மாதிரி நடக்குது.. ஏன் நடக்குது.. எனக்கு ஒன்னும் புரியலை அண்ணே.. இதெல்லாம் யாரு அண்ணே பன்றாங்க.." என்றான் குழப்பத்தில்.

"அதை அப்புறம் பாத்துக்கலாம் வளவா.. கரன் இவங்களை இப்படியே விட்டுருங்க.. இங்கிருந்து நீங்க போங்க.. மீதிய நான் பாத்துக்கறேன்.." என்றான் தீர்மானமாக.

" ஆதவன் என்ன சொல்றீங்க இவங்களை யாரு தூண்டி விட்டதுன்னு கண்டுபிடிக்க வேண்டாமா.. இவங்களை எப்படி விட்டுட்டு போறது.. கொஞ்சம் இல்லை இவங்க சிஸ்டரை தண்ணிக்குள்ள தள்ளி விட்டுருப்பாங்க.." என்றான் கோபத்துடன்.


" நான் உங்களை இப்போ இந்த இடத்தை விட்டு தான் கரன் போக சொன்னேன்.. அடுத்த அஞ்சு நிமிஷத்துல இவங்களை இங்கே அனுப்பினவன் வருவான்.." என்றான் உறுதியாய்.


" என்னோட கெஸ்ஸிங் சரின்னா அவனுக்கு இன்னேரம் தகவல் போயிருக்கும்.. சோ கண்டிப்பா என் மயி இருக்க கூடாதுன்னு நினைக்கறவன் வருவான்.." என்றான் முடிவாக.

அவனின் பேச்சை கேட்டு இருவரும் வெளியே வந்தனர்.. அவர்கள் இருவரையும் ஒருமுறை தன் விழிகளால் அளவிட்டவன் அடுத்த நொடி அவனும் அங்கிருந்து சென்று விட்டான்.

அங்கே வெண்மதியுடன் இருந்த வந்தனா, "அக்கா கோவில்கிட்ட இருக்க அந்த தூண்கிட்ட போலாமா..உங்கள பாக்க ஒருத்தர் ரொம்ப காத்திருக்காங்க.." என்றாள் புன்னகை முகமாக.

அவளின் புன்னகையை கண்டு சிரித்தபடி, "அப்படி யாரு வந்தனா என்னை பாக்க காத்திருக்காங்க.." என்றபடி பார்வையால் யாரையோ தேடியபடி கேட்டாள்.


" அக்கா என் மேல நம்பிக்கை இருக்கு இல்லை வாங்க.. அவங்க உங்களுக்கு ரொம்ப முக்கியமானவங்க தான்.. ஆமா இப்போ நீங்க யாரை தேடுறீங்க.. நீங்க தேடுற ஆள் இப்போ இங்கே இல்லை.. ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்க.. நாம அதுக்குள்ள போயிட்டு வந்துரலாம்.. வாங்க.." என்று அவளை கைப்பிடித்து தூணுக்கு அருகில் அழைத்து சென்றாள்.

இருவரையும் பார்த்து அங்கே புன்னகையுடன் நின்றிருந்தாள் ஆரா.

ஆராவின் முகத்தை பார்த்த வெண்மதிக்கு அந்த சிரிப்பையும் தைரியத்தையும் எங்கேயோ பார்த்தது போல் இருந்தது.

தன் முன்னே நின்ற வெண்மதியை பார்த்த ஆராவிற்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது.

பிள்ளையாய் பார்த்தவளை இன்றோ வளர்ந்த குமரியாய் அவள் நெற்றியில் இருந்த குங்குமம் கழுத்தில் ஆதவன் கட்டிய மஞ்சள் கயிறு மஞ்சள் பூசிய முகம் சோகத்தை மறந்து சந்தோஷத்தில் ஜொலிக்க தன் கண்ணில் இருந்த மையை எடுத்து திருஷ்டி அவளின் கண்ணத்தோரம் வைத்தாள்.

ஏனோ வெண்மதிக்கு ஆராவின் முகத்தை பார்த்ததில் இருந்து மனதினுள் இனம் புரியாத மகிழ்ச்சியாய் இருந்தது.

ஆராவே அவளிடம், "ராசாத்தி கணக்கா இருக்கேடா தங்கம்.. எப்போதும் இப்படியே பூவும் பொட்டுமா சந்தோஷமா இருக்கனும் டா பட்டூமா.." என்றவள் தன் முந்தானையில் இருந்த முடிச்சை அவிழ்த்தாள்.

அதிலிருந்து ஒரு பவள மாலை அழகாய் இருந்தது.. வெண்மை பூசி பவளம் ஜொலிக்க இருந்த மாலையை எடுத்து வெண்மதியின் கழுத்தில் பூட்டினாள்.

" அய்யோ அம்மா வேணாம் மாமூ பாத்தா கேட்பாங்க..வேணாம் மா.. உங்க அன்பே போதும் இவ்வளவு பெரிய பரிசு வேணாம் மா.." என்றாள் தயங்கியபடி அதை கழட்ட போனவளை தடுத்த ஆரா,

"அம்மாடி தங்கம் யாரு யாருக்கு என்ன சேரனும்னு அந்த கடவுள் விதிச்சது தான் மா.. இது உன்கிட்ட சேர வேண்டிய பொருள் தான் மா.. அதுமட்டுமில்லாம இது மூலியமா நிறைய ரகசியம் வெளிப்படும் தாயி.. கவலைபடாதே உன் மாமூ உன்னை திட்ட மாட்டான்.. இதை குடுத்த என்னை காட்டச் சொல்வான்.. ஆனால் ஒன்றை மறவாதே பட்டூமா அவனாக கேட்காமல் நீயாக எதையும் அவனிடம் கூறக்கூடாது.. புரிந்ததா செல் மகளே உன் வாழ்வு மீண்டு ஒளி பெறட்டும்.." என்று வாழ்த்தியபடி அங்கிருந்து விடை பெற்றாள்.

மதியவள் அழைக்க அழைக்க கூட்டத்தில் மறைந்து போனாள் ஆரா.

அந்த மாலை அவள் கழுத்தில் சேர்ந்ததில் இருந்து ஏதோ ஒரு ராணியை போல் உணர்ந்தாள் பெண்ணவள்.

அதை போட்டுக் கொண்டு மீண்டும் வந்தனாவோடு நடனம் ஆடியவர்கள் முன்னே வந்து நின்றாள்.

அப்போது அங்கே வந்த கனகம் அவள் மகிழ்ச்சியுடன் இருப்பதை கண்டு வயிறு காந்தியது.

மெதுவாய் அவளை பார்த்தபடி இருந்தவளின் கண்களில் எதுவோ பளிச்சென உறுத்த என்னவென்று பார்த்தவள் அப்படியே அதிர்ச்சியில் சிலையாய் நின்று விட்டாள்.

அவள் மட்டுமல்ல அந்த கூட்டத்தில் இருந்த நிறையை பேர் அந்த பவள மாலையை பார்த்து அதிர்ச்சியில் சமைந்து நின்று விட்டார்கள்.. அதில் ஊர் மக்கள் சிலரும் அடக்கம்.. ஆனால் பெண்ணவளின் கவனத்தில் இதெல்லாம் பதியவில்லை.


எங்கே அவள் தான் அவளவனை கண்களால் அல்லவா வலைபோட்டு தேடிக் கொண்டிருக்கிறாள்.

அவனோ அவள் கண்களில் விழுவேனா என்று அல்லவா கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறான்.

அவளை நன்றாக அலைய விட்டு வந்தவனின் கண்களுக்கு தப்பாமல் அந்த பவள மாலை விழுந்தது.

அதை பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தான்.


எப்படி இது சாத்தியம்.. எப்படி இவளின் கையில் இது கிடைத்தது.. இல்லையே இங்கே என்ன நடந்தது.. அவளிடம் கேட்கலாமா என்றவளின் கண்களுக்கு நிழலாய் ஏதேதோ நிகழ்ச்சி தோன்றி மறைந்தது.




அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி பா..