• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மத்தேயு நற்செய்திகள்

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
அதிகாரம் 1




இயேசுவின் குடும்ப வரலாறு


1 தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையாவது:

2 ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார். ஈசாக்குக்கு யாக்கோபு பிறந்தார். யாக்கோபுக்கு யூதாவும் அவருடைய சகோதரர்களும் பிறந்தார்கள்.

3 யூதாவுக்குப் பாரேசும் சாராவும் தாமாரிடம் பிறந்தார்கள். பாரேசுக்கு எஸ்ரோம் பிறந்தார். எஸ்ரோமுக்கு ஆராம் பிறந்தார்.

4 ஆராமுக்கு அம்மினதாப் பிறந்தார். அம்மினதாபுக்கு நசசோன் பிறந்தார். நகசோனுக்குச் சல்மோன் பிறந்தார்.

5 சல்மோனுக்கு ராகாபிடம் போவாஸ் பிறந்தார். போவாசுக்கு ரூத்திடம் ஓபேத் பிறந்தார். ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.

6 ஈசாயுக்குத் தாவீது அரசர் பிறந்தார். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் சாலொமோன் பிறந்தார்.

7 சாலொமோனுக்கு ரெகொபெயாம் பிறந்தார். ரெகொபெயாமுக்கு அபியா பிறந்தார் அபியாவுக்கு ஆசா பிறந்தார்.

8 ஆசாவுக்கு யோசபாத் பிறந்தார். யோசபாத்துக்கு யோராம் பிறந்தார். யோராமுக்கு உசியா பிறந்தார்.

9 உசியாவுக்கு யோதாம் பிறந்தார். யோதாமுக்கு ஆகாஸ் பிறந்தார். ஆகாசுக்கு எசேக்கியா பிறந்தார்.

10 எசேக்கியாவுக்கு மனாசே பிறந்தார். மனாசேயுக்கு ஆமோன் பிறந்தார். ஆமோனுக்கு யோசியா பிறந்தார்.

11 யோசியாவுக்கு எகொனியாவும் அவருடைய சகோதரர்களும் பிறந்தார்கள். பாபிலோனுக்கு யூதர்கள் நாடுகடத்தப்பட்டது இக்காலத்தில்தான்.

12 பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின் எகொனியாவுக்கு சலாத்தியேல் பிறந்தார். சலாத்தியேலுக்கு சொரொபாபேல் பிறந்தார்.

13 சொரொபாபேலுக்கு அபியூத் பிறந்தார். அபியூத்துக்கு எலியாக்கீம் பிறந்தார். எலியாக்கீமுக்கு ஆசோர் பிறந்தார்.

14 ஆசோருக்கு சாதோக்கு பிறந்தார். சாதோக்குக்கு ஆகீம் பிறந்தார். ஆகீமுக்கு எலியூத் பிறந்தார்.

15 எலியூதுக்கு எலெயாசார் பிறந்தார். எலெயாசாருக்கு மாத்தான் பிறந்தார். மாத்தானுக்கு யாக்கோபு பிறந்தார்.

16 யாக்கோபுக்கு மரியாளின் கணவரான சூசை பிறந்தார். இவளிடம் கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார்.

17 ஆகமொத்தம்: ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறை பதினான்கு@ தாவீதுமுதல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதுவரை தலைமுறை பதினான்கு@ பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதுமுதல் கிறிஸ்துவரை தலைமுறை பதினான்கு.


இயேசு கிருஸ்துவின் பிறப்பு


18 இயேசு கிறிஸ்து தோன்றியது பின்வருமாறு: அவருடைய தாய் மரியாளுக்கும் சூசைக்கும் மண ஒப்பந்தம் ஆயிருக்க, அவர்கள் கூடிவாழுமுன் பரிசுத்த ஆவியினால் அவள் கருத்தாங்கியிருப்பதாகத் தெரிந்தது.

19 அவள் கணவர் சூசை நீதிமானாயும், அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராயும், இருந்ததால் அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.

20 இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், இதோ! ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.

21 அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

22 ~ இதோ! கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர் ~ என்று ஆண்டவர் இறைவாக்கினர் வாயிலாகக் கூறியது நிறைவேறும்படியே இவையனைத்தும் நிகழ்ந்தன.

23 இம்மானுவேல் என்றால், ~ நம்மோடு கடவுள் ~ என்பது பொருள்.

24 சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

25 அவள் தன் தலைப்பேறான மகனைப் பெற்றெடுக்கும்வரை அவர் அவளை அறியாதிருந்தார். அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்.
 
  • Like
Reactions: ircaroline

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
அதிகாரம் 2




ஞானியர்களின் வருகை


1 ஏரோது அரசன்காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லெகேமில் இயேசு பிறந்திருக்க, இதோ! ஞானிகள் கீழ்த்திசையிலிருந்து யெருசலேமுக்கு வந்து,

2 "யூதர்களின் அரசர் பிறந்திருக்கின்றாரே, அவர் எங்கே ? அவருடைய விண்மீன் எழுதலைக் கண்டு, அவரை வணங்க வந்தோம்" என்றார்கள்.

3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவ்வாறே யெருசலேம் முழுவதும் கலங்கிற்று.

4 அப்பொழுது அவன், தலைமைக் குருக்கள், மக்களுள் மறைநூல் அறிஞர் அனைவரையும் கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று விசாரித்தான்.

5 அவர்கள் அவனிடம், "யூதேயாவிலுள்ள பெத்லெகேமிலே பிறப்பார்@

6 ஏனெனில், ~யூதா நாட்டுப் பெத்லெகேமே, யூதாவின் நகரங்களிலே நீ சிறியதே அல்லை. ஏனெனில், என் மக்கள் இஸ்ராயேலை மேய்க்கவேண்டிய தலைவர் உன்னிடமிருந்தே தோன்றுவார் ~ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்" என்றார்கள்.

7 அப்போது, ஏரோது அந்த ஞானிகளை மறைவாக அழைத்து, அவர்களுக்கு விண்மீன் தோன்றியது எப்பொழுது என்று அவர்களிடம் கருத்தாய்க் கேட்டு அறிந்துகொண்டான்.

8 பின்பு அவர்களைப் பெத்லெகேமுக்குப் போகச் சொல்லி, "நீங்கள் சென்று குழந்தையைப்பற்றிக் கருத்தாய் ஆராய்ந்து பாருங்கள்@ அவரைக் கண்டபின் எனக்குத் தெரிவியுங்கள். நானும் போய் அவரை வணங்கவேண்டும்" என்றான்.

9 அவர்கள் அரசன் கூறியதைக் கேட்டுப் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழக்கண்ட அந்த விண்மீன், குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை, அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.

10 விண்மீனைக் கண்டதும் அவர்கள் அளவில்லா மகிழ்ச்சியுற்றனர்.

11 வீட்டிற்குள் போய், பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு, தெண்டனிட்டு வணங்கினர். தம் பேழைகளைத் திறந்து பொன்னும் தூபமும் வெள்ளைப்போளமும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.

12 ~ ஏரோதிடம் மீண்டும் செல்லவேண்டாம் ~ என்று கனவில் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினர்.


எகிப்திற்கு தப்பிச் செல்லுதல்


13 அவர்கள் சென்றபின், இதோ! ஆண்டவரின் தூதர் சூசைக்குக் கனவில் தோன்றி, "எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்" என்றார்.

14 அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு, எகிப்துக்குச் சென்றார்.

15 ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ~ எகிப்திலிருந்து என் மகனை அழைத்தேன் ~ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் கூறியது நிறைவேற வேண்டியிருந்தது.


பெத்லகேமின் ஆண் குழந்தைகளைக் கொல்லுதல்


16 பின்னர் ஏரோது, ஞானிகள் தன்னை ஏமாற்றியதைக் கண்டு, கடுங்கோபமுற்று, ஆட்களை அனுப்பி, ஞானிகளிடம் கருத்தாய்க் கேட்டறிந்த காலத்தின்படி பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்.

17 ~ ராமாவிலே கூக்குரல் கேட்டது. பேரழுகையும் ஒப்பாரியுமாக இருந்தது.

18 ராக்கேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டு, அவை இல்லாமையால் ஆறுதல் பெறவிரும்பவில்லை ~ என்று எரேமியாஸ் இறைவாக்கினர் கூறியது அப்பொழுது நிறைவேறிற்று.


எகிப்தில் இருந்து திரும்புதல்


19 ஏரோது இறந்ததும், இதோ! ஆண்டவரின் தூதர் எகிப்தில் சூசைக்குக் கனவில் தோன்றி,

20 "எழுந்து, பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில், குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடினவர்கள் இறந்துவிட்டனர்" என்றார்.

21 அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ராயேல் நாட்டுக்கு வந்தார்.

22 ஆனால் யூதேயாவிலே, அர்கெலாவு தன் தந்தை ஏரோதிற்குப் பதிலாக அரசாள்வதாகக் கேள்வியுற்று அங்குச் செல்ல அஞ்சினார். கனவில் எச்சரிக்கப்பட்டு கலிலேயா நாட்டுக்குச் சென்றார்.

23 சென்று, நாசரேத்து என்னும் ஊரில் குடியிருந்தார். இவ்வாறு, ~ நாசரேயன் எனப்படுவார் ~ என்று இறைவாக்கினர்கள் கூறியது நிறைவேற வேண்டியிருந்தது.




 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
அதிகாரம் 3




ஸ்நானகன் யோவானின் திருப்பணி


1 அக்காலத்திலே, ஸ்நாபக அருளப்பர் யூதேயாவின் பாலைவனத்தில் தோன்றி,

2 மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவித்து வந்தார்.

3 இவரைப்பற்றியே, ~ ஆண்டவரது வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள், எனப் பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது ~ என்று இசையாஸ் இறைவாக்கினர் கூறியுள்ளார்.

4 இந்த அருளப்பர் உடுத்தியது, ஒட்டக மயிராடை@ இடையில் கட்டியது, வார்க்கச்சை@ உண்டது, வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும்.

5 யெருசலேமிலும் யூதேயா முழுவதிலும், யோர்தானை அடுத்த நாடெங்கும் வாழ்ந்தோர் அவரிடம் போய்,

6 தங்கள் பாவங்களை வெளியிட்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றுவந்தனர்.

7 பரிசேயர், சதுசேயருள் பலர் நம்மிடம் ஞானஸ்நானம் பெற வருவதைக் கண்டு, அவர்களைப் பார்த்து, "விரியன்பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்துக்குத் தப்பித்துக்கொள்ள, உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவன் யார் ?

8 எனவே, மனந்திரும்பியவர்க்கேற்ற செயலைச் செய்து காட்டுங்கள்.

9 ~ ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை ~ என்று சொல்லிக்கொள்ளத் துணியவேண்டாம். இக் கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு மக்களை எழுப்பக் கடவுள் வல்லவர் என்று உங்களுக்குக் கூறுகிறேன்.

10 ஏற்கனவே அடி மரத்தில் கோடரி வைத்தாயிற்று. நற்கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, தீயில் போடப்படும்.

11 நீங்கள் மனந்திரும்பியதைக் காட்ட உங்களுக்கு நான் நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப்பின் வருபவரோ என்னைவிட வல்லவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்ல நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

12 அவர், சுளகைக் கையில் கொண்டு, தம் களத்தைத் துப்புரவாக்கிக் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்@ பதரையோ அவியா நெருப்பில் சுட்டெரிப்பார்" என்றார்.


இயேசுவின் ஞானஸ்நானம்


13 பின்னர், இயேசு அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.

14 அருளப்பரோ, "நானே உம்மிடம் ஞானஸ்நானம் பெறவேண்டியிருக்க, நீரா என்னிடம் வருவது ?" என்று சொல்லி அவரைத் தடுக்கப்பார்த்தார்.

15 அதற்கு இயேசு, "இப்போதைக்கு விட்டுவிடும். ஏனெனில், இவ்வாறு நாம் நியமங்களெல்லாம் நிறைவேற்றுவது தகுதியே" என்று பதில் உரைக்க, அவரைத் தடைசெய்யாமல் விட்டுவிட்டார்.

16 ஞானஸ்நானம் பெற்றவுடன் இயேசு தண்ணீரை விட்டு வெளியேறினார். அப்போது வானம் திறக்க, கடவுளின் ஆவியானவர் புறாவைப்போலத் தம்மீது இறங்கிவருவதைக் கண்டார்.

17 அப்போது வானிலிருந்து, "இவரே என் அன்பார்ந்த மகன், இவரிடம் நான் பூரிப்படைகிறேன்" என்று ஒரு குரலொலி கேட்டது.



 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
அதிகாரம் 4




இயேசுவுக்குண்டான சோதனைகள்


1 பின்னர் இயேசு அலகையினால் சோதிக்கப்படுமாறு பாலைவனத்திற்கு ஆவியானவரால் அழைத்துச் செல்லப்பெற்றார்.

2 அங்கு நாற்பது பகலும் நாற்பது இரவும் நோன்பிருந்தபின் பசியுற்றார்.

3 சோதிப்பவன் அவரை அணுகி, "நீர் கடவுளின் மகனானால் இந்தக் கற்கள் அப்பம் ஆகும்படி கட்டளையிடும்" என்றான்.

4 அவரோ மறுமொழியாக: " ~ மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான் ~ என எழுதியிருக்கின்றதே" என்றார்.

5 பின்னர் அலகை, அவரைத் திருநகரத்திற்குக் கொண்டுபோய்க் கோவில் முகட்டில் நிறுத்தி,

6 "நீர் கடவுளின் மகனானால் கீழே குதியும்@ ஏனெனில், ~ தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார், உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ~ என எழுதியுள்ளது" என்று சொல்ல,

7 இயேசு அதனிடம், " ~ உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே ~ எனவும் எழுதியிருக்கின்றது" என்றார்.

8 மீண்டும் அலகை அவரை மிக உயர்ந்த மலைக்குக் கொண்டுபோய் உலக அரசுகள் அனைத்தையும் அவற்றின் மாட்சியையும் காட்டி, ஃ

9 "நீர் என்னைத் தெண்டனிட்டு வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன்" என்றது.

10 அப்பொழுது இயேசு அதனை நோக்கி, "போ அப்பாலே, சாத்தானே, ஏனெனில், ~ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரை மட்டுமே ஆராதிப்பாயாக ~ என எழுதியிருக்கின்றது" என்றார்.

11 பின்னர் அலகை அவரை விட்டகன்றது. அப்போது வானதூதர் அணுகி, அவருக்குப் பணிவிடை புரிந்தனர்.


கலிலேயாவில் இயேசுவின் ஊழியம்


12 அருளப்பர் சிறைப்பட்டதைக் கேள்வியுற்று இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார்.

13 அவர் நாசரேத்தூரை விட்டு, செபுலோன், நப்தலி நாட்டில் கடலோரமாயுள்ள கப்பர்நகூமுக்கு வந்து குடியிருந்தார்.

14 இசையாஸ் இறைவாக்கினர் பின்வருமாறு கூறியது இப்படி நிறைவேற வேண்டியிருந்தது:

15 ~ செபுலோன் நாடே! நப்தலி நாடே! கடல் நோக்கும் வழியே! யோர்தான் அக்கரைப் பகுதியே! புறவினத்தார் வாழும் கலிலேயாவே!

16 இருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டனர். மரண நிழல் படும் நாட்டில் உள்ளோர்க்கு ஒளி உதித்தது. ~


சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்


17 அதுமுதல் இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார்.

18 கலிலேயாக் கடலோரமாய் இயேசு நடந்து செல்லுகையில், இராயப்பர் என்னும் சீமோனும், அவர் சகோதரர் பெலவேந்திரருமாகிய இரு சகோதரரைக் கண்டார். அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தனர். ஏனெனில், அவர்கள் மீன் பிடிப்போர்.

19 அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்@ உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.

20 உடனே அவர்களும் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.

21 அங்கிருந்து அப்பால் சென்று, செபெதேயுவின் மகன் யாகப்பரும், அவர் சகோதரர் அருளப்பருமாகிய வேறு இரு சகோதரர், தம் தந்தை செபெதேயுவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களை அழைத்தார்.

22 உடனே அவர்கள் தம் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.


போதனையும் குணமாக்குதலும்


23 அவர் கலிலேயா எங்கும் சுற்றி, அவர்களுடைய செபக்கூடங்களில் போதித்து, விண்ணரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து, மக்களிடையே எல்லா நோயையும் பிணியையும் குணமாக்கிவந்தார்.

24 அவரைப்பற்றிய பேச்சு சீரியாநாடு முழுவதும் பரவியது. பல்வேறு நோய் நோக்காட்டினால் வருந்தும் பிணியாளர் அனைவரையும், பேய்பிடித்தோரையும் பைத்தியக்காரரையும் திமிர்வாதக்காரரையும் அவரிடம் கொண்டுவந்தனர். அவர் அவர்களைக் குணப்படுத்தினார்.

25 கலிலேயா, தெக்கப்போலி, யெருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதியாகிய இடங்களிலிருந்து, மக்கள் கூட்டங் கூட்டமாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
அதிகாரம் 5




இயேசுவின் மலைப் பிரசங்கம்


1 இயேசு திரளான கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரை அணுகினர்.

2 அவர் திருவாய் மலர்ந்து போதிக்கலானார்:

3 "எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே.

4 துயருறுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.

5 சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர், ஏனெனில், மண்ணுலகு அவர்களது உரிமையாகும்.

6 நீதியின்பால் பசிதாகமுள்ளோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் நிறைவு பெறுவர்.

7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.

8 தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.

9 சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்.

10 நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே.

11 என்பொருட்டுப் பிறர் உங்களை வசைகூறித் துன்புறுத்தி, உங்கள்மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும்போது, நீங்கள் பேறுபெற்றோர்.

12 அகமகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும். உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் இவ்வாறே துன்புறுத்தினர்.


உப்பு, ஒளி உவமைகள்


13 "உலகிற்கு உப்பு நீங்கள். உப்பு சாரமற்றுப்போனால் வேறு எதனால் சாரம் பெறும் ? இனி, வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடுமேயொழிய, ஒன்றுக்கும் உதவாது.

14 "உலகிற்கு ஒளி நீங்கள். மலைமேல் உள்ள ஊர் மறைவாயிருக்க முடியாது.

15 மேலும், விளக்கைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்கமாட்டார்கள்@ மாறாக, வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்பொருட்டு, விளக்குத் தண்டின்மீது வைப்பார்கள்.

16 அப்படியே, மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக.


இயேசுவும் பழைய ஏற்பாடும்


17 "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வந்தேனென்று நினைக்க வேண்டாம். அழிப்பதற்கன்று, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

18 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகுமுன் திருச்சட்டத்தின் ஒரு சிற்றெழுத்தோ புள்ளியோ ஒழிந்துபோகாது@ எல்லாம் நிறைவேறும்.

19 ஆகையால்,இச்சின்னஞ் சிறு கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அப்படியே மனிதர்க்கும் போதிப்பவன், விண்ணரசில் மிகச் சிறியவன் எனப்படுவான். அவற்றைக் கடைப்பிடித்துப் போதிப்பவனோ, விண்ணரசில் பெரியவன் எனப்படுவான்.

20 உங்களுக்குச் சொல்லுகிறேன்: மறைநூல் அறிஞர், பரிசேயர் இவர்களின் ஒழுக்கத்தைவிட உங்கள் ஒழுக்கம் சிறந்திராவிட்டால், விண்ணரசு சேரமாட்டீர்கள்.


கோபத்தைப் பற்றிய போதனை


21 ~கொலை செய்யாதே, கொலை செய்வோன் தீர்ப்புக்குள்ளாவான்~ என்று முன்னோர்க்குச் சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.

22 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: தன் சகோதரனிடம் சினம் கொள்வோன் தீர்ப்புக்குள்ளாவான். தன் சகோதரனை ~முட்டாள்~ என்பவன், தலைமைச் சங்கத் தீர்ப்புக்குள்ளாவான். அவனை ~மதிகெட்டவனே~ என்பவனோ எரிநரகத்திற்குள்ளாவான்.

23 நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது, உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,

24 அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து.

25 "நீ உன் எதிரியோடு போகும்போது, வழியிலேயே அவனுடன் விரைவாகச் சமரசம் செய்துகொள். இல்லையேல், உன் எதிரி உன்னை நீதிபதியிடம் கையளிக்க, நீதிபதி உன்னைக் காவலனிடம் கையளிக்கக்கூடும்@ நீ சிறையில் அடைபட நேரிடும்.

26 உறுதியாகவே உனக்குச் சொல்லுகிறேன்: கடைசிக் காசை நீ கொடுத்துத் தீர்க்கும்வரை, அங்கிருந்து வெளியேறமட்டாய்.


கற்பைக் குறித்த போதனை


27 " ~ விபசாரம் செய்யாதே ~ என்று முன்னோர்களுக்குச் சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.

28 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும், ஏற்கெனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று.

29 "உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. உன் உடல் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளுள் ஒன்று அழிந்துபோவது உனக்கு நலம்.

30 உன் வலக்கை உனக்கு இடறலாயிருந்தால், அதை வெட்டி எறிந்துவிடு. உன் உடல் முழுவதும் நரகத்துக்குச் செல்வதை விட, உன் உறுப்புகளுள் ஒன்று அழிந்துபோவது உனக்கு நலம்.


விவாகரத்துப்பற்றிய போதனை


31 தன் மனைவியை விலக்கிவிடுகிறவன் எவனும் அவளுக்கு முறிவுச்சீட்டு கொடுக்கட்டும்~ என்று கூறியுள்ளது. நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்:

32 கெட்ட நடத்தைக்காக அன்றி எவெனாருவன் தன் மனைவியை விலக்கிவிடுகிறானோ, அவன் அவளை விபசாரியாகும்படி செய்கிறான். விலக்கப்பட்டவளை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.


வாக்குறுதிகளைப்பற்றிய போதனை


33 "மேலும், ~பொய்யாணை இடாதே, ஆணையிட்டு நேர்ந்துகொண்டதை ஆண்டவருக்குச் செலுத்து~ என்று முன்னோருக்குச் சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.

34 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் வேண்டாம்@ ஏனெனில், அது கடவுளின் அரியணை.

35 மண்ணுலகின் மேலும் வேண்டாம்@ ஏனெனில், அது கடவுளின் கால்மணை. யெருசலேமின் மேலும் வேண்டாம்@ ஏனெனில், அது பேரரசரின் நகரம்.

36 உன் தலையின் மேலும் ஆணையிட வேண்டாம்@ ஏனெனில், உன் தலைமயிர் ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ, கறுப்பாக்கவோ உன்னால் இயலாது.

37 உங்கள் பேச்சு, ~ஆம் என்றால், ஆம்@ இல்லை என்றால், இல்லை~ என்று இருக்கட்டும். இதற்கு மிஞ்சினதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகிறது.


பழிவாங்குதல் பற்றிய போதனை


38 "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்~ என்று சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.

39 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: தீயோனை எதிர்க்கவேண்டாம். ஆனால் யாராவது உன் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு.

40 யாராவது வழக்காடி, உன் உள்ளாடையை எடுத்துக்கொள்ள விரும்பினால், அவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.

41 யாராவது உன்னை ஒரு கல் தொலைவு வரக் கட்டாயப்படுத்தினால், இரு கல் தொலைவு அவனோடு செல்.

42 கேட்கிறவனுக்குக் கொடு@ உன்னிடம் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகம் கோணாதே.


அனைவரையும் நேசியுங்கள்


43 அயலானுக்கு அன்பு@ பகைவனுக்கு வெறுப்பு~ என்று சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.

44 நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்@ உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்.

45 அப்பொழுது வானகத்திலுள்ள உங்கள் தந்தையின் மக்களாயிருப்பீர்கள். அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார். நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்.

46 உங்களுக்கு அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்தால், உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? ஆயக்காரரும் இவ்வாறே செய்வதில்லையா?

47 உங்கள் சகோதரருக்கு மட்டும் வணக்கம் செய்வீர்களாகில், நீங்கள் என்ன பெரிய காரியம் செய்கிறீர்கள்? புறவினத்தாரும் இவ்வாறே செய்வதில்லையா?

48 ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.