• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை-1

MK2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
14
54
18
Tamil nadu
தகதகவென தகிக்கும் வெள்ளி நிலவு...அன்போடு வாரி அணைக்கும் குளிர் தென்றலென மெரினா கடற்கரை இரவு நேரத்தில் களைக்கட்டியது.. தனித்திருந்த காதலர்களை விட ஆணும் பெண்ணுமாய் கலந்து வந்த நட்புகள் எனும் கூட்டம்தான் அதிகத்திற்கும் ஆட்டம் போட்டது..

"லாவ்ஸ் நம்ம அபிய பார்த்தியா.."

கேட்ட பவித்ரனை பார்த்து அங்கிருந்த கும்பலில் பெண்கள் பயமாய் தெரியாதென தலையசைக்க ஆண்கள் பக்கமாய் ஒரு குரல் வந்தது..

"டேய் பவி..இவளுங்கள நம்பாத..நாங்க வேணாம் வேணாம்னு சொல்லியும்.. அபிய அந்த சாரு கூட ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர அனுப்பிட்டாங்க...நாங்களே அதான் ஆளக் காணோமேன்னு டென்ஷனா பார்த்துட்டு நிக்கறோம்.."

மற்றவனை விடுத்து சொன்ன விச்சுவிற்கு தலையில் சட்டென ஒரு அடி விழுந்தது..

"பார்த்துட்டு நிக்கறேன்னா இது ஒரு பதிலா...போய் அபி எங்கன்னு முதல்ல பாருங்கடா... சாரு வாய நம்பி எப்படி அவகூட அனுப்புன நீ...அபிய தனியா விடாதீங்கன்னு எத்தன தடவை சொன்னாலும் கேக்க மாட்டீங்க.. உங்களுக்கெல்லாம் இதுக்கு ஒருநாளு இருக்கு என்கிட்ட.."

பின்னந்தலையை தேய்த்து கொண்டே திட்டாமல் அடுத்த நொடி நகர்ந்துவிட்டான் விச்சு....நகராமல் நின்று பின் யார் பவித்ரனிடம் பேச்சு வாங்குவது..

பவித்ரன்..பேருக்கு தக்க ஆளும்...குணமும் தங்கம்தான்..ஆனால் கோவம் வந்தால் மட்டும் இந்த தங்கம் தகரமாகிவிடும்...அதிலும் எதிரிலிருப்பவன் ஆணெனில் வண்ண வண்ணமாய் வாயிலேயே கிழித்து தோரணம் கட்டுவான்..ஆணும் பெண்ணுமாய் அத்தனை பேரையும் சமாளித்து நட்பை அழகாய் நகர்த்துபவன் அதில் பெண்களுக்கு ஒன்றென்றால் பொங்கிவிடுவான்..இரு அக்காள் இரு தங்கைகளுக்கு நடுவில் பிறந்து ஒற்றை ஆண்மகன்... அதனாலேயே பெண்கள் நாட்டின் கண்கள் என காத்து திரியும் நல்லவன்..

இவர்கள் கூட்டம் கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தாலும்.. அவர்களின் முழுநேர வேலையே பவி சொந்தமாய் நடத்தும் ஈவண்ட்
மேனேஜ்மெண்ட் அலுவலகத்தில்தான்.. கிடைக்கும் ஒன்றிரண்டு ஆர்டர்களையும் இவர்களை வைத்து செய்வதற்குள் ஆவி போய் பிசாசு வந்தாலும் அத்துணை பேரையும் உயிராய் பார்த்து கொள்வான் பவித்ரன்.

"ஹே சாரு..இந்த ஐஸ்கிரீம் போதும்ல..அண்ணா அந்த பிளாக் கரெண்ட் பாக்ஸூம் சேர்த்து குடுங்க.. விச்சுக்கு பிடிக்கும்.."

"மா அது எம்பையனுக்கு...இத்து ஒன்னாவது நிக்கட்டும்.. இல்லேன்னா என்னை வீட்டுக்குள்ளயே விடமாட்டான்..போம்மா..போ.."

இருகை கொள்ளாமல் ஐந்தடுக்கு பெட்டியில் அங்கிருந்த அத்தனையும் அள்ளிகொண்டவளை பார்த்து இப்போது மற்றவள் தலையிலடித்து கொண்டாள்..

"இதுக்கு மேல கடல்லயே இல்லையாம்‌...நீ வர்றியா முதல்ல..இவ்ளோ லேட் நீ பண்ணிட்டு இப்ப எனக்கு அங்க பூஜை நடக்கும்.."

சொன்னவளை பார்த்து சிரித்த அபியை பார்த்து எப்போதும் போல் இன்றும் சாரு நினைத்து கொண்டாள்..

"என்ன பொண்ணுடா இவ சாமி.."

அபி..குட்டி முகம்.. கொள்ளை அழகு... வெள்ளை உள்ளமென சுற்றி திரியும் இவர்கள் நட்புக்களால் பொத்தி பொத்தி வளர்க்கப்படும் ஒரு தேவதை பெண்.. செல்வத்திற்கு பஞ்சமில்லா வீட்டில் அன்பிற்கு பஞ்சமென்றான பின் அடைக்கலம் தேடி வந்தவளை இவர்களுமே நட்பெனும் சிறகால் அழகாய் அணைத்து கொண்டனர்.. சந்தர்ப்பங்கள் மட்டுமே ஒருவனை கெட்டவனாக்கும்..மற்றபடி உலகில் எல்லோருமே நல்லவர் என உறுதியாய் நம்புபவள்.. அந்த நம்பிக்கையின் வழி எதையாவது செய்து அடிக்கடி பிரச்சனையில் சிக்கி கொள்ளும் கிள்ளைப்பெண்.. அவள் வழி வந்த பல சோதனைகளையும் "நட்புடா..பிரண்டுடா...கேங்குடா" என அசால்ட்டாய் ஊதி தள்ளினாலும்.... அதன் எதிர்வினையில் அடிக்கடி உடம்பு புண்ணாவதால் அபியை எப்போதுமே ஆளுக்கு ஒன்று என்ற விதத்தில் கண்ணில் வைத்து கவனமாய் பார்த்து கொண்டனர்...

"என்னடி..."

அழகுக்கென இல்லாமல் அத்தியாவசியத்திற்காய் போட்டிருந்த ஸ்பெக்ஸ் இறங்கிவிட..அது வழியே தன்னையே பார்த்திருந்த சாருவை இடித்து பெட்டியை கண்ணால் காட்ட..

"ஊப்ஸ் சாரிடி.."

ஆளுக்கு இரண்டாய் கைமாற்றி ஏதேதோ பேசிக்கொண்டே வந்தவர்கள்..சாலையின் அந்த பக்கம் விச்சுவை பார்த்துவிட...

"டேய்ய்ய்....விச்சுஊஊஊஊ.. எரும்ம மாடே..இங்க இங்க பாருடா... மொன்ன மூக்காஆஆ... அங்க எவளடா பார்க்குற..."

அபியின் கத்தலில் விச்சு அவசரமாய்

"உஸ்ஸ்..உஸ்ஸ்ஸ்.. கத்தாத..கத்தாத..லூசு லூசு...பவர் இல்லாத கண்ணாடிய இவ போட்டுட்டு நா நேரா பார்க்குறது கூட சைடா பார்க்குறது மாதிரி தெரியுதா உனக்கு... இரு வர்றேன்..."

பல்லை கடித்து சொன்னவன் அவர்களை வேகமாய் நெருங்கும் சமயம்...சர்ரென வந்து நின்ற ஒரு ஆம்னி வேன்..அதன் டோரை திறந்து சாருவை மட்டும் உள்ளே அள்ளிப்போட்டு கொண்டு விர்ரென போய்விட...நடந்த நிகழ்வில் அபியோ சிலையென நின்றுவிட்டாள்..

"ஹே அபி..என்னாச்சு..அபி என்னைப் பாரு.. ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்லடா.."

"விச்சு...சாரு..சாருவ..."

கையை மட்டும் நீட்டி அழுதவளை பார்த்து பயந்து போனவன்... பவிக்கு அழைக்க... அவன்‌நேரத்திற்கு..அது நாட் ரீச்சபிளென வந்தது..அபியோ நின்ற இடத்தை விட்டு அசையவில்லை.

"அய்யோ கடவுளே... ஷிட்.. அபி..டேய் அபி இங்க பாருடா.. நா போய் பவிய பர்ஸ்ட் இங்க கூட்டிட்டு வர்றேன்..நீ அதுவரை அழாம இருக்கணும்... ஓகேவா.. அவன் வந்தா மத்தது எல்லாம் அவன் பார்த்துப்பான்..பட் நீ அழாத ஓகே ..அழுதா அப்புறம் உனக்கு வீசிங் வந்திடும்... ஓகேவா அழாத..இரு வந்தர்றேன்.."

சொன்னவன் அதே போல் அவசரமாய் ஓடிப்போய் பவியிடம் நடந்ததை சொல்ல அவன் ஓங்கி விட்ட அறையில் தலை சுற்றிப் போய் தள்ளி விழுந்தான்..

"அபி எங்கடா.."

"டேய் சாருவ யாரோ..அபி அழுது‌..உன் நம்பர் நாட் ரீச்சபிள்...அவ நடக்க முடியாம.. அதான்.."

விட்டுவிட்டு சொன்னவனை பார்த்து தலையிலடித்து கொண்டவன்.. அவசரமாய் விழுந்தடித்து கொண்டு அங்கு போக...பவி எதிர்பார்த்தது போல் அபி அங்கில்லை. கோவமாய் திரும்பி விச்சுவை பார்க்க...இரு கன்னத்தையும் மறைத்து கொண்டவன்...

"சத்தியமா இங்கதான் நிக்க வச்சுட்டு அழாம இருமான்னு சொல்லிட்டு வந்தேன்.."

"போடாங்க...அவளுக்கு பர்ஸ்ட் போனப் போடு.." பவி தலையை அழுந்த தேய்த்து கொண்டான்..

முதல் முறை முழுதாய் அடித்தும் எடுக்காமல் போக..

"அய்யய்யோ அவசரத்துல என் குலதெய்வம் பேரு வேற மறந்து போச்சே.. பரவால்ல.. பேரு மறந்து போன என் குலதெய்வமே அவ இப்ப போன எடுத்தரணும்.. இல்ல இங்க ஒருத்தன் என்னை சுறாவுக்கு ஜோடியா இருடான்னு உள்ள தூக்கி போட்டுடுவான் தெய்வமே என் தெய்வமே.. ஆவ்.. ஆஹ்..எடுத்துட்டா.. எடுத்துட்டா..அபி.. அபிடாம்மா.. எங்கடா இருக்க..டேய்‌ பேசுடாமா.."

"ஆங்...டேய் விச்சு...கேக்குதா.."

"ஆஹ் கேக்குது.. கேக்குது.. உன்னை இங்க இருன்னு சொல்லித்தான நிக்க வச்சுட்டு போனேன்.. இப்ப எங்க போய் தொலைஞ்ச நீ.."

கோவமாய் பேசியபடி திரும்பியவன் பார்வையில் பவியின் கை காப்பு உயர... எச்சிலை கூட்டி விழுங்கியவன் சமாளித்து தள்ளினான்..

"அபிம்மா அது வந்து...ஆங் நீங்க தொலைஞ்சு போய்டுவீங்க..இப்ப எங்க இருக்கீங்க நீங்க... சொன்னீங்கன்னா நாங்களும் வருவோம்... தனியா எங்கமா போறீங்க.."

குழந்தையிடம் பேசுவதை‌ போல கொஞ்சியவனிடமிருந்து போனை பவி பிடுங்கியவன்..

"அபி..எங்கடா இருக்க..ஏன் தனியா போன..ஓகே எதுனாலும் இப்ப நீ அங்கயே இரு..போன பக்கத்துல யாராவது இருந்தா குடு ப்ளீஸ்டாமா.."

"பவி..பவி..சாருவ.."

"ஹாங்..தெரியும்டா..அது ஒன்னுமில்ல கண்டுபிடிச்சுடலாம்..நீ இப்ப எங்க..அத சொல்லு.."

"இல்லல்ல...பவி.. நா எங்கயும் போகல...தோ அந்த காரை சேஸ் பண்ணிட்டுதான் போறேன்... நீங்க வாங்க வேகமா...நா லொகேஷன் அனுப்பறேன்... ஓகேவா.."

"சுத்தம்..."

பவியோடு சேர்த்து எல்லோருமே தலையிலடித்து கொள்ள லவுட் ஸ்பீக்கரிலிருந்ததால் விச்சுதான் இப்போது கத்தினான்..

"உன்னை யாரு இந்த வேலையெல்லாம் பண்ண சொன்னது இப்ப.."

"நீ திட்டறியா விச்சு..
சோகமாய் கேட்டவள்..

"நீதான எப்பவும் நா எல்லாத்துக்கும் பயந்துக்கறேன்.. எதையுமே தனியா ஹேண்டில் பண்ணக்கூடாது.. யாராவது கூட இருக்கணும் சொல்லிட்டே இருக்க... அது எனக்கு ரொம்ப இரிட்டேட் ஆகுதுடா விச்சு.."

"அய்யோ இப்ப இங்க ஒருத்தன் என்னை போடப்போறான் பிச்சு.." மனதுக்குள் சொல்லிக் கொண்டவன்..

"அதுக்கு.."

"அதான் இன்னைக்கு நானே இத ஃபேஸ் பண்ணலாம்னு வீரமா கிளம்பிட்டேன்...சோ நா முன்னாடி வீரமா கோயிங்..நீங்க பின்னாடி ஆல் சேப்ஃபா கமிங்..ஓக்கே.."

"அய்யோ அபிமா..அது ஒன்னுமில்லடா...எனக்கு தெரிஞ்சு அவங்க சாரு வாயில துணிய வச்சு இறுக்கி கட்டிருப்பாங்க.. அதான் புள்ளய இன்னும் காணோம்...வேணா பாரு கட்ட அவுத்த அடுத்த அரை மணி நேரத்துல பொண்ணு நம்மகிட்ட சேஃபா வந்திருவாடா.. ஏன்னா அவ வாய் அப்படி..நா கூட பாரு அவள ஏத்துன இடத்துலயே அதான் நம்பிக்கையா நின்னுட்டு இருக்கேன்..சோ நீ வந்திருடா...டேய் டேய்..லைன்ல இருக்கியா.. அய்யய்யோ வச்சுட்டாடா..இனி எடுக்க மாட்டாலே..என்னடா பண்ண பவி.."

போனை வைத்த நொடி...பவி அங்கிருந்த அத்தனை பெண்களையும் ஒரு கார் பிடித்து பொறுப்பாய் அனுப்பி வைத்தவன்..மற்றவர்களையும் அனுப்பி விட்டு விச்சுவை மட்டும் உடன் வைத்து கொண்டான்..

"நா வேணா பொண்ணுங்கள பொறுப்பா வீட்டுல விட்டுட்டு.."

"மூடிட்டு வா.."

"இப்படி அன்பா சொன்னா பின்னாடியே அழகா வரப் போறேன்..அத விட்டுட்டு.. சரி சரி வா போலாம்.. போலாம்.. போய் மிஷன் அபிய கம்ப்ளீட் பண்ணலாம்.."

சொன்ன வேகத்தில் பைக்கில் பறந்திருந்தனர்..

அங்கு அபியோ லைவ் லொகேஷனை ஷேர் செய்துவிட்டு..நகத்தை கடித்து துப்பி கொண்டிருந்தாள்..

"அவ்வா...அவ்வ்வ்வா...எவ்ளோ பப்ளிக்கா வந்து ஒரு பொண்ண தூக்கிட்டு போறானுங்க..கேட்க யாருமில்லைன்னு தைரியம்..ம்ம்ம்..இருங்கடா வர்றேன்...இந்த அபிய இன்னைக்கு நீங்க வேற மாதிரி பார்ப்பீங்க.. கண்ணுல கையவிட்டு ஆட்டி உங்களயும் கண்ணாடி போட வைக்கல...நா அபிநய... வேணாம் வேணாம்..நா அபி இல்லடா.."

மனதுக்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டவள் இறங்கிய கண்ணாடியை ஏற்றிக்கொண்டாள்‌. இடுப்புவரை நீண்ட கூந்தலை அள்ளி முடிந்து கிளிப்பில் அடக்கி கொண்டவள் சுடிதாரின் கையை எல்லாம் நன்றாய் ஏற்றிவிட்டு முகத்தை‌ அழுத்தமாய் துடைத்து கொண்டாள்..இவள் அலும்பலில் ஆட்டோகாரருக்கு அங்கு அல்லு விட்டது..

"ஏம்மா ஆட்டோல இருந்து குதிக்கப் போறியா..இல்ல வாந்தி எதுனா எடுக்கப் போறியா... எதுனாலும் சொல்லு..நிறுத்திட்டு போறேன்...அதுக்கேன் இப்படி.."

"ப்ச்ச்...டோண்ட் டிஸ்டிராக்ட் மீ அங்கிள்...கீப் கொய்ட்..அந்த கார மட்டும் கரெக்டா பாஃலோ பண்ணுங்க... விட்டுறாதீங்க.."

"அதுசரி.." அவள் சொன்னது புரியவில்லை என்றாலும் அவள் குதிக்க போவதில்லை என்பதே அவருக்கு குஷியாகி போக...இப்போது முழுமூச்சாய் அந்த காரைத் தொடர்ந்தார்..

மெரீனா பீச்சில் ஆரம்பித்த கார் பயணம் பெசண்ட் நகர் பீச்சை ஒட்டிய ஒரு வீட்டினுள் நுழைய..

"ஆங்..இங்க இங்க மட்டும் போதும்...நிறுத்துங்க.."
அவசரமாய் இறங்கி அதைவிட அவசரமாய் உள்ளே போகப் போனவளை தடுத்து வைத்து கொண்டார் ஆட்டோக்காரர்.

"ஏம்மா எம்மா இரும்மா...யாரு நீ...கார பாலோ பண்ண சொன்ன...இப்ப நீ மட்டும் உள்ளப்போற.. இரும்மா... யாரையோ‌ வரச்சொன்னேல்ல.. அவங்க வரட்டும் இரு போலாம்.."

"ம்ம்ஹ்ஹ்...அண்ணா... இங்க பாருங்க..இப்ப நா ரொம்ப கோவமான ஒரு போர்ஸோட இருக்கேன்.. இப்ப நீங்க நடுவுல வந்தீங்க வேணாம்... சத்திரமாய்டுவீங்க‌...ச்சே..ச்சே... சேதாரமாய்டுவீங்க... நகருங்க..என் பிரண்ட்ஸ் இப்ப வருவாங்க...வந்தா அவங்கள உள்ள வர சொல்லுங்க ஓகே.."

தீவிரமாய் கண்ணாடியை ஏற்றியபடி சொன்னவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவர்...

"அப்படியெல்லாம் இந்த ராத்திரில தனியா ஒரு வீட்டுக்குள்ள போக்கூடாது... தப்புமா.. எதுனா பேஜாராய்டும்... இரு அவங்க வரட்டும்.."

என்ன சொல்லியும் அவளை விடவில்லை... இத்தனை வயதிற்கு எத்தனை பார்த்திருக்கிறார்... கொள்ளை அழகோடு பார்க்க வெகுளியாய் தெரியும் இந்த சின்னவளை அப்படியே விட்டுச்செல்ல...ஒரு பெண்ணை பெற்ற தந்தையாய் அவரால் முடியவில்லை.. அதனாலேயே அவளை அடைகாத்தார்..

"ப்ச்ச் சோ அண்ணா.. தோ.. அவங்களே வந்துட்டாங்க பாருங்க..." அபி கைகாட்டிய திசையில் பவியும் விச்சுவும் வந்திருந்தார்கள்..

பவி அவசரமாய் வந்தவன் ஒருமுறை அபியை மேலிருந்து கீழாய் பார்த்து "எந்த பிரச்சனையுமில்லேலடா".
என்று உறுதி செய்தபின்பே... டிரைவர்புறம் திரும்பினான்.

"பாப்பாவ பார்த்துக்கங்கபா.. விவரம் புரியாம தனியா போறேன்னு நிக்குது..யாராவது கூடவே இருங்க தம்பிங்களா.. தனியா விடாதீங்க.."

உதட்டை பிதுக்கி கொண்டு நின்றவளை பார்த்து பவி சிரித்து கொண்டவன்...

"எப்பவும் விடமாட்டோம்‌... இன்னைக்கு லைட்டா ஏமாந்துட்டோம்..ரொம்ப ரொம்ப தேங்ஸ்ணா எல்லாத்துக்கும்.."
மனதார சொன்னவன் தோளில் தட்டியவர்..கிளம்பிவிட்டார்..

அங்கு விச்சு அபியின் தலையில் நன்றாய் கொட்டி வைத்தான்..

"அறிவிருக்கா..இப்படி சொல்லாம இந்த நைட்ல ஆட்டோல தனியா வருவியா.. இவரு நல்லவருன்னதால போச்சு..இல்லேன்னா.."

"என்னையே திட்டாத..."

"திட்டல‌...எதுக்கு அப்பப்ப திட்டிட்டு...இரு இன்னைக்கு உன்னை மொத்தமா கொன்னுர்றேன்.."

இவர்களின் அலும்பலை பவியின் ஒற்றை பார்வை நிறுத்தியது...

"உஷ்ஷ்...அபி...நீ இங்கயே இரு..நாங்க உள்ள போய் பார்த்துட்டு வர்றோம்..ஓகேவா.."

"இல்ல...நா தனியா இருந்தா எனக்கு பயம்..நானும் கூட வர்றேன்..ப்ளீஸ்.."

கண்களை சுருக்கி கெஞ்சியவளை பார்த்து எப்போதும் போல் இப்போதும் இருவரும் தலையை ஆட்டி இழுத்து சென்றனர்.

"அங்க என்னன்னு தெரியாம நீ எதுவும் கத்தக்கூடாது... முக்கியமா பேசவேக்கூடாது.... புரியுதா?".

சொன்னவனை பார்த்து எல்லா பக்கமும் தலையாட்டியவள்.. ஏதோ போருக்கு போவது போல் முகத்தை தீவிரமாய் வைத்து கொண்டாள்..

"ஐயம் ரெடி..."

"எதுக்கு எங்கள உயிரோட கொல்றதுக்கா.."

சொன்ன விச்சுவிற்கு ஒரு கல்லை பரிசாய் எறிந்தவள்..விடுவிடுவென எழுந்து நடந்து போக..இருவரும் சேர்ந்து ஒன்றாய் போட்டு அமுக்கினர்..

"அடங்கு பிசாசே...அடங்கு.."

இருவர் கையையும் தட்டிவிட்டு தலையை மட்டும் எட்டி பார்த்த நொடி.. சட்டென மொத்த இடமுமே இருளில் மூழ்க..இங்கு பெண்ணளுக்கோ மூச்சடைத்தது...பயத்தில் கத்த‌ திறந்தவளது வாயை பவி அடைத்திருந்தான்..

"சத்தம் வந்தது மூச்.."

மெதுமெதுவாய் வெளியிலிருந்த கதவை அடைந்தவர்கள்..காதை வைத்து கேட்க..உள்ளுக்குள் கசகசவென சத்தம்...அத்தனை அவசரத்திலும் பவியின் சட்டையை சுரண்டியவளை பார்த்து பல்லை கடித்தவன்..

"என்ன..."

"இல்ல்ல...உள்ள நிறைய ஆளுங்க கட்டையோட இருப்பாங்களோ பவி... ஏன் கேட்டேன்னா சாதா விளக்குமாறு குச்சில அடிச்சாலே நம்ம விச்சு எலும்பு தெறிச்சிருமே... இந்த கட்டைகெல்லாம் இவன் உடம்பு தாங்குமா பவி??.."

அபி சீரியஸாய் கேட்டு இடிஇடியென சிரித்து வைத்தாள்..விச்சு எப்போதுமே சற்று அதிகப்படி ஒல்லிதான்...அவன் தோற்றத்தை யாராவது கிண்டல் செய்தால் போதும் நெற்றி கண்ணை திறந்து அடி வெளுத்து விடுவான்...

அதே வழக்கத்தில் அபியின் கிண்டலில் விச்சு கோவமாய் அவள் முதுகில் ஒன்று வைக்க வர...பவி அவனை தடுக்க...அபியும் பவியோடு சேர்ந்து விச்சுவின் கையை போட்டு முறுக்க..முடியாமல் கடைசியில் நன்றாய் நறுநறுவென கடித்தும் வைத்திட...

"ஆவென்ற" விச்சுவின் அலறலோடு மூவரும் ஒன்றாய் கதவில் சாய்ந்து அது திறந்திருந்ததில் அதே அலறலோடு உள்ளே போய் ஒருவன் காலடியில் விழவும்..

"ஹாப்பி பர்த்டே சாரு டியர்.."

என்ற சத்தத்தை தொடர்ந்து பட்பட்டென வெடித்த பேப்பர் துகள்கள் அறையெங்கும் சிதறவும் சரியாய் இருந்தது..

"எ....த்து....பர்த்டேவா?...."

மூவரும் அதிர்ச்சியில் கோரஸாய் அலற..முதலில் தெளிந்தது என்னவோ அபிதான்..

"ஹே..விச்சு விச்சு...சாருக்கு பர்த்டேவாம் டா..கேக்கெல்லாம் தருவாங்க...வா வா போலாம்.."

"ம்ஹீம் நா மாட்டேன்... கேக்கெல்லாம் சாப்டா கைல பிசுபிசுன்னு ஒட்டிக்கும் அப்புறம் சும்மா கைய சோப் போட்டு கழுவிட்டே இருக்கணும்..ஐய எனக்கு வேணாம் பா.."

"பின்ன?.."

"எனக்கு பிரியாணிதான் வேணும்.."

"ஏன்..அதுன்னா கையக்கூட கழுவாம இரண்டு நாளைக்கு மோந்து பார்த்துட்டே திரியலாம்.. அதுக்குதான.."

"ககபோ...நீர் ஒரு ‌ மங்குனி அமைச்சர் என்பதை நொடிக்கொரு முறை நிரூபிக்கிறீர்.."

"போடாங்க..பவி நீ?..."

"ம்ம்..ஸ்ட்ராபெர்ரி உனக்கு சேராதில்ல..அது இல்லேன்னா வேணா சாப்பிடலாம்..அதுவும் ஒரு பீஸ் மட்டும்தான்.. ஓகேவா..."

"ஆங்..அது..நீ நல்லவண்டா பவி.."

மூவரும் கீழே விழுந்த அதே நிலையில் அப்படியே பேசிக்கொண்டு படுத்திருக்க...

"ம்ம்ஹ்க்கும்ம்...."

தலைக்கு மேலே கேட்ட கர்ஜனையில் தலையை மட்டும் உயர்த்தி பார்த்த ஆண்கள் இருவரும் ஒரே நேரத்தில் சத்தமிட்டனர்..

"வ்வ்வ்வா...ஆ....ஆ.வ்வ்வ்...."

"என்னடா வாவ்வு...எதுக்கு வா..வ்வு.."

கீழே விழுந்ததில் ஸ்பெக்ஸ் எங்கோ தெறித்திருக்க... அங்குமிங்கும் கையை நீட்டி கிடைத்த கண்ணாடியை அவசரமாய் அணிந்தவளும் அனிச்சையாய் வாய் பிளந்தாள்..

"ஆமா....வாஆஆ...வ்வ்வ்வ்...வுஊஊஊ தான்..."

காரணம் இவர்கள் நிமிர்ந்து பார்த்த அந்த ஆணின் முகம் அப்படி இருந்தது..அடர்ந்த சிகை...திராவிட நிறம்... திருத்தமான முகம்.. அழுத்தமான கண்களென பார்த்த பார்வையிலேயே காந்தமென இவர்களை இழுத்தவன்...முகம் மட்டும் மொத்தமாய் இரும்பென இறுகிப்போய் இருந்தது..ஆறடி உயரத்தில் அங்கிருந்த மேஜையில் தாவி ஸ்டைலாய் ஒற்றை காலை ஊனி உட்கார்ந்திருந்தவன் தோரணையும் பார்வையுமே இவர்களை ஆர்வமாய் பார்க்க வைக்க..ஏனோ இமைக்காமல் பார்த்து வைத்தனர் அவனை..

தன் காலடியில் வந்து விழுந்த மூவரையும் அவர்கள் அலும்பலையும் சிமிட்டாது பார்த்தவன்..விழியோரம் சிரிப்பில் லேசாய் சுருங்கியது..

"ம்ம்ம்...கொய்ட் இன்ட்ரெஸ்டிங்.."

என்றபடி புருவத்தை ஒருமுறை ஏற்றி இறக்க..
"
இந்த பையன் எம்பூட்டு அழகா இருக்கான்ல பவிச்சு..."

இருவரின் பெயரையும் சேர்த்து சொன்னவளை ஒருமுறை ஒன்றாய் திரும்பி முறைத்து.‌. ஒரே குரலில் தலையாட்டினர்..

"ஆமாடி அபிநய சுந்தரி..."

"அ..பி..ந..ய சு..ந்..த..ரி..."

ஒவ்வொரு எழுத்தாய் அழுத்தமாய் உச்சரித்தது அதியன் நெடுமாறன்..

மழை வரும்...









 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
சூப்பரான ஃப்ரெண்ட்ஸ் கேங் போல 🤣

அபி கேரக்டர் 🤣🤣 இவளை வெச்சுக்கிட்டு பாவம் பசங்க 🤩🤣

ஹீரோ வேற என்ட்ரி குடுத்தாச்சு 😍

அடுத்து என்னென்ன அலப்பறைகள் பண்றாங்கன்னு பாக்க அடுத்த எபிக்காக வெயிட்டிங் 😍
 
  • Like
Reactions: Kalaivani shankar

Kalaivani shankar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
62
24
8
Karur
ஹாஹா
பவிச்சு..
ஆமா வாவுதான்..
சிரிச்சு சிரிச்சு வயிரே வலிச்சிடுச்சு எம்மா..
இப்படியே கொண்டு போங்க, அழுவாச்சி எல்லாம் வேண்டாம்
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
😄😄😄😄😄😄😄😄😄கமெண்ட்ஸ் குடுக்குறதுக்கு முன்னாடி சிரிப்பு தான் வருது 😄😄😄😄சூப்பர் சூப்பர் writer சகி. அபிராமி அபிராமி 😍😍😍வீர தீர சாகச பெண் 😄😄😄😄பவித்ரன், விச்சு நண்பர்களாக கிடைக்க அபி போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கணும். ஆட்டோகாரரை கூட மகிழ்ச்சியடைய செய்யும் வீர பெண்மணி 😄😄😄😄😄