• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 68

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
51
43
Salem
கல்லூரி முடிந்ததும் வந்தனாவுடன் பேசிய படி வெளியே வந்த வெண்மதிக்கு அங்கே ஆச்சர்யமாய் அவளவன் அங்கே நின்றிருந்தான் புல்லட் உடன்.. அவனை பார்த்த வெண்மதிக்கு வெட்கம் வந்து தொலைத்தது.. தலையை குணிந்தபடி தன்னவனை நோக்கி நடந்தாள்.. அவளுடன் நடந்த வந்தனா 'என்னடா இது இவ்வளவு நேரம் பேசிட்டிருந்த அக்கா இப்போ சைலண்ட் ஆகிட்டாங்க..' என்ற யோசித்த படி முன்னே பார்க்க அங்கே ஆதவன் மீசையை முறுக்கியபடி நின்றிருந்தான்.

'ஓஓ அக்காவோட சைலண்ட்க்கு ரீசன் மாம்ஸ் தானா..' என்று எண்ணியபடி வெண்மதியை முந்தி கொண்டு ஆதவனிடம் சென்றாள்.

தன் முன்னே மூச்சு வாங்க நின்றவளை கேள்வியாக பார்த்தான் ஆதவன்.

" மாம்ஸ் எனக்கு ஒரு டவுட்.. கிளியர் பன்றீங்களா.." என்று வெண்மதியை பார்த்தது கண்ணடித்தபடியே கேட்டாள்.

அவள் என்ன கேட்க போகிறாள் என்பதை உணர்ந்த வெண்மதி வேணாம் என்று தலையாடாடினாள்.. ஆனால் அதை கண்டு கொள்ளாமல் ஆதவனிடம் தன் கேள்வியை கேட்க நின்றவளின் வாயை தன் இருகரம் கொண்டு தடுத்தாள் மதி.

இருவரையும் பார்த்து சிரித்த ஆதவன், "ஏய் வாழு என் பொண்டாட்டி உன் வாயை அடைக்கும் போதே தெரியுது ஏதோ வில்லங்கமா கேட்க போறேன்னு தெரியுது.. சோ வேணாம் தாயே.. நீ எதுவும் கேட்க வேணாம்.. நானும் என் பொண்டாட்டியும் உருப்படியா வீடு போய் சேரனும்.." என்று கையெடுத்து கும்பிட்டு விட்டான்.

"ச்சீய் என்ன மாம்ஸ் இப்படி கை தூக்கிட்டீங்க.. சரி எதோ போகுது விட்டுறேன் விடுங்க.." என்றாள் பெரிய மனது பண்ணி.

அதை கண்டு கணவன் மனைவி இருவரும் சிரித்தனர்.

இருவரும் அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பும் சமயம்,


"வந்தனா நாளைக்கு கொஞ்சம் வெயிட் பண்ணு.. கொஞ்சம் பர்சேஸ் பண்ணனும்.. கோவில் திருவிழா வருது இல்லை.. மதிக்கும் உனக்கும் தேவையானதை வாங்கிடலாம்.." என்றபடி கிளம்பினார்கள்.

அவன் கூறியதற்கு தலையாட்டி வைத்தாள் வந்தனா.

இங்கு தாண்டவராயனும் மருததுரையும் துருவனை காண வந்திருந்தனர்.

அவனோ கோபத்தில் அங்குமிங்கும் நடை போட்டிருந்தான்.. அவன் எது எல்லாம் நடக்கக்கூடாது என்று நினைத்தானோ அத்தனையும் நிறைவேறி கொண்டிருக்கிறது.. அதுவும் அவனின் எதிரிக்கு.

அவர்களை பழி வாங்க முடியாமல் எதுவோ அவனை தடுக்கிறது.. ஆனால் என்னவென்று தான் தெரியவில்லை.

அவனும் எத்தனையோ வித்தைகளை கற்றவன் தான்.. ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் எதுவோ ஒரு சக்தி அவனை தடுத்து நிறுத்துகிறது.. அதை தெரிந்து கொள்ள முடியாமல் தான் இந்த கோபம்.

அதே நேரம் அங்கே வந்த மருததுரையை பார்த்தவன் அவனிடம், "நீ அந்த வெண்மதியை கெடுக்க ஒருத்தனை கூட்டிட்டு வந்தீயே அவன் எப்படி இறந்தான்.." என்றான் யோசனையாய்.

இப்போது எதற்கு இதை கேட்கிறான் என்று புரியாமல், "அவனோட உடம்பே சிதைஞ்சி முகம் எல்லாம் எரிஞ்சு அடையாளமே தெரியலை துரை அவன் தான்னு.." என்றான் வேகமாய்.

" அந்த கொலைக்கு அப்புறம் தான் அந்த கரன் வந்தான் இல்லை.. ஆமா அந்த ஆதவனுக்கும் கரனுக்கும் என்ன மாறியான உறவு.." என்றான் சந்தேகமாய்.

"அது தெரியலை துரை ஆனா ஒன்னு சொல்லலாம் அந்த ஆதவனுக்கும் கரனுக்கும் சுத்தமா ஆகாது.. ஏன் அவனுங்க இன்னை வரைக்கும் பேசிகிட்டது இல்லை.." என்றான் தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல்.

இல்லை அந்த கரனுக்கும் ஆதவனுக்கும் நிச்சயம் எதோ சம்பந்தம் இருக்கு..அதுமட்டுமில்லாம அந்த ஆதவனுக்கு கரன் தான் உதவி பன்றான்.. ஏன் உத்தரவு பூஜையில அந்ர மதியோட உயிரை எடுக்க முயற்சி பன்னுனா அந்த ஆளுங்களை இநஅத கரன் தான் பிடிச்சிருக்கான்.. இப்போ என்னன்னா அந்த நாகராஜன் உயிரோட நம்மகிட்ட சிக்கியிருக்கான்.. ஆனா அந்த ஆதவன் குடும்பத்துல இன்னும் யாரெல்லாம் இருக்காங்கன்னு தெரியலை.. அதுமட்டுமில்லாம உத்தரவு பூஜையை அவன் அந்த மதியோட கையில முடிச்சிட்டான்.. அப்போ அந்த குமரேசன் இவளுக்கு தாலி கட்டி வாழலையா என்ன.. இன்னும் எனக்கு தெரியாம என்னவெல்லாம் மறைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்.. ஆஆஆ எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உங்களையும் சேர்த்தே அழிச்சிடுவேன்.." என்றான் ஆக்ரோஷமாய்.

மற்றவர்களுக்கும் எதுவும் புரியவில்லை.

துருவனே தொடர்ந்து , "ஆமா அந்த குமரேசன் மதி கழுத்துல தாலி கட்டலையா.. அவளோட ஒரு நாள் கூட புருஷன் பொண்டாட்டியா வாழலையா என்ன.." என்றான் சந்தேகமாய்.

" இல்லை துரை அவ கழுத்துல தாலி கட்ட போன நேரம் எங்கிருந்தோ வந்த பறவை அந்த தாலியை பறிச்சிட்டு போயிடுச்சி.. அதுவும் இல்லாம அந்த நேரத்துல அந்த வெண்மதி மயக்கமா இருந்ததால அவளுக்கு எதுவும் நினைவு இல்லை.. மயக்கத்துல இருக்கறவ கழுத்துல தாலி கட்டவும் முடியலை..

ஆனா அந்த ஆதவனை பழிவாங்க தான் கனகத்தோட கையால அந்த தாலியை கட்ட சொன்னோம்.. அப்புறம் மயக்கம் தெளிஞ்சவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு மட்டும் தான் சொன்னோம்.. அவளும் அதை ஏத்துக்கிட்டு கனகத்தோட வீட்டுக்கு போனாலும் அவகிட்ட அவனால நெருங்க முடியலை.

அந்த சமத்துல எல்லாம் அவ சுயநினைவோட இருக்கறது இல்லைன்னா குமரேசன் ஒரு தடவை சொன்னான்.. ஆனா அவன் செத்தது இன்னுமும் சந்தேகமா தான் இருக்கு.." என்றான் மருததுரை.

அதை கேட்ட துருவனுக்கு நிச்சயம் எதுவும் புரியவில்லை.. ஆனால் இதில் எதுவோ உள்ளது என்று மட்டும் புரிந்தது.

இருவரிடமும் திரும்பி, "இந்த திருவிழாவுல அந்த ஆதவன் வெண்மதி அவங்க குடும்பம் அத்தனையும் வேரோட அழியனும்.. அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க.. அந்த வெண்மதியை அழிக்கவும் தான் ஆனா அவ அந்த பொக்கீஷ பேழையை எடுத்து தரனும்.. அப்படி தந்துட்ட அடுத்த நிமிஷம் அவ உயிர் அவளுக்கு சொந்தம் இல்லை.. திருவிழாவுல என்ன பண்ண முடியும்னு பாருங்க.." என்று அவர்களை அனுப்பி வைத்தவன் ஆதவனின் குடும்பத்தை மீண்டும் எப்படி அழிப்பது என்று திட்டம் தீட்டினான்.

அதே நேரம் இங்கே தன் முன் அமர்ந்திருந்த வெண்மதி வளவனிடம்,

"இதோ பாரு வளவா நிச்சயம் இந்த திருவிழாவுல என்ன பிரச்சனை பண்ணலாம்னு யோசிப்பாங்க.. ஆனா அப்படி எதுவும் நடக்க கூடாது.. அப்படி நடந்தாலும் அதை கடந்து எழுந்து வரணும்..

மதி மா உன்னோட பொறுப்பு நிறைய இருக்கு.. இதெல்லாம் நான் ஏன் செய்யனும்னு நீ கேட்டா நீ தான் செய்யனும்.. அதுக்கு உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு சரியா.. நீ முன்னாடி யாருங்கிறது அப்புறம்.. இப்போ நீ இந்த ஆதவனோட பொண்டாட்டி அதை நினைவுல வச்சிக்கோ சரியா.." சரி என்று அவள் தலையாட்ட வளவனை பார்த்தவன்,

" சரி வளவா நேரம் ஆகுது நீ போய் தூங்கு.. நாளைக்கு திருவிழாவுக்கு துணி எடுக்கனும்.. எல்லார்க்கும் எடுத்து தரணும்.. இது நம்ப பரம்பரையா செஞ்சுட்டு இருக்கறது.. சரியா போய் தூங்கு.." என்றவனுக்கு,

"ம்ம் சரிங்க அண்ணா.." என்றபடி அவன் செல்ல இவனும் தன்னவளை அழைத்துக் கொண்டு தூங்க சென்றான்.


இந்த திருவிழாவில் யார் நினைத்தது நடக்குமோ..? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.. வெற்றி பெறுவது நன்மையா தீமையா என்று.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி