• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர் - 5

MK9

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
16
20
18
Tamil nadu
மலர் - 5

அவ்விடத்தில் மயான அமைதி. காமாட்சி வசீகரனை முழுமையாக அளவிட்டார்.

‘42 வயது தோற்றம் கிடையாது. 30 வயது ஆள் போல் தான் இருந்தார். களையான முகம். ஆனாலும் அவருடன் யாரும் வரவில்லையே?’ அது அவர் மனதுக்கு நெருடலாக இருந்தது.

காமாட்சியோ சந்தேக பார்வையோடு “உங்களுக்கு இது இரண்டாவது கல்யாணமா? முதல் கல்யாணமா?”

“எனக்கு இது முதல் கல்யாணம். உங்க பொண்ணு தான் என் மனைவின்னு முடிவு பண்ணிட்டேன். அவுங்களுக்கு என்னை பிடித்து இருந்தால் திருமணத்தை உடனே வச்சுக்கலாம்.” வசீகரன் தலைகுனிந்து நிற்கும் மலரை பார்வையால் வருடியபடி கூறினான்.

“உங்க குடும்பம் வரலையா?”

“என் தங்கச்சி மூன்று பேரும் கல்யாண ஆகி அவுங்க வாழ்க்கையை தான் பாக்குறாங்க. கல்யாணத்துக்கு வருவாங்க.”

“ஓ!” காமாட்சி இழுக்க,

“அண்ணா நீங்க உங்க முடிவை சொல்லிட்டீங்க. எங்க வீட்டு பொண்ணு முடிவை நாங்க கேட்டு சொல்றோம். அவுங்க பெயர் மலர்.” கஸ்தூரி ஆனந்தமாக கூறினாள்.

“நான் காத்திருக்கேன் மா நல்ல முடிவுக்காக. அப்போ நான் கிளம்புறேன்.”

“அண்ணா இருங்க சாப்பிட்டு போகலாம்.”

“மலர் சம்மதம் சொல்லட்டும் அதுக்கப்புறம் உரிமையோடு சாப்பிடுறேன்.”

அனைவரையும் தாண்டி வந்தவன் மலர் அருகில் வந்ததும் “சீக்கிரம் நல்ல முடிவா சொல்லு மலர். நான் உணக்காகவும் உன் பதிலுக்காகவும் காத்திருப்பேன்.” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் முழு அன்போடு கூறினான்.

மலருக்கு தான் கற்பனை உலகில் நிற்பது போல் இருந்தது. கண்ணுக்கு குளிர்ச்சியாக அலங்காரம் பண்ணி, இதுக்கே மல்லிகை பூவை முன்னாள் போட்டு வந்து நின்றாலும், தட்டில் வைத்த நொறுக்கு தீனிகளை மட்டும் தின்று விட்டு பிடிக்கவில்லை என்று சொல்லி சென்ற ஆண்களுக்கு மத்தியில், அழுக்கு நைட்டியில், வாராத தலை, அலங்காரம் இல்லாத முகத்தை கண்டு,

“பிடித்திருக்கிறது இவள் தான் என் பொண்டாட்டி” என்று சொல்லி செல்லும் வசீகரன் வார்த்தை காய்ந்த மலருக்கு நீர் ஊற்றி உயிர் கொடுப்பது போல் இருந்தாலும், உயிர் பெற்ற மலரை பிடுங்கி கசக்கி தூர எரிந்தது போல் ஆகி விடுமோ என்று பயந்தாள்.

அவளை நிராகரித்த ஆண்கள் அனைவரும் கற்று கொடுத்த பாடத்தால் உள்ளம் உணர்ந்து கூறி சென்ற சம்மதத்தை நம்ப முடியாமல் திகைத்து திணறி நிற்கிறாள்.
மூச்சு முட்டியது.

“அண்ணி… உங்களுக்கு விருப்பம் இல்லனா கூட ஒன்னும் பிரச்சனை இல்லை. அடுத்து வேற ஒருத்தரை பார்க்கலாம். நீங்க இப்படி கலங்கி போக வேண்டாம்.” மலர் முகத்தில் தோன்றிய கலவரத்தை கண்டு அவளுக்கு ஆறுதலாக கஸ்தூரி கூறினாள்.

பிடித்து இருக்கா? பிடிக்க வில்லையா? என்று அவள் தாய் தந்தை கூட அவளிடம் கேட்டது கிடையாது. பொண்ணு பார்க்க வந்த ஆண்கள் அனைவரும் இவளை தான் வேண்டாம் என்று மறுத்தனரே தவிர இவள் யாரையும் மறுக்கவில்லை. அந்த வாய்ப்பு இவளுக்கு வழங்கப்படவில்லை.

பெற்றவர்கள் வழங்காத வாய்ப்பையும், மதிப்பையும், முக்கியத்துவத்தையும் வாழ வந்த பெண் வழகுகிறாள். உள்ளுக்குள் மலர்ந்து போனது சந்தோஷம்.

உதட்டில் மெல்லிய புன்னகையாக மிளிர விட்டவள், கஸ்தூரி கையை பிடித்து,
“பிடிக்கலனு சொல்லல கஸ்தூரி. ஆனால் ரொம்ப ரொம்ப பயமா இருக்கு. இப்போ பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டு திரும்ப பிடிக்கலனு சொல்லிட்டால். என்னால தாங்க முடியாது.” என்றவள் ஒரு நொடிக்கும் குறைவான மெளனத்தின் பின் “நான் மறுக்கிற இடத்திலும் இல்லை.. அதற்கான வயதிலும் இல்லை கஸ்தூரி.”
என்றாள் கலங்கியபடி.

அவள் வலியின் ஆழம் தான் அவள் வார்த்தைகள் என்பதை கஸ்தூரியால் நன்றாக உணர முடிந்தது.

“அண்ணி.. உங்க வலியை என்னால கேட்க மட்டும் தான் முடியும். உணர முடியாது. அதன் ஆழத்தின் ஆணி வேரை உள்வாங்க முடியாது. ஆனால் நீங்க இருக்க இதே நிலையில் தான் வசீகரன் அண்ணாவும் இருக்கார். அவர் நிலை உங்களை விட வேற யாருக்கும் முழுமையா புரியாது. புறிஞ்சிக்கவும் முடியாது. வெளியே இருந்து பாக்குறவங்க ஒன்னு மட்டும் தான் சொல்வாங்க… “இத்தனை வயசுக்கு மேல இதுங்க கல்யாணம் பண்ணி என்ன பண்ண போகுதுங்க னு.?” ஆனா அதுக்காக இப்படியே இருக்கணும்னு அவசியம் கிடையாது. உங்க வலியை அண்ணன் உணர்ந்தார். அதான் உடனே சம்மதம் சொல்லிட்டார். இனி உங்க விருப்பம். இதுல எங்களை, உங்க அம்மாவை, ஜாதகத்தை எதையும் உள்ள கொண்டு வந்து யோசிக்காதீங்க. உங்களுக்காக யோசிங்க.” நிதானமாக கூறியவள்,

“ மாமா எதுக்கு மச மசன்னு நிக்கிற? வேலைக்கு நேரமாவது கிளம்பு.” கணவனை விரட்டினாள்.

காமாட்சி தன் மருமகளை கண்கள் கலங்க பார்த்தவர் “எனக்கு அவர் நல்லவர்னு தான் தோணுது.” மகள் முகம் பார்க்காமல் கூறி சென்றார்.

தொலை தூரத்தில் தெரியும் வெளிச்சம் போல் இதயத்தில் சிறு நம்பிக்கை மகள் திருமணத்தை பார்த்து விடுவோம் என்று.

மலர் மனதில் சஞ்சலத்தோடு வேலைக்கு கிளம்பினாள். எதிலும் முழு ஈடுபாடு இல்லை. தோல்வியும்,bஒதுக்கத்தையும் மட்டுமே எதிர் கொண்டால் நல்லது நடந்தும் அதை மனம் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறி தவிக்கிறாள்.

இதுவே முதல் நிகழ்வாக இருந்து இருந்தால் பெண்களுக்கே உரிய கனவில் வெட்கத்தோடு பூரிப்புடன் சுற்றி திரிந்து இருப்பாள்.

வேலை செய்யும் இடத்தில் கூட யோசனையாக வேலை செய்ய, கஸ்தூரி அவளை தொந்தரவு செய்யாமல் அவள் போக்கில் விட்டு விட்டாள்.

“கஸ்தூரி…” தன் புடவை முகப்பை சுழ்றியபடி வந்து நின்றாள்.

“அண்ணி சொல்லுங்க.”

மலருக்கு வாய் திறந்து கூற கூச்சம், அப்படியே நின்று இருந்தாள். கஸ்தூரி பல் தெரிய சிரித்தவள் “அண்ணாக்கு ஃபோன் பண்ணி உங்களுக்கு சம்மதம்னு சொல்லிடவா…?” அவளின் தயக்கமும், வெட்கமும் உணர்ந்து கேட்டாள்.

“ம்…” என்று மெல்லிய வெட்கத்தோடு தலை அசைத்தவள் தன் வேலையை சாதாரணமாக பார்க்க தொடங்கினாள்.

மலர் பெரிதாக தன் விருப்பத்தை காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவள் முகத்தில் மின்னல் கீற்றாக மகிழ்ச்சி தெரிந்தது.

மலரின் மலர் முகம் கண்டு சந்தோஷப்பட்டுக் கொண்டவள் ‘உங்க நல்ல மனசுக்கு கண்டிப்பா நீங்க நல்லா இருப்பீங்க அண்ணி.’ என்று நினைத்துக் கொண்டவள் அப்போதே வசீகரன் எண்ணுக்கு அழைத்தாள்.

அழைப்பு ஏற்றதும் “மலர் என்ன சொன்னான் தங்கச்சி?” வசீகரன் பரபரப்பாக கேட்டான்.

“உங்க மலர் சம்மதம் சொல்லிட்டாங்க அண்ணா. இப்போ சந்தோஷமா?”

“வெறும் சந்தோஷம்னு வார்த்தையால் சொல்ல முடியாது மா. எங்கள் நிலமைக்கு அதை அனுபவிக்கும் போது தான் புரியும். உண்மையா நான் உனக்கு தான் நன்றி சொல்லனும்.”

“எதுக்கு அண்ணா?”

“மலரை எனக்கு அடையாளம் காட்டியதற்கு.”

“அவுங்களை ஒரு முறை பார்த்ததுக்கே பல வருஷம் வாழ்ந்த மாதிரி பேசுறீங்க. உங்களுக்கு அவுங்களை முன்னாடியே தெரியுமா?” வசீகரன் மலரை உரிமையாக பார்த்த பார்வையில் இருந்தே இந்த கேள்வி கஸ்தூரி மனதை அரித்துக் கொண்டிருந்தது. அதை இப்போது கேட்டு விட்டாள்.

“இல்லை மா. நான் இன்னைக்கு தான் மலரை பார்த்தேன். அதுவும் உன்னால தான். ஆனால் அவள் முகம் பார்த்ததும் என் மனதுக்குள் அப்படி ஒரு அமைதி. என் மனதில் இருந்த மொத்த சங்கடமும் நீங்கிடுச்சு.”

“என்னமோ சொல்றீங்க.. ஆனால் உங்களுக்கு அவுங்களை பிடிச்சு இருக்குன்னு உங்க பார்வையை வச்சே புரிஞ்சி கிட்டேன் அண்ணா.”

“கஸ்தூரி இன்னொரு உதவி வேண்டும்.”

“என்ன உதவி அண்ணா?”

“மலர் நம்பர் வேண்டும்?” தயங்கியபடி கேட்டான்.

“சொல்றேன் எழுதிக்கோங்க அண்ணா.” மலர் தொலைபேசி எண்ணை கொடுத்தவள் “அண்ணா உங்க தங்கச்சிகள் உங்க கல்யாணத்தை ஏத்துப்பாங்களா?”

“ஏத்துகலனாலும் இந்த கல்யாணம் நடக்கும் மா. நீங்க பயப்பட வேண்டாம்.” என்று உறுதியளித்தவன் மலர் எண்ணை “என் மலரானவள்” என சேவ் பண்ணிக் கொண்டான்.

மீசைக்கும் வெட்கம் முளைக்கும் போல.. அவள் எண்ணை பதிவு செய்து அதை பார்த்து வெட்க சிரிப்பு சிரிக்கிறான்.

“வசீ உனக்கு ஒன்னும் பதினெட்டு வயசு கிடையாது டா. இளம் பருவத்தில் பண்ண வேண்டியது எல்லாத்தையும் இப்போ பண்ணிட்டு இருக்க. வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ.” தன் இதயத்தில் தட்டிக் கொடுத்து தனக்கு தானே கூறிக் கொண்டான்.

காதலிக்கவோ, ஆசைப்படவோ வயது முக்கியம் கிடையாது. நாம் உற்சாகத்துடன் இருக்கும் போது வயது கூட குறைந்து விடும். மிகவும் ஆரோக்கியமாக உணர்வோம்.

மனம் தான் துவண்டு போக கூடாது. மனம் துவண்டால் உடல் பலவீனமாகி 20 வயதில் கூட 50 வயது உணர்வை தரும்.

‘இப்ப கால் பண்ணா பேசுவாளா? இல்லை கோபப்படுவாளா?’ மனம் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் ரயில் தடம் போல் தடக் தடக் என்று அடித்துக் கொண்டது.

“வசீ இன்னும் கல்யாணம் கூட முடிவாகல டா. அதுக்குள்ள ஏதோ மேய்ச்சலுக்கு போகாத மாடு மாதிரி அலையாத டா. அந்த பெண்ணுக்கு விருப்பம் இருந்தால் கூட உன் நடவடிக்கையை பார்த்து வேண்டாம்னு சொல்லிட போகுது.

ஏற்கனவே 42 வயசு ஆகிடுச்சு. இந்த பொண்ணும் வேண்டாம்னு சொல்லிட்டா உனக்கு பொண்ணே கிடைக்காது. இப்படியே கஞ்சி வச்சி கொடுக்க ஆள் இல்லாமல் சுக, துக்கத்தில் பங்கெடுத்துக் ஆள் இல்லாமல் அனாதையாக ஒண்டி கட்டையா அனாதையாக கிடக்க வேண்டியது தான். வேற வழி கிடையாது.” தனக்கு தானே அறிவுரை பக்கம் பக்கமாக கூறிக் கொண்டாலும் அவன் விரல்கள் அவன் உணர்வில் இல்லாமல் அவள் எண்ணை அழுத்தி விட கைகள் நாட்டியம் போல் ஆடியது. நடுக்கத்தில்.

“டேய் நீ துப்பாக்கி பிடிச்ச கை. ஒரு ஃபோன் பிடிக்க இப்படி நடுங்குது.” தன்னை தானே கிண்டல் செய்து கொண்டாலும் அவள் அழைப்பை ஏற்பாளா? என்று உள்ளம் பயத்தில் அதி வேகத்தில் சுருங்கி விரிந்தது.

அவன் இதய துடிப்பு அதிகரிக்க நெஞ்சு குழி மேலும் கீழும் ஏறி இறங்க அவனை அதிகமாக திண்டாட வைத்து கடைசி ரிங்கில் அழைப்பை ஏற்றவள், “ஹலோ…” என்றாள் மெல்லிய குரலில்.

மலர் குரலை கேட்டதும் ஜில்லென்ற குளிர் காற்று அவனை அணைப்பது போல் உணர்ந்தவன் கண் மூடி அவள் குரலை அனுபவித்து நிற்க,

மலரோ “ஹலோ.. ஹலோ.. யாருங்க…?” நீண்ட நேரம் அழைத்து பார்த்து விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.

சத்தம் இல்லாத நிசப்த்ததில் உணர்வு பெற்ற சிலையாக மீண்டெழுந்தவன் “ஹலோ…” என அவசரமாக பேசினான்.

அதற்குள் அவள் சென்று விட்டாள் தனியாக பேசிக் கொண்டிருந்தவன் “உனக்கு எல்லாம் இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்காது டா.” தன்னை தானே திட்டிக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டவன் மீண்டும் அழைத்தான்.

தொடரும்.....
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
அடப்பாவி 🤣🤣🤣
ஆனாலும் வசீ வசீ ன்னு சொல்ல வைக்காம விடக்கூடாது
 
  • Like
Reactions: MK9

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
42 வயசு இப்ப 24 வயசா மாறிடுச்சு 🤣🤣
அதான் இத்தனை தடுமாற்றம் 🤩

வசீகரன் மலரை வசியம் பண்ணிட்டான் ❤️
 

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
அய்யோ வசீ... என்னப்பா வெட்கமா 🤣🤣🤣