• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மரண விடுதி _2

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
40
57
18
Chinna Rettaiyurani Ramanathapuram
☠️☠️☠️☠️மரண விடுதி ☠️☠️☠️☠️☠️

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தொடர் _2

"டேய் விக்கி இங்க வா "

"என்னப்பா "

"நாளைமறுநாள் மலேசியாவில் இருந்து மாணிக்கம் அண்ணா வர்றாரு ஒருவாரம் தங்கப்போறாராம் வீட்டை கொஞ்சம் கிளீன்பண்ணி வச்சு தங்கறதுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வைக்கணும் இன்னிக்கு வேலை இருக்கா உனக்கு ?"

"இல்லப்பா "

"சரி கிளம்பு இந்த வினோ எங்க போனாள் ஏதாவது வேலை இருக்குற போது அங்க போறேன் இங்க போறேன்னு ஓடிப்போயிடுறா ?"

"ஏதோ காலேஜ்ல வேலையிருக்குனு போயிருக்கா ப்பா
அவ எதுக்கு அவ இருந்தா ஒருவேளையும் நடக்காது நீங்க கிளம்புங்க நான் வேலைக்கு இரண்டு ஆட்களைக் கூட்டிக்கொண்டு வர்றேன்"

"அதுவும் சரிதான் அங்கங்க இருக்கிற பொருள்களை அடுக்கணும் தொடைக்கணும் நேரம்வேற இல்லை "

"ஆமாப்பா ஆளு வந்தால்தான் சீக்கிரம் முடியும் "

"சரி நீ போய்க் கூட்டி வா நான் கிளம்பி அங்க வந்துடுறேன்" என்றதும் விக்கி கிளம்பிப் போனான்.

"ஏய் சுமதி நாங்க ஹெஸ்ட் ஹவுஸ் போறோம் மதியம் வரமாட்டோம் நீ சமையல் பண்ண வேண்டாம் சாப்பாடு கொடுத்துவிடுறேன் நீ சாப்பிடு சரியா " என்றார் வினோவின் தந்தை முருகன்

"சரிங்க சீக்கிரம் முடிச்சிட்டு வாங்க "

ம்ம் என்று தலையாட்டி விட்டுப் புறப்பட்டார்

*********

முருகன் ஹெஸ்ட் ஹவுஸ் வரவும் விக்கி ஆட்களோடு வந்து சேர்ந்தான்

இது தெரியாமல் வினோ தன் நண்பர்களோடு வந்திறங்கிப்பார்த்து அதிர்ச்சியானாள்.

வினோவை அவள் நண்பர்களோடு பார்த்த முருகன்

"என்னம்மா இங்க ? காலேஜ்ல ஏதோ வேலைன்னு போனதாகச் சொன்னான் இங்க வந்து நிற்கிற ? இதான் உன் காலேஜா ?
இப்படித்தான் பொய் சொல்லிட்டு ஊரு சுத்துறியா ?"

அவளுக்கு என்ன சொல்வதெனப் புரியாமல் விழித்துக்கொண்டு நிற்க...

"அங்கிள் நாங்க இங்க வந்தது காலேஜ் புரோசக்ட்க்காகத்தான் ஏன் அவளைத் திட்டுறீங்க ?" என்று குறுக்கிட்டாள் மஞ்சு.

"எது இப்படி காலேஜுனு சொல்லிட்டு வெளியே போறது உங்களுக்கு புரோசக்ட்டா ?"

"ஐயோ அங்கிள் நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க ? வாழ்வியல் சம்பந்தமாகவும் சுற்றுசூழல் சம்பந்தமாகவும் உபயோகப்படுத்தாத வீட்டை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு எப்படி வைப்பதென ஒரு வேலை கொடுத்து இருக்காங்க
அதுக்கு இந்த இடத்தைத் தேர்வு செஞ்சோம்"

"ஓ அப்படியா நல்லதா போச்சு நான் கூட இதைக் கிளீன் பண்ண ஆளுகிடைக்காதுனு நினைச்சேன் வாங்க வாங்க "என்றார்

வினோவோ பிள்ளையார் பிடிக்கக் குரங்காயிடுச்சே என்று மனதுக்குள் புலம்பினாள்

"ஏய் எங்களை வச்சு வீடு கிளீன் பண்ண பிளான் போட்டியா ?" என்று முனகினான் ரவி

"அடச்சீ அவளே மாட்டிக்கிட்டானு என்ன பண்றதுன்னு புரியாம நிக்குறா ?"

"அவளாடா சொன்னா மஞ்சு சொன்னதுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் வாயை மூடிட்டு வாடா" என்று தட்டிவிட்டாள் சுலோச்சனா

"போங்கடி ஜாலியா இருக்கலாம்னு வந்தா இப்படி பழி வாங்கிட்டீங்களேடி"

"வாயைமூடு இப்ப என்ன உனக்க்கு சரக்கடிக்கணும் அதானே ""

"ஆமா "

"அதான் வாங்கி வச்சிருக்கதானே பின்ன என்ன ?"

"அதைக் குடிக்க வேண்டாமா ? "

"குடி"

"அதையெப்படி குடிக்க முடியும் வினோ அண்ணன் அப்பா இருக்கும் போது ?"

"உங்களுக்கு சொல்லவா வேணும் காலேஜ்குள்ளேயே சரக்கடிக்கிறவங்க நீங்க
இவ்வளவு பெரிய வீட்டில் பண்ணவா முடியாது " என்றாள் சுலோ

*********

"என்ன தம்பி திருதிருனு முழிக்கிறீங்க "

"வாங்க எங்களோடு ஐக்கியமாயிடுங்க
சாப்பாடு தண்ணி எல்லாம் நான் வர வைக்கிறேன் நீங்கள் கவலைப்படாதீங்க "

"ஐயோ அங்கிள் நீங்க சொன்ன தண்ணி ?"

"என்னப்பா தெரியாத மாதிரி கேட்குறீங்க
இந்த வயசுல அதெல்லாம் சகஜம் தான் பாத்துக்கலாம் வாங்க" என்றதும்
ஐ ஜாலி என்று துள்ளினான் விசு.

"எல்லோரும் சிக்கன் சாப்பிடுவீங்கதானே.?"

ம்ம் என்று கோரஸாகத் தலையாட்டினார்கள்

***

"சரி விக்கி பசங்களைக் கூப்பிட்டுப்போய் என்ன ஈசியான வேலையிருக்கோ கொடு .கஷ்டமான வேலையை வேலை ஆட்கள்கிட்ட கொடு"

சரிப்பா என்று ரவியையும் விசுவையும் அழைத்துக்கொண்டு உள்ளே போனான்

"சரி வாங்கடி நாமளும் வேற வேலையைப் பார்ப்போம்" என்று உள்ளே அழைத்துப் போனாள் வினோ

"ஏய் இன்னிக்கு மஞ்சு மட்டும் அப்படி சொல்லலனா என்ன ஆகிருப்போம் "

"ஏன் டி உங்க அப்பாவும் அண்ணனும் இங்க என்ன பண்றாங்க ? அவங்க இங்க வருவாங்கனு தெரிஞ்சிருந்தா வேற இடத்துக்கு போயிருக்கலாம் ல"

"அட நீ வேறடி அவளே அவங்க ஏன் வந்தாங்கனு தெரியாம முழிச்சானுதான் நான் அப்படி பேச்சை மாத்தினேன் "

"அவளா இங்க வந்து கெட்ட பெயரு வாங்க லூசா என்ன ?"

"நிஜமா எனக்கு தெரியாது நம்புங்கடி"

"நான் நம்புறேன் வினோ
விடு அடுத்து எப்படி நாம சந்தோசமா இருப்பது என்று யோசிப்போம் "

ஆமா அதுக்கு வழி சொல்லுங்கடி இப்ப நாம பின்வாங்கினா நிச்சயமாக மாட்டிப்போம் இன்னிக்கு மட்டும்தானே வேலை செய்யுற மாதிரி நடிப்போம்" என்றதும் இருவரும் தலையாட்டினார்கள்

"சரி எப்படியாவது இன்னிக்கு நைட்டுகுள்ள போயிடணும்."

"சுலோ இந்த வீடு செம்மையா இருக்குல"

"ஆமா மஞ்சு "

"இப்படியொரு வீட்டில் ஒருநாள் தங்குறதுகூட பெரிசு தான்
நான் இன்னிக்கு இங்க தங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் " என்றாள் மஞ்சு

"ஏன் டி அவ அப்பா இதுக்கு சம்மதிப்பாரா ?

"சம்மதிக்காட்டியும் நான் பிக்ஸ் பண்ணிட்டேன் "

"என்னமோ போ பிரச்சனை வராம இருந்தா சரி தான் ஏற்கனவே பசங்க ஒரு மாதிரி நைட்ல தங்கி ஏதாவது ஆச்சுன்னா "

"ஏய் அவங்க வாய் தாண்டி அவர்களுக்கு ஒண்ணுமே பண்ண முடியாது "

"உனக்கு எப்படி டி தெரியும் ஏதும் டெஸ்ட் டிரைவ் பாத்தியா ?"

"அடச்சீ இப்ப பாரு அதே நினைப்புதான் பாவம்டி அவங்க பச்ச மண்ணுங்க "

"நீதான் டி மெச்சிக்கனும்
விட்டா சந்துல சிந்து பாடிடுவாங்க "

"ஏன்டி இப்படி பேசுற ?"

"பின்ன என்ன என்னமோ அவங்களுக்கு சர்டிபிகேட் கொடுக்குற "

"ஏய் நாம என்ன வேலைக்கு வந்தோம் என்ன வேலை பண்ணிட்டு இருக்கோம் முதல்ல வேலைய பாருங்கடி "

"ஏண்டி சொல்ல மாட்ட இங்க வந்து மாட்டிக்கிட்டது நாங்க இப்ப நீ இப்படி சொல்றியா ?"

"பின்ன எனக்கு மட்டும் ஆசையாடி நல்லவேளையா மஞ்சு என்ன காப்பாற்றி விட்டாள்"

"இங்க இருக்கக்கூடிய பொருட்களை துடைத்து வைப்போம் "

"ஆமா ஏதாவது வேலை செஞ்சா தான் அவருக்கு நம்ம மேல டவுட் வராது "

"மெதுவாவே பாருங்க "

மூவரும் அங்கிருந்து விளக்குகள் பூஜை பொருட்கள் அழகுப் பொருட்களைத் துடைத்து வைத்தார்கள்

ரவியும் விசுவம் விக்கிவுடன் சேர்ந்து தேவையற்ற பொருட்களைக் கட்டி ஸ்டோர் ரூமில் போட்டார்கள்

"என்ன இரண்டு பேரும் நினைக்கிறீங்களா ஏன்டா வந்தோம்னு ?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா "

"பரவால்ல எதா இருந்தாலும் நேரடியா சொல்லுங்க நான் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன் "

"இப்ப சரக்கு அடிச்சா நல்லா இருக்குன்னு தோணுமே "

ரவி வழிந்து கொண்டே ஆமண்ணா என்றான்

"டேய் அவர்கிட்ட போய் கேக்குற?" என்று விசு தடுத்தான்

"சரக்கடிக்கிறதுலே ஏதுப்பா பெரிய ஆளு சின்ன ஆளு இப்ப என்ன சரக்கடிக்கணும் அவ்வளவு நானே இரு வாங்கிவரச்சொல்றேன்"

"உனக்கு என்ன வேண்டும் ?"

"அண்...ணே. "

"ஏன்பா தயக்கம் சும்மா சொல்லு"

"அது இல்ல அண்ணா
நாங்க..."

"நீங்க போய் வாங்கிவரப்போறீங்களா ? ச்சே ச்சே அதெல்லாம் வேணாம் நம்ம ஆளுங்க வாங்கி வருவாங்க நீங்க உங்களுக்கு பிடிச்ச பிராண்டை சொல்லுங்க "

"எங்களுக்கு பீர்தான் பிடிக்கும் "

"சரி எத்தனை சொல்லட்டும் "

"அதெல்லாம் வேண்டாம்ணா "

"அட என்னப்பா இவ்வளவு சொல்லியும் தயங்குறீங்க ?"

"அண்ணா ஏற்கனவே நாங்க வாங்கிட்டு வந்துட்டோம் "

"அடப்பாவிங்களா அப்போ பிரிப்பேரா தான் வந்திருக்கீங்களா ? இது தெரியாமல் உங்க கூட பொண்ணுங்க வந்திருக்காங்க
என்ன நினைப்புல வந்திருப்பீங்க நீங்க இருங்க உங்களை " என்று கோபமாகச் சொல்ல..
இருவரும் அதிர்ந்தனர்

"அண்ணா நாங்கள் அந்தமாதிரி பசங்க இல்லண்ணா
வெயிலுக்கு நல்லதுன்னு தான் வாங்கி வந்தோம் அதுவும் அந்த பொண்ணுகளுக்கு தெரியும்"

"அப்போ எல்லோரும் சேர்ந்து தண்ணியடிக்கத்தான் வந்து இருக்கீங்க இதுல என் தங்கச்சியை வேற ?"

"ஐயோ அண்ணா உங்க தங்கச்சி சொல்லித்தான் வந்தோம் "

"அப்போ என் தங்கச்சியையே குறைசொல்லுறியா ?" என்று கையை ஓங்கினான்

"அண்ணா அண்ணா அவன் தெரியாமல் உளறுறான்ண்ணா "

"ஆக்சுவலா நாங்க புரொசக்ட் விசயமாத்தான் வந்தோம் அந்த பொண்ணுகளுக்கு தெரியாது நாங்க பீர் வாங்கி வந்தது ."

"வினோ ஹெல்ப்க்காகத்தான் இங்க கூட்டிவந்தா "

"ம்ம் என்று முறைத்தபடி கேட்டீயா உன்மேல் தப்பு வச்சிட்டு பொண்ணுக மேல பழி போடுற உன்னை" என்று அருகில் வர விசு விக்கியின் காலில் விழுந்தான்

என்னை மன்னிச்சிடுங்கனு உடனே ரவியும் விழுந்தான் இப்போது விக்கி கெக்களக்கமிட்டான்
இது புரியாமல் இருவரும் விழித்தனர்

"என்னப்பா பயந்துட்டீங்களா ? நான் சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன்
நீங்கள் மட்டும்தான் விளையாடுவீங்களா ? நானும் விளையாடிப்பார்ப்போம்னு "

இருவரும் வழிந்த வியர்வையைப் துடைத்தபடி கொஞ்ச நேரத்தில் எங்க ஈரக்ககுலையே நடுங்கிடுச்சுண்ணா "

"இவ்வளவு கோழைகளா இருக்கீங்களே யாராவது மிரட்டினா பொண்ணுங்களை அப்படியே விட்டு விட்டுத் தொபீர்னு கால்ல விழுவீங்களா ?"

"ஐயோ வேற யாராவது இருந்தா ?"

"கிழிச்சிருப்பியோ அடச்சீ வாயை மூடு எது வந்தாலும் எதிர்த்து நிக்கணும் இப்படி கால்ல விழக்கூடாது சரியா ?"

"சரிண்ணா "

"சரி பேசிட்டே இருக்காத பீரை எடு குடிப்போம்" என்று விக்கி அவர்கள் கொண்ட வந்த பீரில் ஒன்றை எடுத்து கடகடவென குடித்து முடித்தான்

இருவரும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்

"என்ன அப்படி பாக்குறீங்க நீங்களூம் குடிங்க " என்று எடுத்து நீட்ட இருவரும் வாங்கி கப்பென்று இழுத்தனர்

"சூப்பர் ,, இப்ப சாப்பாடு வந்திடும் இருங்க பாத்துட்டு வாரேன்" என்று எழுந்து போனான் விக்கி அவர்கள் இருந்த அறை தானாக மூடிக்கொண்டது

எழுத்தாளர் நாகா