• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை - பால லட்சுமி

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மழை

வேலை முடிந்தவுடன் தன் வீட்டிற்கு செல்ல தன் இரு சக்கர வாகனத்தை எடுத்தாள் பிரேமா, அது மழைக்காலம் என்பதால் ஆறு மணிக்கே நன்றாக இருட்டி விட்டது. வானத்தில் இருந்து மழைத்துளி ஒவ்வொன்றாய் விழ ஆரம்பித்தது. அவள் இருசக்கரவாகனம் சிறிது தூரம் சென்றவுடன் நின்றுவிட்டது. பிரேமா அவளின் தந்தைக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, “அப்பா தைலான் தோப்பு பக்கத்துல என்னோட வண்டி நின்றுச்சிப்பா. மழை வேற பெருசா வருகிற மாதிரி தெரியுது. நான் பக்கத்துல இருக்குற பூங்காவில் உங்களுக்கு காத்துகிட்டு இருக்கேன்.” என்று கூறி வைத்தவுடன் மழை பெருசாக பெய்ய ஆரம்பித்தது. தன் வண்டியில் இருந்த குடையை எடுத்து விரித்தவள், வேகமாக பூங்காவை நோக்கி ஓடினாள்.

அங்கே பூங்காவில் மரத்தின் ஓரத்தில் சென்று நின்று கொண்டாள். அவள் அருகில் சுமார் இருபத்திரண்டு வயதுள்ள பெண் மழையில் நனைந்த படி நின்று இருந்தாள். அவள் பிரேமாவை பார்த்து, “இந்த சாதாரண குடை உன்ன இந்த மழையில இருந்து காப்பாத்தும்னு நினைக்கிறியா?”

பிரேமா, “என்ன? நீ என்ன சொல்ல வர்ற?.” கையை நீட்டிய படி மழையில் நின்றவள் அவளைப் பார்த்து சிறு புன்னகையுடன் சென்றுவிட்டாள். குழம்பிய பிரேமா, “யாரு இவா? வந்தா என்னமோ சொன்னா போய்ட்ட” என்று சொல்லி தலையை குலுக்கியவள், அவள் தந்தை வந்தவுடன் அவருடன் சென்றுவிட்டாள்.

மறுநாள் அலவலகம் சென்று திரும்பும் வழியில், ‘நேத்து பார்த்த பொண்ணு இங்க இருக்காளான்னு பார்க்கலாம்.’ என்று நினைத்தவள் அந்த பூங்காவின் அருகில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்று பார்த்தாள், ஆனால் அந்தப் பெண் இன்று இல்லை. ‘சரி எவளோ ஒருத்திய நான் ஏன் தேடுறேன்’ என்று வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

மறுநாள் காலையில் அலுவலகத்திற்கு செல்லும் போது மழை பெய்தது. அதே பூங்காவில் அந்தப்பெண்ணைப் பார்த்தவள், ‘இது அந்த பொண்ணு தான ஆனா அவா ஏன் அதே டிரஸ்ல இருக்கா?’ என்று யோசித்தபடி மழையில் நனைந்த படியே சென்றுவிட்டாள்.

இது தினமும் வாடிக்கையானது மழையில் மட்டும் தென்படும் பெண், மழை நின்றதும் மாயமாகிவிடுவாள். இதை ஒருநாள் தன் தந்தையிடம் பகிர்ந்துகொண்டாள் பிரேமா. அதற்கு அவர், “அந்த பொண்ணுக்கு மழை பிடிக்கும் போல அதனால மழையில நிக்குறா இதுல என்ன பிரேமா இருக்கு”

“இல்லப்பா அந்த பொண்ணு குடை உன்ன காப்பாத்தும்னு நினைச்சியான்னு கேட்டா”

“என்ன பிரேமா பொது இடத்துல யாராவது ஏதாவது பேசுவாங்க. அதை எல்லாம் நினைப்பாங்களா? போ.. போய் சாப்பிட்டு படு.” என்று சொல்லி சென்றுவிட்டார். அடுத்தநாள் அவள் வழக்கமாக செல்லும் சாலையில் இரவு பெய்த மழையால் தண்ணீர் தேங்கியிருந்தது அதனால் அவள் பூங்கா வழியே செல்லாமல் வேறு பாதையில் சென்றாள். அலுவலகம் முடிந்து வரும் பொழுது லேசாக தூறிக்கொண்டு இருந்தது. அவள் வரும் சாலையில் தண்ணீரும் வடிந்திருந்ததால் பழையபடி பூங்காவின் வழியே சென்றாள். பூங்காவின் உள்ளே அந்தப் பெண்ணை கண்டவள், வண்டியிலிருந்து இறங்கி அவள் அருகில் சென்று, “உன்னோட பெயர் என்ன?”

பிரேமாவை பார்த்தவள், “ரதி.” என்றாள் ஒரு வரியில். தன் கைகளை கட்டிக்கொண்ட பிரேமா, “சரி, ரதி ஏன் எப்பொழுதும் மழைல நனைஞ்சிகிட்டே நிக்குற? அதுவும் ஒரே உடைல?. அன்னைக்கு ஏன் என்கிட்ட அப்படி சொன்ன?”

“எனக்கு மழைனா ரொம்ப பிடிக்கும். ஆனா நான் நனைய மாட்டேன், மழைய ரசிக்கப் பிடிக்கும். ”

“சரி. எதுக்கு நீ இங்க வந்து நிக்குற?. உன்னோட வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?”

“எங்க வீட்ல எல்லாரும் மழை வெள்ளத்துல செத்துட்டாங்க” என்றாள் எங்கோ பார்த்தபடி.

“ஓ... என்ன மன்னிச்சிரு ரதி. 2015 ல் நீர்சேமிப்பு நிலங்கள், திறந்தவெளிகள், வெள்ள வடிகால் நிலங்கள் ஆகியவை கட்டிடங்களால் பெருமளவு குறைந்து, சென்னைக்கு பாதிப்புகள் உண்டாகியதாக இந்திய அறிவியற் கழகத்தின் ஆய்வறிக்கை தெரிவித்தத நானும் படிச்சேன். அப்ப நான் சென்னைல இல்ல. நான் இப்ப சென்னை வந்து ஒரு மாசம் தான் ஆகுது. நீ இங்க மழைல நின்னு வருத்தப்படாம உங்க வீட்டுக்குப்போ. இறந்தவங்க திரும்பி வரப்போறதில்ல.”

“உன்ன மாதிரியே தான் நானும் ஆறு வருஷத்துக்கு முன்னாடி குடையோட மழைக்கு இந்த பூங்காவுல ஒதுங்கி நின்னேன். அந்த குடை என்ன மழைல இருந்து காப்பாத்தல

“நீ என்ன சொல்ற ரதி?” என்றவளைப் பார்த்து சிரித்தபடியே மறைந்தாள். பிரேமா அதிர்ந்தவள், மழையில் நனைந்தபடியே அங்கிருந்து ஓடினாள்.



******