• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர் பாலா - ஓர் நொடி காதல்

Malar Bala

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
67
அருமையான கதைகளம். நட்புக்கும் காதலுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் மலரு 😍😍
Nandriii kavvvv🥰🥰🥰🥰
 

Ajith03

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
1
சிறப்பு👌👌👌...அருமையான படைப்பு...
வாழ்த்துக்கள் மலர் பாலா💐💐💐
 

இதழிகா

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
2
ஓர் நொடி காதல்

உச்சி பிள்ளையார் கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு ரங்கராஜன் தெருவில் இறங்கிய பிரியாவின் மனம் மிகவும் அமைதியாக இருந்தது. திருமணம் ஆகி கனவனுடன் திருச்சியில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு கணவனின் வேலை காரணமாக அதிக அளவு தாய் வீட்டிற்கு வர இயலாமல் போனது. அதிலும் இரண்டு பிள்ளைகள் பிறந்த பின்பு என்னதான் தாய் வீடானாலும் ஒரு விருந்தினரை போல காலையில் வந்து மாலையில் கிளம்பும் நிலையே இருந்து வந்தது. நீண்ட வருடங்கள் கழித்து ஒரு மாதம் தாய் வீட்டில் தம்பியின் திருமணத்தை காரணமாக கொண்டு தங்கிவிட்டாள்.

திருமண வேலைகள், திருமணம் அதன்பின் சடங்குகள் விருந்துகள் என ஒரு மாத காலம் ஓடி சென்றாலும் இன்றுதான் அவளுக்கு என நேரம் ஒதுக்க முடிந்தது. கல்லூரி நாட்களில் தோழிகளுடன் பல நாட்கள் இங்கு வந்தது உண்டு. திருமணத்தின் பின் அதற்கான வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை. இன்று மன நிறைவுடன் வீட்டிற்கு செல்ல கிளம்பிய போது தான் அவள் அவனை பார்த்தால்.

ராஜன். பிரியாவின் உயிர் தோழி முல்லையின் காதலன் அவன். ஒருகாலத்தில் பிரியா அவனை அண்ணன் என்றுதான் கூப்பிடுவாள். ‘ஆனால் இன்று’ என்று அவள் யோசிக்கும் பொழுதே ராஜனும் அவளை பார்த்து விட்டான்.

“பிரியா! எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டு கொண்டு அவள் அருகில் வந்தான்.

நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததால் இருவரும் அருகில் இருந்த ஒரு பழச்சாறு கடையில் அமர்ந்து அவர்கள் வாழ்க்கையின் தற்போதைய நிலையைப் பற்றி சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் கடைசியாக சந்தித்ததை விடவும் அவர்கள் வாழ்க்கையில் இப்போது பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. இருவருக்கும் திருமணம் நடந்து அவர் அவர்களுக்கு ஒரு குடும்பம் இருந்தது.

ராஜன் அவனது மாமா மகளை திருமணம் செய்து கொண்டு அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவனது தந்தையின் தொழிலையே அவன் தொடர்ந்து கொண்டிருந்தான். பிரியா ஒரு முழு நேர இல்லதரசியாக இருந்தாள். இருவரும் பேசி கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. பிரியாவிற்கு மறுநாள் அதிகாலையில் சென்னையிற்கு இரயில் இருந்ததால் அவள் விடைபெற இருந்த தருனத்தில் ராஜன் பிரியாவிடம்

“பிரியா. நான் கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்” என்று அவன் கூறவும் கிளம்பிய பிரியா “சொல்லுங்கள் அண்ணா” என்று மீண்டும் அமர்ந்தாள். அமரும் போதே பிரியாவும் அவன் கேட்க இருப்பதை ஓரளவு ஊகித்து இருந்தாள். அவள் ஊகித்தது சரி என்பது போலவே ராஜன் தயக்கத்துடன்

“உன் தோழி முல்லை எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டான்.

பிரியா எதுவும் கூறாமல் அவனை பார்த்து முழிக்கவும் ராஜனே தொடர்ந்து

“என்னமா அப்படி பார்க்கிறாய்? அவளுக்கு எத்தனை பிள்ளைகள்? எங்கு இருக்கிறாள்?” என்று கேட்டான்.

பிரியா “அண்ணா..” என்று இழுக்கவும்

“தெரிந்து கொள்ளதான் கேட்டேன். என்னால் எநத பிரச்சனையும் வராதுமா. கூற விருப்பமில்லை என்றாள் கூற வேண்டாம்” என்றான்.

“இல்லை அண்ணா.. அது வந்து.. இரண்டு வருடங்கள் முன்பு ஒரு கார் விபத்தில் முல்லை இறந்து விட்டாள்” என்றாள்.

ராஜனுக்கு ஒரு நொடி பூமி வேகமாக சுற்றி அப்படியே நின்றது போல் இருந்தது. தன் கண்கள் இரண்டிலும் குளம் கட்டுவதை அவனாலையே தடுக்க முடியவில்லை. தன்னை சமநிலைக்கு கொண்டு வர அவனுக்கு சில நிமிடங்கள் தேவை பட்டன.

“என்னமா கூறுகிறாய்? அவள்.. என்னால் நம்ப முடியவில்லை..” என்றவன்

“அவளுக்கு குழந்தைகள்?” என்று வினவினான்.

பிரியா “அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை அண்ணா” என்றாள்.

“என்ன! திருமணம் செய்து கொள்ளவில்லையா?” என்றவனிடம்

பிரியா “நீங்கள் இருவரும் பிரிந்த பின்பு முல்லை வீட்டில் அவளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தார்கள்தான் ஆனால் அவள் சில வருடம் அவகாசம் கேட்டிருந்தாள். நானும் அவளிடம் பேசி பார்த்தேன். அவள் யார் கூறியும் கேட்கவில்லை. முதலில் அவளது அண்ணனின் தொழிலை தான் பார்த்து கொண்டிருந்தாள் பிறகு அவளுக்கென ஒரு தொழில் அமைத்து கொண்டாள். அதனுடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு என்று ஒரு இல்லம் “அன்பின் அறம்” என்று ஆரமித்தாள். அதுதான் அவளது வாழ்க்கை என மாற்றி கொண்டாள். திடிரென ஒரு நாள் அழைப்பு வந்தது அவள் சென்ற கார் விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக..” என்றவளால் அதற்கு மேல் அவளால் பேச முடியாமல் நிறுத்தி விட்டாள். அவளுக்கும் வந்த கண்ணீரை சரி செய்து கொள்ள சில நிமிடங்கள் தேவை பட்டது.

சில நிமிடங்கள் அங்கு இருவருமே பேசவில்லை. அங்கே ஒரு அமைதி நிலவியது. அந்த அமைதியை கலைத்தது பிரியா தான்.

“அண்ணா உங்களுக்கு நேரம் கிடைத்தால் ஒரே ஒருமுறை அன்பின் அறம் இல்லத்திற்கு சென்று வாருங்கள்” என்றவளிடம்

“கண்டிப்பாகமா.அதன் விலாசம்?” என்று அவன் கேட்கவும்

“பால்பண்ணையில் இருக்கிறது அண்ணா” என்று அதன் விபரங்களை கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்று சென்றாள்.

கணத்த இதயத்துடன் ராஜன் அங்கிருந்து தன் வீட்டிற்கு சென்றான். இரவு முழுவதும் அவனால் உறங்கவே முடியவில்லை. முல்லையின் நினைவே அவன் மனதில் ஓடி கொண்டிருந்தது.

முதல் முதலில் ஒரு நீல நிற சல்வாரில் அவளை பார்த்தது அன்று போல அவன் நினைவில் வந்தது. எப்போதும் சிரித்த முகத்துடன் வளம் வருவாள். அவள் இருக்கும் இடத்தில் எத்தனை சோகத்துடன் ஒருவர் இருந்தாலும் கூட அவரை மகிழ்ச்சியாக மாற்ற கூடிய தேவதை அவள்.

‘தேவதை என்பதால் தானோ பாதியில் சென்றுவிட்டாள்’ என நினைக்கும் போதே அவன் கண்களில் மீண்டும் நீர் நிரம்பியது.

நீருடன் சேர்ந்து தன் மனதிற்குள் இருந்த குற்ற உணர்ச்சியும் வெளி வந்தது. மறுநாள் காலையில் எழுந்தவுடன் பிரியா கூறிய அன்பின் அறம் இல்லத்தை நோக்கி சென்றான்.

செல்லும் வழியெல்லாம் அவன் மனம் முழுதும் முல்லையே நிறைந்திருந்தாள். அவளை எத்தனை காயம் செய்துல்லான். காதலை அள்ளி அள்ளி கொடுத்து இவன்தான் வாழ்க்கை என்று இருந்தவளை அல்லவா ஏமாற்றினான். அவன் மனம் அவனையே குற்றம் சாட்டிகிக் கொண்டிருக்க அந்த அன்பின் அறம் இல்லம் வந்தது.

வாசலிலேயே வாயிர்காவலன் ஒருவன் இவனது காரை நிறுத்தி இவன் யார் எதற்காக வந்துள்ளான் போன்ற விபரங்களை கேட்டு தெரிந்து கொண்ட பின்பே உள்ளே அனுமதித்தான். ராஜனும் தான் நண்கொடை கொடுக்க வந்துள்ளதாக கூறவும் அவன் வேறு கேள்விகள் இன்றி உள்ளே விட்டான்.

உள்ளே நுழைந்தவுடன் அவன் கண்களை அவனாலையே நம்ப முடியவில்லை. ஏனெனில் அந்த இடம் ஒரு காலத்தில் ராஜனை காதலித்த போது முல்லை அவர்களது வருங்கால வீடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறினாலோ அதே போல் இருந்தது. முல்லையின் காணவுகளுக்கு உயிர் கொடுத்ததை போல அந்த இல்லம் மிகவும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அந்த இல்லத்தை சுற்றி ரோஜா தோட்டம் அமைக்க பாட்டு மிகவும் அழகாக பறாமறிக்க பட்டு வந்தது அதை பார்த்தாலே தெரிந்தது.

அவன் சென்ற காரை ஒரு மரத்தின் நிழலில் நிறுத்திவிட்டு இறங்கியவனின் கண்களில் தூரத்தில் இருந்த அந்த மரம் பட்டது. அந்த மரம் மிகவும் பெரிதாக இருந்தது. அதன் நிழலில் அமர்வதற்கான இருக்கைகள் கல்லால் கட்ட பட்டிருந்தன. இதுவும் முல்லையின் ஆசைதான்.

“நம் பிள்ளைகள் விளையாடுவதை பார்த்து கொண்டு ஞாயிற்று கிழமைகளில் இப்படி ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து பேசி கொண்டிருக்க வேண்டும்.” என காதல் வானில் சிறகடித்து கொண்டு அவள் கூறியது இன்று போல அவன் நினைவில் வந்து சென்றது.

பழைய நினைவில் மூழ்கி இருந்தவனை ஒரு குரல் நிகல்வுலகிற்கு கொண்டு வந்தது. யாரென்று திரும்பி பார்த்தால் அங்கு அந்த இடத்தை கூட்டி சுத்தம் செய்பவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

“ஐயா யார் நீங்கள்? யாரை பார்க்க வேண்டும்?” என்று கேட்டார்.

“நன்கொடை கொடுக்கலாம் என்று வந்தேன் எங்கு கேட்க வேண்டும்” என்றான் ராஜன்.

“அப்படியா.. அப்பட்யென்றால் நீங்கள் தீபன் ஐயாவை தான் பார்க்க வேண்டும். தற்போது இங்கு தான் இருக்கிறார். அதோ அந்த வெள்ளை நிற வண்ணம் பூசிய கட்டிடத்துள் சென்றால் முதலில் வரும் வலது புறம் எடுங்கள். அதில் வரும் இரண்டாவது அறை அவருடையது” என்றார்.

அவருக்கு நன்றி கூறி விடை பெற்றவன் அந்த கட்டிடத்தை நோக்கி நடக்க தொடங்கினான். அவர் கூறியதை போலவே வலது புறத்தின் இரண்டாவது அறையின் கதவில் தீபன் என்று எழுதி இருந்தது.

அவன் அந்த அறையிடம் செல்லவும் அறையின் உள்ளிருந்து ஒருவன் வெளி வரவும் சரியாக இருந்தது. அறையின் உள்ளிருந்து வந்தவன் வேறு யாருமில்லை, அந்த அறையின் கதவில் எழுத பட்டிருந்த தீபன் என்னும் பெயருக்கு சொந்தகாரன் தான். ராஜனும் தீபனை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டான்.

தீபன் முல்லையின் தோழன். இருவருக்குள்ளும் எந்த ஒரு ஒளிவுமறைவும் இருந்ததே இல்லை. ஒருவருக்கு ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு நம்புவார்கள். ராஜனும் முல்லையும் காதலித்த நாட்களில் ராஜனை நம்ப வேண்டாம் என ஒற்றை காலில் நின்றவனும் இதே தீபன் தான். அவனை இந்த இடத்தில் ராஜன் எதிர்பார்க்கவே இல்லைதான். அதனால் என்ன கூறுவது என்றே தெரியாமல் அப்படியே நின்று விட்டான்.

ஆனால் தீபனின் நிலையோ அப்படி இல்லை. ஒரு காலத்தில் ராஜன் மீது அதிக கோபத்தில் இருந்தது யாரென்றால் அது தீபன் தான். அவனை பார்த்தால் பார்க்கும் இடத்திலேயே கொலையும் செய்வேன் என முல்லையிடமே அவன் கூறியது உண்டு. ஆனால் முல்லையின் இறப்பிற்கு பிறகு அவனது கண்ணோட்டம் வேறு திசையை நோக்கி இருந்தது. எப்போது முல்லை ஆரம்பித்த அந்த ஆதரவற்ற இல்லத்தின் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டானோ அன்றில் இருந்து எதிலும் பொறுமையையே முன் நிறுத்தி செயல் பட தொடங்கியிருந்தான். அதன் காரணமாக இன்று ராஜனிடமும் அவன் மொருமையாகவே பேசினான்.

“என்ன வேண்டும்?” என்று மிகவும் அமைதியான குரலில் அவன் கேட்கவும் ராஜனும் தன் நிலையிலிருந்து மீண்டு

“நேற்று பிரியாவை எதிர்சையாக சந்திக்க நேர்ந்தது. அவள்” என்று அவன் முடிக்கும் முன்பே தீபன்

“விபரம் தெரிந்து வந்துள்ளீர்கள் என்று புரிகிறது. ஆனால் துக்கம் விசாரிக்க வந்திருந்தால் அதற்கான இடமும் இது இல்லை துக்கம் விசாரிக்கும் அளவு நீங்கள் தகுதி ஆனவரும் இல்லை.” என்றான்.

ராஜன் எதுவும் பேசாமல் தரையை பார்த்து கொண்டு நிற்கவும் தீபனே தொடர்ந்து

“வந்ததன் காரணம் இன்னும் நீங்கள் சொல்லவில்லை.” என்றான்.

ராஜன் மிகவும் தயக்கத்துடன் “தவறு என்மீது என்று நான் அறிவேன். அதை நான் மறுக்கவும் இல்லை. நான் முல்லையை உண்மையாக தான் காதல் செய்தேன். ஆனால்” என்று அவன் முடிக்கும் முன்பே தீபன் அவனிடம் அமர்ந்து பேசலாம் என கூறி அவனது அறைக்குள் அழைத்து சென்று அவனை அமருமாறு கூறிவிட்டு அவனும் தனது இருக்கையில் அமர்ந்தான்.

இருவரும் அமர்ந்த பிறகு அங்கு ஒரு அமைதி நிலவியது. தற்போதும் அந்த அமைதியை முதலில் கலைத்து கொண்டு பேசியவன் தீபன் தான்.

“நீங்கள் இருவரும் பிரிந்ததற்கான காரணம் இதுவரை முல்லை யாரிடமும் கூறியதே இல்லை.” என்று தீபன் கூறியதும் அதுவரை தரையை பார்த்து அமர்ந்திருந்த ராஜன் அதிர்ச்சியாக தீபனை நிமிர்ந்து பார்த்தான். அவன் மேலும் தொடர்ந்து

“ஒரு நாள் மிகவும் ஆசையாக உங்களை பார்க்க போவதாக கூறி கிளம்பினால். அவள் மீண்டும் வீட்டிற்கு வந்த போது அவள் கண்கள் இரண்டும் ரத்த நிறத்தில் இருந்தது. ஏதோ ஒரு அதிர்ச்சி அவளிடம். என்ன என்று கேட்டும் அவளிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஒரு வாரம் அவள் அறையை விட்டே வெளிவரவில்லை. சரியாக சாப்பிடாததால் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் சேர்த்தோம். என்ன நடந்தது என்று புரியாமல் உன்னிடம் கேட்கலாம் என்று என்னை தேடி வந்தேன். உங்கள் வீட்டில் யாரும் இல்லை . உன்னை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. மருத்துவமனையில் சேர்த்து ஒரு வாரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பினாள். அவள் அனைவரிடமும் கூறியது ஒன்றுதான். ‘என் வாழ்க்கையில் ராஜன்என்பவன் இனி இல்லை. வேறு ஏதாவது இதைப்பற்றி யாரும் கேள்வி கேட்டாள் பிறகு யாரும் என்னை பார்க்க முடியாது ‘ என்றாள். நாங்களும் அதன் பிறகு அவளிடம் எதுவும் கேட்டதில்லை.” என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

சில வினாடி அமைதிக்கு பின் அவனே தொடர்ந்து “வாழ்க்கையில் ஒரே ஒரு மனிதரிடமாவது நாம் உண்மையாக இருக்க வேண்டும். அப்படி உனக்கு தோன்றினால் உங்கள் இருவருக்கும் என்ன நேர்ந்தது என்று எனக்கு தெரிந்தாக வேண்டும்” என்றான்.

ராஜனிற்கும் ஒரு வடிகால் தேவை பட்டது. யாரிடமாவது தனது தப்பை கூற வேண்டும் போல் இருந்தது. எனவே அவனும் கூறினான்.

“தீபன் நானும் முல்லையும் காதலித்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் யாரும் அறியாத உண்மை என்றால் அது நான் முல்லையை காதலித்தேனா என்றால் எனக்கு தெரியவில்லை என்பதே உண்மை. நான் என்றுமே அவளுக்கு உண்மையாக இருந்தது இல்லை. என் கவனம் முழுவதும் என் மீதே இருந்தது. நான் எப்படி இருந்தால் நன்றாக வாழ முடியும் என்பதில் தான் என் கவனம் இருந்தது. அதற்கு ஏற்ப எனக்கொரு வாய்ப்பு வந்தது. ஆம் அதை நான் என்னுடைய வாய்ப்பாக தான் பார்த்தேன். அது என்னுடைய திருமணம். என் தூரத்து மாமா ஒருவருக்கு குழந்தை இல்லை மிகவும் பணக்காரர் அவரது மனைவின் தங்கை மகளிற்கு அவரே திருமணம் பண்ண தயாராக இருந்தார். மாப்பிள்ளைக்கு அவரது சொத்து முழுதும் என கூறியிருந்தார். அந்த பெண் நம் ஊரில் தான் இருந்தது. அவளை நேராக பார்த்து உதவி செய்வது போல பேசி...” என நிறுத்தியவன் சில வினாடி அமைதிக்கு பின்

“அவளை காதலிப்பதாக கூறி திருமணமும் செய்தேன். அப்படி ஒருநாள் அவளுடன் வெளியில் இருந்த போது தான் முல்லை என்னை பார்த்தாள். அவள் எதார்த்தமாகதான் நினைத்து என்னிடம் கேட்டாள். ஆனால் நான் முல்லையிடம் கூறிவிட்டேன். இந்த பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என்று. முல்லை முதலில் நம்பவில்லை பிறகு இப்படி அவளது சொத்திற்காக என தெரிந்ததும் என்னை ஒரு பார்வை பார்த்தால். அதில் உலகத்தில் உள்ள மொத்த வெறுப்பும் இருந்தது. அதுவே அவளை நான் கடைசியாக பார்த்தது. அவளை பார்த்த மறுநாளே நாங்கள் குடும்பத்துடம் ஊட்டிக்கு சென்றுவிட்டோம். அங்கிருந்து வந்தவுடன் என் திருமணமும் முடிந்தது. முல்லையும் வேறு திருமணம் செய்திருப்பாள் என்று எண்ணினேன்.” என்றான்.

அவன் கூறியது அனைத்தையும் அமைதியாக கேட்டு கொண்டிருந்த தீபன் “நீங்கள் கூறியது அனைத்தும் எனக்கு தெரியும். ஆனால் இவை எதுவும் என்னிடம் முல்லை கூறவில்லை. மற்றும் உங்களிடம் நான் கேட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் மாறிவிட்டீற்களா என்று தெரிந்த கொள்ள நினைத்தேன்” என்றவன் அவன் மேஜையிலிருந்து ஒரு டைரியை எடுத்து ராஜனிடம் கொடுத்தான்.

என்ன தருகிறான் என்று புரியாமல் ராஜன் அதை வாங்கி பார்த்தான். அதன் முதல் பக்கத்தில் முல்லை என்று எழுதி இருந்தது. ஆம் அது அவளது கையெழுத்து தான்.

அதை திறந்து முதல் பக்கத்தை வாசிக்க தொடங்கினான். அதில் முல்லையும்அவனும் முதன்முதலில் சந்தித்த நிகழ்வு எழுதி இருந்தது.

தீபன் “இது எதை பற்றி என்று தெரிந்திருக்கும். இதை படிக்க உங்களுக்கு தனிமை மிகவும் அவசியம். இங்கேயே அமர்ந்து படியுங்கள். எனக்கு சிறிய வேலை இருக்கிறது முடித்துவிட்டு வருகிறேன்” என கூறி விடைபெற்று சென்றான்.

அவன் சென்றதும் ராஜன் மீண்டும் படிக்க தொடங்கினான். அந்த டைரி முழுவதும் அவர்கள் காதல் நாட்களில் நடந்த நிகழ்வுகள் எழுத பட்டிருந்தன. கடைசி நாள் அவனை பார்த்தது வரையிலும். ஒரு சில பக்கங்க்கள் காளியாக இருந்தன. அதன் பிறகு ஒரு பக்கத்தில்

‘என்றாவது நீ என்னை தேடி வருவாய் என்று அறிவேன். அன்று நான் எந்த நிலையில் இருப்பேன் என்று தெரியவில்லை. உன்னை எந்த அளவு நான் நம்பினேன் என்றால் உன் மீது எனது முழு நம்பிக்கையையும் வைத்திருந்தேன். அவை அனைத்தும் கனவேன கழைந்துவிட்டன. எனக்குள் இப்போது இருப்பதெல்லாம் ஒரு கேள்வியும் ஒரு ஆசையும்தான்.

கேள்வி : இத்தனை வருட நம் காதலில் ஒரே ஒரு நொடியேனும் எனக்கு நீ உண்மையாக இருந்தாயா? ஒரே ஒரு நொடியேனும் என்னை நீ காதல் செய்தாயா?

ஆசை : கடலில் கலக்கும் ஒரு துளி மழைநீரை போல உன் வாழ்க்கையில் ஏதாவது ஒரே ஒரு நொடி என்னை நினைத்தும் நான் உன்மீது கொண்ட காதலை நினைத்தும் உன் கண்களில் இருந்து ஒரு துளி நீர் வந்தால் போதும் என் காதல் வெற்றி அடைந்துவிடும்.’

என்று எழுதபட்டிருந்தது.

அத்துடன் அந்த டைரி முடிவடைந்திருந்தது. அதை மூடியவனின் கண்களில் இருந்து நீர் ஆறைபோல பெருக்கெடுத்தது. எத்தனை நேரம் அங்கு அவன் அப்படி அமர்ந்திருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

மெல்லியதாக கதவை தட்டிவிட்டு சில வினாடிகளுக்கு பின் தீபன் அறைக்குள் வந்தான். கண்கள் இரண்டும் சிவப்பு நிறத்தில் இருக்க விட்டத்தை பார்த்து அமர்ந்திருந்தவனிடம் தீபன்

“இப்போதும் உண்மையாக நீ செய்த தவறை உணர்ந்தாயா இல்லையா என்று எனக்கு தெரியாது. முல்லையை திருமணம் செய்து கொள்ள சொல்லி நாங்க்கள் வற்புறுத்தினோம்.. அவள் அதற்கு சம்மதிக்கவே இல்லை. கடைசிவரை அவளது காதல் உண்மையாகவே இருந்தது. அவளது உலகம் சில நாட்களில் இந்த அன்பின் அறமாக மாறிவிட்டது. அவள் சென்றபின் இதுதான் எனது உலகமாக மாறிவிட்டது. அவள் திருமணம் வேண்டாம் என்று கூறியபோது உன்மீது எனக்கு மிகவும் கோபம் வந்தது. உன்னை கொன்றுவிடுவேன் என்றுகூட முல்லையிடம் கூறினேன். ஆனால் என்னால் கூட உனக்கு இத்தகைய தண்டனையை கொடுத்திருக்க முடியாது. உனக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் உன்னால் வாழ்க்கை முழுவதும் அந்த டைரியில் எழுதியிருக்கும் வார்த்தைகளை மறக்க முடியாது. இதுவே உனக்கான பெரிய தண்டனையாக தான் நான் பார்க்கிறேன்.” என்றவன் சிறிய அமதிக்கு பின்

“இந்த இல்லத்திலும் இங்கு வாழும் குழந்தைகளிடமும் தான் நான் முல்லையை பார்க்கிறேன். மீண்டும் இந்த இடத்தில் உன்னை பார்க்க நான் விரும்பவில்லை. நான் கூறவருவது புரியும் என்று நினைக்கிறேன்” என்றான்.

அவன் கூறி முடிக்கும் முன்பே ராஜன் மெதுவாக அவன் இருக்கையில் இருந்து எழுந்து விட்டான். முல்லையின் டைரியை தீபனே வாங்கி கொண்டான்.

எப்படி வீட்டிற்கு சென்றான் என்பதே தெரியாமல் ராஜன் தன் வீட்டை அடைந்தான். தன் வீட்டிற்குள் சென்றாலும் அவன் மனம் முழுவதும் முல்லையிடமே இருந்தது.

தீபன் கூறியது உண்மையே. ராஜன் ஆசை பட்டதை போல அவன் வாழ்க்கையில் என்ன கிடைத்தாலும் அந்த டைரியில் அவன் படித்த வார்த்தைகள் அவனை இனி தூங்கவிட போவதில்லை. முல்லை ஆசை பட்டதை போல ஒரு நொடி என்று இல்லாமல் ராஜனின் வாழ்க்கை முழுவதும் அவளையும் அவள் காதலையும் நினைத்து எத்தகைய பொக்கிஷத்தை தவரவிட்டோம் என எண்ணி எண்ணி அவன் கண்கள் கண்ணீருடன் ரத்ததையும் சேர்த்து வடிக்க போகின்றன.

தீபனோ தன் தோழி உருவாக்கிய அந்த அன்பின் அறம் என்னும் இல்லத்தை பாதுகாப்பதே தன் வாழ்க்கை என எடுத்து கொண்டான்.

யார் ஒருவர் யாரை ஏமாற்றினாலும் அதன் பயனையும் அனுபவித்து தான் ஆக வேண்டும். அதே போல நாம் ஒருவரை வேதனை படுத்தினால் அது அவர்களை மட்டுமின்றி அவர்களை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும் என முல்லை, தீபன் மற்றும் ராஜன் நமக்கு புரியவைத்து எடுத்துகாட்டாக அமைந்தனர்.

***

நன்றி.
Wowww.., super story 😍😍😍😍 mullai char enaku rmba pudichirukku 😍😍 mulai frnd char also super epdi oru frnd eruntha pothum life la ethai venumnalum sathikalam 🤩🤩 light ha kannai verkka vachitiye da malare 🤧🤧 y this kolaver daww☹️🤧🤧.super story ❤️❤️
 

Malar Bala

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
67
Wowww.., super story 😍😍😍😍 mullai char enaku rmba pudichirukku 😍😍 mulai frnd char also super epdi oru frnd eruntha pothum life la ethai venumnalum sathikalam 🤩🤩 light ha kannai verkka vachitiye da malare 🤧🤧 y this kolaver daww☹️🤧🤧.super story ❤️❤️
Ac podava da eye ku🙈🙈🙈
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
651
ரொம்ப அழகான ஸ்டோரி மா. முல்லையோட கேள்வியையும் ஆசையையும் வாசிக்கிறப்ப கண்கலங்குறதைத் தடுக்க முடியல. வெற்றி பெற வாழ்த்துகள் மா..❤️❤️
 

Malar Bala

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
67
ரொம்ப அழகான ஸ்டோரி மா. முல்லையோட கேள்வியையும் ஆசையையும் வாசிக்கிறப்ப கண்கலங்குறதைத் தடுக்க முடியல. வெற்றி பெற வாழ்த்துகள் மா..❤️❤️
மிகவும் நன்றி sisterrr 🥰🥰
 
Top