இளசுகள் மத்தியில் மிகப் பிரபலமான மாத இதழின் அட்டைப் பக்கம்..அபியின் கையில் படாத பாடு பட்டது..
தொழில் பிரிவில் இந்த வருட இளம் யூத் ஐகான் என வந்திருந்த நெடுமாறனின் புகைப்படம்தான் அதன் காரணம்..
அடர்த்தியாய் மந்திரவாதி போன்று புருவம்...அழுத்தமாய் ரத்தநிற லிப்ஸ்டிக்.. சைடில் பெரிய கிருதா... கன்னத்தில் ரூஜ்..ஒரு பக்க காதில் கடுக்கனென நெடுமாறன் அதில் படுபயங்கரமாய் இருந்தான்..
"பேரை பாரு நெடுமாறனாம்... நெடுமாறன்....பேசாம நெஏஏஏ..ட்டு...மாறன்னு வச்சிருக்கலாம் ..ஆளும் மூஞ்சும்..ஏதோ கொஞ்சம் அழகா இருக்கானேன்னு லைட்டா ஸ்லிப் ஆயிட்டேன்... அதுக்கு...அதுக்குன்னு என்னை பார்த்து எப்படி அப்படி சொல்லப் போச்சு...ஏண்டா விச்சு.."
கேட்டவள் சப்பென தொடையில் ஒரு அடி இழுத்து வைக்க..விச்சுவோ பல்லை கடித்து பொறுத்து கொண்டான்..
"நீ அடி...வேணாங்கல ஆனா புக்க கீழ வச்சுட்டு அப்புறமா அடி..அத பார்த்து பார்த்து வெறியேறி அளவில்லாம அடிச்சுட்டு இருக்க நீ..அடச்சீ...புக்க தள்ளி வை...எனக்கே இந்த மேக்கப்ல அவன பார்த்தா கண்ணல்லாம் கட்டுது.."
"எஏஏ..து.." சப்பென இன்னொரு அடி...
"இந்தா ஐஸ் பேக்..அது மேல வை..." பவி தூக்கி எறிந்ததை பிடித்தவன்..
"இருடா மொத்தமா வாங்கிட்டு வச்சுக்கறேன்.." ஓரமாய் வைத்து கொண்டான்..
"என்னை பார்த்து அப்படி...அப்படி ஒரு வார்த்தை எப்படி சொல்லப் போச்சுடா...டேய் பவி.."
"சொல்லுடாமா.."பாவமாய் குரல் வந்தது...
"நீயே சொல்லு..ஏண்டா அப்படி சொன்னான்..என்னை பார்த்தா அப்படியா இருக்கு..."
உண்மையில் பவிக்கு அத்தனை கோவம் அந்த வளர்ந்தவன் மேல்..
"மவனே கையில கிடைச்ச நீ சட்டினிடா .."
பல்லை கடித்தபடி..அழும் நிலையில் இருந்தவளை தேற்றியவன் கண்ணுக்குள் அன்றைய நிகழ்வு வந்து நின்றது.
தன் காலடியில் வந்து விழுந்த மூவரும் வாயை பிளந்து தன்னை சைட் அடித்ததில் வந்த சிரிப்பை அடக்கியவன் முகம்..அபியின் "அழகா இருக்கான்ல" என்ற ஒற்றை வார்த்தையில் மொத்தமாய் இரும்பென மாறிப் போனது..
அவனையே பார்த்தபடி எழுந்து பின்னால் தட்டி கொண்டவள் முகத்திற்கு நேராய் வந்து நின்றவன்...
"ஸாரி கிட்...என்னை இம்ப்ரஸ் பண்ற உன்னோட இந்த சப்ப பிளான்லாம் மொத்தமா ஊத்திக்குச்சு..சோ பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஓகே.."
நெருங்கியவன் ஏதோ சொல்ல போகிறான் என ஆர்வமாய் குனிந்து கேட்டவள் அவன் வார்த்தையில் கொதித்து போனாள்.
"எதே...யாரப் பார்த்து என்..ன்ன...."
இறங்கிய கண்ணாடியை கோவமாய் ஏற்றிவிட்டு போனவளை...பவியும் விச்சுவும் ஆளுக்கொரு புறம் இழுத்துக் கொள்ள..அப்போதும் திமிறியவள் நெற்றியில் தன் ஒற்றை ஆட்காட்டிவிரலை வைத்து தள்ளியவன்..போயேவிட்டான்..
"எப்படிடா..."ஒரே அடியில் பவியை நிகழ்காலம் வர வைத்தாள்
"ஸ்ஸ்ஆஆஆ...அடியே சாரு..எல்லாம் உன்னால..." பவி கிடைத்த பைலை தூக்கி வீச...சாரு தலையில் சரியாய் விட்டடித்தது..
"அதான...நாலு ரூவா..வெறும் நாலே ரூவா குடுத்து இந்த மாதிரி கேக்கு வெட்டுறோம்னு ஒத்த வார்த்த சொல்லிருந்தா... இவளே அழகா ஷேர் ஆட்டோ புடிச்சு போயிருப்பா.. அத்த விட்டுட்டு உன்னையெல்லாம் வேன் வச்சு கடத்துனான் பாரு உன் லவ்வரு...அங்க நின்னுட்டான் போ ..நீ என்ன பண்ற..அப்படியே நின்னவாக்குல அலுங்காம அந்த மாஸ்டர் பீஸ கொண்டு போய் மியூசியம்ல வச்சிட்டு வந்துரு...அதான் எங்க...இல்ல நம்ம எல்லாரோட வருங்காலத்துக்கும் நல்லது.."
விச்சு சீரியஸாய் நக்கலடிக்க..
"ச்ச்சீ போங்கடா..இதுக்குதான் இந்த ரூம்க்குள்ள வர்றதே இல்ல..."
சாரு கோவமாய் வெளியில் போய் மற்றவர்களுடன் இணைந்து கொண்டாள்..
"பேசாம..நம்ம ஆப்பரேஷன ஆரம்பிச்சுடலாமா விச்சு.."அபி ஆர்வமாய் கேட்க..
"செருப்பாலயே அடிப்பேன்..."
"ம்ம்ஹ்ஹ் போடா..." தலையை வெட்டி போய் தனியே உட்கார்ந்தவளை விச்சுதான் திட்டி தள்ளினான்..
"ஏற்கனவே அடங்காம அப்படி போய்தான் கண்டவன் வாய்ல விழுந்து..வாங்கிட்டு வந்திருக்க.. இனி ஆப்பரேஷன் அது இதுன்ன இவன் விட்டாலும் என்கிட்ட அடி வாங்குவ பாரு.."
ஆம்...ஆயிரம் இருந்தாலும் அபியால் எத்தனை பிரச்சனை வந்து இவர்கள் தர்ம அடி வாங்கி...மற்றவர்களுக்கு குடுத்து என செய்தாலும்...ஏன் போலீஸ் ஸ்டேஷன் பஞ்சாயத்து என அத்தனை முறை போய்..வாய்க் கொழுப்பில் வாங்கி கொண்டாலும்... அபியை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டனர் இருவரும்... அபிக்கு ஒன்றென்றால் மற்றவர்களை விட பவியும் விச்சுவும்தான் அதிகத்திற்கும் துடித்து போவர்..தாங்கள் உயிராய்...தங்களை உயிர்ப்பாய் வைத்து கொள்ளும் இந்த சின்னவளை அன்று மாறன் பேசியதில் ஏற்கனவே கோவத்திலிருக்க அதில் மேலும் எண்ணெய் ஊற்றியது அபியின் வார்த்தைகள்..
காரணம் இவர்களின் அகராதியில் ஆப்ரேஷன் என்றால் வீடு புகுந்து கலாட்டா செய்வது...எல்லோரைம் வைத்து செய்யும் மூவரையும் வேறு யாராவது மன உளைச்சலுக்கு ஆளாக்கினால் அவர்களின் கடைசி முயற்சி வீட்டில் வைத்து லாக் செய்வது...எதிரிக்கு பிடித்த பொருளை ஒளித்தோ தூக்கியோ..எதுவும் இல்லையென்றால் கடைசிக்கு அறையை அலங்கோலமாக்கியோ ஏதோ ஒருவகையில் மற்றவரை சூடாக்கி..அதில் ஸ்பைடர் பட S.J.Surya போல் ஆனந்தபட்டு கொள்ளும் நல்ல மனதுடையவர்கள்..
"ப்ச்ச்..விச்சு நீ பேசாம இரு.. அபிமா..உனக்குதான் அவன் நம்பர் புடிச்சு குடுத்தேன்லடா...நீ வேணா போன்ல திட்டேன்.. கண்ண மூடிட்டு திட்டுடா..ஆனத நாபார்த்துக்கறேன்..
அன்னைக்கு அங்க அத்தனை பேர் முன்னால சீன் ஆக வேண்டாம்னுதான் உன்னை தடுத்தேன்...இப்ப நீ திட்டுடா..நா இருக்கேன் கூட.."
பவி உறுதியாய் சொல்ல..
"ஆமா அபி...அவன் யாரு நம்ம பயதான்...சும்மா போன்லயே திட்டு.. அதுல்லாம் எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டான்.."
சொன்ன விச்சுவிடம் வாயை மூடுமாறு சைகை செய்தவள்..
"எங்க பவி..அது அவன் பி.ஏ நம்பர் போல...நானும் அடிச்சுட்டே இருக்கேன்... இரண்டு நாளா லைன்ல கிடைக்கவே மாட்டேங்குறான்.. நேர்ல போலாம்னா இவன் திட்டறான்.."
"நீ இன்னைக்கு டிரை பண்ணு..ஒன்னும் முடியலன்னா வேணா அடுத்து யோசிக்கலாம்.."
"ப்ச்ச்..." சலிப்புடன் போனை அடிக்க...அந்த பக்கம் இந்த முறை எடுத்து ஒரு பெண்குரல்..
"ஹலோ எஸ்..அஞ்சு ஹியர்.."
"ஹே விச்சு..யாரோ பொண்ணுடா..."
"ஆங்..லவுட் ஸ்பீக்கர் போடு...சீக்கிரம் சீக்கிரம்.."
"ஆங்..ஹலோ அஞ்சல..உங்காளு அங்க இருக்காரா.."
"வாட்.."
"அதான் அங்க நல்லா வளர்த்தியா அண்ணாந்து பார்க்குற உசரத்துல நெடுநெடுன்னு ஒருத்தன் மாறன்னு பேர்ல இருப்பானே... அவந்தான் அவன்ட்ட போன குடு...ஹல்லோ..அபி பேசறேன்னு சொல்லி குடு...ஓக்கே.."
போனை லேசாய் தள்ளி வைத்தவள்..
"எப்பூடி..." விச்சுவிடம் கேட்க
"நீ கலக்கு சித்தப்பா.."
சொன்னவன் தலையில் பவி தட்டி..
"ஏய் லந்த கூட்டாம ஒழுங்கா அவன்கிட்ட மட்டும் பேசிட்டு வை.."
அதற்குள் அந்த பக்கம் "நான்சென்ஸ்" என்றபடி லைன் கட்டாகியிருக்க..
"பார்றா...நெடுமரம் அவன மாதிரியே பல கிளைகள உருவாக்கியிருக்கும் போலவே..நானா நான்சென்ஸ்??..இருடி இன்னைக்கு அரைமணி நேரத்துக்கொரு தடவை உன்னை வச்சு செய்யறேன்.."
சொன்னது போலவே வேறுவேறு நம்பரிலிருந்து கால் செய்து கடுப்படிக்க அந்த பக்கம் இருந்த அஞ்சு எனும் அஞ்சனா நொந்து போனாள்..
"ஆஹ் சங்கர் ஸாரோட ஒரு வாரம் லீவ்ல பாஸ சைட் அடிக்கலாமேனு டியூட்டி மாத்தி வாங்கிட்டு வந்தா இப்படி ஒரு லூசுகிட்ட மாட்டி முழிக்கிறேனே..என் நேரம் அவரு வேற இரண்டு நாள் ஏற்கனவே வரல...இன்னைக்கு இந்த புது தலைவலி வேற..அய்யோ கடவுளே.."
அங்கிருந்த மூவருமோ "சிக்குச்சுடா புது ஆடு ".. என்ற களிப்பில் கெக்கே பிக்கேவென சிரித்தபடி உருண்டு புரண்டு கொண்டிருக்க... இதற்கெல்லாம் காரணமானவோ அங்கு வேறு மாதிரியிருந்தான்..
___________________________________
"மாறன் குழும இல்லம்.."
அந்த பிரமாண்ட மாளிகையின் காலை நேரம்...ஆட்கள் பரபரப்பாய் அங்குமிங்குமென சுற்றி வேலை செய்ய... பூஜையறையில் ஷஷ்டி கவசத்தோடு பூஜையை முடித்து...கற்பூரம் காட்டி கண்ணில் ஒற்றி கொண்டது அந்த வீட்டின் அரசி கலையரசி..
"கலை நா கிளம்பட்டா.." சொன்னபடி வந்து நின்றது இளமாறன்.. அதியனின் அப்பா..
"இருங்க சாப்பிட்டு போலாம்..பையனும் வந்திருவான்.."
எப்போதும் போல் ஒலித்த மனைவியின் சாந்த குரலில் மனம் லயித்தவர்...அவரின் வார்த்தையில் கோவமுகம் பூசிக்கொண்டார்..
"உம்பையன் நைட் புல்லா தூங்காம உலாத்திட்டு காலைலதான் தூங்க போனான்...இதுல ஏற்கனவே இரண்டு நாளா ஐயா ஆபிஸுக்கும் போகல.. இன்னைக்கும் போகலன்னா.. ப்ச் விடு எனக்கு லேட் ஆயிடுச்சு..நீ லன்ச் மட்டும் குடுத்து விடு.."
இளமாறன் பேசப்பேசவே கலையரசி நிமிர்ந்து பார்க்க....அங்கிருந்த படியில் நிதானமாய் அழுத்தமான பார்வையோடு வந்து கொண்டிருந்த நெடுமாறனை பார்த்ததும் முகம் பூவாய் மலர்ந்தது..
அவசரமாய் இருவருக்கும் தட்டை எடுத்து வைத்து பரிமாற..
"நீங்க சாப்பிட்டீங்களாம்மா..." கேட்டபடி அருகில் வந்து உட்கார்ந்தவனை பார்த்து பல்லை கடித்து கொண்டார் இளமாறன்..
"எதுத்தாப்புல இருக்கற அம்மாவ சாப்டியான்னு கேக்க தெரியுது.. பக்கத்துலயே இருக்கற அப்பன ஒரு குப்பைய மாதிரி கூட பார்க்க மாட்டேங்குறான் பாரு படவா.."
முனுமுனுவென உள்ளுக்குள் திட்டி கொண்டாலும் ஒற்றை மகன்மேல் உயிரையே வைத்திருந்தார் மாறன்.. இத்தனைக்கும் நெடுமாறனின் பத்தொன்பது வயது வரை அப்பாவும் பிள்ளையுமாய் இல்லாமல் உற்ற நண்பர்களை போல இருந்தவர்கள்தான் இருவரும்.. நெடுமாறன் செய்த ஒரு சிறு தவறு இருவருக்குமிடையில் நீண்டதொரு வெற்றிடத்தை நிரப்பியிருக்க...அதை நிரப்பும் வழி இருவருக்குமே தெரியவில்லை..
"நா எவ்ளோ நம்பினேன்..."என்ற ஏமாற்றத்தில் தந்தையும்..
"என்னை அவ்ளோ நம்புனவர நா ஏமாத்திட்டேனே.."என்ற குற்ற உணர்ச்சியின் தாக்கத்தில் மகனுமென அவரவர் நிலையில் அப்படியே நின்று விட்டனர்..
"ம்க்கும்...கலை முடியலேன்னா ரெஸ்ட் எடுக்க சொல்லு உம்பையன...நா போறேன் இன்னைக்கு ஆபீஸ்கு.. அவன் கண்ணெல்லாம் சிவந்திருக்கு பாரு.."
தந்தையின் அக்கறையில்... அடைத்த தொண்டையை செருமிக் கொண்டவன்...
"இல்லமா...நா ஓகேதான்...நா போறேன் இன்னைக்கு.."
"என்ன ஓகே..ஆளு இரண்டு நாளா ரூம விட்டு வெளிலயே வரல...நேத்து நைட் நாலு மணி வரை ரூம்ல லைட் எரிஞ்சது...பார்த்தா கீழ கார்டன்ல அந்த குளிருல நடந்துட்டு இருக்கான் கலை..."
"என்ன ராஜா இதெல்லாம்..."
அம்மாவின் குரலில் நிமிர்ந்தவன் திருதிருத்தான்..
"எப்படிம்மா உங்கிட்ட சொல்லுவேன்... மொதப் பார்வையிலேயே ஒரு சின்ன பொண்ணுமேல சாயப்போன என்னோட மனச அடக்க பயந்து... அந்த குழந்த புள்ளயப்போய் அப்படி ஒரு வார்த்தைய சொல்லிட்டு வந்துட்டேன்னு என்னால தாங்கவே முடியலமா.. கண்ணை மூடுனாலே அவ திமிறிட்டு வந்து நின்னு கேள்வி கேட்டு உதட்ட பிதுக்குறா.. அதுக்கு பயந்தே தூங்காம சுத்திட்டு இருக்கேன்னு... உங்கிட்ட நா எப்படிமா சொல்லுவேன்.."
மகன் ஏதோ மென்று முழுங்குவது ஒரு தந்தையாய் இளமாறனுக்கு புரிய தொண்டையை கனைத்து கொண்டார்...
"ஏன் கலை...எனக்கு அட்டாக் வந்து என்ன ஒரு பத்து வருஷம் இருக்குமா"
இளமாறனின் கேள்வியில் அதியன் முகம் கசங்கி போக..
"அத பத்தி இப்ப எதுக்குங்க பேசிட்டு..நானே அத மறக்க நினைக்கறேன்...நீங்க இப்ப நல்லாகிட்டீங்கங்க...அத மட்டும் பாருங்க.."
கலையரசி தவித்து போனார்..எப்படி மறப்பார் அந்த நாட்களை..கல்லூரி டூரிலிருந்த அதியனிடமிருந்து வந்த போன்காலில் அவசரமாய் புறப்பட்டு போனவர் அடுத்த நாளே அட்டாக் வந்து படுத்துவிட... என்ன நடந்ததென தெரியாமல் கலையரசி உண்மைக்கும் பரிதவித்து போனார்..
என்ன ஏதென எப்படி கேட்டும் இருவருமே மெளனம் சாதிக்க..பெரியவரோ கோவத்தில் அமைதியாகிவிட... அதுவரை துருதுருவென இருந்த சின்னவனோ மொத்தமாய் உள்ளுக்குள் இறுகிப்போனான்...
"எப்படி இருந்த எம்புள்ள..இப்ப ஒரு சிரிப்புக்கு பஞ்சமா போச்சு.. ம்ஹ்ஹ்.."
"ரொம்ப பெருமூச்சு விடாத கலை..இன்னைக்கு கூட பேப்பர்ல போட்டிருந்தானே... ஏதோ சினிமா ஸ்டார் ஸ்ரீவாணி அவதான் உன் பையனோட புது கேர்ள் பிரண்டாம்.... கூடிய சீக்கிரம் விதவிதமா ஷூட்டிங் பார்க்க கூட்டிட்டு போவான்.. ரெடியா இருந்துக்க.."
மேலும் ஏதோ பேச வந்தவரை சலீரென்று உடைந்த கண்ணாடி சத்தம் நிறுத்தியிருந்த்து... வேகவேகமாய் மூச்சை இழுத்து... கண்ணை மூடி கோவத்தை கட்டுக்குள் வைத்தவன் அடுத்த நொடி கிளம்பியிருந்தான்..
"இத்தன நாள்.. நா இதவிட அசிங்கமா கிழிச்சுருக்கேனே.. அப்பல்லாம் பாவமா நிமிர்ந்து பார்த்து ஏன்ப்பான்னு ஒத்த பார்வையால என்னை ஆப் பண்ணிடுவான்... இன்னைக்கு என்ன அதிசயமா கண்ணாடிலாம் பறக்குது... ஓக்கே...பய எங்கயோ வசமா சிக்கிட்டான்...சிக்கட்டும் சிக்கட்டும்..எங்க சுத்தினாலும் கடைசில எங்கிட்டதான நைனான்னு வருவான்...அப்ப பார்த்துக்கலாம்.."
இளமாறனின் மனதுக்குள் இந்த நினைப்பு ஓட.. "எம்புள்ளயே சாப்பிடல.. உங்களுக்கு மட்டும் இறங்குதா...சோறெல்லாம் இல்ல...எழுந்து போங்க.." நொடித்துக் கொண்டு உள்ளே போன மனைவியை பார்த்து சிரித்து கொண்டார்..

Last edited: