மலர் - 8
மங்கள வாத்தியங்கள் முழககம் தெரு முழுவதும் கேட்டது. வசீகரன் ஊரில் தான் திருமணம். அதுவும் கோவிலில் நடந்தது. சொந்தங்கள் என்று பெரிதாக யாரும் கிடையாது. 19 வயதில் ஆர்மி சென்றதால் நண்பர்களும் இல்லை. தெருவில் வசிப்பவர்கள், சில பழக்க வழக்கத்தில் என ஓரளவு தலைகள் தெரிந்தது.
மற்றபடி கூடி இருந்த கூட்டம் மலர் வீட்டு சொந்தங்கள் தான்.
வசீகரன் வசீகரக்கும் புன்னகையோடு வெள்ளை வேட்டி சட்டையில் ஐயர் கூறும் சம்பிரதாயங்களை சிரத்தையாக செய்து கொண்டிருந்தான்.
சில சமயம் வாசல் புறமும் பார்த்தான். மூன்று தங்கைகளில் ஒருவராவது வருகிறார்களா என்று. என்ன தான் மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஒவ்வொருவர் வீட்டிற்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்து இருந்தான். ஆனால் அவனுக்கு சென்ற இடத்தில் மரியாதை இல்லை. “வா அண்ணா.” என்ற வார்த்தை கூட கிடையாது. எதிரியை நேரில் சந்திப்பது போல் இருந்தனர்.
“பெண்ணை அழைச்சிட்டு வாங்க.” ஐயர் கூறவும் கஸ்தூரி சென்று மலரை அழைத்து வந்தாள். பட்டு புடவை சர சரக்க மல்லிகை பூ வாசம் மனதை கவர, மெல்லிய வெட்க புன்னகையோடு மலர் மென்மையாக நடந்து வந்து பெரியவர்களை கை எடுத்து வணங்கி விட்டு வசீகரன் அருகில் அமர்ந்தாள்.
மலர் மீதிருந்து பார்வையை விலக்க முடியவில்லை அவனால். ஆனால் சபை நாகரீகம் கருதி பார்வையை விலக்கியவன் “மலர் ரொம்ப அழகா இருக்க மா.” என்றான் மென்மையாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“என்னை விட நீங்க தான் அழகா இருக்கீங்க. கம்பீரமாக இருக்கீங்க.” வெட்கத்தோடு தலை குனிந்து கூறினாள்.
மலர் பாராட்டில் வசீகரன் முகம் சிவக்க திரும்பியவன் உதடுகள் புன்னகையால் மலர்ந்தது.
கஸ்தூரி இருவருக்கும் பின்னால் நின்று கொண்டாள்.
“இந்த மாலையை மாத்திக்கோங்க.” ஐயர் கூறவும், இருவரும் ஆளுக்கொரு மாலையை கையில் எடுத்துக் கொண்டனர்.
வசீகரன் முதலில் மலருக்கு மாலையிட்டான். சிரம் தாழ்த்தி மனம் நிறைந்த புன்னகையுடன் வாங்கி கொண்டாள்.
மலர் வசீகரனுக்கு மாலை போட கை உயர்த்த அவனே அவளுக்கு சிரமம் வைக்காமல் சிரம் தாழ்த்தி வாங்கிக் கொள்ள பெண்ணவள் முகத்தில் மிகைப்பட்ட வெட்கத்தில் சிவந்து போனது.
கஸ்தூரி, மலர் கழுத்தில் கிடந்த மாலையை சரி செய்ய, பெற்றவர்கள் கண்கள் கலங்க மகள் மாலையும் கழுத்துமாக, வெட்கத்தில் சிவந்த முகத்தோடு இருக்கும் மகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஓடியாடி வேலைகளை இழுத்து போட்டு செய்து கொண்டிருந்த அறிவும் ஓர் நாற்காலியில் அமர்ந்து தன் அக்கா திருமணத்தை கண்கள் குளிர ரசித்தான்.
இப்போ இருக்கும் மலரின் சிரிப்புக்கு பின்னால் எவ்வளவு வலிகள், அழுகைகள் இருந்தது என்பது அனைவரும் அறிந்தது.
ராசியில்லாதவள், விளங்காதவள், முதிர்கன்னி, அபசகுணம். அப்பப்பா பல வார்த்தைகள் நினைக்கவே நெஞ்சம் வலித்தது. ஆனாலும் பூமா தாய் போல் பொறுமையாக இருந்ததின் அடையாளம் தான் தன்மையான, நல்ல குணம் கொண்ட வசீகரன் கிடைத்ததும்.
“கெட்டி மேளம், கெட்டி மேளம்.” ஐயர் குரல் உயர்த்தி சத்தமாக கூற, வசீகரன் தன் கையில் இருந்த மாங்கல்யத்தை மலர் பூ முகத்துக்கு நேராக உயர்த்தி பிடித்தான்.
வயதாகி திருமணம் நடக்கும் வலியை விட இனி எனக்காக ஒருவள்.
என் கூட அமர்ந்து பேச ஒருவள்,
வெளியே சென்றவன் இன்னும் வீடு வரவில்லையே என்று எங்க இவள்,
ஒன்னும் சாப்பிடாமல் என்ன பண்றீங்க? என உரிமையாக கண்டிக்க இவள்,
என்னுடன் சண்டை போட,
முடியாத காலத்தில் ஒரு வாய் கஞ்சி வைத்து கொடுக்க,
சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் தன் மகிழ்வை பகிர்ந்து கொள்ள,
அதிலும் முதுமை என்னும் கொடிய நோயில் இருந்து என்னை மீட்க என தனக்காக ஒருவள் கிடைத்த சந்தோஷம் மின்ன மலர் முகத்தையே பார்த்தபடி,
தாலி கட்ட வாகாக மல்லிகை சூடிய கூந்தலை கஸ்தூரி உயர்த்தி பிடித்துக் கொண்டு காத்திருந்தாள். தன் திருமணத்தில் மலர் முழுமனதாக செய்த அனைத்தையும் இன்று நன்றி கடனுடன் அன்பும் கலந்து செய்கிறாள்.
வசீகரன் கைகள் மலர் கழுத்தில் உரசி கொண்டு தாலிக்கு முதல் முடிச்சு போட
அவன் தொடுகையல் சிலிர்த்து தன் கழுத்தில் ஏறிய தாலியை நினைத்து கண்ணீர் முத்துக்கள் திரண்டு வந்து வசீகரன் கைகளில் அபிஷேகம் செய்தது.
கண்ணீர் பட்டதும் மூன்றாவது முடிச்சு போட்டுக் கொண்டே மலர் முகத்தை பார்த்து அழக்கூடாது என்று கண்களால் மிரட்டினான்.
அவன் பார்வையால் கூறியதற்கே வெடுக்கென்று கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள் மெலிதாக சிரித்தாள்.
தாலி ஏறும் சமயத்தில் பெற்றவர்கள் மேடை ஏறி அருகில் இருந்து அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தனர். அவர்கள் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.
தாலியை சரி செய்து கொண்டிருந்த கஸ்தூரி கண்களும் கலங்கியது. ஆனால் அனைத்தும் ஆனந்த கண்ணீர் தான்.
அவர்கள் இருவர் மீதும் பூக்கள் மழையாக பொழிந்தது. அனைவரும் மனதார ஆசீர்வாதம் செய்தனர்.
ஏங்கிய, வதங்கிய இரு மனங்கள் தகுந்த துணையுடன் இணைந்து விட்டனர்.
“எழுந்து அக்கினியை சுத்தி வாங்கோ.” ஐயர் கூற,
வசீகரன் கை பற்றி அக்கினியை மூன்று முறை வலம் வரும் போது எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்ற எந்த வேண்டுதலும் இல்லை அவள் மனதில்.
இதுவே போதும் என்ற மனநிலை.
“மாமா வாங்க எல்லாரையும் சாப்பிட சொல்லுங்க.” கஸ்தூரி கணவனுக்கு வேலை ஏவி அவளும் வேலையை தொடங்கி விட்டாள்.
அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் அழகாக நடந்தேற இறுதி வரை வசீகரன் தங்கைகள் யாரும் வரவில்லை.
“உங்க தங்கச்சிக்கு வரலனு வருத்தப்படாதீங்க. அவங்க மனசு கண்டிப்பாக மாறும்.” கணவனுக்கு நல்ல துணையாக ஆறுதல் கூறினாள்.
இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். திருமணம் கோவிலில் நடந்ததால் மணமக்களை அழைத்து கொண்டு வீட்டு வர கஸ்தூரி ஆரத்தி தட்டுடன் காத்திருந்தாள்.
‘வீட்டில் வரவேற்க யாரும் இல்லையே?’ என்று வசீகரன் கவலையோடு வந்தவன் கஸ்தூரி சிரித்த முகமாக நிற்பதை கண்டு தன்னை அறியாமல் கண்கள் கலங்கியது.
கண்களால் நன்றி கூறினான். அவளும் கண்களால் அதை ஏற்றுக் கொண்டவள்.
இருவருக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து சென்றாள்.
“அண்ணா இருங்க பால், பழம் எடுத்துட்டு வரேன்.”
இருவருக்கும் பால், பழம் கொடுத்து அன்றைய நாள் முழுவதும் மலர் குடும்பம் அங்கேயே தான் இருந்தனர்.
இரவு ஏற்பாட்டை கவனிக்க யாரும் இல்லை என்பதால் அவர்கள் இருந்து பார்த்துக் கொண்டனர்.
“அப்பா நீங்க கிளம்புங்க. எல்லாரும் இருந்தா நல்லா இருக்காது. நானும் கஸ்தூரியும் காலையில் வந்துடுவோம்.”
அறிவு எதற்காக கூறுகிறான் என்பது வாழ்ந்தவர்களுக்கு தெரியாதா?
“அறிவு நீங்க கிளம்புங்க நானும் அம்மாவும் இருந்து எல்லாம் பாத்துட்டு வரோம்.” அவர்களும் இன்னும் வாழ்க்கையை ஆரம்பிக்காமல் இருக்கிறார்கள் என்பதால் அவரும் தயங்கினார்.
“அப்பா எங்க வாழ்க்கையை நாங்க வீட்டுக்கு வந்து ஆரமிப்போம். நீங்க அதுக்காக யோசிக்க வேண்டாம். கிளம்புங்க.” என இருவரையும் அனுப்பி வைத்தான்.
“அறிவு எங்க அத்தை, மாமாவை காணும்?”
“அவுங்களை கிளம்ப சொல்லிட்டேன் மாமா.”
“எதுக்கு அறிவு?”
“சும்மா தான் மாமா.. நீங்க போய் குளிச்சிட்டு வாங்க.”
“டேய் நீங்க சின்ன பசங்க. நீங்க எதுவும் பண்ண வேண்டாம். உள்ள இருக்க ரூம்ல போய் படுத்து தூங்குங்க.”
“மாமா ப்ளீஸ். நீங்களும் ஆரம்பிக்காதீங்க. நாங்க ஒன்னும் குழந்தைகள் இல்லை. என் அக்காவுக்கும் உங்களுக்கும் நாங்க தான் செய்யணும்.”
“மாமா இன்னும் பேசிட்டு தான் இருக்கீங்களா? நல்ல நேரம் தொங்க போகுது.” கஸ்தூரி கண்டிக்க,
“மாமா போங்க உங்களால நான் திட்டு வாங்குறேன்.” இன்னும் நின்று கொண்டிருந்தால் அதிகம் பேசுவான் என்பதால் அவசரமாக “கஸ்தூரி இதோ வரேன்.” என்று ஓடி விட்டான்.
வசீகரன் சிரித்தாலும் கூச்சமாக இருந்தது. ‘சின்ன பசங்க இவனுங்க. இதுங்க நமக்கு ஆர்டர் போடுதூங்க.’
“அக்கா என்ன சொன்னாள் கஸ்தூரி?”
“அவங்க கிட்ட இவ்வளவு நேரம் திட்டு வாங்கி ஒரு வழியா சமாளிச்சு ரூமில் விட்டுட்டு வரேன். நேரம் ஆக ஆக அவங்க வெளியே வந்துட கூடாது. அதான் மாமா யோசனையாக இருக்கு.” இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே வசீ கூச்சத்துடன் உள்ளே நுழைய “அண்ணா போங்க.” என்றவள் கணவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
வசீ அங்கிருந்த ஒரே ஒரு குட்டி அறைக்குள் செல்ல கீழே பாய் விரித்து அதில் அமர்ந்து இருந்தாள். சாதாரண ஷிபான் புடவையில் ஒரு முழம் மல்லிகை சூடி நெற்றியில் பொட்டு வகிட்டில் குங்குமம் என மங்களகரமாக இருந்தவளை ரசனையாக பார்த்தவன் கதவை தாழ் போட்டான்.
தாழ் போடும் சத்தத்தில் தன் கணவன் வந்து விட்டான் என்பதை உணர்ந்தவள் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போனது.
அவளை ரசித்தபடி அவள் அருகில் அமர்ந்தான் “மலர்!” மிக மிக மென்மையாக அழைத்தான்.
அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தவித்தவள் மூச்சு காற்றோ சூடாக வீசியது.
“மலர்…” மீண்டும் அழைத்து அவள் கை பற்ற இப்போது அவன் மூச்சுக்காற்று சூடானது.
மலர் உடல் நடுங்க தொடங்க.. “பயமா இருந்தா வேண்டாம் மா.” மென்மையாக கூறினான்.
“எனக்கு ஒன்னும் பயம் இல்லை.” கூச்சத்துடன் கூறி முடித்த அடுத்த நொடி அவன் அணைப்பில் இருந்தாள்.
“கனவு மாதிரி இருக்கு மா.”
“எனக்கும் தாங்க. என்னாலும் நம்ப முடியல.”
“ஆனா நம்பி தான் ஆகணும். இப்போ நீ என் அணைப்பினில், நான் உன் அருகினில்.” கவிதையாக கூறியவன், மணைவி நெற்றியில் முதல் முத்தத்தை ஆத்மார்த்தமாக பதிய வைத்தான்.
முத்தத்தில் சிலிர்த்து மேலும் அவனுடன் ஒன்றி கொண்டாள் பெண்ணவள்.
“வெளிய எப்படி மாமா படுக்க முடியும்? ஒரு பாய் தான் இருந்துச்சு அதுவும் உள்ள இருக்கு.”
“வெளிய வந்து பாரு டி.”
மனைவியை வெளியே அழைத்து வந்தவன் கயிற்று கட்டிலை காட்டினான்.
கஸ்தூரி கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
“மாமா கட்டில் ஏது?”
“கடைக்கு போய் வாங்கிட்டு வந்தேன் டி.”
“உண்மையாவா?” அவளும் உண்மை என்று நம்பி கேட்டாள்.
“லூசு.. மாமா கட்டில். கட்டில் இருக்குன்னு சொல்லிட்டு தான் உள்ளே போனார்.”
“சூப்பர் மாமா.” சந்தோஷமாக கூறி விட்டு கட்டிலில் படுக்க மனைவி அருகில் அறிவு ஆசையாக படுத்தான்.
திருமணம் ஆனதில் இருந்து இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசியது கூட கிடையாது. அப்படி இருக்கும் போது முதல் முறை இருவரும் ஒன்றாக படுக்கும் போது இருவருக்கும் சொல்ல முடியாத உணர்வு. எவ்வித குற்ற உணர்ச்சி இல்லாமல் நிம்மதியாக நெருக்கமாக படுத்திருக்க,
“நிலா ரொம்ப அழகா இருக்கு டி.”
“நிலா எப்பவும் அழகா தான் மாமா இருக்கும்.”
“உன்னை விட அழகு கம்மி தான் டி. உன் பக்கத்துல கூட அதால வர முடியாது.”
பக்கவாட்டில் கணவன் முகத்தை பூரிப்போடு பார்த்தவள் “அது நம்ம பக்கத்துல வராது மாமா. நம்ம தான் அது பக்கத்துல போகணும்.”
“அங்க போய் நம்ம என்ன டி பண்ண போறோம்?” கையை வளைத்து அவள் தலைக்கடியில் கொடுத்தவன் அவளை தன்
புஜத்தில் தாங்கி, தன் கையை தலையனையாக மாற்றி இருந்தான்.
மனம் முழுவதும் சந்தோஷமும் நிம்மதியும் இருக்க கட்டிலில் படுத்தபடி கண்ணியமாக தங்களின் முதல் தனிமை பொழுதை அனுபவித்தனர்.
தொடரும்.....