• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனம் விரும்புதே உன்னை உன்னை-விமர்சனம்

Ramya(minion)

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 27, 2021
405
191
63
India
நண்பர்களான கணேசன்,முத்துராஜ்.அவர்களின் வாரிசான சம்பூர்ணா,பிரசன்னா,ஆனந்த் என இவர்களை சுற்றிச் சுழலும் கதைதான் மனம் விரும்புதே உன்னை உன்னை.தாயை இழந்த சம்பூ தன்னை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்கிறாள் அதனுடன் தந்தையின் கண்டிப்பும் சேர்ந்து கொள்கின்றது.

ஆனந்திற்கு தாயை அடுத்து மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம் என்றால் அது அவனுடைய பாப்பு.அந்த பாப்பு வின் மகிழ்ச்சி நீங்கும்படி சூழ்நிலையை உருவாக்குகிறது காலம்.ஆனந்தின் அம்மா அவன் ஆசைப்பட்ட ஃபேஷன் டிசைனிங் துறையில் புகழ் பெற வேண்டுமென விரும்பியிருந்தார்.அதில் புகழ் பெற்றானா,பாப்பு உடனான சிக்கலை தீர்த்தானா,சம்பூர்ணா தன் வட்டத்தை விடுத்து வெளிவந்தாளா,தன்னைச் சுற்றி வரும் பச்சோந்தியான லிண்டாவின் நோக்கத்தை அறிந்தானானு உணர்வு பூர்வமாக தந்திருக்காங்க ஜான்சி மா.இவங்க கதைகள்ல இதுதான் நான் வாசிச்ச பர்ஸ்ட் கதை.

ரொம்ப காக்க வைக்காம வீடியோ கால் விஷயத்தை ரிவீயல் செய்தது அருமை.பீட்டர் மன்னன்,பாப்பி,தம்பி பையா என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட தங்க கம்பி பிரசன்னாவை ரொம்பவே பிடித்திருந்தது ❣️❣️

விகாஷ் லிண்டா வின் எண்ணத்தை கரெக்டா கண்டுபிடிச்சுட்டான்.மத்தவங்கள கரெக்டா கெஸ் பண்ண விகாஷ் கதாபாத்திரம் என்னை வெகுவாக ஈர்த்தது❣️❣️❣️.விகாஷ் முத்துராஜையும் சரியா கெஸ் பண்ணிட்டான்.
மராத்தி கலாச்சாரம்,ஃபேஷன் டிசைனிங் பத்தி சொன்ன நோட்ஸ் சூப்பர்.

அம்மாவை நினைச்சு அழுதது,அக்கா தம்பி பிணைப்பு,நண்பர்கள் காட்டிய அக்கறை,ஆனந்த் பாப்பு காதல்னு சிறு சிறு உணர்வுகளையும் வெளிப்படுத்துவதை அழகா எழுதியிருக்காங்க ஆசிரியர்.

பாப்பு,அவள் மாமாவை வரவேற்று பேசியபோது ஆனந்தின் கோவம்,பொறாமை பிடித்தது.
ஆனந்த் சொன்ன உலகத்திலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச முகம் மிகவும் பிடித்தது.பாப்பு அவனோட கடந்தகாலம்னு சில கசடை நீக்கியது சூப்பர்.

அத்தானிடம் சிறுவயதில் துளிர்த்த நேசம் அவளுடையது.

வயதை ஒரு பொருட்டாய் எண்ணாது அவளுடைய காதல்.

ஒழுக்கம் தவறி இருப்பினும் மன்னிக்கும் அவளின் அன்பு.

அத்தானின் எண்ணம் ஒன்றே போதும் எவ்வளவு கடினமான சூழ்நிலையையும் கடந்துவருவாள்.

அவளின் அன்பும் காதலுமே மனதில் நிரம்பியது.

அன்புடன்
#ரம்யா