• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 67

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
அந்த இருட்டறையில் இருந்து வெளியே வந்த இருவரில் மருததுரை குழப்பமாக இருக்க அவனின் முகத்தை பார்த்த தாண்டவராயன்,

"என்னாச்சி துரை ஏன் ஏதோ யோசனையில இருக்க.." என்றான் கேள்வியாய்.

" இல்லை அந்த பொண்ணை பார்த்தா எங்கேயோ பாத்த மாறி தெரியுது.. ஆனா எங்கேன்னு தெரியலை.." என்றான் யோசனையாய்.

"அப்படி எங்க துரை பாத்த இந்த பொண்ணை.. இப்படி யோசிக்குற அளவுக்கு அவ முக்கியமானவள்லாம் இல்லை.. வா துரை லேட் ஆச்சின்னா அந்த துருவன் வேற திட்டுவான்.." என்ற படி மருததுரையை வெளியே அழைத்து வந்துவிட்டான்.

இங்கே அவர்கள் சென்றதும் கீழ்கடையில் வெடித்த புன்னகையை யாருமறியாமல் மறைத்துக் கொண்டவள் நாகராஜனிடம் திரும்பி,

"ஐயா நீங்க எப்படி இங்கே வந்தீங்க.. இவங்கெல்லாம் யாருன்னு உங்களுக்கு தெரியுமாங்க ஐயா.." என்றாள் யோசனையாய்.

" ம்ம் தெரியும் மா.. எங்க குடும்பத்தை கூண்டோடு அழிச்ச பாவிங்க.. இன்னைக்கு என் பொண்ணோட பொறந்த நாள் மா.. அவளோட நினைப்புல நான் எங்கே இருக்கேன்னு மறந்துட்டேன்.. அது தான் என்னை ஈசியா கடத்திட்டு வந்துட்டாங்க மா.. ஆமா நீ யாரு தாயி.. ஏனம்மா இந்த நாயிங்க கண்ணுல சிக்குன.. பாக்க ஏதோ இளவரசி மாறி இருக்குறியே தாயி.." என்றார் வாஞ்சையாய்.

" ஆமாங்கய்யா நான் இளவரசி தான் என் வீட்டுக்கு.. ஆனா அந்த சந்தோஷத்தை பாவிங்க சிலர் அழிச்சிட்டாங்க.. அவங்களை தான் தேடி வந்துருக்கேன்.. அவங்களை கண்டு பிடிச்சி அந்த மரணதேவனுக்கு முன்னாடி நிறுத்தனும்.. நிறுத்துவேன் இது என் குடும்பத்து மேல ஆணை.." என்றாள் ஆக்ரோஷமாய்.

இத்தனை நேரமாய் மென்மையாய் இருந்தவளின் முகம் அத்தனை செந்நிறமாய் சிவந்திருந்தது.. கண்களில் அத்தனை வெறி இருந்தது.. அவளின் முகம் பார்த்தவர் அவளின் தோளை தொட்டு ,

"தாயி கவலைபடாதே.. இங்கேயிருந்து நாம தப்பிக்கலாம்.. அதுக்கு என்ற மகன் மனசு வைக்கனும் தாயி.. கொஞ்ச நேரம் காத்திரு தாயி.." என்றவர் தன் கைகளில் இருந்த கயிற்றில் தாயத்து போல் இருந்ததை எடுத்தவர் சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லை என்பதை உணர்ந்தவர் அந்த தாயத்தில் அவர் தன் கையில் உள்ள கருப்பு மையால் எதையோ எழுத அதில் தெரிந்த ஒளி வடிவம் கண்ணை கூசியது.

சிறிது நேரத்தில் அந்த இடமே ஒளி வீசி புன்னகைத்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து இருவரும் எங்கேயோ செல்வது போல் இருந்தது.

அதன் சுழற்சி தாங்காமல் பெண்ணவள் கண்களை மூடிக் கொள்ள மீண்டும் கண்களை திறந்த இடம் சிவனின் இடத்தில்.


அவளின் முன்னே ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார்.. அவளின் புறம் திரும்பியவரின் முகத்தில் மென்மையான புன்னகை இருந்தது.. ஏனோ அந்த புன்னகை பெண்ணவளை அவளறியாமல் கைகூப்ப வைத்தது.


அவரோ மௌனமயாய் சிரித்தபடி, "வா மகளே நீ சரியான இடத்திற்கு சரியான நேரத்திற்கு தான் வந்துள்ளாய்.. அனைத்தும் எம் அப்பனின் திருவிளையாடல் மகளே.. இனி தான் நீ சற்று கவனமாக இருக்க வேண்டும்.. கள்வர்கள் கையில் வைரத்தை கொடுத்து விடாதே மகளே.. கவனம் கொள்.. தேவியாரின் கையில் தான் அடையாள சின்னம் கிடைக்க வேண்டும் மகளே.." என்றவரை கண் மூடி வணங்கினாள்.

அவள் கண்விழிக்கும் நேரம் அங்கே யாருமில்லாமல் பரமேஸ்வரனின் சாந்தமான முகம் தான் தெரிந்தது.

தன் பார்வையை சுற்றிலும் பார்த்தவளுக்கு இது குகை என்று மட்டும் தெரிந்தது.. ஆனால் எந்த இடம் என்றெல்லாம் தெரியவில்லை.. அதற்குள்ளாக அங்கே வந்தார் நாகராஜ் மருதநாயகத்தை அழைத்துக் கொண்டு.

"அப்பா நான் சொன்னேன் இல்லை அங்கேயிருந்து ஒரு பெண்ணை அழைச்சிட்டு வந்துருக்குறதா சொன்னேனே.. அது இந்த பொண்ணு தான்ப்பா.. இந்த பொண்ணு பேரு.." என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார்.

அதற்குள்ளாகவே, "வணக்கமுங்க ஐயா என்னோட பேரு கயல்கண்ணிங்க.. நான் ஒரு அனாதைங்க.. அது தான் அந்த பொறுக்கிங்க கண்ணுல விழுந்துட்டேன்ங்க.." என்றாள் அழுகையாய்.

அந்த பெண்ணின் பெயரை கேட்டதும் ஏனோ மருதநாயகத்தின் உடல் சிலிர்த்து தான் போனது.. கயல்.. கயல்கண்ணி.. ஏனோ மீண்டும் மீண்டும் அந்த பெயரை உச்சரிக்க உச்சரிக்க ஏதோ புது தெம்பு வந்தது போல் உணர்ந்தார்.

"அப்படி சொல்லாத தாயே.. அந்த பரமேஸ்வரன் அருள் இருக்கறவரைக்கும் யாரும் இங்கே அனாதை இல்லை தாயி.." என்றார் மருதநாயகம் மனமுவந்து.


"தாயி நீ இங்கே எவ்வளவு நாள் இருக்கறதனாலும் இருக்கலாம் தாயி.. என்னவோ உன்னை பார்ததுக்கு அப்புறம் மனசுல எல்லாம் சீக்கிரம் சரியாகும்னு தோனுது தாயி.. நான் கொஞ்ச நேரம் தியானம் பன்றேன் தாயி.." என்று விட்டு பரமேஸ்வரனின் முன்பு கண்களை மூடியபடி தவநிலையில் அமர்ந்து விட்டார்.

தன் நிலை வந்தவள் அவரை பார்த்து கொண்டு தானும் கண்களை மூடியபடி அங்கே அமர்ந்துவிட்டாள்.

இங்கே தன்னவனின் காதலில் திளைத்தவள் அடுத்த நாள் கல்லூரிக்கு சென்றவளை அங்கிருந்தோர் அனைவரும் அதிர்ச்சியாய் பார்த்திருந்தனர்.

இத்தனை நாளாக ஒற்றை கருப்பு பொட்டும் மெலிதான சங்கிலியுடன் ஏனோ தானோ என்று உடுத்தி வருபவள் இன்றோ கரை வைத்த காட்டன் புடவையில் நெற் நிறைய திலகமும் உச்சி வகுட்டில் காலையில் அவளவன் வைத்த குங்குமமும் தலையில் மல்லிகை பூவை சூடியிருக்க ஏதோ தேவலோகத்தில் இருந்து வந்த தேவதையாய் தெரிந்தாள் அனைவரின் கண்ணுக்கும்.

அதுமட்டுமல்லாமல் அவளின் மனதையும் தன்னை நோக்கி திரும்பியிருந்தான் ஆதவன்.. அனுதினமும் அவனின் காதலை கற்றுக் கொள்ளும் மழலையாய் அவனிடம் காதல் பாடமும் சேர்த்தே கற்றுக் கொண்டாள்.. மனது சந்தோஷமாய் இருந்ததாலோ என்னவோ பெண்ணவளின் வதனமும் அழகாய் ஜொலித்தது.

ஏன் வந்தனாவே வெண்மதியை ஓட்டி தள்ளிவிட்டாள்.

"ஏன்க்கா மாம்ஸ் அப்படி என்ன மாயம் செஞ்சாங்க இப்படி மூஞ்செல்லாம் சிவந்து போயிருக்கு.. அது என்ன ரகசியம்னு எனக்கும் சொல்லுங்க கா.. அப்பா அந்த அழுவாச்சி முகம் எங்கேக்கா போச்சி.. அப்படியே தாமரை மலர்ந்து போற மாறி மலர்ந்திருக்குறக்கா.. அப்போ சீக்கிரமே ஜீனியர் மதியோ இல்லை ஆதவனையோ பாக்கலாம் இல்லைக்கா.." என்றாள் அவளை மேலும் வம்பிலுக்கும் விதமாய்.

" அய்யோ ச்சீய் போடி வந்தனா.." என்று அவளின் தோளிலேயே தன் முகத்தைத் மறைத்துக் கொண்டாள் பேதையவள்.

அன்று பொழுது முழுவதும் படிப்பதிலும் மதியை கிண்டல் செய்வதிலுமே தன் நேரத்தை செலவிட கல்லூரி முடிந்ததும் அந்தியூர் அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தான் ஆதவன்.




அடுத்து பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.