• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 66

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
51
43
Salem
சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் அரை மயக்க நிலையில் அந்த இருட்டறையில் இருந்தார் நாகராஜன்.. அவரின் அருகிலே ஒரு இளம் பெண்ணும் மயங்கியிருந்தாள்.

பின் தலையில் வலிக்க தன் கைகளை பின்னே சென்று அழுத்தி விட்டு மெதுவாய் தன் கண்களை திறந்தார் நாகராஜன்.

எங்கும் இருளாய் இருக்க சுற்றிலும் தன் பார்வையை சுழற்றியவருக்கு எங்கு இருக்கிறோம் என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் கிடைக்ககூடாத இடத்தில் கிடைத்திருக்கிறோம் என்று மட்டும் புரிந்தது.

தன் பக்கத்தில் ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்கவும் யாரென்று பார்த்தார்.. மெல்லிய நிலவொளிச்சத்தில் அவள் வயது பெண் என்று மட்டும் புரிந்தது.

அந்த பெண்ணின் தோளில் கைவைத்து, அம்மா எழுந்திரு யாரும்மா நீ.. இவர்களிடம் எப்படி சிக்கினாய்.. எழுந்திரம்மா.." என்று எழுப்பினார்.

தன்னை தொட்டு எழுப்பும் ஆண் யாரென்று அறியா விட்டாலும் அவரின் தீண்டலில் விரசமில்லை.. என்பதை உணர்ந்த பெண்ணவள் அந்த இருட்டில் அவரின் முகம் நன்றாக தெரியவில்லை என்றாலும் அறை குறை வெளிச்சத்தில் அவரின் வயோதிகம் தெரிய,

"ஐயா என்னை காப்பாத்துங்க.. நான் ஒரு அனாதை.. இங்கே ஒரு நடன நிகழ்வுக்காக வந்தேன்.. ஆனால் இவங்க யாருன்னு எனக்கு தெரியவில்லை.. எதுக்கு என்னை பிடிச்சிருக்காங்கன்னும் தெரியலை.. தயவு செஞ்சு என்னை இவங்ககிட்டேயிருந்து காப்பாத்துங்க.." என்றாள் பயத்துடன்.

" பயப்படாதம்மா நாம இங்கே இருக்கறது என் பையனுக்கு தெரிஞ்சா நிச்சயமாக நம்மளை காப்பாத்துவான்.. அப்படி அவன் வரலைன்னாலும் அந்த பரமேஸ்வரன் இருக்காரு.. பயப்படாத மா.." என்றார் ஆறுதலாய்.

அவரின் ஆறுதலோ இல்லை அவரின் அருகில் உணர்ந்த பாதுகாப்பு உணர்வோ பெண்ணவளை தைரியபடுத்தியது.

கொஞ்ச நேரத்தில் அந்த இருட்டு அறை திறக்கும் சத்தம் கேட்டது.. அதிலிருந்து நாலைந்து பேர் வந்தார்கள்.. பார்க்க ஒவ்வொருவரும் அடியாட்கள் போல் தான் இருந்தனர்.

அங்கிருந்த அந்த ஆட்களின் பார்வை வக்கிரமாய் அந்த பெண்ணின் மேல் பதிந்தது.

அவர்களை பார்த்து பயந்து நாகராஜனின் பின்னால் பதுங்கி கொண்டாள் பெண்ணவள்.

"யோவ் பெருசு இந்த சாப்பாடு.. நீ சாப்பிடு.. அந்த குட்டிக்கு நாங்க கொடுத்துக்குறோம்.." என்றான் வக்கிரமான விழிகளுடன்.

அதில் பயந்த பெண்ணவள் நாகராஜனின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

அவளின் கைகளில் அழுத்தம் கொடித்தவர், "தம்பி அந்த பொண்ணோட சாப்பாட்டையும் என்கிட்ட கொடுங்க நான் கொடுத்துக்குறேன்.." என்றார் கோபமாய்.

அதை கேட்டு சிரித்த அந்த வக்கிரமானவன், "யோவ் பெருசு என்னய்யா நீயே அந்த பொண்ணோட ஜல்ஜா பண்ண போறியா.." என்றான் எகத்தாளமாய் சிரித்தபடி.

அவனின் அந்த வார்த்தை கேட்டு தன் கைகளால் சிவ சிவ என்று தன் காதை பொத்திக் கொண்டார்.

அந்த சொல் கேட்டு அந்த பெண்ணும் அழுதாள்.

அதை பார்த்த அந்த அரக்கர்கள் ஹஹஹஹஹஹ என்று வெறிகொண்டு சிரித்தனர்.

சற்று நேரத்தில் அங்கே அழுத்தமான காலடி ஓசை கேட்டு அந்த அடியாட்கள் ஒதுங்கி நின்று கொண்டனர்.

அங்கே வந்தவர்களை பார்த்த நாகராஜ், "ஏய் தாண்டவராயா மருததுரை என்னடா இது... இன்னமுமா உங்களோட வெறி அடங்கலை.. அது தான் என் குடும்பத்தையே கறுவறுத்துட்டீங்களேடா.. இன்னமுமா உங்களோட வெறி அடங்கலை.. எதுக்குடா இன்னுமும் என் குடும்பத்து மேலேயே பழி வாங்குறீங்களே டா.." என்றார் கோபமாய்.

" பேசு நாகராஜா பேசு.. நல்லா பேசு.. ஏன்டா அந்த பட்டயத்தோட ஒரு பகுதி மட்டும் தானே எங்ககிட்ட குடுத்தீங்க.. மீதி எங்கேடா.. இன்னைக்கு அந்த வெண்மதி போட்டிருந்த பவள மாலையை பார்த்ததும் முடிவு பண்ணிட்டேன் நீங்க இன்னும் இருக்கீங்கன்னு.. நீதானே கொடுத்த அவகிட்ட.. ஆமா நீ இன்னும் இருக்கறது உன் அண்ணன் பையனுக்கு தெரியுமா டா.. உங்களுக்குலாம் வெக்கமா இல்லை.. பொட்ட பசங்க மாறி ஒளிஞ்சி வாழ.." என்றான் எரிச்சலாய்.

ஏன் இன்று அந்த வெண்மதியின் கழுத்தில் அந்த பவள மாலையை பார்த்த நொடியில் இருந்து அவர்களுக்கு தெரிந்து போனது ஆதவனின் குடும்ப மிச்சங்கள் இன்னும் உள்ளது என்று.

அப்பொழுது தான் நாகராஜன் இவர்களின் கண்களில் விழுந்தார்.. அதே வேகத்தில் அங்கே நடந்த பூஜையும் எந்த தடையும் இல்லாமல் நடந்ததால் தாங்கள் தோற்றம் ஏற்க முடியாமல் நாகராஜை கடத்தி வந்து விட்டனர்.

ஆனால் அவர்கள் அவர் மட்டும் தான் இருக்கிறது என்று நம்ப அந்த நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக ஆதவனின் செயல் இருந்தது.

"டேய் மருது நாங்களாடா பொட்ட பசங்க.. பொட்ட பசங்க மாறி பின்னாடி இருந்து என் குடும்பத்தையே அழிக்க பாத்தவங்க.. ஆனா நாங்க மறைச்சி வாழறது ஒரு ஊரோட நன்மைக்காக டா.. அதை நாங்க பெருமையா ஏத்துக்கறோம் டா.. போடா பொட்டப் பசங்களா.." என்று அவர் முடிப்பதற்குள்ளாக அவரின் கண்ணத்தில் பளார் என்று அறை விழுந்தது.

அடித்தது வேறு யாருமில்லை தாண்டவராயன் தான்.

" என்ன டா நீங்க நினைச்சது எதுடா நடந்துருக்கு.. விடமாட்டேன் டா.. நிச்சயம் அந்த பொக்கிஷம் எங்களுக்கு தாண்டா.. அதை அடைஞ்சி உன் அண்ணன் பையனை திரும்பவும் ஜெயிலுக்கு அனுப்பலை நான் தாண்டவராயன் இல்லைடா.." என்றான் கோபமாய்.

" ஏய் தாண்டவராயா உனக்கும் அது தாண்டா.. நேர்ல மோதி ஜெயிக்க முடியாத நீயெல்லாம் என்ன டா ஆம்பளை.. துரோகி உன்னையும் என் அண்ணன் நம்பினாரு அதுக்கு உனக்கு தகுதி இருக்காடா.. உங்களை கருவறுக்க ஆதவன் வருவான் டா.. இப்போ என்னை கொன்னாலும் பொக்கீஷத்தை பத்தின ரகசியம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்காது.." என்றார் உதட்டில் உதிரம் வடிய.

"இவ்வளவு அடி வாங்கியும் இன்னமும் உன்னோட அந்த திமிரு குறையலை இல்லை.. எப்படி குறையும் அது தான் ராஜ வம்சம் ஆச்சே.. அந்த திமிரு தானே இப்படி உன் குடும்பமே அழிய காரணம் ஆச்சி.. அதுவும் உன்னோட அண்ணி அந்த தேவகியோட திமிரு அதுக்கும் குறைஞ்சிது இல்லை.. வேரோட உன் வம்சமே இல்லாது பன்றேன் டா.. அதை பாக்க நீ உயிரோட இருக்கனும் இல்லை.. டேய் இவனுக்கு நல்லா காரமான சாப்பாடு கொடுங்க.." என்றவன் திரும்ப அருகிலிருந்த எதுவோ உறுத்த அங்கே ஒர் இளம்பெண் பயத்துடன் இருந்தாள்.

தன் அடியாட்களை பார்த்து, "டேய் இந்த பொண்ணு யாருடா.. எங்கேயிருந்து கூட்டிட்டு வந்தீங்க.." என்றான் கேள்வியாய்.

"அய்யா அது இந்த ஆளை கடத்தும் போது இந்த பொண்ணு பாத்துட்டா.. அது தான் இவளையும் கடத்திட்டு வந்திட்டேனுங்க.." என்றான் பெருமையாய்.

ஏதோ ஒரு பெண்ணை கடத்தி வந்தது வீரதீர செயல் போல.


" டேய் உங்க வேலையை இப்போ காட்டாதீங்க.. திருவிழா பிரச்சனை வேற போகுது.. இதெல்லாம் முடியட்டும் அப்புறம் பேசிக்கலாம்.. அதுவரைக்கும் இந்த பெண்ணும் இவனோடவே இருக்கட்டும்.." என்றபடி இருவரும் வெளியேறினர்.

அவர்களை தன் கடைக் கண்ணால் கொண்டிருந்தாள் அவள்.

கொஞ்ச தூரம் சென்ற மருததுரை ஏனோ திரும்பி அந்த பெண்ணை பார்த்தார்.

எதுவோ தவறாய் நடப்பது போல் தோன்றியது.. ஆனால் எதுவும் புரியவில்லை.. அவளை ஏனோ சாதாரணமாய் நினைக்க முடியவில்லை.. ஆனால் எளிமையாய் இருந்தாள்.

தாண்டவராயன் நின்று பார்த்த மருததுரையை, "ஏய் துரை என்னாச்சி.." என்றான்.


" தெரியலை அண்ணே ஏதோ இடறது.." என்றான் சந்தேகமாய்.

"அதெல்லாம் எதுவும் இல்லை வா போலாம்.. அங்கே அந்த துருவன் இருக்கான்.." என்றபடி அவனை அழைத்து சென்றான்.

அவர்கள் சென்றதும் அவளோ தன் கீழ்கடையோரம் மெலிதாய் புன்னகைத்து கொண்டாள்.




அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி