மலர் - 6
அதே எண்ணில் இருந்து மீண்டும் அழைப்பு வருவதை கண்டு அலட்சியமாக விட்டாள்.
மீண்டும் மீண்டும் அழைக்க சலிப்பாக அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் “ஹலோ! யாருங்க விடாமல் தொந்தரவு பண்றது?”
‘பாருடா என் மலருக்கு கோபம் கூட வருது!.’ என்று நினைத்துக் கொண்டவன் “யாரா இருக்கணும்னு நினைக்கிறீங்க?” எதிர் கேள்வி கேட்டு பேச்சில் விளையாட்டை தொடங்கினான்.
‘யார் இது ஃபோன் பண்ணிட்டு லூசு மாதிரி பேசுறது?’
“ஹலோ நீங்க யாருன்னு சொல்லுங்க. இல்லனா நான் வச்சிடுவேன்.” மிரட்டினாள்.
“என்னுடைய குரலை கூட கண்டுபிடிக்க தெரியலையா?”
“உங்களை கண்டு பிடிக்க நீங்க எனக்கு என்ன சொந்தமா? பந்தமா?”
“மொத்தமா உனக்கு தான் சொந்தமாக போறேன்.” மெல்லிய சிரிப்போடு வசீ கூற,
மலர் விழிகள் பெரிதாகியது தேனி கொட்டியது போல் சுருக்கென்று புத்தியில் உரைக்க “நீங்களா?” என்றாள்.
அவள் தன்னை அடையாளம் கண்டு கொண்டாள் என்பதை நினைக்கும் போதே நெஞ்சில் குற்றால சாரல் அடிக்க,
“நீங்களா? அது என் பெயர் இல்லையே?” பொய்யான ஆச்சரியத்துடன் கேட்டான்.
அவன் விளையாட்டு புரிந்தவள் “நான் வேலையில் இருக்கேங்க. அப்புறம் பேசவா?”
“எத்தனை மணிக்கு திரும்பி கூப்பிடனும்?” அவளுடன் இன்னும் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்ற தவிப்பில் கேட்டான்.
“ஏழு மணிக்கு பண்ணுங்க. பேசலாம்.” முலை விட்ட வெட்கத்தோடு கூறினாள்.
“கண்டிப்பா.. சரியா ஏழு மணிக்கு கூப்பிடுவேன். நீ எடுத்து பேசணும்.” அன்பு கட்டளையுடன் கூறி விட்டு வைத்தான்.
மலரின் பூ முகம் வெட்கத்தில் மின்னியது. அதே தேஜசுடன் வேலை செய்தவளோ ‘இவர் விளையாட்டு தனமாக இருக்கார்.’ அவனை பற்றியே யோசித்துக் கொண்டு நேரம் எப்போது ஆகும்? வீட்டுக்கு எப்போது செல்வேன்? என காத்திருந்தாள்.
பள்ளியில் குழந்தைகள் மணி அடிப்பதற்காக காத்திருப்பது போல் காத்திருந்தாள்.
வசீகரன் போனை கையில் பிடித்தபடி மணி எப்போது ஏழு ஆகும் என்று தான் காத்திருந்தான். ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை போனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.
“நமக்கு தேவைப்படும் போது தான் இந்த நேரம் கூட கழுத்தறுக்கும். ஆமை மாதிரி நகருது. நேரம் போக வேண்டாம்னு யோசிக்கும் போது மின்னல் மாதிரி போகும்.” புலம்பி கொண்டிருந்தார்.
இருவரையும் காத்திருக்க வைத்த நேரம் ஏழு மணியை தொட்டதும் ஒரு நொடி கூட வீணாக்காமல் உடனே அழைத்து விட்டான்.
வேலைகளை முடித்து விட்டு திண்ணையில் அமர்ந்து இருந்தவளோ வசீகரன் அழைப்புக்காக காத்திருந்தாள்.
முள் எப்போது தொடும் என்று காத்திருந்து அழைப்பது போல் தோன்றியது அவளுக்கு. ஆனாலும் மனதில் அதீத சந்தோஷம்.
முதல் முறை தன் போனில் தன்னிடம் மட்டுமே பேச ஒருவர் அழைப்பது மலருக்கு தனி உணர்வாக இருந்தது.
அழைப்பை ஏற்று “ஹலோ…!” என்றாள் மெல்லிய குரலில்.
“மலர் என்ன பண்ற?”
“சும்மா தான் இருக்கேன்.”
“சாப்டியா?”
“இல்லங்க. 9 மணி ஆகும். நீங்க சாப்டீங்களா? என்ன பண்றீங்க?”
“இன்னும் இல்லை. இனி தான் தெரிந்தது வைத்து ஏதாவது உருட்டி சமையல்னு
ஏதாவது உருட்டி பிரட்டி செய்யனும். இப்போதைக்கு உன் கிட்ட பேசிட்டு மட்டும் தான் இருக்கேன்.”
அவன் தனித்து சமைத்து சாப்பிட வேண்டும் என்றதை கேட்டு மனம் கனத்து போனவள். “ நான் சாப்பாடு கொடுத்து விடவா?”
அவள் கேட்டதே அவனுக்கு வயிறு நிறைந்து போனது. “எங்கிருந்து எங்க கொடுத்து விடுவ?”
“ரொம்ப தூரம் இல்லையே… கால் மணி நேரம் தானே ஆகும். தம்பி கிட்ட கொடுத்து விடுகிறேன்.”
“வேண்டாம் மா. எனக்கு நீ கேட்டதே போதும். இன்னைக்கு ஒரு நாள் கொடுத்து விடுவ. நாளைக்கு யார் கொடுப்பா?”
“நான் தான் தருவேன். வேற யார்?”
ஒரு நொடி கூட யோசிக்காமல் கேட்டாள்.
“என் பொண்டாட்டியா நம்ம வீட்டுல சமைச்சு கொடு. உன் கையால் மன நிறைவோடு பரிமாறு. தினமும் உரிமையா சாப்பிடுறேன். உன் தம்பி கொண்டு வந்து கொடுத்தால் நான் சாப்பிட மாட்டேன்.”
“அப்போ நீங்க தான் கல்யாணத்துக்கு பேசணும்?” முகம் முழுவதும் வெட்கத்துடன் கூறினாள்.
மலரை தேடி வந்த கஸ்தூரி காதில் மலர் கூறியது விழ, யோசனையாக மலரை தொந்தரவு செய்யாமல் உள்ளே சென்று விட்டாள்.
அவளே நேரடியாக கல்யாணத்தை பற்றி பேசிய பிறகு இவன் ரெக்கை இல்லாமல் வானத்தில் பறந்தான்.
“மலர் நான் சீக்கிரம் உங்க வீட்டுல பேசுறேன். உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்.” குதூகலமாக கூறினான்.
இருவரும் தூக்கம் மறந்து பேசிக் கொண்டிருந்தனர். மலரை யாரும் தொந்தரவு செய்யவில்லை. அவள் தாய், தந்தை இருவருமே மகள் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை கண்டு நீண்ட வருடங்களுக்கு பிறகு இருவரும் சிரித்தனர்.
அவள் மனப்பூர்வமான சம்மதம் கிடைத்த பிறகு அடுத்த நாள் காலையே வசீகரன் மலர் வீட்டுக்கு வந்து விட்டான்.
ஆனால் மலர் வேலைக்கு சென்று இருந்தாள்.
“வசீகரனை காமாட்சி அடையாளம் கண்டு கொண்டார். மாப்பிள்ளை வாங்க. உள்ள வாங்க. எதுக்கு வெளியவே நிக்கிறீங்க?” உரிமையோடு அழைத்தார்.
“யார் காமாட்சி இது?” ஏழுமலை கேட்க,
“நான் தான் ரத்திரி சொன்னேனே. இவர் தான் அவர். நம்ம மாப்பிள்ளை.”
அவரும் மரியாதையாக வரவேற்க.. சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசினான்.
“நான் கேட்டதுக்கு நீங்க ஒன்னும் எதுவும் பதில் சொல்லல?”
“நாங்க பதில் சொல்ல என்ன தம்பி இருக்கு. பல வருஷத்துக்கு பிறகு என் பொண்ணு நேத்து தான் சிரித்தாள். அந்த சிரிப்பே போதும் எங்களுக்கு.
நாங்க ஒரு முறை உங்க வீட்டை பாத்துடுறோம். அதுக்கப்புறம் முறையா பேச வேண்டியதை பேசிக்கலாம்.” குடும்ப தலைவராக ஏழுமலை கூற,
“ரொம்ப சந்தோஷம். நீங்க இப்போவே வந்தாலும் எனக்கு சம்மதம் தான் மாமா. நல்ல பதில் கிடைத்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
“மாப்பிள்ளை நீங்க சீர் சினத்தி என்ன எதிர் பாக்குறீங்க?” காமாட்சி தயங்கியபடி கேட்டார். அவர் வசதியை தாண்டி கேட்டு விட்டால் செய்ய முடியாது. அந்த கவலை அவருக்கு.
“உங்க பொண்ணு மட்டும் தான் நான் சீரா கேக்குறேன். வேற ஒரு குண்டுமணி கூட எனக்கு வேண்டாம். என் வார்த்தையை மீறி சீர்வரிசை கொடுத்தாலும் நான் எடுத்துட்டு போக மாட்டேன். பெண்ணை மட்டும் குடுங்க. சொந்தமா வீடு இருக்கு. வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் வீட்டுல இருக்கு. நகை நட்டு எல்லாம் கல்யாணம் ஆன பிறகு என் வருமானத்தில் நான் வாங்கி போட்டுபேன்.” தீர்மானமாக கூறினான்.
இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்வது பெருமையாக இருந்தாலும் அவரின் தங்கச்சிகள் என்ன சொல்வார்கள்?’ யோசனையாக இருந்தது.
“தம்பி நாங்க உங்க வீட்டுக்கு வரும் போது உங்க தங்கச்சி ஒருத்தர் இருந்தாலும் போதும்.”
வசீ நீண்ட நேரம் யோசித்தவன் “கண்டிப்பா இருப்பாங்க மாமா நீங்க வாங்க. வரதுக்கு முன்னாடி ஃபோன் பண்ணிட்டு வாங்க.”
அடுத்த நாள் மலர் வீட்டில் இருந்து மலரை தவிர்த்து மற்ற அனைவரும் வசீ வீட்டுக்கு கிளம்பினார்.
“கஸ்தூரி எதுக்கு டி சொந்தக்காரங்க யாரையும் அழைக்க கூடாதுன்னு சொன்ன?”
“அதுங்க வந்தா நல்லது நடக்க விடாதுங்க. மாப்பிள்ளைக்கு அப்பா அம்மா இல்லை, வேலை இல்லனு சொல்லி. நடக்க இருக்க நல்ல காரியத்தை நடக்க விடாமல் பண்ணிடுங்க. இதுவரைக்கும் இப்படி தானே நடக்குது. அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.”
“நீ சொல்றதும் சரி தான். ஆனா என் அம்மா நீ சொல்றதை எல்லாம் கேக்குறது தான் ஆச்சர்யமாக இருக்கு!”
“அப்படியே இருக்கட்டும். விடுங்க.”
வசீ வெளியவே நின்று இருந்தான். அனைவரும் வந்ததும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றான்.
அவன் மூன்று தங்கச்சிகளும் நின்று இருந்தனர். ஆனால் ஒருத்தர் முகத்தில் கூட நடிப்புக்கு கூட சிரிப்போ, சந்தோஷமோ கிடையாது. இறுகி போன முகத்துடன் நின்று இருந்தனர். வந்தவர்களை பொய்யாக கூட வரவேற்ற வில்லை.
“எல்லாரும் உக்காருங்க.” வசீயே பாய் எடுத்து போட்டான்.
வீடு போதுமானதாக இருந்தது. தங்கள் வீட்டுடன் ஒப்பிடும் போது இது பெரிய வீடு என்றே தோன்றியது அவர்களுக்கு.
வசீகரன் கடையில் வாங்கி வைத்த டீயை ஊற்றி கொடுத்தவன் “இந்த வீடு.. இன்னும் கொஞ்சம் நிலம் இருக்கு. எல்லாம் என் பேர்ல தான் இருக்கு. அப்புறம் சொந்தமா கடை இருக்கு.”
“சொந்த வீடு இருந்தா போதும்னு தான் பாக்க வந்தோம் தம்பி. வேற எதையும் எதிர்பார்க்கல.” ஏழுமலை கூற,
“இது என் மூத்த தங்கச்சி, இது இரண்டாவது தங்கச்சி, இது மூன்றாவது தங்கச்சி. எல்லாருக்கும் கல்யாணம் ஆகி அவங்க குடும்பத்தோடு அவங்க வாழ்க்கையை பார்த்துட்டு இருக்காங்க. இன்னைக்கு நீங்க பாக்கணும்னுa சொன்னதும் வர சொல்லி இருந்தேன்.” வசீ மூவரையும் பார்க்காமல் பேசி கொண்டிருந்தான். கோபத்தில் நரம்புகள் புடைத்தது ஆனால் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டான்.
மூவரும் மலர் குடும்பத்தை எதிரிகள் போல் முறைத்துக் கொண்டு நிற்க ‘இவர்களை எதற்கு பார்க்க வேண்டும் என்று சொன்னோம்?’ என்று நினைத்தனர்.
“தம்பி நீங்க நல்லா நாள் பார்த்து சொல்லுங்க. நம்ம கல்யாணத்தை வைச்சுக்கலாம். உங்க முடிவு தான்.”
“என் முடிவு என்ன இருக்கு மாமா. பெரியவங்க நீங்க முடிவு பண்ணுங்க.”
“பொண்ணுக்கு நகை நட்டு எல்லாம் எவ்வளவு போடுவீங்க?” வசீகரன் மூத்த தங்கை வாய் திறந்து கேட்க,
“எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டேன். என் நிலமை நாளைக்கு அறிவுக்கு வர கூடாது.
கடங்காரனா வாழ்ந்து அந்த கடன் அடைச்சு முடிக்கவே அவன் வாழ்க்கை போய்டும். இதுல அவன் வாழ்க்கையை எங்கிருந்து பாக்குறது. நீங்க மூன்று பேரும் வாய மூடி கிட்டு அமைதியா இருங்க.”
அண்ணன் வார்த்தையை மதிக்காமல் அடுத்த வார்த்தை பேச அவன் இரண்டாவது சகோதரி நினைக்க,
“மாமா வேற ஏதாவது பேசனுமா?”
அவரும் நிலவரத்தை உணர்ந்து கொண்டவர் “வேற எதுவும் இல்ல தம்பி. நாங்க முகூர்த்த நாள் பாத்துட்டு சொல்றோம்.”
“சரி மாமா. நானும் கல்யாண வேலைகளை பாக்குறேன்.”
மற்றபடி சாதாரண சிலவற்றை பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினர்.
“மாமா உங்களுக்கு அண்ணாவை பிடிச்சு இருக்கா?” கஸ்தூரி ஏழுமலையிடம் வினவ,
“ரொம்ப பிடிச்சு இருக்குமா? எங்களால பண்ண முடியாததை நீ வீட்டுக்கு வந்த கொஞ்ச நாள்ல பண்ணிட்ட. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையாவே நீ எங்க வீட்டு மருமகளா வந்ததுக்கு நாங்க ஏதோ புன்னியம் பண்ணி இருக்கோம்.” இதுவரை மருமகளிடம் பேசாதவர் முதல் முறை தன் மனதில் உள்ளதை கொட்டினார்.
“இது நம்ம குடும்பம் மாமா. என் குடும்பம். என்னால் முடிந்த நல்லது செய்யணும்னு ஆசைப்படுகிறேன்.”
அது வெறும் வார்த்தை இல்லை என்பது அனைவருக்கும்
தெரியும். கஸ்தூரி வாழ வந்த நாளில் இருந்து யாருடைய மனம் கோனும் படி கூட நடந்து கிட்டது கிடையாது.
அவர்கள் சென்றதும் தங்கைகள் மூவரும் தன் அண்ணனிடம் சண்டைக்கு நின்றனர்.
தொடரும்.......