• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர்வன 1

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 1

"ஏன் டா இப்படி இருக்கீங்க? தப்பு பண்ணிருக்கான்.. அதை கேளுங்கன்னு சொன்னா கேட்க மாட்டேன்னு நீயும் சொல்ற.. என்ன விஷயம்னு கேட்காமலே என்னை கூல் பன்றான் அமெரிக்கால இருந்துட்டு இன்னொருத்தன்.. இதுக்கு தான் என்னையும் பார்ட்னரா சேர்த்திங்களா?"

கோபத்தில் அதிகமாய் பேசிக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

"அவன் வரட்டுமே டா.. என்னனு கேட்காம எப்படி பேச சொல்ற? இதுவரை இப்படி நடந்ததில்ல தான?" என்றான் கவின்.

அதையெல்லாம் காதில் வாங்கவில்லை நிரஞ்சன். அவனை எதாவது செய்திட வேண்டும் என்ற வெறி மட்டுமே நிரஞ்சனிடம்.

"லுக்! இதை நானே ஹாண்ட்ல் பண்ணிக்குறேன்.. நீ எதுவும் பேச வேண்டாம்" நிரஞ்சன் சொல்லிக் கொண்டிருக்க,

"என்ன ஹாண்ட்ல் பண்ண போற நிரஞ்சன்?" என்று வந்தான் நெடுஞ்செழியன்.

கவின், நெடுஞ்செழியன், நிரஞ்சன், பிரேம் நால்வரும் ஒரே கல்லூரியில் படித்து முடித்த நண்பர்கள்.

நெடுஞ்செழியனின் அழைப்பின் பெயரில் கவின், பிரேம் இருவரும் சேர்ந்து மூவராய் ஆரம்பித்தது தான் ஸ்டார் உணவகம்.

நிரஞ்சன் தானாய் அதில் இணைந்து கொண்டவன். அவனே வந்து கேட்ட பொழுது மறுக்காமல் ஏற்றனர் நண்பர்கள்.

கல்லூரி முதலே நெடுஞ்செழியனைக் கண்டால் நிரஞ்சனிற்கு ஆகாது.. போட்டியுடன் பொறாமையும் உடையவன். ஆனாலும் அவன் கேட்ட பொழுது மறுக்காமல் விட்டிருக்க, சிறுசிறு பிரச்சனைகளும் அவ்வப்போது எழாமல் இல்லை ஆரம்பித்த இந்த இரண்டு வருடங்களில்.

நெடுஞ்செழியன் தனது தந்தை நடத்தி வரும் துணிகள் சார்ந்த எக்ஸ்போர்ட் கம்பெனியை கவனித்துக் கொண்டு தன் விருப்பத்திற்கு என ஆரம்பித்தது தான் ரெஸ்டாரண்ட்.

பிரேம் அமெரிக்காவில் பணியில் இருந்து கொண்டு செழியனுடனும் இணைந்திருக்க, கவின் தான் மொத்தமாய் கவனித்துக் கொண்டான் உணவகத்தை.

தரத்திற்கும் உழைப்பிற்கும் ஏற்ற பலனாய் ஒரே வருடத்தில் இரண்டாம் கிளையையும் ஆரம்பித்திருந்தனர்.

நிரஞ்சன் எப்போதாவது வருபவன் பெரிதாய் ஆர்வம் காட்டாமல் வேண்டுமென்றே எதையாவது கேட்டு வைப்பான். செழியன் கவனித்தாலும் பெரிதுபடுத்தியதில்லை.

இன்றும் அதைப் போல முந்தையை நாள் கணக்கில் குளருபடி இருப்பதாக கூறி கவினிடம் கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

"என்ன ஹாண்ட்ல் பண்ண போற?" என்ற செழியனின் கேள்வியில் நிரஞ்சனுடன் கவினும் திரும்பிப் பார்க்க, செழியன் வந்து ஓய்வாய் இருக்கையில் அமர்ந்தான்.

"கம்பெனில இருந்து வர்றியா டா? டையார்ட்டா தெரியுற?" கவின் கேட்க,

"ஆமா டா.. கேரளா லோட் ஒன்னு நைட் ஸ்ட்ரக் ஆகிட்டு.. அதை முடிச்சுட்டு வர லேட்.. என்ன ப்ரோப்லேம்?" என்ற செழியன்,

"நீ ஏன் டா நேத்து லேட் நைட் வந்து ரெஸ்டாரண்ட் ஓப்பன் பண்ணின?" என்ற நேரடி கேள்வியில் நிரஞ்சன் திட்டுக்கிட,

"வாட்? நைட் நீ வந்தியா?" என்றான் கவினும் நிரஞ்சனிடம்.

"இல்ல டா அப்பாவை ஏர்போர்ட்ல விட்டுட்டு வந்தேன்.. இந்த வழியா வந்ததால சும்மா ஓபன் பண்ணினேன்" என்ற பதிலை இருவரும் நம்பாமல் பார்த்தனர்.

ஆனால் அந்த கேள்வியிலேயே நிரஞ்சனின் கோபமும் மறைந்து ஒருவித பதட்டமும் வந்திருந்தது.

"சரி என்னவோ பேசிட்டு இருந்திங்களே? என்ன? எதனா ப்ரோப்லமா?" செழியன் கேட்க, நிரஞ்சன் அமைதியாய் நின்றான்.

"ஒன்னும் இல்ல டா.. நேத்தைய ப்ரோபிட் சரியா டால்லி ஆகாம இருக்கு.. அதான்.." என்றான் கவின் எதையும் காட்டிக் கொள்ளாமல்.

நேற்று கவின் விடுமுறை. செழியன் தான் காலை ஒரு கிளையிலும் மாலை மற்றொன்றிலும் என மேற்பார்வை பார்த்திருந்தான்.

"ஓஹ்!" என்ற செழியன் கம்ப்யூட்டரில் திரும்பி எதையோ தேட,

"நான் பாத்துக்குறேன் டா.. நீ வேனா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு.." என்று கூற, நிரஞ்சனும் பின்பாட்டு பாடினான்.

செழியன் வரும்வரை அவன் ஆடிய ஆட்டத்தை பார்த்த கவின் இப்பொழுது கேள்வியாய் முகம் சுருக்க, செழியன் தான் நேற்று முடித்து வைத்திருந்த டாக்குமெண்ட்டை கம்ப்யூட்டரில் எடுத்து இருவரும் பார்க்க திருப்பினான்.

"ஆனா நான் பார்த்ததுல இது சரியா வர்லயே டா.." கவின் கேட்டு,

"ஆமா நேத்து நிரஞ்சன் வந்தது உனக்கு எப்படி தெரியும்?" என்று செழியனிடம் கேட்க,

"அதான் சொன்னேனே! கேரளா லோட் ப்ரோப்லேம்.. நைட் கம்பெனிக்கு போகும்போது பார்த்தேன்.." என்று செழியன் கூற,

"அப்ப இன்னும் நீ வீட்டுக்கே போலையா நைட்லேர்ந்து?" என்றான் அதிர்ச்சியாய் கவின்.

"ம்ம்ம்.. போனும்.." என்ற செழியன்,

"என்கிட்ட கொடுத்த வேலையில நான் எப்பவும் சரியா தான் இருப்பேன்.. அதை தப்பு சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட கேட்டுட்றது பெட்டர்.. இதுல என்னால காம்ப்ரமைஸ் பண்ண முடியாது" என்றவன் குரல் அழுத்தமாய் வந்தது.

இருவருக்கும் இப்போது புரிந்தது நிரஞ்சன் செய்த வேலை. அவன் தந்தைக்கு இருக்கும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் நிரஞ்சன் இங்கே இவர்களுடன் சேர வேண்டிய அவசியமே இல்லை.

இதென்ன வேண்டாத வேலை அதுவும் சிறுபிள்ளை தனமாக என்று தான் தோன்றியது கவின் செழியன் இருவருக்கும்.

"சரி டா விடு.. கல்யாண மாப்பிள்ளை இவ்வளவு டென்ஷன் ஆகலாமா? ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சுட்டு இப்படி கம்பெனி, ரெஸ்டாரண்ட்னு சுத்திட்டு இருக்கியே! வர்றவ பாவம் டா" என்றான் கிண்டலாய் கவின்.

அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து அவளின் நினைவில் இதழ் விரிய, மேஜையில் கைவைத்து தாளமிட்ட செழியன் அமர்ந்திருந்த நிலையில் கவின் முகத்தில் குறும்பு புன்னகை என்றால் நிரஞ்சன் முகத்தில் அப்பட்டமான எரிச்சல்.

"சரி டா நான் கிளம்புறேன்.. அப்பா ஊர்ல இல்ல.. நான் தான் ஆபீஸ் பார்க்கணும்" என்ற நிரஞ்சன் இருவரின் தலையசைப்பிற்கே விரைந்து செல்ல,

"இவனுக்கு என்ன தான் டா பிரச்சனை? அவனா வந்து சேர்ந்தான்.. அவனா குடைச்சல் கொடுக்குறான்.. பணம் குடுத்ததோட சரி.. எதுக்குன்னே தெரியாம பார்ட்னரா இருக்கான்.. உன்னை எதாவது தப்பு சொல்லணும்னு துடிக்குறான்.. இதுல கூட இருந்தே நல்லவனாட்டம் நடிப்பு வேற.." கவின் கோபமாய் கூற,

"என் முகத்துக்கு நேரா அவன் பேசட்டும் அப்புறம் பாத்துக்குறேன்" என்றான் செழியனும் நிரஞ்சனின் நடவடிக்கைகள் சமீபமாய் அதிகம் சரி இல்லை என்பதை உணர்ந்து.

"உனக்கு கல்யாணம்னு தெரிஞ்சதுல இருந்து இன்னும் ஸ்டொமக் பர்ன் தான் அவனுக்கு" என்று சொல்லி சிரித்த கவின்,

"இன்விடேஷன் எல்லாம் குடுத்தாச்சா டா?" என்று கேட்க,

"அல்மோஸ்ட் டா.. நீ சொல்லு.. கல்யாண வேலை எல்லாம் மேடம் வீட்டுல எப்படி போகுது?" என்று செழியன் கேட்க,

"கல்யாண வேலை எல்லாம் நல்லா தான் போகுது.. கல்யாண பொண்ணு தான் இன்னும் பிரச்சனை பண்ணுது" என்றான் கவினும்.

"இன்னும் அதே பாட்டு தானா?" செழியன் சிரிப்புடன் கேட்க,

"இதெல்லாம் டூ மச் டா.. காலேஜ் முடிச்சு நிறைய கனவோட இருந்த பொண்ணை என்னை வச்சு கல்யாணம் வரை கொண்டு வந்துட்ட.. இனி தான் இருக்கு.. அவளுக்கு மட்டும் விஷயம் தெரியட்டும் அப்புறம் இருக்கு உனக்கு" என்றான் கவின்.

"ஏன் டா.. அவளுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்றியே.. எனக்கு எவ்வளவு கனவு இருக்கும்?" என்றான் செழியனும் விடாமல்.

"உன் கனவு தான? நல்லா தெரியும் டா நல்லவனே" என்று கவின் கூறவும் அலைபேசி அழைப்பு பிரேமிடம் இருந்து செழியனுக்கு.

மேஜை மேல் இருந்த மொபைலைப் பார்த்த செழியன் கவினைப் பார்க்க, அவனும் முறைத்துவிட்டு அட்டன் செய்தான்

"டேய்! நீ இன்னுமா கிளம்பல?.. உன்னை தெரிஞ்சு தான் இவன் உன்கிட்ட பேச மாட்றான்" என ப்ரேமை கவின் திட்ட,

"ரொம்ப பன்றான் டா.. லீவ் கான்செல் ஆகி, அதை அப்ளை பண்ணி என் கஷ்டம் எனக்கு.." என பிரேம் கூற,

"அவன் கல்யாணம்னு நாள் குறிச்சு உனக்கு அதை சொல்லினு மாசம் ஒன்னாகுது.. இன்னும் பச்ச புள்ள மாதிரி ரீசன் சொல்ற.. சீக்கிரம் வா டா" என்றான் கடல் தாண்டி இருப்பவனை காணும் ஆவலில்.

"வந்துடுறேன் டா.." என்றவனுக்கு இன்னும் இரண்டு மணி நேரத்தில் விமானம். அதை கூறவில்லை. நேரில் சென்று அதிர்ச்சி கொடுக்கலாம் என்ற எண்ணம்.

"புது மாப்பிள்ளைக்கு சீப்பு வேணுமான்னு கேளு டா.." பிரேம் கேட்க,

"சீப்பு வாங்கவா உன்னை அமெரிக்கா அனுப்பினோம்.." என்றவன்,

"அவனுக்கு வாங்கறியோ இல்லையோ எனக்கு 'அது' வேணும்" என்று கூற, செழியன் கவினை முறைக்க,

"அவன் முன்ன சொல்லி தொலையாத டா.. அவனும் குடிக்கமாட்டான் நம்மையும் குடிக்க வேண்டாம்னு கெடுப்பான்" என்றான் பிரேமும் நண்பனை அறிந்து.

நண்பர்களுடன் செழியன் மணநாளை எதிர்பார்த்து இருக்க, அவனை மணந்து சரிபாதி ஆக வேண்டியவளோ இன்னும் செழியனை வசைபாடிக் கொண்டு தான் இருந்தாள் தன் அண்ணனிடம்.

"இன்னும் நீ இப்படி பேசுறது சரி இல்ல மலர்.. இன்னும் ரெண்டே நாள்ல உன் கல்யாணம்" மகேந்திரன் மலர்விழியின் அண்ணன் கூற,

"நான் என்ன இப்பவா சொல்றேன்.. கல்யாணம்னு நீங்க பேச ஆரம்பிச்ச முதல் நாள்ல இருந்து இதை தான் சொல்றேன்.. யாரும் காதுல வாங்க மாட்டுறீங்க" என்று குறையாய் கூற,

"ரொம்ப நல்ல இடம் டா.. விசாரிக்காம பண்ணுவோமா?" என்றான் அவனுமே.

"இப்படி செல்லம் கொஞ்சிட்டு இருந்தா இவ எப்படி சரினு சொல்லுவா?" என்று வந்தாள் அஜிதா மகேந்திரன் மனைவி.

"இதை குடி.." என மலர் கைகளில் ஜூஸை கொடுத்தவள்,

"உன்னால தான் அத்தை காய்ச்சல் வந்து எழுந்துக்காம இருக்காங்க.. இன்னும் புரிஞ்சிக்காம சொன்னதையே சொல்ற" என அஜிதா அதட்ட,

"அஜி!" என்று முறைத்தான் பாசமான அண்ணன்.

"எனக்கென்ன? உங்க அம்மா.. உங்க தங்கச்சி.. இதென்ன என் குடும்பமா?" அஜிதாவின் ஒரே கேள்வியில் மலர் சிரித்துவிட,

"ஆவுன்னா ஒரு டயலாக்... எங்கேருந்து தான் புடிச்சேனோ?" என மனைவியை அவன் முறைக்க,

"புடிச்சி தான காதலிச்சு கல்யாணமும் பண்ணி ஒரு குழந்தையும் வந்துச்சு.. என்னவோ அமேசான்ல ஆர்டர் போட்ட மாதிரி சொல்றிங்க?" என்று அஜிதா வம்பை ஆரம்பம் செய்ய, மலர் இந்த ஜோடியை சுவரசியமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இதுக்காகவாச்சும் நான் காதலிச்சு இருக்கலாம்" எப்பொழுதும் போல மலர் ரசித்து கூற,

"பார்த்திங்களா? அண்ணன் முன்னாடி பேசுற பயம் கூட இல்ல உங்க தங்கச்சிக்கு.. என்கிட்ட மட்டும் தான் நீங்களும் சண்டை எல்லாம்" என அஜி மீண்டும் சண்டை இழுக்க,

"நான் ஆன மாதிரி என் தங்கச்சியும் ஆயிட கூடாதுன்னு தான் டி அவளுக்கு நானே மாப்பிள்ளை பாத்துருக்கேன்" என்றதில் மலர் விழுந்து விழுந்து சிரிக்க, மகேந்திரனை அடிக்க அறையில் வெப்பனை தேடினாள் அஜிதா.

தொடரும்..
 
  • Like
Reactions: Vrevathi

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
மலர் செழியன் இருவருக்கும்
மணநாள் வாழ்த்துக்கள்.....
💐💐💐💐💐💐
மங்களகரமாய் திருமணத்தை பற்றி
மலரின் விவாதத்தில் தொடங்கியது.. 🤩🤩🤩
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
மலர் செழியன் இருவருக்கும்
மணநாள் வாழ்த்துக்கள்.....
💐💐💐💐💐💐
மங்களகரமாய் திருமணத்தை பற்றி
மலரின் விவாதத்தில் தொடங்கியது.. 🤩🤩🤩
Thank u sis