தொடர் _1
பிரபலமான தனியார் கல்லூரி.
"டேய் விசு போரடிக்குதுடா பேசாம கிளாஸைக் கட்டடிச்சுட்டு சினிமா போலாமா ?"
"எந்தக் காலத்துல இருக்க மஞ்சு ?"
"ஏன்டா அதானே காலங்காலமாக பண்றது ?"
"ஐயே ஆளையும் முகறையும் பாரு
புது டிரெண்டா யோசிக்க மாட்டியா ?"
"அட பேமானி உன்கிட்ட கேட்டேன் பாரு
டேய் மச்சான் ரவி நீ வர்றியா டா"
"அவன் சொல்றதுதான்டி சரி ஒரே சினிமா பாத்து போரு எங்க பார்த்தாலும் பேயி பிசாசு ரேப் கொலை கொள்ளைனு படம் எடுக்குறானுக"
"அப்புறம் சாரு பெரிய டைரக்டரு நீங்க என்ன மாதிரி படம் எடுப்பீங்க ?"
"லவ் கான்செப்ட்ல ஜாலியா ஒரு பேமிலி படம் கொடுப்பேன்"
"பாருடா பீட்டரை.."
"ஏய் உண்மையைத் தான் சொல்றேன் டி "
"அடச்சே வாயை மூடுங்க பக்கிகளா எப்போ பாரு சினிமா அதுயிதுனு "
என்றபடி முறைத்தாள் சுலோச்சனா
"சரி இப்ப என்ன தான் பண்றதுடி ?"
"பேசாம எனக்கு தெரிஞ்ச ஒருத்தரோட கெஸ்ட்ஹவுஸ் ரொம்ப நாளா பூட்டிக்கிடக்கு" என்றாள் வினோ
"ஓ பேய் பங்களாவா ?"
"ச்சீ வாயை மூடு அந்த அங்கிள் மலேசியால இருக்கார்
எங்களைத்தான் பாத்துக்கச்சொல்லி இருக்கார்
பேசாம அங்க போய்...."
"அங்கபோய்....."என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான் .
"ச்சீ ..ஆசையைப் பாரு ஒன்லி ட்ரிங்க்ஸ் அன்ட் டான்ஸ் "
"அவ்வளவுதானா ?"
"டேய் வரவே வேணாம் நீ"
"ஐயோ நான் நல்லபையனா இருக்கேன் விட்டுப்போயிடாதீங்கடா" என்று கெஞ்சினான்
"அப்போ மூடிட்டு இரு.
சரி எப்போ கிளம்பலாம் "
"நான் இப்பவே ரெடி "
"ஐயே அலையாதே "
"அடுத்த வாரம் போகலாம்" என்றாள் வினோ.
"ஐ ஜாலி" என்று துள்ளிக்குதித்தான்
ரவி .
"அடங்கு அடங்கு சயின்ஸ் வருது" என்று காதைக் கடித்தாள் சுலோச்சனா
"என்ன ஒரே கொண்டாட்டமா இருக்கு படிக்கிறதைத் தவிர எல்லா ஆக்டிவிட்டியும் இருக்கு
சேர்ந்துருக்குதுக பாரு" என்றபடி தனது வேலையை ஆரம்பித்தார் சயின்ஸ் டிபார்ட்மெண்ட் புரோபசஸர் கதிர்வேல்
"இப்ப இவரு நடத்துற பாடத்தில தான் நாங்க பாஸாக போறோம் தலைவலி எதாவது திட்டலனா பொழுது போகாது போல " என்று வினோ கிசுகிசுக்க ரவி சிரித்து வைத்தான்
"என்னடா சிரிப்பு எழுந்திரு படிப்புல சீரோ பேச்சு மட்டும் ஹீரோ மாதிரி
சரி நான் என்ன கதையா சொல்றேன்
இதுக்கு ஆன்ஸ் சொல்லு "
"சார் மனித உடம்பை வரைச்சு போட்டு
ஆன்ஸ்சர் பண்ணுனா என்ன சொல்ல இதென்ன சம்ஸ்ஸா ?"
என்று நக்கலடிக்க ..
"அந்த வெங்காயம் எங்களுக்கும் தெரியும் இதுல உள்ள பாகத்தைப் சொல்லு "
"ஓ அதுவா சார் ஆணுறுப்பு சார்" என்றான்
"நீ என்ன இரண்டாம் வகுப்பு ஸ்டுடன்டா காலேஜ்ல இருக்க.. அதுக்கு சயின்ஸ் நேம் சொல்லுனு" சொன்னேன் .
திக்கித்திணறிச் சொல்லி முடிக்க ...
"இந்த லட்சணத்துல பேச்சு மட்டும் கேளு ..உட்காரு " என்றார் சயின்ஸ்
முனகியபடியே உட்கார்ந்தான் வினோ மற்றவர்கள் தங்களை எழுப்பி விடுவாரோ என்று நினைத்து பாடத்தைக் கவனிப்பது போல் நடிக்க..
"மூஞ்சைப்பாரு அப்படியே படிப்பாளிக மாதிரி உங்க குரூப்பைப்பத்தித் தெரியும் ஓவரா சீன் போடாதீங்க. ஒழுங்கா
பாடத்தைக் கவனிங்க" என்று ஒரு அதட்டல்போட்டு விட்டு மீண்டும் பாடத்தை நடத்தலானார்
அன்று முதலே பங்களா செல்வதையே எல்லோரும் யோசிக்கத் தொடங்கினர்.
************
ஒரு வாரத்திற்கு பிறகு .
"டேய் ரவி எத்தனை மணிக்கு வர்ற ?"
"விசுவைக் கூப்பிட்டுக் கொண்டு சுலோச்சனா வீட்டுக்குப் போயிட்டு அப்படியே சார்ப்பா 8 மணிக்கு அங்க நிப்போம்."
"மஞ்சுவை யாருடா கூப்பிட்டு வர்றது அவளே வர்றேன்னு சொல்லிட்டா நீ அவளுக்கு லொக்கேஷன் சேர் பண்ணிடு."
"டேய் வந்தா திரும்பிப் போக முடியாது "
"என்னடி சொல்ற ?"
"ச்சீ பொறுமையா கேளுடா
மறுபடி அது வாங்கப் போறேன் இது வாங்க போறேன்னு டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது "
"அதுசரி இப்படி நடக்கும்னு தான் பத்து பீர் முன்னாடியே வாங்கி வச்சிட்டேன்"
"அடப்பாவி அப்பாவி மாதிரியே இருந்த ? இதெல்லாம் சரியா செய்வீயே"
"ஏய் ரொம்ப புகழாதடி "
"ஐயோ பாருடா சாருக்கு வெட்கத்தை
இங்க தானே வருவ வா வா வச்சிக்கறேன்"
"ஐயோ நான் தண்ணியடிச்சிட்டு ஆட்டம் போடத்தான் வர்றேன் நீ வச்சிக்க நான் செட் ஆக மாட்டேன்" என்றான் நக்கலாக.
"ஆசையைப்பாரு முதல்ல போனை வச்சிட்டு கிளம்புற வேலையைப் பாரு" என்று ஃபோனைத் துண்டித்தாள்
ரவி விசுவையும் சுலோச்சனாவையும் அழைத்துக் கொண்டு வினோ சொன்ன பங்களாவிற்கு போனான்
அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.