நகரின் மிகப்பிரபலமான கல்லூரி..பொறுப்பான மாணவர்கள் நேரமாகிவிட்டதென பரபரப்பாய் உள்ளே போய் கொண்டிருக்க.. அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத பவி கேங் மட்டும் தனியாய் ஆட்டம் போட்டிருந்தது..
அன்பே சாரு..
நீ ரொம்ப போரு..
உன்னை கடத்துன காரு..
கிடைச்சா அதுமேல அடிப்பேன் சேறு..
விச்சு சொன்ன மொக்க கவிதைக்கு பரிசாய்.. மணலைஅள்ளி அள்ளி தலையில் போட்டாள் சாரு...
"அடடேய்...அவளுக்கு அடுத்த பர்த்டேவே வரப்போகுது... இன்னுமாடா இவள வச்சு செஞ்சுட்டு இருக்கற நீ..."
பவி சிரித்தபடி விச்சுவின் தோளில் தட்ட..
"போடா டேய்...அடுத்த பீட்சா வகையா கிடைக்கற வரை என் தக்காளித் தொக்கே இவதான்...சும்மா செதச்சு வுடப்போறேன் பாரு.."
சொன்னவன் நாக்கை மடித்து சாரு தோளிலேயே குத்தி தள்ளினான்..
"அசந்த நேரம் பார்த்து மண்ண அள்ளி தலைல போடுவியா போடுவியா.."
கேட்க கேட்கவே இன்னும் தலையில் மண்விழ... பார்த்துக்கொண்டிருந்த அபிக்கு அப்படி ஒரு சிரிப்பு..
"டேய் விச்சு அது அவ போட்ட மண்ணு இல்லடா...உன் தலைக்கு உள்ள இருந்து வந்து விழற மண்ணு... நகராத நகராத..ரொம்ப அசைஞ்சா மொத்தமா வந்துரும்.."
இப்போது சாருவை விட்டு..சொன்ன அபியை முதுகிலேயே குத்த...
"அய்யோ.. எம்மா..அம்மா... எம்மே.." சிரித்துக்கொண்டே அடி வாங்கியபடியே நிமிர்ந்தவள்.. அப்படியே உறைந்து போனாள்...
கல்லூரி முதல்வருடன் ஏதோ மும்முரமாய் பேசியபடி வந்து கொண்டிருந்தான் நெடுமாறன்.. அவன் பின்னால் ஷங்கர்..
டையை லேசாய் தளர்த்தியபடி... சுற்றும் முற்றும் ஒரு தேடலுடன்..தன் விழி அம்பை நாலாபுறமும் வீசியவன் பார்வை வட்டத்தில்...சிந்தாமல் சிதறாமல் சிலையென விழுந்த பாவையை கண்டு மலர்ந்தவன்..சட்டென மின்னலாய் கண்சிமிட்ட......
"அவ்...வா...அடப்...ப்பாவி..."
உதட்டுக்குள் அழகாய் சிரிப்பை அடக்கிக்கொண்டவன்...மறுபடி ஒருமுறை கண்சிமிட்டி செல்ல..
"ஆஹ்...பவி பவி...அங்க..அங்க பாரு.."
அபிக்கு எதிரிலிருந்ததால் மாறனை மற்றவர்கள் பார்க்காமலிருக்க... அபிக்கோ அதிர்ச்சியில் அதற்குமேல் வார்த்தை வரவில்லை..
"என்னடா என்னாச்சு...எதுனா பேய கீய கண்டுட்டாளா..கைய இந்த உதறு உதறுரா..ஏய் அடச்சீ இந்த ஸ்டெப்ப முதல்ல நிப்பாட்டு..வேற ஸ்டெப்பு ஆங்..இப்படித்தான்..இப்படி போடு.."
விச்சு சொன்னவன் அபியின் கையை பிடித்து அப்படி இப்படி ஆட்ட..சப்பென விழுந்தது ஒரு அறை..
"ஏண்டி.."
"அட லூசே..அங்க பாரு நம்ம நெடுமரம் உள்ள போய்ட்டு இருக்கு..அதுவும் அவன் கண்ணு...கண்ணு.."
அதற்குமேல் சொல்ல முடியாமல் திணற..
"பார்த்துட்டியா..நீயும் பார்த்துட்டியா...
அது கண்ணு இல்லமா.. பவர்புல்லான இரண்டு கன்னு... ஒரே ஷாட்ல நம்மள காலி பண்ணுற வெரி டேஞ்சரஸ் வெப்பன்மா...அதுனால நீ அதெல்லாம் பார்க்காம.. சமர்த்தா நல்ல புள்ளயா இருந்துக்க...அதான் உனக்கு நல்லது.."
ஆம்..பவியும் மனதார இதை ஒத்துக்கொண்டான்..அன்று ஹாஸ்பிடலில் வைத்து வார்த்தை அதிகமின்றி பார்வையாலேயே தங்களை அடக்கி வைத்த ஆளுமை மாறனின் அந்த கண்கள்தானே..அதை பார்க்காமலிருப்பதே யாவருக்கும் நலமென்று நினைத்து கொண்டான்..
"டேய் அடங்குடா.. அபிமா நீ எங்கடா பார்த்த.."
அபி கைகாட்டிய திசை இவர்களின் வகுப்பறை வளாகம்..பவிக்கு சட்டென வந்த படபடப்பில் வேர்த்து வந்தது..
"கடைசில கருவாட்டுக்கூடையத் தேடி பூனை நேர்லயே வந்துருச்சேடா.."
விச்சு பவி காதுக்குள் வந்து சீண்ட.."மூடிட்டு போய்டு.." அவனோ கடித்து துப்பினான்..
"சரி வா போலாம்..இது பிரின்ஸி கிளாஸ்..சோ கட் அடிக்கவும் முடியாது..அப்புறம் அது கதருற சுய ஒழுக்க புராணத்த கேக்குறதுக்கு.. வா போய் என்னன்னு பார்த்துடலாம்..
அட வாடா வாடா..எவ்வளவோ பண்ணிட்டோம்.. இவன பண்ண மாட்டோமா... இன்னைக்கு ஓட விடறோம்..என்னடா அபி.."
அபிக்குமே அவன் முதல்முறை சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வர.."எவ்ளோ கொழுப்பிருந்தா என்னை இம்ப்ரெஸ் பண்றேன்னு ஹர்ட் பண்ணிட்டு இவன் இந்த வேலைய செய்வான்.. விடமாட்டேன்.. இன்னைக்கு மவனே வசமா மாட்டுனடா.."
"அலற விடறோம்.."
மூவரும் ஒன்றாய் கையடித்து கொண்டு உள்ளே சென்றனர்..
இது இவர்கள் கல்லூரியில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான்... இறுதி ஆண்டின் இறுதி செமஸ்டர் என்பதால் தங்கள் மாணவர்களின் வருங்கால முன்னேற்றத்துக்கான நடைமுறை பயிற்ச்சியை அளிக்க பலதரப்பட்ட நிறுவனங்களை வரவைப்பர்.. அந்த வரிசையில் நெடுமாறனின் நிறுவனத்தையும் அணுக... தங்கள் கம்பெனியின் டெவலப்மெண்ட் ஆபிசர் வரவேண்டிய இந்த வேலைக்கு அபியை காணும் ஆவலில் வந்து நின்றான் நெடுமாறன்..
எப்போதும் போல் முதலில் பிரின்ஸி மட்டும் வந்து மாணவர்களின் முன்னேற்றம் அது இதுவென அரைத்து... இறுதியில் மாறனின் கம்பெனியை பற்றி அறிமுகப்படுத்தி ஒரு வீடியோ கிளிப்பிங்கஸை போட்டு காட்ட...அதிலிருந்த மாறனை கண்ட பெண்கள் கண்களிலோ ஏக்கர் கணக்கில் மயக்கம்..
"வ்வாவ்....மேன்லி..இல்லடி..."
பலபேர் வாயில் இந்த ஒரே வார்த்தை அதிகம் வர விச்சுக்கு காதில் புகை வந்தது..
"வாவ்தான் மேன்லிதான்..இதச் சொன்னாதான் அவன் வண்ணவண்ணமா கிழிக்குறானே என்ன பண்ண..அய்யய்யே என்ன இவளுங்க இந்த ஊத்து ஊத்தராளுங்க..இருங்கடி வர்றேன்..."
பிரின்ஸி போய் மாறன் வரும் இடைவெளியில் விச்சு அவசரமாய் போர்டிருந்த மேடையில் ஏறினான்..
"ஹாய் பிரண்ட்ஸ்....உங்க நல்லதுக்காக எல்லாருக்கும் ஒரு அலர்ட் மெசேஜ் குடுக்க வந்திருக்கேன்..முக்கியமா கேர்ள்ஸ் உங்களுக்குத்தான்.."
"ஏய் இறங்குடா இறங்கு..கரெக்டா மாறன் வர்ற நேரத்துல வந்து மொக்கயா போட்டுட்டு இருக்க..இறங்கு மேன்.."
பலவித குரல்களில் பெண்கள் பக்கம் சத்தமிட..ஆண்கள் பக்கம்"நீ கலக்கு மச்சி.." என ஆரவாரமாய் சத்தம் வர..இளங்கன்றுகள் அங்கே பயமறியாது துள்ளியது..
"இருங்கடி...எல்லாம் உங்க நல்லதுக்குதான் சொல்றேன்... நல்லா கேட்டுக்கங்க..இப்ப வர்றாரே நம்ம தல.. ஆறடிக்கு அவரு உயரம்... கையால் அவன் தலைக்குமேல் அளந்து காட்டி.. இவ்ளோ இருப்பாரு..அதுனால இதுவரை மட்டும்..அதாவது அவரு மூக்கோட உங்க பார்வை வட்டத்தை சுருக்கிங்க ..எது பேசறதா இருந்தாலும் அவரு கண்ணு இல்ல மூக்குகிட்டதான் பேசணும்...புரியுதா... இதுக்குமேல உங்க பார்வை போச்சு.."
விச்சு மெதுவாய் இழுக்க..பெண்கள் பக்கமிருந்து ஒன்றுபோல் சத்தம் வந்தது...
"போச்சுன்னா..."
"ம்ம்...போச்சு..."
"ம்ஹ்...போச்சுன்னா...என்ன சொல்லுடா.."
"போச்சுன்னா..மொத்தமா எல்லாரும் நாசமா போய்ருவீங்கடி...என்ன புரியுதா..."
பாட்டாளி பட வடிவேலு பாணியில் விச்சு சொன்ன அடுத்த நிமிடம்...."ஹேய் சூப்பர்டா சூப்பர்டா" என ஆண்கள் கத்த..
"இடியட்.. ஸ்டுப்பிட்"..என பெண்கள் கைக்கு கிடைத்ததை தூக்கி வீச...அந்த இடமே ஆர்ப்பாட்டமாய் இருந்தது..
"ம்க்கும்.." மாறனின் கர்ஜனையில்
மொத்த கிளாஸூம் சட்டென அமைதியாக...விச்சுவிற்கு குப்பென வேர்த்தது..
ஒற்றை காலை ஊனியபடி... லேசாய் சுவரில் சாய்ந்து நின்றவன் ஒரு கை பாக்கெட்டிலிருக்க...பார்த்ததும் அசத்தும் அவன் ஸ்டைலே அங்கிருந்த பெண்களை ஈர்க்க போதுமாயிருந்தது..
ஏற்றி இறக்கிய புருவத்தோடு விச்சுவை கேள்வியாய் பார்க்க.. அவனோ அங்கு எச்சில் விழுங்கி கொண்டான்..
"இல்ல..எமர்ஜென்சி எக்ஸிட்ல எப்படி போறதுன்னு பொண்ணுங்களுக்கு ஒரு சேஃப்டி அவெர்னெஸ் க்ளாஸ் எடுத்துட்டு..அய்யோம்மா நா இல்ல.."
அவசரமாய் ஓடி பெஞ்சுக்கு அடியில் ஒளிந்து கொண்டான்..
"இவனுங்கள வச்சுட்டு..." மாறன் நெற்றியை கீறியபடி உள்ளே வந்தவன்..அங்கிருந்த பெஞ்சில் சாய்ந்தபடி பார்வையை இயல்பாய் சுற்றிலும் ஓட்ட..அபியோ பெஞ்சில் இரு கையையும் ஊனி அதில் அழகாய் முகம் வைத்து இமைக்காமல் இவனையே பார்த்துக் வைக்க...இங்கு இவனுக்கு முகம் சிவந்தது..
"சார் யூ ஆர் பிளஷ்ஷிங்.."
பெண்கள் பக்கமிருந்து ஒரே சத்தமாய் வர...முகத்தை அழுத்தமாய் துடைத்து கொண்டான்..மறுபடி அவளை பார்த்தவன்...விடாத அவள் பார்வையில் மறுபடி முகம் சிவக்க.. இப்போது இன்னும் நன்றாய் தேய்த்து விட்டு கொண்டான்..
"வசியக்காரி வேலைய காட்டுறா..ஸ்டடியா இருடா மாறா.."
தொழில்முறையில் பலபேரை முகம் மாறாமல் சமாளிக்கும் வித்தை தெரிந்தவன்.. ஆதலால்..நிமிடத்தில் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தான்..
"என்னவாம்?.."மாறன் காட்டிய வித்தையில் பவி விச்சுவிடம் ஜாடையாய் கேட்க...அவன் உதட்டை பிதுக்கினான்..
"சார் பயப்படாதீங்க...நாங்க உங்கள கடிச்சிட மாட்டோம்.. நம்புங்க சார்..நம்புங்க.. பத்திரமா பார்த்துக்குவோம்.. இல்லங்கடி.."
"ஆமாமா..பார்த்துக்குவோம்.. பார்த்துக்குவோம்...நல்...ல்லா பார்த்துக்குவோம்.."
கவலைகளற்ற இளமைப் பருவமல்லவா...அதனால் எந்த பயமுமின்றி அவனிடம் சுதந்திரமாய் வாயாட வைத்தது..
ஒரு புன்சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டவன் சட்டென தொழில்காரனாய் மாறிப்போனான்.. வந்த காரணம் அபியென்றாலும்... வருங்கால கனவுகளோடு இருக்கும் அந்த கூட்டங்களை பார்த்ததும்... இயல்பாய் அவனுக்கும் ஒரு ஆர்வம் வர..படபடவென ஆயிரம் வழிமுறைகளை சொல்லிக்கொடுக்க தொடங்கினான்..
முதலில் சலசலவென இருந்த மொத்த வகுப்புமே கொஞ்ச நேரத்தில் மற்றதை மறந்து அவன் ஆளுமையிலும் குரலிலும்..புதிது புதிதாய் அவன் சொல்லி குடுக்கும் ஐடியாக்களை கேட்டும் மகுடிக்கு மயங்கியது போல் மயங்கி கிடந்தது..
"மண்டைதான் போ.." விச்சுவே ஒத்துக்கொண்டான்..
அபியின் புறமே திரும்பாமல் அரைமணிநேரம் பேசித் தள்ளியவன்..
"ஓகே கைஸ்..ஒரு சின்ன பிரேக்..."என்றபடி அங்கிருந்த தண்ணீரை குடித்து நிமிர..அபி அப்போதும் அதே போஸில் இருப்பதை பார்த்து...குபுக்கென துப்பி விட்டான் மொத்த தண்ணீரையும்...
"
அடிப்பாவி...இவ இப்படியே என்னை பார்த்து மொத்தமா முழுங்கி ஏப்பம் விட்டுடுவா போல...இப்படி பார்த்து வைக்காதடி குள்ளச்சி.. அப்புறம் நா உன்னை முழுங்கிடுவேன்.."
"அப்படி பாரு..." மாறன் கண்ணாலேயே அந்த பக்கம் காட்ட.."ம்ம்ஹூம் மாட்டேன்.." என தலையை ஆட்டியவள் இன்னும் நன்றாய் முன்னால் வந்து உட்கார்ந்து பார்க்க..."சுத்தம்" இவன் தலையிலடித்து கொண்டான்..
"என்னடா இவன் இன்னைக்கு என்னென்னவோ வித்தை காட்டிட்டு இருக்கான்... இல்லையே பய இப்படி பண்ண மாட்டானே..." சந்தேகமாய் விச்சு சொன்னபடி அபியை பார்க்க..
"ஆஹா...சூனிய பொம்மை வேலைய காட்டிட்டா போலயே..இவள..."
"ஸ்..இஸ்..டேய் பவி இஸ்.."பவியை கூப்பிட்டு பார்க்க..அவனோ மிக மும்முரமாய் பக்கத்தில் நோட்ஸ் எடுத்து கொண்டிருந்தான்..
"அடப்போங்கடா.."சலித்த விச்சுவுமே மறுபடி மாறனின் பேச்சில் மூழ்கிவிட்டான்..
இங்கு அபி நோட்டை பிரித்தவள்.. எதையோ நினைத்து முதலில் சிரித்து கொண்டாள்...பின் பென்சிலை கடித்தபடி...தீவிரமாய் எழுத தொடங்கினாள்..ஐந்து நிமிடத்திற்கொரு முறை நிமிர்ந்து நிமிர்ந்து மாறனையே பார்த்து எதையோ எழுதுபவள்... சிறிது நேரம் அண்ணாந்து பார்த்து எதையோ நினைத்து மறுபடி சிரித்துக்கொள்ள... விதவிதமாய் அவள் காட்டிய பாவனையில் இங்கு மாறனுக்கு மொத்தமும் மறந்து போனது..
"சார் நீங்க ஒரே பாயிண்ட்ட ரிப்பீட் பண்றீங்க.."
ஒருத்தி எழுந்து சொல்ல..
"ஓஹ்..ஸாரி கைஸ் ஸாரி...லிசன் இதுவரை நா சொன்னது உங்களுக்கு புரிஞ்சதா.."
"புரிஞ்சது சார்.."
"ஓக்கே ஓக்கே..இதுவரை எங்க கம்பெனி பாயிண்ட் ஆப் வ்யூல உங்களுக்கு எல்லாம் சொல்லிருக்கேன்.. சோ.. ஜெனரலா உங்களுக்கு டாபிக்ல எனி டவுட்ஸ் இருந்தா..."
சொன்ன அடுத்த நொடி அபி அழகாய் கையை தூக்கியிருக்க...மொத்த கிளாஸூம் அவளையே பார்த்தது..
மாறனோ சுற்றிலும் ஒருமுறை பார்த்தவன்...தொண்டையை செருமிக் கொண்டான்.
"சொல்லு..என்ன டவுட்.."
"இல்ல..நீங்க பொறக்கும்போதே நெடுமாறன்னு பேரு வச்சதால இப்படி வளர்ந்தீங்களா..இல்ல.. நீங்க வளர்ந்ததுக்கு அப்புறமா..வச்ச பேர மாத்தி நெடுமாறன்னு வச்சாங்களா??.."
"மச்சான் சாச்சுபுட்டா மச்சான்...சாச்சுபுட்டா..." விச்சு நெஞ்சில் கைவைத்து புலம்ப..
ஊசி விழுந்தால்கூட கேட்குமளவு அவ்வளவு அமைதி முதல் இரண்டு நிமிடங்களுக்கு..அடுத்தநிமிடம் எல்லோருமே ஹோவென கத்தித் தள்ளினர்..
"அபி கலக்கிட்ட..அசத்திட்ட..ஏய் லூசு..கேக்குறா பாரு கேள்வி...ஏய் யூ ராக்டி டி.." விதவிதவிதமாய் குரல்கள் வர..மாறனோ அசையாமல் அவளையே பார்த்து வைத்தான்..அழுத்தமான அவன் பார்வையில் மொத்த கிளாஸூமே அமைதியாகிவிட்டது..
"ம்ம்..அபிநயசுந்தரி ரைட்.."
"ம்ஹீம்..அபி..அபி மட்டும்.."
"ஓஹ்..ஆமா உங்கூட எப்பவும் ஒன்னா சேர்ந்து சுத்திட்டு இருக்குமே இன்னும் இரண்டு கொடுக்குங்க.. அவங்க எங்க.."
தெரியாதது போல் கேட்க...பவி மூன்றாவது பெஞ்ஜில் இருந்து மெதுவாய் எழ..விச்சுவோ கடைசி பெஞ்ஜிலிருந்து தயக்கமாய் எழுந்தான்..
"மூணு மூஞ்சுங்களயும் பாரு.. கேடி வேலைக்குன்னே அளவெடுத்து செஞ்சதாட்ட ஒரே மாதிரி இருக்கு..பக்கிங்க பேசி வச்சிட்டு வந்து லந்த கூட்டுதுங்க போல.."
சரியாய் கணித்தவன்.. மூவரையும் ஒன்றாய் ஆட்காட்டி விரலில் வட்டமடித்து..
"அவுட்.."
அதே விரலை வெளியில் காட்ட..அதுகூட அள்ளிக்கொள்ளலாம் போல் அவ்வளவு அழகாய் இருந்தது அபிக்கு..
"இல்ல எனக்கு புரியல..நாங்க என்னடா பண்ணோம்.."
பவி குனிந்தபடி சொல்ல..
"வாட்?.."
"ஆமாயா..தீர்ப்பு குடுக்கறதுல நம்ம நாட்டாம விஜயகுமார்க்கு அப்புறம் நீதான்யா..."
விச்சு முனுமுனுவென சொன்னது கேட்காத எரிச்சலில்..
"வாட் கம் அகெய்ன்.."
"ம்ஹீம் கிட்ட வந்தா அடிப்பீங்க..அது நீங்க அன்ப வாரி வாரி குடுக்கற வள்ளல்னேன்.."
"இடியட்ஸ்..அவுட்.."
பவியும் விச்சுவும் நொந்துபோய் கிளம்ப...அபியோ சிரித்தபடியே அவனை நெருங்கி..டாக்டர் பட தீபா போல்..."நா வர்..ர்றே.." என நக்கலாய் சொல்லிவிட்டு கிளம்ப...போனவள் பேக்கை ஒற்றை கையால் இழுத்து எடுத்து கொண்டான்..
"இத வச்சுட்டு போ.."
"அது ஏன்..ம்ம்ஹ்ம்..அது என்னோடது..எனக்கு வேணும்.."
மேலே பேசுமுன்..நிமிர்ந்து அவளை முறைத்தவன்..
"அவுட்.."
"போயா நெடுமரம்.."சத்தமில்லாமல் வாயை மட்டும் அசைத்துவிட்டு தரையே அதிரும்படி நடந்து போனாள்..
அவள் போன திசையையே வெகுநேரம் பார்த்திருந்தவன்.. ஒரு பெருமூச்சுடன் வகுப்பை தொடர்ந்தான்..அவனிடம் கேட்கவும் சொல்லவும் அயிரம் இருந்தது அந்த இளையவர்களுக்கு...கிடைத்த வாய்ப்பை மற்றவர்கள் சரியாய் பயன்படுத்தி கொண்டனர்..
எல்லாம் முடித்து அவர்கள் கிளம்ப..மொத்த வகுப்பறையும் காலியானபின் வெகுநேரம் அபி இருந்த இடத்தையே பார்த்திருந்தான்...இப்போதும் அவள் அங்கிருந்து அவனை பார்ப்பது போல் தோன்ற..தலையை உலுக்கி கொண்டான்..
கையில் அவளது நோட் இருக்க..என்ன எழுதியிருப்பாளென ஆர்வத்தோடு ஆசை மனம் ஆயிரம் கற்பனை கண்டது...நிச்சயம் அது தன்னை வைத்துத்தான்.. அடித்து சொன்ன மனதை அடக்கும் வழி தெரியாது மெதுவாய் திறந்து பார்த்தான்..
"என் தங்கம் கையெழுத்து எவ்ளோ அழகாயிருக்கு.."அவள் கோழிக்கிறுக்கலில் ஒரு முத்தம் வைத்துகொண்டான்..
அந்த நோட்டில் பெரிதாய் எதுவுமேயில்லை..சில பக்கங்களில் மட்டுமே நோட்ஸ் எழுதியிருக்க.. பெரும்பாலான இடங்களில் கிறுக்கி வைத்திருந்தாள்.. சம்மு சம்மு என பல இடங்களில் எழுதி பலமாய் அடித்தும் வைத்திருக்க.."யார் அவ சம்மு..என் தங்கத்துக்கு அவள பிடிக்கல போலவே.." அபியை சரியாய் கணித்தான்...சில இடங்களில் நெடுமரம் என்றும் எழுதியிருக்க... அதில் எல்லாவற்றிலும் ஒன்று போல் நீர் பட்டு வழிந்திருந்தது..
"இது தண்ணியா இல்ல வேற எதுவுமா..என் தங்கம் எதுவும் அழுதாலா என்ன.."
மாறனுக்கு குழப்பமாய் இருந்தது..அவ்வளவு சிரித்து சந்தோஷமாய் இருக்கும் அபிக்கு என்ன துன்பம் இருக்க முடியும்?..அதுவும் பவியும் விச்சுவும் அவளை குழந்தை போல் தாங்க...அவளுக்கு வேறென்ன பிரச்சனை இருக்க முடியும்..குழம்பி போனான் மாறன்..
யோசனையோடு இறுதிபக்கம் வந்தவன் ஒரு நொடி பொறுத்து பின் ஆர்வத்துடன் மெதுவாய் திருப்ப...ஜிவுஜிவென முகமெல்லாம் சிவந்து போனது கோவத்தில்..
அதில் அவள் எதுவும் எழுதவில்லை..மாறாக வரைந்து வைத்திருந்தாள்... உயரமாய் இரு மரம் வரைந்து..அதை இணைத்து மூன்று தூளி போல் கட்டியவள்..ஒவ்வொன்றிலும் இவர்கள் மூவரும் தனித்தனியே இருப்பது போல் வரைந்து மேலே அம்புகுறியிட்டு மூவரின் பெயரையும் எழுதியிருந்தாள்...மூவர் கையிலும் வேலிருக்க... அவர்கள் குறிபார்த்து இருந்த இடத்தில் நெடுமரம் என பெரிதாய் எழுதி ஹார்டின் விட்டிருந்தாள்..
"இவள பார்க்காம இருக்க முடியலேன்னு மனுசன் உசுர கையில புடிச்சுட்டு அடிச்சு புடிச்சு வந்தா இவளுக்கு கொழுப்ப பாரேன்.. குள்ளச்சி குள்ளச்சி...ஏண்டி நெடுமரம்.. நெடுமரம்னு என் உசரத்த மட்டும் பார்க்குற.. அதுக்குள்ள இருக்கற எம்மனச பாரேண்டி..அது இன்னுமா புரியல உனக்கு?.."
முதலில் கோவம் வந்தாலும் மறுபடி மறுபடி அதையே பார்க்க...இப்போது சிரிப்பு வந்தது...காரணம் அதில் அபியையும் பவியையும் அழகாய் வரைந்திருந்தவள்..விச்சுவிற்கு மட்டும் 7up விளம்பரத்தில் வருவது போல் குச்சியாய் கை காலை கிறுக்கியிருந்தாள்..
"கிறுக்கச்சி..." ஆசையாய் சொல்லிக்கொண்டவன் மறக்காமல் அந்த பக்கத்தை கிழித்து பத்திரப்படுத்தி கொண்டான்..
"அரைமணி நேரம் ஒருத்தன் ஆவியா கத்துனானே அதுல இருந்து ஒன்னுகூடவா கேக்கத்தோணல இந்த குந்தாணிக்கு...கேட்டா பாரு ஒரு கேள்வி.."
"நா எங்க கிளாஸ கவனிச்சேன்.."
"பின்ன நீ வேற என்ன கவனிச்ச.."
விச்சு குறுகுறுவென பார்த்தபடி கேட்க..
"நா..நா அப்படியே இயற்கைய ரசிச்சுட்டு..லைட்டா அவன சைட்டடிச்சுட்டு இருந்தேன்.."
"நா சொல்லல...சொல்லல..இவ அடங்க மாட்டாடா..அடங்கவே மாட்டா.."
விச்சு கொட்ட...பவி வந்து தடுத்தான்..
"டேய் அபிய கொட்டாத..தலை வலிக்கும்..ஏண்டா அபிமா இப்படி பேசிவச்ச..அவன் போய் பிரின்ஸிட்ட போட்டு குடுத்துட்டா.."
"அதுல்லாம் பண்ண மாட்டான்.. அதென்னமோ அவன பார்க்கும்போதெல்லாம் தொண்டையிலேயே வந்து நிக்குதுடா விச்சு.."
"என்ன வாந்தியா.."
"ப்ச்ச்..இல்லடா இன்னைக்கு கேட்ட கேள்விதான்..அவன பார்த்த நாள்ள இருந்தே மண்டைக்குள்ள பூரான் வுட்ட மாதிரி இதே டவுட்தான்..அதான் இன்னைக்கு கிளியர் பண்ண கேட்டு வுட்டேன்..என்ன நம்ம நெடுமரம் ஆன்சர்தான் பண்ணல..அதான் ரொம்ப ஸேடா...என்னங்கடா.."
பவியும் விச்சுவும் பேசாமல் எழுந்து நிற்க...என்னவென கேட்டு திரும்பியவள் கண்ணுக்குள் வந்து நின்றான் நெடுமாறன்..
"ஹக்..லோ என்ன..."
"உன் பேக்..."
ஒற்றைவிரலால் நீட்ட பவி வந்து வாங்கி கொண்டான்..
"வேற.."
"ம்ம்ம்..வேற...ஆங் எனக்கும் ரொம்ப நாளா ஒரு டுவுட் இருக்கு கேட்கட்டா.."
"என்..ன்ன..என்ன டவுட்.."
நேராய் பவியிடம் திரும்பியவன்..
"உங்கள பார்க்கணும்னு ஆர்வத்துல இவதான் கட்ட அவுத்துட்டு அப்பப்ப ஓடி வர்றான்னா...நீங்களும் அனுப்பாம ஏன் கூடவே வச்சுக்கறீங்க...சீக்கிரம் போய் அட்மிட் பண்ணி விடுங்க..இல்லேன்னா பின்னாடி ரொம்ப கஷ்டமாய்டும்..."
மூவருமே இவன் என்ன சொல்றான் என யோசித்து நிற்க..முதலில் புரிந்தது என்னவோ விச்சுவிற்குதான்...
"ஹேய் அபி...ஹஹஹா..இவரு உன்னை ஏர்வாடி கேஸூன்னு சொல்றாருடி.... ஹஹஹா.. அய்யோமா...நீ தப்பிச்சு...ஹஹா..ஓடி வந்த மெண்டல்னு... ஹஹஹா...அட்மிட்..ஹஹஹஹ"
வார்த்தைக்கு வார்த்தை வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க..கடுப்பாய் அபி விட்ட உதையில் குப்புறடித்து விழுந்தான்..பவிக்குமே சிரிப்பு வந்தது மாறன் கேட்ட தீவிர பாவனையில்..ஆனால் சிரித்து அபியெனும் பெண் சிங்கத்தை சீண்ட விரும்பாமல் வாயை இறுக்க மூடிக்கொண்டான்..
"மவனே இருடி.. "கண்ணாடியை ஏற்றியபடி அருகிலிருந்த மரத்தின் வேரில் ஏறியவள்.. அவன் உயரத்திற்கு சரியாய் வந்து நின்றாள்....
"யோவ் நெடுமரம்..ன்னா லந்தா...யாருகிட்ட...செஞ்சு வுட்டுருவேன்..உன்னால அன்னைக்கு எனக்கு நாலாயிரம் ஐஸ்க்ரீம் போச்சு...நீ பேசுன பேச்சுல தூக்கம் போச்சு...இரண்டு நாள்யா... இரண்டு நாளா ஆறு வேள சாப்பிடறவ... எவ்ளோ கம்மியா சாப்டேன் தெரியுமா..எவ்ளோடா விச்சு.."
"வெறும் பிரியாணி நாலு பிளேட் சாப்டடி.."
"பார்த்தியா..இந்த சின்னபுள்ளய பீலிங்ஸ் ஆக்கிட்டு நீ என்னமோ அன்னைக்கு லூசுங்கற.. இன்னைக்கு அவுட்டுங்கற... ன்னா..யோவ் சங்கு.."
நெடுமாறன் பின்னிருந்த ஷங்கர்..
"சொல்லுமா தங்கச்சி.."
"சொல்லி வைங்க உங்காளுகிட்ட...என்கிட்ட வச்சுட்டான்..அப்புறம்.."கையால் கழுத்தினடியில் இழுத்து "சங்குதான்" என காட்டியவள்.. புசுபுசுவென மூச்செடுக்க... அவன் உயரத்திற்கு நேராய் வந்து நின்றவளை பார்த்து... அப்படியே வாரிக்கொள்ள கையெல்லாம் பரபரவென வந்தது மாறனுக்கு..அவசரமாய் கையை பாக்கெட்டில் விட்டவன்..பவியிடம் திரும்பி..
"முத்திருச்சு...பத்திரம்.." சொன்னவன் கொஞ்சம் தூரம் சென்று திரும்பி பார்க்க...அபியை இருபக்கமும் தடுத்து இழுத்து பிடித்து கொண்டிருந்தனர் பவியும் விச்சுவும்..
"விடுங்கடா என்னைய..." திமிறியவளை பார்த்து..அவன் மார்பருகில் கையை வைத்து அவள் உயரத்தை காட்டி..."போடி குள்ளச்சி.." வாயை மட்டும் அசைத்தவனை ஒன்றும் செய்யமுடியாமல் ஆவென அலறினாள் அபி...
மழை வரும்..

Last edited: