• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 65

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
வீடு வந்ததும் ஓடி வந்து அணைத்த தன்னவளை விலக்கவும் தோன்றாமல் அதிர்ச்சியுடன் அப்படியே நின்றிருந்தான் ஆதவன்.. ஏன் அவளின் அந்த ஒற்றை அணைப்பு அத்தனை இறுக்கமாய் இருந்தது.. தன்னுணர்வு பெற்றவன் அவளை தன்னிடமிருந்து பிரிக்க முயன்றான்.. ஆனால் அவளோ அவனை அணுவும் பிரியாது அல்லவா அணைத்திருந்தாள்.

அவனும் அவளை அணைத்து அவளின் முதுகை வருடிக் கொடுத்து, "மதிம்மா என்னாச்சுடா.." என்றான் மென்மையாய்.

ஒன்றுமில்லை என்று அவன் மார்பில் சாய்ந்த வாக்கிலேயே தலையாட்டினாளே ஒழிய அவனை விட்டு அவள் நொடியும் விலகவில்லை.

எதனால் இந்த உரிமையுணர்வு.. காலையில் அவன் கட்டிய மஞ்சள் கயிற்றில் விளைந்ததுவா..? இல்லை அவள் மேல் அவன் வைத்த நேசத்தினால் வந்ததா..? என்றாள் நிச்சயம் பெண்ணவளிடம் பதிலில்லை.

ஆனால் இந்த இறுகிய அணைப்பும் அவனின் நெருக்கமும் பெண்ணவளுக்கு அந்த்த நேரத்தில் தேவைப்பட்டதுவோ..?

அவனும் அவளை மேலும் விலக்காமல் கட்டிக் கொண்டு, "என்னாச்சு என்னோட பட்டு குட்டிக்கு.. ம்ம் இதோ பாருங்க மேடம்.. இப்போ நாம இருக்கறது ஹால்.. இங்கே இப்படி இருந்தா யாராவது பார்த்த என்னை நினைப்பாங்க.." என்று தன்னவளிடம் முதன் முறையாக கொஞ்சி கெஞ்சினான்.

அவளோ அப்பொழுதும் ஆடவனை விட்டு சிறிதும் விலகாமல், "நான் உங்க பொண்டாட்டி மாமூ.. எனக்கு உங்களை கட்டிக்கிறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு.." என்றாள் சிறுபிள்ளையாய்.

" சரிடா உனக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு.. ஆனா இது நம்ம ரூமுக்குள்ளன்னா இன்னும் சந்தோஷமா இருக்கும்.." என்றான் உல்லாசமாய்.

அவனுக்கும் புரிந்தது தன்னவளின் மனநிலை பற்றி.. இதுவரை யாரும் அறியாத ரகசியத்தை அல்லவா இன்று அத்தனை பேரின் முன்னிலையிலும் ஆடவன் சொல்லியிருக்கிறான்.

அவளே சிறிது நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவனிடமிருந்து பிரிந்தாள்.

அவனின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

அவளின் பார்வையை கண்ட ஆடவனுக்கும் வெட்கம் வந்தது,

"என்னடி பட்டு இப்படி பாக்குற.. ஏன் மாமூவை அம்புட்டு புடிச்சிருக்கா டி.." என்றான் அவளின் மூக்கை கிள்ளியபடி.

மாமூ இது வரமா..? இல்லை இத்தனை நாள் நான் இருந்ததுக்கான தவமா..? என்க்கு எதுவும் புரியலை.. ஆனா இந்த நிமிஷம் என் மனசு அவ்வளவு சந்தோஷமா இருக்கு.. எனக்கு இப்போ கூட நீங்க யாரு என்னன்னுலாம் தெரியலை தான்.. ஆனா அதை மீறி உங்க மேல உரிமையுணர்வு அதிகமா இருக்கு.. இதோ உங்களோட இந்த நெருக்கும் எல்லாமே ரொம்பவே புடிச்சிருக்கு.. ஆனா அந்த நாட்கள்ல எனக்கு என்ன நடந்துச்சின்னு இதுவரைக்கும் தெரியலை மாமூ..

ஏன் என்னவோ என்னையும் அறியாத எனக்குள்ள ஒரு பாதுக்காப்பா யாரோ என் கூட இருக்கற மாறி இருக்கும் மாமூ.. ஆனா அதெல்லாம் என்னன்னு எனக்கு சுத்தமா புரியலை மாமூ.." என்றவளின் குரலில் இருந்த வித்தியாசத்தில் ஆடவனுக்குள் நடுக்கம் பிறந்தது என்னவோ உண்மை தான்.. ஆனால் சற்று நேரத்தில் அதை குறைத்தவன் இப்பொழுது தன்னவளை சமாதானம் செய்வது யான் முதல் வேலை என்னு யோசித்ததவன்,

"ஏய் மதிம்மா இங்கே பாருடி உனக்கு எல்லாம் மெதுவா தெரியட்டும் சரியா.. இப்போ என்ன உனக்கு என்னை பிடிக்கும் இல்லை.. மெதுவா எல்லாம் பாத்துக்கலாம் சரியா.. அதுவரைக்கும் நாம ஜாலியா காதலிக்கலாம்.." என்றான் அவளின் அதிகபடியான உணர்வை குறைக்க.

அவளும் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அவனுடன் மீண்டும் ஒட்டிக் கொண்டாள்.

" ஆமா எங்கடி வீட்டுல யாரும் காணலை.." என்றான் வீட்டை சுற்றிலும் பார்த்தபடி.

" அது வளவன் வந்தனாவை விட போயிருக்காங்க.. உங்க சித்தி இன்னும் வீட்டுக்கு வரலை.." என்றாள் அவனின் மார்பை உரசியபடி.

"ம்ம் அப்போ வீட்டுல யாருமில்லை அப்படித்தானே.." என்றவனின் கேள்வியில் இருந்த உள்ளர்த்தை புரிந்து கொள்ளாமல் ,

"யாரும் இல்லை மாமூ.." என்றாள் ஆதவனின் மக்கு மதி.

அவள் கூறிய அடுத்து நொடி தன்னவளை தன் கைகளில் அள்ளி எடுத்தான்.

" அய்யோ மாமூ என்ன பன்றீங்க.." என்றபடி பயத்துடன் அவன் தோளில் தன் இரு கைகளையும் மாலையாய் கோர்த்துக் கொண்டாள்.

" என்ன பன்றேனாம்.. என் பொண்டாட்டியை காதலிக்க போறேன்.. யாருகிட்டயாவது பர்மிஷன் கேட்கனுமா மிஸ்டர் ஆதவன்.." என்றான் குறும்பாய்.

அவன் கூறியதில் பெண்ணவளுக்கு தான் முகத்தில் தோன்றிய நாணச் சிகப்பை மறைக்க முடியாமல் ஆடவனின் மார்பில் தன் முகத்தை அழுத்த பதிந்து கொண்டாள்.

" ஹலோ மேடம் என்ன ஒரே வெட்கமா.. அடியே நீ நெனக்கிறதுலாம் இப்போ நடக்காது.. நீ ஒழுங்கா படிச்சி முடிச்சிட்டு கலெட்ராகி காட்டு.. அப்புறம் தான் அதெல்லாம்.. என்ன சரியா.." என்றான் குறும்புடன்.

அவன் கூறியதில் மேலும் நாணம் பூசியவள் அதை மறைக்கு அவனுடைய மார்போரம் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

அதை கண்டவனுக்கு சிரிப்பு வந்தாலும் எதுவும் பேசாமல் அவளை தானும் சேர்த்து அணைத்துக் கொண்டவனின் மனம்,

'இன்னும் நம்ப முடிக்க வேண்டிய காரியம் நிறைய இருக்கு டா மதி.. அது முடிச்சி நாம யாருன்னு உனக்கு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நம்மோட வாழ்க்கையை நான் தொடங்குவேன்.. எப்பவும் நீ சந்தோஷமா இருக்கனும் டா..' என்று அவனின் மனதோரம் நினைத்தவன் தன்னவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

தன் அறைக்கு வந்தவன் அவளை படுக்கையில் படுக்க வைத்தவன் அவள் இறுக அணைத்து படுத்துக் கொண்டான்.

அந்த அனுபவமே இருவருக்கும் சுகமாய் இருந்தது.. அப்பொழுது தான் கீழே டிவியில் பாடல் ஓடி கொண்டிருந்தது.. அதை கேட்டவன் தன் கைகளால் தன்னவளின் மேனியில் கோலம் போட்டு பெண்ணவளின் சந்தன மேனியை மேலும் சிவக்க வைத்தான்.




தொட தொட

மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
தொட தொட
மலர்ந்ததென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன

பார்வைகள் புதிதா

ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன

தொட தொட

மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன

அந்த இள வயதில்

ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம்

யார் அழித்தார்

நந்தவன கரையில்

நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதற் பூவை

யார் பறித்தார்

காதலர் தீண்டாத

பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே

என் வசம் நானில்லை

தொட தொட

மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

பார்வைகள் புதிது
ஸ்பரிசங்கள் புதிது

நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன


தொட தொட

மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

பனிதனில் குளித்த
பால்மலர் காண
இருபது வசந்தங்கள்

விழி வளர்த்தேன்

பசித்தவன் அமுதம்

பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள்

இதழ் வளர்த்தேன்

இலை மூடும் மலராக

இதயத்தை மறைக்காதே
மலர் கொல்லும் காற்றாக

இதயத்தை உலுக்காதே

தொட தொட

மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

பார்வைகள் புதிதா

ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன

தொட தொட

மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன



ஆம் ஆடவனின் பார்வையும் புதிது.. ஸ்பரிசமும் பெண்ணுக்கு புதிது தானே.. அதை உணர்ந்து அனுபவித்த பாடல்.

அதை கேட்டவன் மென்மையாய் சிரித்தபடி,

"மதி மா கரெக்டான பாட்டு இல்லை.. ஆனாலும் என் விரல் தீண்டினாலே மலர்ந்து தாண்டி போற.. எப்படி இருக்க தெரியுமா.." என்றவன் அதற்கு மேல் ரகசியங்களை தன்னவளின் காதுகளில் எழுதினான்.

அதை கேட்டு சிவந்தவள் அவனை இறுக்கமாய் அணைத்து படுத்துக் கொண்டாள்.

அவனுடன் இப்பொழுது இருக்கும் இந்த நெருக்கம் வெறும் கனவோ என்று கூட எண்ணினாள்.

எப்படி பெண்ணவளில் இத்தனை மாற்றம்.. இது தான் காதலின் சக்தியா..? இல்லை நம்பிக்கையின் இருப்பிடமா..? தனக்குள்ளே கூனி குறுகி மரித்து போக இருந்த அந்த வெண்மதி எங்கே என்றாள் அவளே சொல்வாள் அப்படி ஒருத்தி இருந்தாளா என்று.

மாற்றம் ஒன்றே மாறாதது.. உண்மை காதலின் மகத்துவம் அவர்களை ஒன்றிணைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.






அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.