தனக்கென இருந்த ஒற்றை சொந்தமான மாமா சண்முகத்தை இழந்து வருந்தும் சம்யுக்தா,செய்யாத தவறுக்காக வித் அவுட் பே லீவில் செல்லும் காவல்காரன் பிரித்வி,ஒரு சூழலில் கல்லூரிக்கு பாடம் எடுக்கச் செல்கின்றான்.யாரை வெறுத்து வேறு கல்லூரி மாறி வந்தாளோ,அவனே அங்கு பாடம் எடுக்கும்போது சம்யுக்தாவின் நிலை

. சம்யுக்தா,பிரித்வி முதல் முதலா சந்திச்ச காட்சி சூப்பர்.கொடைக்கானல்ல யுகியை காணோம்னு பிரித்வி பதட்டம் இயல்பாக இருந்தது.சதா என் சதா பற்றிய பேச்சு-அருமை.என் அம்மாவா இருந்தாலும் அவங்க முன்னாடி உன் மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம் னு சொன்ன யுகியின் காத(வ)ல்காரன் அவளது சதாவை பிரிந்து வாழ்கிறான்.அன்றில் பறவைகளாய் இருந்த காதல் பறவைகளை சைமன் என்னும் விதி சதி செய்து பிரிக்கிறது. மறுபடியும் எப்படி சேர்ந்தாங்கனு க்ரைம்,காதல் கலந்து விறுவிறுப்பும்,திருப்பங்களும் நிறைந்த கதைக்களம்.படிக்க எடுத்ததும்,முடிச்சிட்டுதான் வைச்சேன்.உறுப்பு தானம்,ஆர்கன்ஸ் திருட்டு பற்றிய குறிப்புகள் அருமையோ அருமை வதனிகா.நல்ல எழுத்துநடை.சுந்தரி ஒரு அருமையான மாமியார்.சைமனுக்கு சரியான தண்டனை.ஆசை பூசை கட்லெட் சமோசா-சோறு முக்கியம் அமைச்சரே 
.ஜகன் நல்ல மனிதர்.இப்படி ஒரு எபிலாக் சத்தியமா எதிர்பார்க்கல.கன்,ரவை,காலிபிளவர் இதெல்லாம் சிரிச்சு சிரிச்சு முடியலைகா



. அப்பறம் இப்படி ஒரு தேனிலவும் எங்கயும் படிக்கல
சூப்பர் நாவல்கா












Last edited: