KPN ஹாஸ்பிடல் காரிடாரில் வண்டியை வளைத்து நிறுத்திய நெடுமாறன்...ஒரு அவசர நடையில் உள்ளே நுழைந்தான்.
"ஆப்பரேஷன் கொஞ்சம் கிரிடிக்கல் சொல்றாங்க சார்.. பயமாயிருக்கு…" என போனில் பிசிறடித்த ஷங்கரின் குரலே இந்த வருகையின் காரணம்..
அவசரமாய் வார்டை விசாரித்து லிப்டில் ஏறி வெளியே வந்தவன் கண்டது பதட்டத்துடன் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்த ஷங்கரைத்தான்..அது இவனுக்கும் தொற்றிக் கொள்ள..
"என்னாச்சு ஷங்கர்..எனிதிங் ராங்.."
"அய்யோ சார்..கொஞ்சம் தள்ளுங்க ப்ளீஸ்.."
தோளில் இடித்தபடி ஓடிய ஷங்கரை பார்த்து பயந்து போனவன் அவன் ஓடிய திசையில் இருந்தவர்களை பார்த்து தலையை ஆட்டியபடி சிரித்து கொண்டான்..
"இந்த அரவேக்காடுங்க எங்க இங்க..இன்னைக்கு என்ன கூத்தடிச்சுட்டு இருக்குங்க தெரியலயே.."
பிஸியாயிருந்த வார்டில் அங்கும் இங்குமாய் அலைபாய்ந்த ஷங்கரை இழுத்து வைத்து விசாரிக்க… அவனோ ஒரு மூச்சு அழுதுவிட்டான்..
"அய்யோ இல்ல சார்..அம்மாக்கு அவசரமா பிளட் வேணும்னு போஸ்ட பார்த்துட்டு ப்ளட் குடுக்க வந்தாங்க.."
"யாரு அந்த பொண்ணா.. ஷங்கர் அவ இப்ப ப்ளட் குடுத்தாலா??..அதான் முடியலயா.."
மாறனின் பதட்டத்தில் இவனுக்கு பயந்து வந்தது..
"அய்யோ இல்ல சார்..இல்ல…குடுக்க வந்தது அந்த இன்னொரு பையன்.."
ஷங்கர் கைகாட்டிய இடத்தில் பவி இருக்க..இரத்தம் குடுத்த அடையாளமாய் கையில் பிளாஸ்டரும் இருந்தது..
"அப்ப இவ ஏன் விழுந்து கிடக்குறா..?"
கேள்வியாய் பார்த்த மாறனுக்கு இங்கு ஷங்கர் பதில் சொல்ல..அங்கு விச்சுவோ மூக்கால் அழுது கொண்டிருந்தான்.
"
ஏண்டா டேய் போய் இரத்தம் குடுத்துட்டு வர்ற அரைமணி நேரத்துல இவள என்னடா பண்ணி வச்சிருக்க நீ .. அபிமா..டேய் எந்திரிடா.. முழிடாமா.."
என்ன பண்ணியும் கண் மூடியிருந்தவளை பார்த்து கோவமாய் வந்த பவியின் பார்வை நெருப்பில் நீச்சலடித்தபடி விச்சு நடந்ததை சொன்னான்…
பவி உள்ளே போன முதல் இருபது நிமிடம் அமைதியாய் சமர்த்தாய் இருந்தவள்..அங்கும் இங்கும் நன்றாய் சுற்றிவிட்டு இறுதியில் அங்கிருந்த ப்ளட் கலெக்ஷ்ன் இன்ஜார்ஜிடம் வந்து நின்றாள்..
"அங்கிள் நானும் ப்ளட் தர்றேன்…என்கிட்டயும் கொஞ்சம் எடுத்துக்குங்களேன் ப்ளீஸ்.."
நிமிர்ந்து அவளை பார்த்தவர்..
"ஏஜ் என்னமா..?"
"21 ரன்னிங்.."
"கண்ணை காட்டு.."
மேலும் கீழுமாய் உருட்டி காட்ட..
"ப்ச்ச்..கண்ணு கீழ இழுத்து காட்டுமா.."
சொன்னபடி செய்துகாட்ட..
"தோ அங்க ஒரு பெட் தெரியுதா…"
"ஆமா ..ஓஹ்அங்க போய் படுத்துக்கணுமா..ஓகே ஓகே..யோசிக்காம எவ்ளோ வேணாலும் எடுத்துக்குங்க.. எனக்கு நோ பிராப்ளம்.."
"ம்ஹீம்...உன் பாடி கண்டீஷன்கு நாங்கதான் இரண்டு பாட்டில் ப்ளட் உனக்கு ஏத்தணும்…சோ பேசாம அங்க போய் படுமா.."
லேட்டாய்தான் அவரது நக்கல் அவளுக்கு புரியவர..சிலிர்த்துக் கொண்டாள் பெண்ணவள்..
"ஹல்லோ ன்னா நக்கலா.. அதுல்லாம் என்கிட்ட நிறைய இரத்தமிருக்கு.. இப்படி செக் பண்ணாமயே எப்படி நீங்க சொல்வீங்க.."
அதுவரை இவளின் அலும்பலை அசுவாரசியமாய் பார்த்து கொண்டிருந்த விச்சு அதற்குபின் சுதாரித்து விட்டான்..
"ஏய் லூசு..இப்ப எதுக்கு உனக்கிந்த வேண்டாத வேலை..?"
"ஷ்ஷ்ஷ்..பேசாம அப்படியே திரும்பி அங்க பாரு.."
அவள் கைகாட்டிய திசையின் உள்ளறையில் ப்ரிட்ஜ் ஒன்றிருக்க.. அதிலிருந்து ப்ளட் குடுத்து வந்தவர்களுக்கு விதவிதமாய் ஜூஸ் எடுத்து குடுத்து கொண்டிருந்தார்கள்..
"ப்பூ..கேவலம் ஒரு ஜூஸ்…வா பவி பர்ஸுல சுட்டு நா வாங்கி தர்றேன்…"
"நோ நீட்...அவங்கள்ளாம் பாரு..வீரமா இரத்தம் குடுத்து அதுக்கு பரிசாதான் சூஸூ வாங்கிட்டு வர்றாங்க..அப்ப நானும் அதே வீரத்தோட குடுத்துட்டே வாங்கிக்கறேன்..ஐ கேன்..என்னால முடியும்..யூ வெய்ட் அன்ட் வாட்ச்..லோ எடுக்கறீங்களா இல்லையா…என்ன ரத்தம் இல்ல..ரத்தம் இல்ல..இங்க பாருங்க…எவ்ளோ ரத்தம் இருக்குன்னு… அய்யோ நத்…த..ம்…."
வீரமாய் மூச்சு வாங்கபேசியவள் அதே வேகத்தில் உணர்ச்சிவசப்பட்டு கையிலிருந்த பேனா கத்தியில் லேசாய் கீறிவிட…குப்பென வந்த ரத்தத்தை பார்த்து பொத்தென மயங்கி விழுந்தவள்தான்..அதன்பின் எழவே இல்லை..
"இதான்டா நடந்துச்சு…கேவலம் ஒரு மாதுள சூஸூக்கு ஆசப்பட்டு இப்படி பல்லி மாதிரி கவுந்தடிச்சுட்டா…நா என்னடா பண்ண..அய்யோ ஆண்டவா இன்னைக்கு பொழுதும் இப்படியே இவகூடத்தானா.. சுத்தம்.."
தலையில் கைவைத்து உட்கார்ந்த விச்சுவை பார்த்தவன்..
"எனக்கோ தலைசுத்துது…இவன தூக்க சொன்னா இவன் இடுப்பு எலும்பு உடைஞ்சிடும்.. இப்ப என்ன பண்ண..? பவி தீவிரமாய் யோசித்து.. அங்கிருந்த சேரில் அபியை தூக்கி வைத்தவன்.. தலைசுற்றல் நிற்கும்வரை அங்கேயே இருக்க தீர்மானித்து கொண்டான்..
அங்கு ஷங்கரிடம் நடந்ததை கேட்டவன் கண்முன் அவள் செய்ததெல்லாம் படமாய் ஓட..உதட்டை கடித்து சிரிப்பை அடக்கினான் நெடுமாறன்..
"குட்டி ராட்சஸி…எப்பவும் எல்லாரையும் ஒரு பீதியிலேயே இருக்க வச்சுப்பா போல..இவள வச்சு நா சமாளிச்சுருவனா??.. ப்ச்…நா சமாளிக்கலேன்னா வேற யாரு சமாளிப்பா…கல்யாணத்துக்கு அப்புறம் வீட்டையே ஆபிஸா மாத்திக்க வேண்டியதுதான்..வேற வழியே இல்ல…"
ஆம்…முடிவே செய்துவிட்டான் நெடுமாறன்..என்ன ஆனாலும் அந்த சின்னப் பெண்தான் இனி தனக்கு எல்லாமென… அன்று போனில் அவள் அப்படி பேசியுமே தனக்கு கொஞ்சமும் கோவம் வராமல்.. உடனே அவளை பார்க்க வேண்டுமென்ற ஆசையுடன் வந்த தீவிரம் சொன்னது அவள்மேல் அவன் மனம் கொண்ட காதலை..அந்த குழந்தை முகத்தை கோவமாய் சொல்லிய ஒரு வார்த்தையில் மொத்த ஜீவனும் போனது போல் இருந்தவனுக்கு… வரமாய் வந்து ஒலித்தது அவளின் குரல்.."என் பேபிய இதே குழந்தத்தனத்தோட என்ன விட வேற எவன் பார்த்துப்பான்…அவள உசுருல வச்சு பார்த்துக்க நா இருக்கேன்.. என்னால மட்டும்தான் அது முடியும்.." காதல்தான் என முழுதாய் உணர்ந்தபின் அதுவரை அலையடித்த மனதில் அத்தனை நிம்மதி..
கண்மூடி ஏதேதோ யோசனையிலிருந்தவனை கைபிடித்து அழைத்து வந்தது நிகழ்காலம்...டாக்டர் வந்தவர் வெற்றிகரமாய் சர்ஜரி முடிந்ததாய் சொல்ல…அதன்பின்னும் கொஞ்ச நேரம் ஷங்கரோடு இருந்து அவனை தைரியமாக்கி கிளம்பி வந்தவன் கண்டது… அதே போஸில் அப்படியே இருந்த மூவரையும்தான்…அபியை பார்வையில் நிரப்பியபடி தாண்டிப்போனவன்…போன அதே வேகத்தில் திரும்பி வந்தான்..
"ம்க்கும்.."மாறனின் செருமலில்..
"யார் இந்த சிம்மக்குரலோன்..?"
"எங்கேயோ கேட்ட குரல்…?"
பவியும் விச்சுவும் ஆளுக்கொன்றாய் சொன்னபடி நிமிர..அசால்ட்டாய் பிளேசரை ஒரு கையில் பிடித்தபடி நின்றிருந்தது நெடுமாறன்... அவன் வாரிச் சுருட்டும் பார்வை மொத்தமும் அபியின் மேல்..
"இவள உள்ள அட்மிட் பண்ணுங்க.."
கட்டளையாய் சொன்னவன் வார்த்தையில் சற்றே பயத்துடன் இருவருமே ஒன்று போல் எழ..அவன் கண்ணிலிருந்த சிரிப்பு இப்போது உதட்டிற்கு வந்தது..
"இல்ல…சப்போஸ் அட்மிட் பண்ணி டிரிப்ஸ் போட்டா..முழிச்சதும் செம ரகளை பண்ணி விட்டுடுவா.. இது ஒன்னுமில்ல.சும்மா வெளாட்டா அல்லு வுட்டதுல வந்த மயக்கம்தான்.. அதுல்லாம் அப்படியே விட்டாலே லஞ்ச் டைம்கு கரெக்டா அலாரம் அடிக்காமலயே முழிச்சுடுவா.. இல்ல பவி..எங்களுக்கு இது எப்பவும் பழக்கம்தான்..சோ சில் ப்ரோ".
வளவளத்த விச்சுவை பவி முறைக்க…"ஓகே கூல்.." தோளை குலுக்கி கொண்டான்.
"
ஓஹ்..அப்ப கூட்டிட்டு போகலாம்ல.."
"இல்ல..எனக்கு கொஞ்சம் டிரவுசியா இருக்கு..இவன் தூக்குனா உடைஞ்சிடுவான்..அதான்.."
பவி சொன்ன அடுத்த ஷணம்…அபி மாறனின் கையிலிருந்தாள்.. ஆசை ஆசையாய் அள்ளிக் கொண்டான் தன் பூவையவளை..
"ஆஹ்ஹ்….அய்யோ நீங்க ஏன்..நாங்க எதுனா ஸ்ட்ரச்சர் அரேன்ஜ்…."
"நோ பிராப்ளம்.."
"அய்யோ..உங்க நோ ப்ராப்ளம் எங்களுக்கு பெரிய பிராப்ளம்.. அது என்னன்னா இவ ஏற்கனவே உங்கமேல செம்ம கோவத்துல இருக்காளா.. முழிக்கும் போது உங்கள கிட்டக்க எதுனா பார்த்தான்னா பிராண்டி விட்டிரும் இந்த பேயி..அதான் சொன்னேன்.."
சொன்ன விச்சுவை மாறனின் ஒரு பார்வை நிறுத்தியது..
"ப்ப்பாஹ்…என்னா கண்ணுடா சாமி..அய்யோமா எனக்கு வேப்பிலதான் அடிக்கணும் போலவே.."
தலையை உலுக்கிக் கொண்டு விச்சு போய்விட..
"வெளில ரெட் கலர் கார்..பார்த்து கொஞ்சம் சீக்கிரம்…" என்றபடி காரெடுக்க பவியும் போய்விட்டான்..
"என்னோட வைப்தான்..நான் பார்த்துக்கறேன்.." என்றபடி வந்த ஸ்ட்ரெச்சரை மறுத்தவன்.. முகமெங்கும் ரகசிய புன்னகையே..
"போங்கடா ஏ பால் டப்பாங்களா… லட்டு மாறி சான்ஸ் என் அல்வாவ தூக்க கிடைச்சிருக்கு..இதுல சீக்கிரமா கூட்டிட்டு வரணுமா..ஹ ஹ..பாருடா என் ஜாங்கிரிய தொட்டதும் இனிக்குற என்மனசு மாதிரி இவ நினைப்புலகூட ஒரே ஸ்வீட்டாதான் வருது..மூஞ்ச பாரு…பச்சப்புள்ள மாதிரி.. ஆனா இவ்ளோ பேசுற உன் வாய் மட்டும் என்னடி இவ்ளோ குட்டியா க்யூட்டா இருக்கு.. செவசெவன்னு இருக்கற இந்த குண்டு கன்னத்த தடவனும்..அடிக்கடி சிவக்குற உன் நுனிமூக்க கடிச்சு வைக்கணும்..அழகா குழிவிழற இந்த தாடைல சின்னதா ஒரு முத்தம் வைக்கணும்.. மொத்தத்துல உன்னை இப்படியே காலம் பூரா இறுக்கி எனக்குள்ளயே வச்சுக்கணும்னு ஏண்டி எனக்கு வெறியாகுது.. ஆமா லட்டுமா.. இத்துனூன்டு ரத்தத்துக்கே இப்படி நீ மயக்கம் போட்டு விழுந்தா...அப்புறம் உன்னை வச்சுட்டு எப்படிடி நா…"
அதற்குமேல் யோசித்தவன் முகம் அழகாய் வெட்கத்தில் சிவந்து போனது.
பவியும் விச்சுவும் கார் கதவை திறந்து வைத்து வெகுநேரமாய் நின்றிருக்க..விச்சுதான் ஆரம்பித்தான்..
"ஏண்டா பவி..நா ஒருதடவ எதுத்த வீட்டு பானுக்கு லவ்லெட்டர் குடுத்தேன்னு சொன்னேன்லடா.."
"ப்ச்ச்..அவகிட்ட செருப்படி வாங்குனதும்தான் சொன்ன.. அதுக்கென்ன இப்ப.."
இருந்த கடுப்பில் நகத்தை கடித்தபடி கடுகடுத்தான் பவி..
"இல்ல அந்த மொக்க லவ் சக்ஸஸ் ஆகணும்னு வேண்டிட்டு பெருமாள் கோயில்ல அடி அடியா அடிபிரதட்சணம் பண்ணும் போதுகூட இவ்ளோ நேரமாகல.. சீக்கிரமா முடிச்சுட்டேன்..இங்க அந்த கோயில விட டிஸ்டென்ஸ் கம்மிதான்..அதான் இத என்ன பார்முலால கால்குலேட் பண்றதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.."
"நானும் அதேதான் யோசிக்கறேன்.. இப்ப அபிய தூக்கும்போது அவன் மொகத்த பார்த்தியா..ஏதோ கோயில்ல குடுக்கற புளிச்சோற பக்தியோட வாங்கிக்குற மாதிரி அவ்ளோ பணிவு…மொகத்துல ஒரு குழைவு..ம்ஹீம் ஏதோ சரியில்ல.."
"ஆமா அபிக்கு புளிச்சோறு காம்பினேஷன் சரியில்ல..வேணா சக்கர பொங்கல்னு வச்சுக்கலாமா.."
"அடங்குடா டேய்..இனி இவன்கிட்ட இருந்து அபிய தள்ளியே வைக்கணும் புரியுதா..இன்னைல இருந்து அபி மேல நம்ம ஒரு கண் இல்ல..இரண்டு கண்ணையும் அலர்ட்டா வச்சுக்கணும்..என்ன ஓக்கேவா.."
"டபுள் ஓகேடா..இரண்டென்ன… வேணா எக்ஸ்ட்ராவா இரண்டு வாங்கி மொத்தம் நாலு கண்ணையுமே அவ மேல வச்சர்றேன்.."
விச்சு தீவிரமாய் முகத்தை வைத்தபடி சொல்ல..
"எதுவுமே நா சொல்ற மாதிரியே
பண்ண மாட்டியா..ஒன்னு கூட இல்ல குறையத்தான் பண்ணுவியா.."
பவிக்கு இருந்த கோவத்தில் அடி வெளுத்துவிட்டான்..
"அடங்க…வுடுடா என்னைய…இந்த பச்சப்புள்ளய அடிச்சு தொவச்சது போதும்…அங்க ஒருத்தன பாரு..நவரசத்துல எக்ஸ்ட்ராவா ஏழெட்டு ரசத்த அள்ளிப் போட்டு புழிஞ்செடுத்து அபிராமி அபிராமிங்கற மாதிரி வர்றான் பாரு..அவன போய் என்னன்னு கேளு.."
விச்சு சொன்னது போலவே அபி முகத்தையே ஆசையாய் பருகியபடி வந்த மாறனை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏகத்திற்கும் பயம்..எதுவும் பேசாமல் பின்னிருக்கையில் அபியை பூப்போல கிடத்தியவனிடம் பவ்யமாய் தலையசைத்தவன் வேகமாய் காரை கிளப்பி போய்விட..
"பசங்க அலர்ட்டாய்டானுங்க போலவே..மொகத்துல லைட்டா டவுட் தெரியுது..ப்ச் பரவால்ல...ஆனா இதுக்காகவெல்லாம் என் தங்கத்த நா விட்டுத்தர முடியுமா..இருங்கடா டேய்..என் லட்டோட உங்களையும் ஒண்ணா சேர்த்து தூக்கி பூந்தியாக்கிர்றேன்…"
குனிந்து அபியை தூக்கி வந்த கைகளுக்கு ஆசையாய் கண்ணைமூடி முத்தம் வைத்துக் கொண்டான் மாறன்…
__________________________________
ஆனந்த பவனம்..
பெயரிலிருந்த ஆனந்தம் அங்கிருந்த அத்தனை பேரில் ஒருத்திக்கு மட்டுமே மறுக்கப் பட்டிருக்க.. கண்ணை இறுக்கமூடி வலியை பல்லைக் கடித்து பொறுத்து கொண்டாள் அபி..கத்தினால் இன்னும் முறுக்குவாள் எதிரிலிருப்பவள்..
"என்னடி...விட்டா உன்னை பார்வையாலேயே முழுங்கிடுவான் போல..அப்படி பார்க்குறான்.. அன்னைக்கு பார்ட்டில நான் லைட்டா கைய புடிச்சதுக்கு அவ்ளோ கேவலமா லுக் விட்டான்…இன்னைக்கு அவ்ளோ பப்ளிக்கா அதுவும் ஒரு ஹாஸ்பிடல்ல வச்சு..ஏய் உண்மைய சொல்லு..என்ன மேட்டர முடிச்சுட்டியா.."
"விடு சம்மு..வலிக்குது.." இன்னும் நன்றாய் முறுக்கி துடிக்க வைத்தபின்பே கையை விட்டாள் சம்மு எனும் சம்யுக்தா..அபியின் அப்பாவின் மூத்த மகள்..
ஆம்…அபியின் அப்பா ரத்தினத்திற்கு இரண்டு மனைவிகள்…சொந்த அத்தை பெண்ணான வள்ளியை பெற்றோருக்காய் மணந்தாலும்…தன்னிடம் வேலை செய்த சின்னப்பெண் கஸ்தூரியின் மேல் கொள்ளை ஆசை அவருக்கு...ஆர்வமாய் தன்னிடம் நெருங்கி நெருங்கி வரும் முதலாளியிடம் அந்த சின்னவளும் மனதை தொலைத்து விட.. விளைவு வேறு ஊரில் வீடெடுத்து வைத்து குழந்தையாய் அபியையும் பெற்று கொள்ளுமளவு தைரியம் கூடிப்போனது..
விஷயம் கைமீறிப் போனபின்பே எல்லாருக்கும் தெரியவர..வள்ளியோ பேயாட்டம் ஆடினார் என்றால் கஸ்தூரியோ உள்ளுக்குள் ஒடுங்கி போனார்..அதுவரை கணவர் மேல் இருந்த காதலில் பெரிதாய் தெரியாததெல்லாம் நடுவீட்டிற்குள் வந்து பிரச்சனை செய்த வள்ளியின் வீட்டாட்கள் மூலம் உரைத்தது..
சின்னவீடு…கீப்பு..வப்பாட்டி.. அவரவர்க்கு தெரிந்த விதத்தில் இட்டு அழைத்த பெயரில் கஸ்தூரிக்கு அவரின் சொந்த பெயரே மறந்து போனது.. மூத்தாருக்கு பயந்து கணவன் எட்டியே பார்க்காமல் போய்விட…அடுத்து என்ன செய்வதென தெரியாமல் தவித்த சமயம்…அவரை காக்கும் ரட்சகனாய் வந்தார் ரத்தினத்தின் அப்பா..
மகன் செய்த தவறை மூடி மறைக்க நினைக்காமல்.. முதலில் வாழும் வாழ்க்கைக்கு நிலையான வருமானம் வருமாறு செய்தவர்..இறக்கும் தருவாயில் சொத்தில் பங்கையும் நடுநிலையாய் இவர்களுக்கென பிரித்திருந்தார்..
கோடிக்கணக்கில் சொத்து வந்த போதும் கஸ்தூரி வாழ்ந்தது எப்போதும் போல் எளிமையானதொரு வாழ்வே.. தன்னைப்போலவே தன் பெண்ணையும் ஆசைகள் எதுவுமின்றி வாழ்வை உணர்ந்து வாழ கற்று கொடுத்தவர்.. அபியின் பதினாறு வயதில் புற்றுநோயால் இவ்வுலக வாழ்விலிருந்து ஓய்வெடுத்து கொண்டார்…. அன்று பிடித்தது அபிக்கு வாழ்நாள் சனி சம்மு என்ற பெயரால்..
கஸ்தூரி இறந்தபின்.. வேறுவழியின்றி அந்த வீட்டின் வேண்டாத விருந்தாளியானாள் அபி..முதலிலேயே ரத்தினம் அழைத்து தெளிவாய் சொல்லிவிட்டார்..
"இங்க பாருமா…கஸ்தூரி இருக்கும் போதே உன்னை ஒருதடவ கூட இவ பார்க்க விடமாட்டா..இப்ப அவளும் இல்லாம தனியா நீ வந்தேன்னா அவமேல இருக்கற கோவமெல்லாம் உம்மேலதான் மொத்தமா திரும்பும்..பேசாம நா இங்கயே ஏதாவது ஒரு நல்ல ஹாஸ்டலோட இருக்கற காலேஜ்ல சேர்த்து விடறேன் இருந்துக்கிறியா…நா வேணா அப்பப்ப வந்து பார்த்துட்டு போறேன்..என்ன சொல்ற.."
கேட்டவரிடம் மாட்டேன் என கண்ணீருடன் தலையாட்டினாள் அபி..தனது கடைசி நாட்களில் கஸ்தூரி இவளிடம் தெளிவாய் சொல்லியிருந்தார்..
"இங்க பார் அபி..இந்த உலகம் ரொம்ப பொல்லாதது…வாழுன்னு வாழ விடும்..ஆனா ஏண்டா வாழுறோம்னு நம்மளயே சாகவும் செஞ்சிடும்..எதுவா இருந்தாலும் பொண்ணுங்களுக்கு குடும்பம்னு ஒரு அமைப்பு இருக்கணும்..அது இல்லாம நாம எவ்ளோ கஷ்டபட்டோம்னு உன் கண்ணால நீயே பார்த்திட்ட..அதுனால அம்மா இல்லேன்னாலும் நீ உங்க அப்பாகூடத்தான் இருக்கணும்.. உனக்குன்னு ஒருத்தன் வர்றவரை நீ தனியா போக நினைக்க கூடாது சரியா..அதே மாதிரி உனக்கு வர்றவன் உனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்..அடுத்தவ பொருளுக்கு ஆசப்பட்டு என்னை போல வாழ்க்கைய தொலைச்சிராத.. புரியுதா...?"
அன்பாய் அறிவுரை சொன்னவர்..இவளிடம் சத்தியமும் வாங்கி கொண்டு காலனிடம் சென்றுவிட.. அதோடு அபியின் மொத்த சந்தோஷமும் சென்றது..
வீட்டில் மட்டும்தான் இடம்..மற்றபடி எதற்கும் எப்போதும் கண்முன் வந்து நிற்க கூடாதென முதலிலேயே ஒரு ஆட்டம் ஆடித்தான் அபியையே உள்ளே விட்டார் வள்ளி..அதுவரை அபிக்கு இருந்த சுதந்திரம்..நம் வீடு எனும் உரிமை எதுவுமே இங்கு இல்லாமல் போக..மிகவும் தவித்து போனாள் சின்னவள்..
பார்க்கும் போதெல்லாம் வாய்க்குள் முணுமுணுக்கும் வள்ளியின் அர்ச்சனைகள் ஒருபுறம்…எதிர்படும்பொதெல்லாம் அடித்து துவைக்கும் சம்முவின் அட்டகாசமென பொறுத்து பார்த்தவள்…கல்லூரி சேர்ந்த முதல் நாளே ஒன்றாய் கூடி சிரித்து கொண்டிருந்த பவி கேங்கிடம் வந்து கேட்டது.."இங்க எதுனா உங்களுக்கு தெரிஞ்ச ஆர்பனேஜ் இருக்கா..அங்க என்னை சேர்த்து விடறீங்களா..??" என்றுதான்…மொத்த கூட்டமும் ஆடிப் போனது.. பின் தினத்திற்கு ஒரு காரில் வரும் பெண் இப்படி கேட்டால் அவர்களுமே என்னவென நினைப்பர்..
"எங்கம்மா குடும்பமா இருக்கணும் சொல்லுச்சு.. ஆனா இங்க நா இரண்டு நாளா சாப்பிடாதது கூட கேட்க யாருமில்லாம இருக்கேன் அப்ப நானும் அனாதைதான... பேசாம நா அங்கயே போயி அவங்ககூடவே குடும்பமா இருந்துக்கறேன்...என்ன நா கரெக்டாதான பேசறேன்..."
அவளின் கண்ணீர் கதையை கேட்டு..ஆறுதல் சொல்லி.. எப்போதும் அழக்கூடாதென சிரிக்க வைத்து நட்பாய் அன்று கரம் பிடித்தவர்கள்தான் பவியும் அச்சுவும்...இன்றுவரை அவளை விடாது பாதுகாத்து வந்தனர்.. வீட்டில் சம்முவிடம் இருந்து தப்பிக்க வழி சொல்லி குடுத்தவர்கள்…எல்லா லீவு நாட்களிலும் தங்களுடனே வைத்து கொண்டு திரிவர்..அபி என்றோரு ஆள்..அந்த பெரிய வீட்டின் யார் கணக்கிலும் வராமல் போக…சுதந்திரமாய் சுற்றி திரிந்தாள் பெண்.. ஆனால் அப்படியும் சில சமயம் இன்றுபோல் சம்முவிடம் வசமாய் சிக்கி அடிவாங்குவாள்.. எப்போதும் காரணமேயில்லாமல் அடிப்பவள் இன்று அடிக்க காரணம் நம் நெடுமாறன்..
"சொல்லுடி..மேட்டர முடிச்சுட்டியா.."
"ஆஹ்..சரி நீ கைய விட்டா சொல்றேன்..நீ மொதல்ல விடு.."
சம்மு இருந்த ஆத்திரத்திற்கு அபியின் முதுகிலேயே இரண்டு போட்டு அதன் பின்பே விட்டாள்.
அபி வலித்த கையை நேராக்கி வளைத்து நெளித்து பார்த்தவள்..
"சம்மு.. பதில் சொல்றதுக்கு மொதல் நா ஒன்னு கேக்கட்டா..நீ பதில் சொல்றியா.."
"என்ன கேட்டுத்தொலை.."
"இல்ல அன்னைக்கு விச்சு கேட்டான்..நீ எப்பவும் கிழிஞ்ச துணிய போட்டுக்குவியா.. இல்ல போட்டுட்டு அப்புறமா துணிய கிழிச்சுப்பியான்னு…நாகூட இருபது ரூவா பெட் கட்டிருக்கேன்.. போட்டுதான் கிழிச்சுப்பேன்னு கரெக்ட்தான சம்மு.."
அவள் பேசப்பேசவே அடிக்க வந்தவளிடமிருந்து குனிந்து தப்பித்தவள் ஒரே ஓட்டமாய் ஓடி வந்து கதவை அடைத்து இரண்டடுக்கு தாழ்பாளையும் போட்டு புசுபுசுவென மூச்சு வாங்கினாள்.
"அய்யோமா..அந்த நெடுமரம் பண்ண வேலைக்கு இப்படி சொந்த வீட்டுக்குள்ளயே என்னை ரேஸ் ஓட விட்டுட்டானே பாவி..யம்மா ஜஸ்ட் மிஸ்ஸூ.. அறைஞ்சிருந்தா…பல்லு மொத்தமும் காலி..ஆமா அவ என்னமோ அந்த நெடுமரம் என்னை முழுங்கற மாதிரி பார்த்தான்னு சொன்னாலே.. அது எப்போ அந்த சரித்திர நிகழ்வு நடந்துச்சு..ஆங் அப்போ அன்னைக்கு ஹாஸ்பிடல்ல.."
"என்னோட வைப்தாங்க.."
யாரோ யாரிடமோ சொன்னதும்..திடீரென தான் அந்தரத்தில் மிதந்ததும்… "இப்படியே உன்னை இறுக்கமா வச்சுக்கட்டா…"
எங்கோ கேட்ட அந்த வசியக்குரல் இப்போது காதருகில் கேட்பது போலிருக்க… தலையை பலமாய் உலுக்கிக்கொண்டாள்..
மெதுவாய் எழுந்து பீரோவை திறந்தவள் துணிக்கடியிலிருந்து உருவி எடுத்தாள் மாறனின் போட்டோவை…அன்று அலங்கோலப்படுத்தியிருந்த புகைப்படத்தை பத்திரமாய் ஒளித்து கொண்டவள்..
தோணும்போதெல்லாம் எடுத்து திட்டியும் கொஞ்சியும் மறுபடி ஒளித்து வைத்து விடுவாள்..
"என்னோட வைப்தாங்க.."
மறுபடி அதே குரல் கேட்க…அவன் முகத்தையே வருடியபடி பார்த்திருந்தவள்..அன்றிரவு தூங்கவேயில்லை..
மழை வரும்…

Last edited: