• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர் - 10

MK9

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
16
20
18
Tamil nadu
மலர் - 10

அறிவு மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவன் இரவு தான் வீடு திரும்பினான்.

இருவருக்காகவும் காமாட்சி, அந்தணன் இருவரும் திண்ணையில் அமர்ந்தபடி காத்திருந்தனர்.

“அறிவு இப்பதான் வரீங்களா?” அந்தணன் மகனிடம் கேட்க,

“எப்பா வந்தா என்ன? கஸ்தூரி நான் ராத்திரிக்கு சமைச்சிட்டேன். நீங்க சாப்பிடுங்க. எந்த வேலையும் கிடையாது. பக்கத்து ஊரில் கூத்து நடக்கிறது நானும், உங்க மாமாவும் போயிட்டு வரோம்.”

“அத்தை கொஞ்ச நேரம் இருங்க. நானும் முகம் கழுவிட்டு சேலை மாத்திட்டு கூத்து பாக்க வரேன்.”

பெரியவர்கள் இருவரும் நெளிந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அறிவு தலையில் அடித்துக் கொண்டான்.

“அம்மா நீங்க கிளம்புங்க. இவளுக்கு கூத்து நான் காட்டுகிறேன்.” என்றவன் சட்டை பையில் கை விட்டு 500 ரூபாய் எடுத்து தந்தை சட்டை பாக்கெட்டில் வைத்தவன் “பாத்து போயிட்டு வாங்க.” என்றான்.

“இப்போ எதுக்கு என்ன விடல மாமா?” கஸ்தூரி முறைத்துக் கொண்டு நின்றாள்.

“லூசு லூசு. திங்க மட்டும் தான் லாயக்கு நீ. என் அக்காவுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செஞ்ச.. நம்ம வாழ்க்கையில் ஒரு இழவும் தெரியாமல் மரமண்டையா இருக்க.” கடுகு போல் பொரிந்து தள்ளி விட்டு உள்ளே சென்று விட்டான்..

“மாமா… எதுக்கு இப்படி கோபப்படுறீங்க?” கேட்டுக் கொண்டே பின்னால் ஓடி வந்தவள் உள்ளே சுவரோரம் பாயில் மல்லிகை பூக்கள் கொட்டி கிடப்பதை பார்த்து விழிகளை விரித்தாள். இப்போது புரிந்து போனது.

வெட்கத்தில் முகம் குப்பென குங்கும பூ போல் சிவந்து போனது.

மனைவி வெட்கத்தை ரசித்தவன் அவள் இடுப்பை வளைத்து பிடித்து “என்ன டி இப்போ புரிஞ்சுதா?” ரகசியமாக கேட்டான்.

“ம்.” வார்த்தைகள் சத்தமாக வர மறுத்து.

மனைவியை கையில் அள்ளிக் கொண்டவன் “சோறு தண்ணிலாம் யாருக்கு டி வேண்டும்?. இன்னைக்கு வேற விருந்து தான் நமக்கு.” என்றவன் அவளை முழுதாக ஆட்கொண்டான்.

இரு ஜோடிகளின் வாழ்வும் மிக இனிமையாக சென்றது. கஸ்தூரி தன் நல்ல குணத்தால் காமாட்சியை மாற்றி விட்டாள். முன்பு போல் எடுத்த எடுப்பில் சுருக்கு சுருக்கென்று பேசுவது கிடையாது. தேவையற்ற தோழிகள் கிடையாது. ஆடம்பர செலவு கிடையாது. முழுவதும் தன்னை மாற்றிக் கொண்டார்.

கஸ்தூரி வேலைக்கு செல்வதால் தினமும் எழுந்து சமைத்து பொறுப்பாக நடந்து கொள்வாள்.

தன் மகளிடமும் பாசமாக நடந்து கொள்கிறாள். வாராவாரம் சனிக்கிழமை மகள் வீட்டுக்கு சென்று வேலைகள் செய்து கொடுத்து தின்பண்டங்கள் செய்து வைத்து விட்டு வந்து விடுவார்.

ஓய்வாக இருக்கும் போது உடல் ஒத்துழைக்கும் போது அந்தணன், காமாட்சி இருவரும் அருகில் கிடைக்கும் வேலைகளை செய்து குடும்ப செலவை பார்த்துக் கொண்டனர்.

மகள், மருமகள் இருவரும் ஒரே நேரத்தில் கருவுற்று இருக்க இரட்டிப்பு ஆனந்தம் அவருக்கு.

“கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?” என்பது போல் பூரிப்பில் மகளையும் சென்று பார்த்து கொள்வார் மாலை பஸ் பிடித்து மருமகளையும் வந்து பார்த்து கொள்வார்.

கஸ்தூரி குடும்பமும் பக்கத்து தெருவில் இருப்பதால் அவர்களும் பார்த்துக் கொள்வார்கள்.

“மலர் இரு மா. நான் தான் வரேன்னு சொன்னேனே. அதுக்குள்ள என்ன அவசரம்?” மனைவியை கடிந்து கொண்டு ஓடி வந்தவன் அவள் பிடித்திருந்த பானையை வாங்கி தான் சோறு வடித்து விட்டான்.

சோறு கஞ்சியை எடுத்து கொஞ்சமாக உப்பு போட்டு ஆற்றி கொண்டு வந்தவன்
“ இந்தா மா குடி. நான் கீரை கடையுறேன்.”

“நீங்களே எல்லா வேலையும் செஞ்சா நான் என்ன தான் செய்கிறது. அப்புறம் எப்படி சுகப்பிரசவம் ஆகும்?”

“அதெல்லாம் ஆகும். பிள்ளையை சுமக்கும் உன்னை நான் தான் சுமக்கனும். நீ அமைதியா கஞ்சி தண்ணி குடி மா. நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்.” மென்மையாக கூறியவன் கட கடவென வேலைகள் செய்தான்.

திருமணம் ஆன நாளில் இருந்து முகத்தை சுருக்கி கூட ஒரு வார்த்தை வருந்தும் படி வசீகரன் பேசியது கிடையாது. மலர் குரல் உயர்த்தி பேசினாலும் தன்மையாக பதில் சொல்லி அவளுடைய கோபத்தை கூட தொலைய வைத்து விடுவான்.

மசக்கையாக இருப்பது தெரிந்த நாளில் இருந்து மனைவியை அமர வைத்து வேலை செய்கிறான். காமாட்சி வரும் நாட்களில் மட்டும் தான் வேலை செய்ய மாட்டான்.

“என்ன அண்ணா சமையல் காரனாவே ஆகிட்ட போல?. உன் பொண்டாட்டி வந்ததும் உன்னை ஆட்டி படைக்கிறாள் போல?” அண்ணி என்ற மரியாதை இல்லாமல், வயதுக்கு தகுந்த மரியாதையும் கொடுக்காமல்,
கேட்டுக் கொண்டே மூன்று தங்கைகளும் உள்ளே வந்தனர்.

அவர்கள் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவள் மூவரும் வந்ததே போதும் என்ற எண்ணத்தில் “வாங்க வாங்க.” மலர் எழுந்தபடி வரவேற்றாள். “வாங்கமா.” வசீகரனும் சிரித்தபடி வரவேற்றான்.

“வரோம் அண்ணா. நாங்க கேட்டதுக்கு பதில் சொல்லலையே?” இரண்டாவது தங்கை கேட்க,

“என் பொண்டாட்டிக்கு நான் தான் செய்யனும். வேற யார் செய்வா?” சாந்தமாக பதில் கூறினான்.

“அவுங்க அம்மா எங்க?”

“என் பொண்டாட்டி, பிள்ளையை நான் தான் பார்த்துக்கணும். அவங்க அம்மா பாத்துகுறது என்ன நியாயம். அதுக்காகவா கல்யாணம் பண்ணேன்?”

மூவருக்கும் பொறாமையாக இருந்தது. ‘நாங்க நொந்து போனோம். இவள் பார் கால் நீட்டி போட்டு இருக்க இடத்துக்கு சாப்பாடு வருது. சாப்பிடுறா.’ மூவரும் மரியாதை இல்லாமல் நினைத்துக் கொண்டனர்.

“உட்காருங்க சாப்பிடுங்க.” என்றவள் மூவருக்கும் சாப்பாடு போட போக
“நீ போய் உட்கார். எப்படி மூச்சு வாங்குது பாரு. நான் போட்டு கொடுக்கிறேன்.” மனைவியை தடுத்து தங்கைகளுக்கு தானே சாப்பாடு போட்டு கொடுத்தான்.

“உன் பொண்டாட்டி எங்களுக்கு வேலை செய்ய கூடாதா அண்ணா?” மூன்றாவது தங்கை மலரை முறைத்துக் கொண்டு கேட்க,

“செய்ய கூடாதுன்னு கிடையாது. ஆனால் என் பொண்டாட்டி எனக்கு வேலை செய்வதில் ஒரு நியாயம் இருக்கு. உங்களுக்கு எதுக்கு செய்யணும்?”

மூவருக்கும் புகைந்தது. ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் சாப்பிட்டனர். இவர்கள் இங்கு வந்ததற்கும் காரணம் உண்டு. எதிர்காலத்தில் தாய்மாமன் சீர் செய்ய மூவருக்கும் ஆள் இல்லை. மூவரின் கணவர்களும் உங்கள் அண்ணன் உறவை புதுப்பித்து விட்டு வாருங்கள் என்று துரத்தி விட்டு விட்டனர். தாய்மாமன் சீர்வரிசை என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டிக் கொள்ளவே வந்து இருக்கின்றனர்.

மூவரும் பேசுவதை மலர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிரித்த முகமாக நின்று இருந்தாள்.

“உன் பொண்டாட்டி உண்டாகி இருக்கேனு பாக்க வந்தோம் அண்ணா. வலையகாப்புக்கு தான் நீ எங்களை கூப்பிடல. எங்களை ஒதுக்கி விட்டுட்ட. எங்களுக்கு மனசு தாங்கல அதான் வந்துட்டோம்.” அண்ணன் மீது குற்றம் சுமத்தினர் சாமர்த்தியமாக.

“நீங்க யாரும் கல்யாணத்துக்கு வரல. நான் போன் பண்ணாலும் எடுக்கல. அதான் அதுக்கு மட்டும் எதுக்கு வீடு தேடி வந்து அவமான படனும்னு சொல்லல.”

“உறவு இல்லனு ஆகாது அண்ணா. நாங்க மூன்று பேரும் உன் கூட பிறந்த ரத்தம்.”

“நான் இல்லனு சொல்லல. அதுக்காக உங்க காலை பிடிக்க முடியாது.” பட்டென்று கூறி விட்டான்.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இன்னும் கொஞ்சம் சாப்பாடு வச்சுக்கோங்க.” என்று மலர் பரிமாறினாள்.

“பிரசவம் எப்போது அண்ணா?”

“இன்னும் இரண்டு வாரம் இருக்கு.”

“பிரசவம் அவுங்க அம்மா வீட்டில் தானே பாப்பாங்க. நீ தனியா இருப்ப. உனக்கு சாப்பாடு என்ன பண்ணுவ. நான் வந்து தங்கிக்கிறேன்.” மூத்த தங்கை சொல்ல,

“பிரசவம் நடந்தால் என்ன மா. நானும் அங்க தான் இருப்பேன். ஒரு மாதத்தில் கூட்டிட்டு வந்துடுவேன். உங்களுக்கு எதுக்கு சிரமம். எனக்கு சோறு ஆக்கி போட்டுட்டு இருந்தா உன்னால வேலைக்கு போக முடியாது.”

முன்னொரு காலத்தில் தங்கைகள் கூறிய வார்த்தையை இன்று அவர்களுக்கு எதிராக மாறி போனது.

மூவரும் எதுவும் செய்ய முடியாத நிலை.
“அண்ணா பிரிட்ஜ் எங்க வாங்குன? என் வீட்டுல ரிப்பேர் ஆயிடுச்சு.” மூன்றாவது தங்கைக்கு வந்ததில் இருந்து அந்த பிரிட்ஜ் மீது தான் கண்.

“மலர் நீ வாம்மா சாப்பிடு. பிள்ளை தாச்சி எவ்வளவு நேரம் பட்டினி கிடப்ப?” மனைவியை அமர வைத்து தட்டில் சோறு போட்டு கொடுத்தவன் தங்கை கேள்வியை தவிர்த்தான்.

“மாப்பிள்ளை…” அந்தணன், காமாட்சி இருவரும் உள்ளே வந்தனர்.

“அம்மா, அப்பா வா.”

“அத்தை மாமா வாங்க. சாப்பிடுங்க.” அவர்களுக்கும் உணவு பரிமாற,

மூவரையும் பார்த்ததும் புரிந்து கொண்டனர் தங்கைகள் என்று.

அந்தணன், காமாட்சி சாதாரணமாக அமர்ந்து சாப்பிட மூவருக்கும் வயிறு எரிந்தது.

“மாப்பிள்ளை இன்னைக்கு நாள் நல்லா இருக்கு. அதான் உங்களையும், மலரையும் அழைச்சிட்டு போக வந்தோம். திடீரென வலி வந்துவிட்டால் இதுக்கும், அதுக்கும் அலைய முடியாது. அது மலருக்கும், குழந்தைக்கும் நல்லது இல்லையே.”

“நீங்க சொல்றதும் சரிதான் மாமா. நான் போய் வாடகைக்கு கார் எடுத்துட்டு வரேன். இந்த நேரத்தில் பஸ் ரொம்ப கூட்டமா இருக்கும்.”

“நாங்க கார்ல தான் வந்தோம். அறிவு கார் எடுத்து தான் அனுப்பி விட்டான். காலையில் வந்து கஸ்தூரி வீட்டில் இருந்து அழைச்சிட்டு போய்ட்டாங்க. அதான் அறிவு வர முடியல.”

“அம்மா கஸ்தூரி வீட்டில் இல்லையா?”

“இல்ல மலர். வீடு ரொம்ப சின்னது தானே. அதான் ரெண்டு பிள்ளைதாச்சிகள் ஒண்ணா இருக்க வேண்டாம்னு அழைச்சிட்டு போய்ட்டாங்க.”

“நீங்க இங்க வந்து தாங்கிக்க வேண்டியது தானே. வசதி இல்லாத வீட்டில் என் அண்ணன் எப்படி இருக்கும்.” இரண்டாவது தங்கை கோபமாக கேட்டாள்.

“மாப்பிள்ளை அங்க வந்து எப்போதும் தங்குவாங்க மா. இது ஒன்னும் முதல் தரம் இல்லை. மாப்பிள்ளை வசதி இருக்கா இல்லையான்னு பாக்க மாட்டாங்க. இருக்கிறது வச்சு சந்தோஷமா இருக்குற தங்கம். உங்களுக்கு வசதி பத்தாது. நீங்க இங்க வந்த பிறகு பார்க்கலாம். நான் உங்களை அங்கு கூப்பிடல.” காமாட்சி கோபப்படாமல் அவள் வாயடைத்தார்.

மூவருக்கும் முகம் சுருங்கி போனது. அதிலும் தன் அண்ணன் தங்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடாததால் இன்னும் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

“அண்ணா நாங்க கிளம்புறோம்.”

“சரி மா. உங்க அண்ணி பிரசவம் முடிந்ததும் நான் பாக்குறேன்.”

“அண்ணா வீட்டு சாவி கொடுத்திட்டு போ. நாங்க அப்போ அப்போ வந்து தங்கி பாத்துகிறோம்.”

“இல்ல மா. நீங்க வீட்டை திறந்து போட்டுட்டு தான் கடை தெருவு எல்லாம் போவீங்க. வீட்டுல மலர் நகை, எலக்ட்ரானிக் பொருள் எல்லாம் இருக்கு. பாதுகாப்பு இல்லை.” என்றான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் மனைவிக்கு பொழுது போக வேண்டும் என்பதால் டிவி வாங்கி இருந்தான்.

மூவரும் முகம் தொங்கி போய். கிளம்பி விட, வசீகரன் அலட்டிக் கொள்ளாமல் மனைவியை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றான்.

வந்ததும் முதலில் இருவரும் கஸ்தூரியை தேடி சென்றனர்.

“அண்ணா, அண்ணி.” முகம் முழுவதும் பூரிப்புடன் கஸ்தூரி வரவேற்ற அவள் குடும்பமும் இருவரையும் அன்பாக வரவேற்றது.

“கஸ்தூரி எப்படி இருக்க?”

“ஆமா நீங்க யாரும் பத்து மாசம் பார்க்கவே இல்லை. இன்னைக்கு தான் முதல் முறை பாத்துகுறீங்க.” அறிவு மூவரையும் கிண்டல் செய்ய,
மூவரும் சிரித்தனர்.

மூன்று நாட்களுக்கு முன்பு தான் அறிவும், கஸ்தூரியும் சென்று பார்த்து விட்டு வந்தனர்.

அனைவரும் ஒன்றாக இருக்கும் போது தனி சந்தோஷம் தான் எப்போதும். அதே போல் தான் கஸ்தூரி தாய் வீட்டில் இருக்கிறாள் என்று தான் பெயர் பகல் முழுவதும் மலருடன் பேசிக் கொண்டு மாமியார் வீட்டில் இருப்பாள். இரவில் தூங்க தான் தாய் வீட்டுக்கு வருவாள். அறிவு மட்டும் வேலைக்கு சென்று வருவான்.

வசீகரன் வந்ததில் இருந்து குடும்ப செலவுக்கு தேவையான அனைத்தையும் அவனே பார்த்துக் கொள்கிறான்.

நாட்கள் அழகாக சென்று கொண்டிருக்க, மலருக்கு நடு இரவில் வலி வந்து விட்டது.

வசீகரன் பதறாமல், மனைவியையும் டென்ஷன் இல்லாமல் பார்த்துக் கொண்டு மருத்துவமனை அழைத்து சென்றான்.

நான்கு மணி நேரம் கழித்து வசீகரன் தன் மகனை அவன் கையில் தாக்கினான். பிஞ்சு மொட்டை கையில் வாங்கும் போது விழிகள் கலங்கியது.
42 வயதில் திருமணம் செய்யும் போது “இனி இவனுக்கு குழந்தை பிறக்காது.” என்று கூறி கேலி செய்தவர்கள் முன்பு தன் மகன் நடமாட போகிறான். நினைக்கும் போதே ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது.

சுகப்பிரசவம் என்பதால் மலர் விழித்திருந்தாள். “இன்னும் வலி இருக்கா மா.?”

“இல்லைங்க. தம்பி பிறந்ததும் வலி இல்லை.” அவள் எழுந்து அமர உதவினான்.

குழந்தையை இருவரும் கொஞ்சிக் கொண்டிருக்க மொத்த குடும்பமும் உள்ளே ஓடி வந்தது.

முதலில் பேரனை காமாட்சி தான் தூக்கி முத்தமிட்டார். அவருக்கு ஆனந்த கண்ணீரே வந்து விட்டது. முதிர்கன்னி என்று கிண்டல் செய்யப்பட்டவள் இன்று கணவன், குழந்தை என்று சந்தோஷமாக பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது.

மூன்று நாட்கள் கடந்து அவளை வீட்டுக்கு அழைத்து வர அவளை இழிவு படுத்திய அனைவருக்கும் பொறாமை தூக்கலாக இருந்தது. “கோபப்படாத கணவன், முதலில் ஆண் பிள்ளை. காலதாமதமாக திருமணம் ஆனாலும் இவள் எவளோ சந்தோஷமா இருக்கா பாரு.” தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

தாயும் சேயும் நலமாக தேரி வர வசீகரன் ஏதாவது வாங்கி கொடுத்துக் கொண்டே இருக்க காமாட்சி சமைத்துக் கொண்டே இருந்தார். இங்கு சமைத்து பாதி கஸ்தூரிக்கு எடுத்து செல்லப்படும். அடுத்த மூன்று வாரத்தில் கஸ்தூரிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இரு குடும்பத்துக்கும் ஏக சந்தோஷம். காரணம் உண்டு அல்லவா.
அறிவு மகளை தனக்கு மருமகளாக மாற்றி கொள்ள முடிவு செய்து விட்டனர்.

எப்படியோ அனைவருக்கும் குறைவில்லா சந்தோஷம்.

திருமணத்துக்கோ, காதலுக்கோ வயது ஒரு தடையில்லை. அதற்கு உதாரணம் மலர், வசீகரன் தான்.

நல்ல உறவுகள் சுற்றி இருக்கும் போது கவலைகள் கூட மறந்து போகும். கஸ்தூரி மாதிரி.

எல்லாரையும் வாழ்த்தி விடை பெறுவோம்.

நன்றிகள்.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
வசீ அவனின் தங்கைகளை தவிர்த்தது நல்லது தான்.🤩
அவங்களை வீட்டுக்குள்ள விட்டா வசீயும் மலரும் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது.

உறவுகளுக்கு இடையில் நல்ல புரிதல் இருந்தாலே அங்கு சந்தோஷம் நிலை கொண்டிருக்கும் எப்பொழுதும் ❤️