• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 64

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
51
43
Salem
ஆதவனின் கண்கள் நிலைகுத்தியவாறு வெண்மதியின் கழுத்தில் இருந்து பவளமாலையை பார்த்திருந்தன.

அவளோ அவனைத் தான் பார்த்திருந்தாள்.. அவன் எதுவும் சொல்லாமல் அவளருகில் வந்தவன் அந்த பவள மாலையை தன் கைகளில் எடுத்தான்.. அதில் இருந்த டாலரை திருப்பி பார்த்தான்.

அவன் நினைத்தது போல் அதில் மீன் சின்னம் இருந்தது.. அதை அதிர்வுகள் பார்த்தவன் வெண்மதியிடம் திரும்பி,

"மதி இந்த பவள மாலை உனக்கு எப்படி கிடைச்சது.." என்றான் சந்தேகமாய்.

"மாமூ அது வந்து எனக்கு ஒரு அம்மா குடுத்தாங்க.." என்றாள் தெளிவாய்.

" அந்த அம்மா யாருன்னு காட்டு பட்டுமா.." என்றான் தன் விழிகளில் நாளாபுறமும் தேடிய படி.

"அது அவங்க இங்க தான் இருந்தாங்க.." என்று ஆரா நின்ற இடத்தை பார்த்தவள் அங்கே வெறுமையாய் இருக்கவும் அவனிடம் என்ன சொல்வது என்று விழித்தாள்.

" சொல்லு டா எங்கே அவங்க.." என்றான் தன் தேடலை தொடங்கியபடி.

" அது தெரியலை அதோ அங்கே தான் என்னை பார்த்தாங்க.. வந்தனா தான் கூட்டிட்டு போனா.." என்றபடி வந்தனாவை பார்த்தாள்.

" அது அவங்க தான் உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க.. அது தான் கூட்டிட்டு வந்தேன் அக்கா.." என்றாள் தடுமாறிபடி.

அவளின் தடுமாற்றத்தை கண்டவன், 'நிச்சயம் இவளுக்கு எதுவோ தெரிந்திருக்க வேண்டும்..' என்று எண்ணியவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு எல்லோரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு வளவனிடம் கூறினான்.. அவர்கள் போகவும் விழா கமிட்டியின் முன்பு வந்து அமர்ந்தான்.

சித்திரை பௌர்னமியில் திருவிழா முடிவு செய்யப்பட்டு அதற்கு ஏற்பாடுகளை பார்க்க ஆட்களை பிரித்து விட்டவன் மீண்டும் வீட்டிற்கு வந்தான்.

அங்கே வந்தனாவுடன் வெண்மதி அமர்ந்திருக்க இன்று அவள் வித்தியாசமாய் தெரிந்தாள்.

கனகமும் சாதானந்தனும் வீட்டிற்கு வரவில்லை.. இனி அவர்கள் வரமாட்டார்கள் என்று ஆதவனுக்கும் தெரியும்.. அதை பற்றி பெரிதும் கவலை கொள்ளாமல் வெண்மதியிடம் வந்தவன்,

"மதி மா அந்த பவள மாலையை கொடுடா.. நான் அப்புறம் கொண்டு வந்து தர்றேன்.." என்றபடி அவளிடம் கேட்டான்.

அவன் கேட்பதற்கிணங்க அவளும் அதை கழட்டி அவனிடம் தந்தாள்.

அதை வாங்கியவன் வேகமாக கிளம்பியவன், "வந்தனா வளவா நான் வர்ற வரைக்கும் இவளை விட்டு போயிடாதீங்க.. இங்கேயே இருங்க.." என்றவனின் பதட்டம் ஏன் எதற்கு என்று வளவனுக்கும் வெண்மதிக்கும் புரியவில்லை என்றாலும் வந்தனாவிற்கு அதன் அர்த்தம் நன்றாக தெரியும்.

' ஆரா மா நீங்க பெரிய ஆள் தான்.. ஒரு மாலையை கொண்டு அவரை அசைச்சி பாத்துட்டீங்க.. இனி அவரு பாத்துப்பாரு ஆரா மா..' என்று மனதினுள் நினைத்தவள் வெண்மதியுடன் இயல்பாய் பேச ஆரம்பித்தாள்.

இங்கே மலை குகைக்கு வந்த ஆதவனுக்கு மருதநாயகம் முகத்தில் இருந்த அதிர்ச்சி யோசனையை கொடுத்தது.

அதே யோசனையுடன் அவனின் அருகில் சென்று அமர்ந்தவன், "ஐயா என்ன நெனவுல இருக்கீக.. " என்றான் அவரின் தோளை அழுத்தியபடி.

ம்ம் இல்லை ராசா.. படுத்த படுக்கையா கிடந்த என்னை உன் வரவு எழ வச்சி போராட வச்சிது.. ஆனா இன்னைக்கு நடந்தது அதோட அம்மு கழுத்துல இருந்த பவள மாலை இதெல்லாம் உங்க பாட்டியையும் அம்மையையும் நினைவு படுத்துது ராசா.. அது சரி ராசா அம்முவுக்கு எப்படி அந்த பவள மாலை கிடச்சதாம் விசாரிச்சியா ராசா.." என்றான் எதிர்பார்ப்புடன்.

ம்ம் கேட்டேன் தாத்தா.. அவளுக்கும் தெரியலை யாரோ ஒரு அம்மா கொடுத்ததா சொல்றா.. ஆனா அது யாருன்னு அவளுக்கும் தெரியலை.. இதோ பாருங்க இந்த மாலை நம்ம பரம்பரை பரம்பரையா வர்ற குலவதுவுக்கு கொடுக்க வேண்டியது தானே..

இது எப்படி அந்த அம்மா கையில போயிருக்கும் தாத்தா... எனக்கு ஒன்னுமே புரியலை தாத்தா..

எனக்கு ஒரு யோசனை வருது தாத்தா.. நம்ப குடும்பத்துல யாரும் உயிரோட இல்லைன்னு நான் நினைச்சேன்.. ஆனா நீங்களும் சித்தப்பாவும் உயிரோட இருக்கீங்க.. அதே மாதிரி நம்ப குடும்பத்துல யாராவது உயிரோட இருப்பாங்களோ ஏன் தாத்தா.." என்றான் மேவாயை நீவியபடி.

" ஏன் ஆதவா அப்படியும் இருக்குமோ.. ஆனா யாரு இருக்கா.. இந்த மாலை வெண்மதிகிட்ட வந்துருக்குன்னா இதை பத்தி தெரிஞ்சது உங்க பாட்டியும் உங்க அம்மாவும் தான் ராசா.." என்றார் யோசனையுடன்.

" ஏன் தாத்தா அப்போ இவங்கள்ல யாராவது இருக்கலாம் இல்லை.. ஆனா ஏன் நம்ப முன்னாடி வரலை தாத்தா.." என்றான் வேதனையுடன்.

" வேற எதுக்காக ராசா அந்த பொக்கீஷத்தை காப்பாத்த தான்.. எனக்கு தெரிஞ்சது பாதின்னா உன் அம்மாவுக்கு தான் கண்ணா முழுசா தெரியும்.. தேடலாம் ராசா.. தேடனும் தேடி கண்டுபிடிக்கனும் சீக்கிரமே.. வர்ற சித்ரா பௌர்னமி திருவிழாவுல நம்ப குடும்பத்துல இருக்கற மிச்சம் பேரு வரனும் ராசா.. அப்போ தான் அரக்கன் கையில இருந்து பொக்கீஷத்தை காப்பாத்த முடியும் ராசா.." என்றான் பீதியுடன்.

"வர்ற திருவிழாவுக்குள்ள நான் கண்டுபிடிக்கிறேன் தாத்தா.. சரிங்க தாத்தா நான் கிளம்புறேன்.. ஆமா சித்தப்பா எங்கே தாத்தா காணோம்.." என்றான் நாலாபுறமும் விழிகளை தேடியபடி.

" அவனை நான் தான் ஒரு வேலையா தூரமா அனுப்பியிருக்கேன் ராசா.. வந்துருவாங்க நீங்க கிளம்புங்க.." என்று அவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

ஆதவன் சென்றதும் வேகமாக சென்று அந்த பரமேஸ்வரனின் முன்பே தன் இரு கைகளையும் தூக்கி வணங்கியவர்,

"பரமேஸ்வரா என்னோட இது சோதனை.. என் பேரனை சமாதானம் செய்து அனுப்பி விட்டேன்.. ஆனால் என்னை சமாதானம் செய்து கொள்ள முடியவில்லையே.. என் மகன் எங்கே சென்றான்.. அவனின் நிலை தெரியாது தவிக்கும் எந்தன் நிலமையை எப்படி சொல்வது ஐயனே.." என்றார் மனம் உருகியபடி.

அதே நேரத்தில் அந்த இருட்டறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் வாயில் உதிரம் ஒழுக மயக்க நிலையில் இருந்தார் நாகராஜன்.


அவரின் அருகிலே ஒரு பெண்ணும் மயங்கியிருந்தாள்.

இங்கே வீட்டிற்கு வந்த ஆதவனை ஓடி சென்று கட்டிக் கொண்டாள் வெண்மதி.. அவளின் அழுத்தமான அணைப்பிற்கான காரணம் விளங்காமல் அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்தான் ஆதவன்.


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.