• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர் - 1

MK9

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
16
20
18
Tamil nadu
மலராத மலர் இவள்.

மலர் - 1

“என்ன ஜோசியரே இப்படி சொல்லிட்டீங்க? திரும்ப ஒரு முறை பாருங்க.” காமாட்சி நெஞ்சம் படபடக்க கூறினார்.

“இந்த ஜாதகத்தை எத்தனை முறை பாக்கிறது?. ஒரு வருடத்தில் நாலு முறை வரீங்க. நானும் இதையே தான் சொல்லிட்டு இருக்கேன். நீங்களும் என்னை விடுற மாதிரி தெரியல. வேற ஜோசியரை பாக்குற மாதிரியும் தெரியல.” அலுத்துக் கொண்டவருக்கு கோபமும் எட்டி பார்த்தது.

அவருக்கு கோபம் வராமல் எப்படி இருக்கும் பத்து வருடங்களாக இதே ஜாதகத்தை பார்க்கிறார். அதுவும் வருடத்திற்கு சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, வருடப்பிறப்பு, இந்த ஜாதகத்தின் பிறந்த நாள். இப்படி பார்த்து பார்த்து சலித்து விட்டது. ஆனால் ஜாதகத்தின் நிலையும் மாறவில்லை, காலநிலைகளும் கை கொடுக்கவில்லை.

ஒன்று தான் கூற முடிகிறது. திருமண யோகம் சுத்தமாக கிடையாது. 37 வயதாகி விட்டது இந்த ஜாதகத்தில் உள்ளவளுக்கு. இன்னும் முதிர்கன்னியாக அனைவரின் இரக்கம், குத்தல் பேச்சு, நக்கல், ஒதுக்கத்தில் புழுங்கி கொண்டிருக்கிறாள். வாழ்வே சூனியமாக மாறி போனது அவளுக்கு. அதற்கு இவர்களும் முக்கிய காரணம்.

“ஜோசியரே என் பொண்ணுக்கு 37 வயசே முடிய போகுது. இன்னும் கல்யாண யோகம் வரல. என் மகனுக்கு 35 வயசு ஆகுது. இந்த பிள்ளையால் அவன் கல்யாணமும் நிக்குது. இப்போ திடீர்னு கல்யாணம் பண்ணியே ஆகணும்னு குதிக்கிறான். எப்ப தான் என் பொண்ணுக்கு கல்யாண யோகம் வரும்?” காமாட்சி கண்ணீரோடு கேட்க,

“நான் இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே உன்கிட்ட என்ன சொன்னேன்?. இனி உன் பொண்ணுக்கு ஜாதகம் பாக்காத. கல்யாணம் பண்ணி வை னு சொல்லிட்டேன். நீ திரும்ப திரும்ப இந்த நோட்டை தூக்கிட்டு வந்து நிக்கிற.” அவரும் பொறுமையாக பதில் கூறினார்.

“ஏய் வாடி போகலாம்.” அதுவரை அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த ஏழுமலை மனைவியை இழுத்துக் கொண்டு கிளம்பினார்

“எதுக்குங்க என்னை இப்படி இழுத்துட்டு வரீங்க?”

“வேற எதுக்கு உன் மகன் அவன் காதலிக்கும் பெண்ணை இழுத்துட்டு ஓடி வராமல் இருக்க தான்.”

“இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?” பொறுமை பறந்து கத்தி விட்டார்.

“உன் அறிவுக்கு எதுவும் புரியாது டி.” பேசிக் கொண்டே மனைவி கையில் இருந்த ஜாதக பையை பிடுங்கி காட்டில் எறிந்தார்.

“ஐயோ பாவி மனுஷா எதுக்கு யா ஜாதகத்தை தூக்கி போட்ட?” நெஞ்சில் அடித்துக் கொண்டு பதறினார்.

“வாய மூடிக்கிட்டு வா. இனி ஜாதகமும் கிடையாது எதுவும் கிடையாது.” மனைவியை வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு சென்றார்.

காமாட்சி திரும்பி திரும்பி ஜாதக நோட்டு பறந்து போய் விழுந்த இடத்தை பார்த்துக் கொண்டே நடந்தார்.

“அக்கா இந்தா இந்த புடவை உனக்கு தான்.” தம்பிக்காரன் பாசமாக நீட்டியபடி நின்றான்.

“எதுக்கு டா?”

“சும்மா தான் எடுத்தேன். வச்சுக்கோ.”

மலர் புடவையை திண்ணையில் வைத்து விட்டு அமைதியாக கூடை பின்ன தொடங்கினாள்.

தாய், தந்தை வருவதை கண்டவள் தான் பின்னிக் கொண்டிருந்த கூடையை ஓரமாக வைத்து விட்டு உள்ளே சென்றவள் கையில் ஒரு சொம்பு நிறைய குடிக்க தண்ணீர் கொண்டு வந்தாள்.

“அப்பா இந்தாங்க…” தந்தையிடம் மட்டும் பேசுவாள். தாயிடம் பேசி நான்கு வருடங்கள் ஆகி விட்டது.

“இந்த முறையும் அதையே தான் சொல்லி அனுப்பிட்டார். நான் எந்த நேரத்தில் பிள்ளை பெற்றேனோ இப்போ வரைக்கும் விடிய மாட்டேங்குது.” காமாட்சி வாசலில் அமர்ந்தபடி ஆரம்பித்து விட்டார்.

தாய் வார்த்தைகளை கேட்டு மலர் இறுகி போய் அமர்ந்து இருந்தாள். தினம் தினம் கேட்டு அவள் மனமும், உடலும் இறுகி போனது.

“அம்மா இப்போ எதுக்கு வாசல்ல உக்காந்து ஒப்பாரி வைக்கிற?” தாயை அதட்டியபடி வந்தான் அறிவுகரசு.

“வா டா. உன் அக்காவுக்கு இன்னும் கல்யாணம் பண்ண நேரம் கூடி வரலையாம். மலர் னு ஆசையா பேர் வெச்சேன். ஆனா கல்யாணம் பண்ணாமலே வாடி போயிடுவாள் போல.” மகளை நினைத்து வேதனையில் பேசுவதாக வார்த்தைகளை அவளுக்கு வலிக்கும் படி வீசினார்.

மலர் தன் கையில் இருந்த பாதி பின்னிய கூடையை இறுக்கமாக பிடித்தாள். காமாட்சி வார்த்தையை கேட்டு மறுத்து போன மனம் கூட கண்ணீர் வடித்தது.

“அம்மா வாய மூடு. என்னத்தை பேசணும்னு தெரியாமல் எதையாவது பேசி கிட்டு. உனக்கு வேற வேலையே இல்லையா. இப்படி வாசலில் ஒப்பாரி வைக்கிற. எழுந்து உள்ள போ.” தாய் வாய் அடைக்க விரட்டினான்.

ஆனால் அவர் வாயை மூடி விட்டாலும் “நீ எதுக்கு கத்துற. உனக்கு என்ன தெரியும் எங்க வலி. நீ திடுதிப்புன்னு எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு வந்து நிக்கிற. உனக்கு முன்னாடி பிறந்தவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. 37 வயதாகி போச்சு. இன்னும் கன்னி பொண்ணாவே இருக்கா உன் அக்கா. இவள் வயசு பொண்ணுங்க எல்லாம் காலா காலத்தில் கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டியோடு இருக்குங்க. இன்னும் இவள் வாழ்க்கை மட்டும் விடியலையே.” புடவை முந்தானையில் மூக்கை சிந்தியபடி பேசினார்.

அறிவு தன் அக்காவை திரும்பி பார்த்தான். வெறித்த பார்வையுடன் தலை குனிந்து அமர்ந்து இருந்தவளை பார்க்கவே வேதனையாக இருந்தது “அம்மா கொஞ்சம் உன் வாய மூடு. எனக்கு கல்யாணம் ஆனால் என்ன? என் அக்காவை நான் அப்படியேவா விட்டுடுவேன். சீக்கிரம் நானே ஒரு நல்ல மாப்பிள்ளை பாக்குறேன். என் நிலைமையை புரிஞ்சுக்க. கஸ்தூரி வீட்டில் பிரச்சனை. அவளும் எனக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருப்பாள்? எங்க கல்யாணம் முடிந்ததும் அக்காவுக்கு ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” அறிவு தன் பக்க நிலையை பொறுமையாக விளக்கினான்.

“என்னடா கூறு கெட்ட தனமா பேசிட்டு இருக்க. இத்தனை வயதாகி கல்யாணம் ஆகாதவள் இருக்க வீட்டுக்குள்ள நீ உன்
பொண்டாட்டி கூட கூத்தடிக்கிறதை அவள் பார்க்கணுமா? அவளுக்கு வலிக்காதா?
எந்த சந்தோஷத்தையும் பார்க்காமல் இருக்கா உன் அக்கா. அவளை விட உனக்கு காதல் முக்கியமா போச்சா?” அடி தொண்டையில் கத்தினார்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் எட்டி பார்க்கவே அறிவுக்கு அசிங்கமாக போனது. ‘எதோ நான் திருமணத்துக்கு அலைவது போல் அல்லவா தன் தாய் பேசுகிறார்.’ என ஆதங்கமாக நினைத்தவன்,

“ நான் காதலிக்கிறன்னு தெரிந்ததும் எதுக்கு கஸ்தூரி அப்பா கிட்ட பணம் வாங்குன? கொஞ்சம் நெஞ்சமா வா? நீ பாட்டுக்கு தேவை படும் போது எல்லாம் உன் பொண்ணு என் வீட்டுக்கு தான் மருமகளா வரணும்னு சொல்லியே பணம் வாங்கி வாங்கி அது இப்போ ஐந்து லட்சம் வந்து நிக்குது. ஒன்னு பொண்ணு கட்டிக்க இல்லனா பணத்தை கொடுன்னு கேட்கிறார். நீ போய் கொடுத்துட்டு வந்துடு. நான் எதுவும் பேசல. ஆனா என் மனசுல கஸ்தூரி மட்டும் தான் இருக்காள். அவளை தவிர வேற யாரும் எனக்கு பொண்டாட்டி ஆக முடியாது.” என்றான் தீர்மானமாக.

காமாட்சி வாய் ஒட்டிக் கொண்டது. “அவ்வளவு பணத்துக்கு எங்க போறது?” அதன் பிறகு மூச்சு விடும் சத்தம் கூட கேட்கவில்லை.

“அக்கா நான் வேலைக்கு கிளம்புறேன்.” அக்காவிடம் மட்டும் கூறி விட்டு சென்றான். அறிவு சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்கிறான். மாதம் பிறந்தால் பத்தாயிரம் கிடைக்கும்.

“அப்பா எனக்கும் வேலைக்கு நேரம் ஆயிடுச்சு.” என்றவள் பின்னிய கூடையை ஓரமாக வைத்து விட்டு கிளம்பினாள். அவளும் அதே தொழிற்சாலையில் தான் வேலை செய்கிறாள். மாதம் 7000 சம்பளம்.

ஏழுமலை தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார் மனம் தாங்காத பாரத்தோடு. அவளை பெண் கேட்டு வந்த போது எல்லாம் அலட்சியம் காட்டி இன்று 37 வயதாகியும் திருமணம் ஆகாமல் நிற்கிறாள்.

“ஏய் எழுந்து உள்ள போ. இங்க உக்காந்து ஒப்பாரி வச்ச கொன்னுடுவேன்.” மிரட்டி விட்டு திண்ணையில் சாய்ந்து படுத்தார்.

“நான் ஒப்பாரி வைக்கிறது மட்டும் தான் எல்லாருக்கும் தெரியுது. எதுக்கு வைக்கிற னு தெரியல. நாளைக்கு அறிவு பொண்டாட்டி வந்து நம்ம பிள்ளையை ஒரு சொல் சொல்லிட்டா தாங்க முடியுமா? இல்ல நம்ம தம்பிக்கு கூட கல்யாணம் ஆயிடுச்சு எனக்கு ஆக வில்லையேன்னு மனசுக்குள்ள புழுங்கி புழுங்கி சாகும்.” காமாட்சி தன் போக்கில் தன் வேதனையை கொட்டிக் கொண்டிருந்தார்.

இவர் ஒன்றை மறந்து விட்டார் தன் வேதனையை ஆத்திக் கொள்ள விடும் வார்த்தைகள் மலரை எவ்வளவு காயப்படுத்துகிறது என்று.

அவள் மட்டும் வேண்டும் என்றா இவர்களுக்கு பாரமாக இருக்கிறாள். இல்லை திருமணமே வேண்டாம் என்று இருக்கிறாளா? வார்த்தைகளை நிதானித்து விட்டு இருந்தாள் இன்று பெற்ற தாயிடம் பேசாமல் ஒதுங்கி இருக்க மாட்டாள்.

“என்ன மாமா முகமே சரியில்லை.” கஸ்தூரி அறிவை பார்த்து கேட்டாள்.

“என் அம்மா திரும்பவும் ஜாதகம் பார்த்துட்டு வந்து ஒப்பாரி வச்சிட்டு இருக்கு. அக்கா பாவம். அழவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இறுகி போய்டுச்சு.” தொண்டை அடைக்க கூறினான்.

“உன் நிலைமை எனக்கு புரியுது மாமா. ஆனா அதுக்காக என்னை விட்டுடாத மாமா. என்னால உன்னை தவிர வேறு யாரையும் நினைக்க கூட முடியாது.” கலங்கிய படி கூறியவள் அறிவு முகம் பார்க்க துணிவு இல்லாமல் அங்கிருந்து நகர்ந்து செல்ல மலர் அவள் முன்பு வந்து நின்றாள்.

மலரை பார்க்கவே குற்ற உணர்ச்சியாக இருந்தது கஸ்தூரிக்கு. அவள் நிலை புரியாமல் இல்லை. ஆனால் தற்போது தன் நிலையை பற்றி யோசிக்க வேண்டி இருக்கவே. மலரிடம் முகம் கொடுத்து பேச முடியாமல் குனிந்தபடி சென்றவள் கையை பிடித்த மலரோ “கஸ்தூரி அழாத மா. என் தம்பி ரொம்ப நல்லவன். சீக்கிரம் உங்க கல்யாணம் நடக்கும். எனக்கும் உனக்கும் நடுவுல மாட்டிகிட்டான். என் வாழ்க்கைக்காக உன் வாழ்க்கையை பணயம் வைக்க மாட்டான் என் தம்பி. உங்க ரெண்டு பேருக்குமே எந்த குற்ற உணர்ச்சியும் வேண்டாம். நீ தான் என் தம்பி பொண்டாட்டி.” மென்மையாக அன்பாக கூறியவள் சிரித்த முகமாக கஸ்தூரி உள்ளங்கையில் சிறு அழுத்தம் கொடுத்து சென்றாள்.

இமையில் அணை போட்டு நின்ற கண்ணீர் தடை உடைத்து கீழிறங்க மலரை நினைத்து உள்ளம் பூரித்து போனாலும் பாரம் அதிகமானது.

‘இவரின் தங்கமான குணத்துக்கு இவர் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும்!’ என்று கடவுளிடம் அவசரமாக வேண்டிக் கொண்டவள் திரும்பி அறிவை பார்க்க அறிவும் கண்ணீர் வழிய தன் அக்காவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அக்காவின் திருமணம் முடியாமல் தன் திருமணத்தை நடத்திக் கொள்ள விருப்பம் இல்லை தான். ஆனால் தனக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்தவளை வேறு ஒருவனுக்கு தாரைவார்த்து கொடுப்பது மகா பாவமாற்றே. அவள் குடும்பத்தின் நெருக்கடியில் இருவரின் திரு
மணம் முடிவாகி போனது.

தம்பி திருமணத்தில் மனமகிழ்வுடன் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்தாள்
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ரொம்ப அருமையா இருக்கு 👌

யோசிக்காம விடுற வார்த்தைகளால எவ்வளவு மனவேதனை? 😢

பாவம் மலர் 😢

பாசமான தம்பி ❤️

கஸ்தூரி இப்போ சூழ்நிலைக் கைதி😢

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 

Kalaivani shankar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
62
24
8
Karur
மிகவும் அருமையான ஆரம்பம்..
மலரை நினைச்சா கஷ்டமா இருக்கு
ச்சே என்ன அம்மா?
 

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
அருமையான ஆரம்பம்டா... இந்த தாய்க்குலத்தை என்ன செய்தா தகும்...
அறிவு தாண்டி கஸ்தூரி ட காத்திருப்பு... பலே பலே...