நேரம் நடுநிசியை தாண்டியிருக்க..மாறன் இல்லமோ படுநிசப்தமாய் இருந்தது..
"ஆங்..கரெக்டா இங்கதான்..இங்க இருந்து போனா கரெக்டா இருக்கும்.."
அபி கையில் ஏதோ வரைபடத்தை வைத்து தீவிரமாய் குறித்து கொண்டவள் நிமிர..பவியும் விச்சுவும் மும்முரமாய் கயிறை இழுத்துக்கொண்டிருந்தனர்..
"இது தேவையா..அதும் இந்த இராத்திரி நேரத்துல.. எனக்கு பார்க்குற இடமெல்லாம் அனபெல்லா வந்து ராரான்னு ஆசயா கூப்பிடற மாதிரி இருக்கு... ஆனாலும் இவ சொன்னான்னு நீயும் ரொம்பத்தாண்டா ஆடுற..
விச்சு கோவப்பட..பவிதான் சமாதானம் செய்தான்..
"விடுடா.. அன்னைக்கு அவன் இவள மெண்டல்னு சொன்னதுல இருந்து பாவம் செம்ம அப்செட்ல இருக்கா.. எனக்கே பாவமா போச்சு..அவன ஆபிஸ்ல வச்சு ஏதாவது பண்ணலாம்னா செம செக்யூரிட்டி..எப்டியும் உள்ள போக சான்சே இல்ல..இங்கயும் காலைல வர வாய்ப்பே இல்ல..இப்ப என்ன நாமதான உள்ளப் போக போறோம்..அபி இங்கயே இருக்கட்டும்..நாம போய் அவன எதுனா பண்ணிட்டு வந்துரலாம்.. அந்த சம்முக்கு பயந்து இவளும் வீட்டுக்கு போக மாட்டேங்குறா... இல்லேன்னாகூட பிரச்சனையே இல்ல..."
ஆம்..அன்று மாறன் விட்ட அம்பு பெண்ணவளை பலமாய் தாக்கியதில்.."எப்ப ஆப்பரேசன்..எப்ப ஆப்பரேசன்.. எனக்கு இப்பவே ஆப்பரேசன் செய்யணும்..."என வெறி வந்தவள் போல் பேசித்திரிய.. அவள் தொல்லை தாங்காமலேயே வந்துவிட்டனர் மூவரும்..
செக்யூரிட்டியை சரிகட்டி..பவியும் விச்சுவும் மாறனின் காலேஜ் பிரண்ட்ஸ்..சர்ப்ரைஸ் பார்ட்டி அது இதுவென பொய்யை அள்ளி தெளித்து..அரைமணி நேரம் மட்டும் கடன் வாங்கியிருந்தனர்..
கயிறை நன்றாய் இறுக்கி கட்டி தூக்கி போட...பல முயற்சிக்கு பின் அது சரியாய் சிக்கியது..
"அபி..இங்கயே இருடா..நாங்க இப்ப வந்தர்றோம்.."
பவி முதலில் ஏறப்போக...
"பவி நா எப்படிடா தனியா இருக்க...இருட்டுனா அபிக்கு பயம்ல.."
பயந்துகொண்டே சொன்னவளை பார்த்து..மற்ற இருவரும் என்னடா செய்ய என்பதுபோல் பார்த்து வைத்தனர்..
"ஓகே அபி இங்க பாரு..முதல்ல உன்னை ஏத்தி விடறோம்..ஆனா நீ உள்ளப்போக கூடாது...நாங்க வர்றவரை வெயிட் பண்ணு... அப்புறமும் நாங்க மட்டும்தான் போவோம்..என்ன ஓகேவா.."
விச்சு முடிவெடுக்க...பவி சம்மதமாய் தலையாட்டினான்..
அபியை மெதுவாய் ஏற்றி விட்டவர்கள்.. அடுத்து ஏறப்போகும் சமயம்...சரியாய் அந்த செக்யூரிட்டி வந்து நின்றார்..
"தம்பி தம்பி அங்க கொஞ்சம் வாங்கப்பா..ஏதோ பாம்பு போல இருக்கு..எனக்கு தனியா அடிக்க பயமாயிருக்கு.."
அவசரமாய் அவருடன் போனவர்கள் திரும்பி வந்து.."ஏய் அங்கயே இரு..உள்ள போகாத.." சொல்லி அதே வேகத்தில் சென்று விட...நகத்தை கடித்தபடி சிறிது நேரம் நின்றவள்...
"நம்ம நெடுமரம் என்ன பண்றான்னு லைட்டா பார்த்து வைக்கலாம்..." மெதுமெதுவாய் எட்டு வைத்து உள்ளே போனாள்..
ஜன்னல் ஸ்லைடிங் கதவை தொட்டதும் வழுக்கி கொண்டு போக.."அய்..செமயா இருக்குல்ல.." அதையே பலமுறை திறந்து மூடி விளையாடியவள்..சத்தம் செய்யாமல் மெல்ல அடிவைத்து உள்ளே இறங்கினாள்..
மெல்லிய அலங்கார விளக்கு மட்டுமே அவ்விடத்தில்.. அதுவுமே நீல வண்ணத்தில் கருத்தோடு கண்ணை கவர..சுற்றும் முற்றும் பார்த்தவள் உண்மைக்கும் வியந்து போனாள்..
"நெடுமரம் ரசிகன்டா நீ..வாழ்றடா..ஆமா அவன எங்க...ஆளயே காணோம்... "
அவனை அங்குமிங்கும் தேடியவளுக்கு.. நேர்த்தியாய் இருந்த அறையை பார்த்ததும் இயல்பு குணம் தலைதூக்க.. மற்றதை மறந்து எல்லாவற்றையும் பரபரவென கலைத்து போட்டாள்..
வார்ட்ரோபில் இருந்த ஆடைகளை இஷ்டத்திற்கு உதறி அறைமுழுதும் வீசியடித்தவள்..சிலதில் கையோடு கொண்டு போயிருந்த லிப்ஸ்டிக் வைத்து ஏகத்திற்கும் கிறுக்கி அபாயக்குறி இட்டு வைத்தாள்.. நைட் லேம்பை ஒற்றை விரலால் தள்ளி..அங்கிருந்த தண்ணீரை சோபாவிலும் பெட்டிலும் முழுதாய் ஊற்றியவள்.. பாக்கெட்டிலிருந்த இங்க் பேனாவால் சுவரில் ஆங்காங்கே விசிறி அடித்தாள்..
"இது பத்தாதே நம்மாளுக்கு.."
அடுத்து என்னவென யோசித்தவளை அழகாய் கவர்ந்தது அங்கிருந்த வெற்று சுவரொன்று...அடர் ஆரஞ்சு நிறத்தில் மெல்லிய ஒற்றை விளக்கின் ஒளியில் கண்ணை பறித்த சுவரருகில் சென்றவள்..ஒரு வெற்றிச் சிரிப்போடு பரபரவென கிறுக்க இல்லை வரைய தொடங்கினாள்..
ஐந்து நிமிடத்தில் வரைந்து தள்ளியவள்..திருப்தியாய் கையை தட்டியபடி ஒருமுறை தள்ளி நின்று பார்த்து கொண்டாள்..
"ஆங்..இந்த ஆங்கிள் நல்லா இருக்கு.."
கையை அப்படியும் இப்படியும் வைத்து ஆங்கிள் பார்த்தவள்..
"அய்யோ அபி..இப்படி உன்னோட திறமைகள உள்ளயே ஒளிச்சு வைக்காம அப்பப்ப எடுத்து வெளில விடுடி..அப்பதான நம்ம நாடு டெவலப் ஆகும்..என்னமோ போடி.."
பேசிக்கொண்டே பின்னால் நகர்ந்தவள்.. மெத்தென எதிலோ மோதி இடிக்க..
"அய்யோ பவி...நா இல்ல.."
சொன்னவள் வாயை பின்னிருந்து இறுக்கமாய் அணைத்திருந்தான் மாறன்..
"ஸ்ஸ்ஸ்...ஏய் கத்தாத கத்தாத..நான்தான்..கத்தாத.."
அது மாறன்தான் என தெரிந்துமே அவ்வளவு நிம்மதி பாவையவளுக்கு.. அதிர்ந்த உடல் லேசாய் தளர..அவன் மேல் சாய்ந்தவளை.. ஆசையாய் தாங்கி கொண்டான் நெடுமாறன்..
"இப்ப நா கைய எடுப்பேன்..கத்தக்கூடாது..ஓகேவா.."
சம்மதமாய் தலையாட்ட..மனமில்லாமல் மெதுமெதுவாய் கையை எடுத்தான்..அவள் திரும்பாமல் அப்படியே நிற்க..
"திரும்புடி.."
தலையை நன்றாய் தொங்கப்போட்டு திரும்பியவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவன்..
"என்ன கீழ எதுனா தொலைச்சுட்டியா.."
"ம்ஹீம்.."
"பின்ன..?"
"இல்ல..இது அந்த விச்சு சொல்லிக்குடுத்த டெக்னிக்.. எங்கனா வசமா மாட்டிட்டா.. தலையை தொங்கப்போட்டு பீல் பண்ற மாதிரி முகத்த வச்சுக்க..அப்ப அறியாப்புள்ள தெரியாம பண்ணிடுச்சுன்னு உன்னை டீல்ல விட்டிருவாங்க சொல்லிருக்கான்.. அதான்..
"யாரு நீ அறியாப்புள்ள.."
"ம்ம்..நிஜமா..நம்புங்க..நா ஒன்னுமே தெரியாத பச்ச மண்ணு.."
"ம்ம்..அதுசரி..ஆமா அது என்ன.."
கைகட்டியபடி எட்டிப் பார்த்து புருவம் உயர்த்தவும்.. அவனோடு சேர்த்து திரும்பி பார்த்தவள் அசட்டு சிரிப்போடு திரும்ப..மாறனுக்கு அது அவ்வளவு ரசனையாய் இருந்தது பார்க்க..அதுவரை ஆசையாய் பார்த்தவன் அவள் திரும்பும்முன் முகத்தை இறுக்கமாக்கி..
"என்னடி பண்ணி வச்சிருக்க என் சுவத்துல.."
"ஹிஹிஹி...அதுபாரு நெடுமரம்.."
"அடிங்க."
"இல்ல..இல்ல..அதுவந்து சார்..உங்க மொத்த ரூம்ல இவ்ளோ காஸ்ட்லியா டெக்கரேட் பண்ணிட்டு..இந்த ஒத்த சுவர மட்டும் மொட்டயா விட்டுட்டீங்க..சரியான லூசு சார் நீங்க.."
"ஏண்டி அறை வேணுமா.."
"ச்சே..ச்சே....அது எதுக்கு எனக்கு..வேணாம் வேணாம்... அது வந்து இந்த சுவர பார்த்ததும் பாவமா இருந்துச்சா..அதான் அப்படியே லைட்டா என் கலைவண்ணத்த தெளிச்சு விட்டேன்..எப்படி அள்ளுதா.."
சிலநொடிகள் எதுவும் பேசாமல் அவளையே ஆழ்ந்து பார்த்தவன்...
"அப்ப இதெல்லாம்..."அறையை பார்வையால் சுற்றிகாட்ட..
"இதெல்லாம் எக்ஸ்ட்ராவா என் பர்சனல் இன்ட்ரெஸ்ட்ல நானா பண்ணது..இதுக்கெல்லாம் நீங்க பாராட்ட வேண்டாம்... அதுக்கு மட்டும் எதுனா பார்த்து கவனிச்சா போதும்.."
"வசமா சிக்கியும் வாய் குறையுதான்னு பாரேன்.."
கைகட்டியபடியே வெகுநேரம் எதுவோ யோசித்தவன்..
"உனக்கு சின்ன வயசா இருக்கும் போது கீழ விழுந்து..இல்ல இப்ப ரீசெண்டா எங்கயாவது எதுனா ஆக்சிடெண்ட் ஆச்சா..நல்லா யோசிச்சு சொல்லு.."
"அப்படி எதுவும் எனக்கு தெரிஞ்சு இல்லையே..அப்பப்ப கைல மட்டும்தான் அடிபடும்..அப்புறம் விச்சு கொட்டும்போது தலைவலி வரும்..வேற எப்ப அடிபட்டுச்சு.."
அவன் எதற்கு கேட்கிறான் என்பதே புரியாமல் வாயில் விரல்வைத்து .. மேலே அண்ணாந்து பார்த்து தீவிரமாய் யோசித்தவளை உள்ளுக்குள் கொஞ்சி கொண்டிருந்தான் மாறன்..
"நிஜமாவே நீ சின்னப் பப்பாதான்...அழகிடி நீ..அய்யோ இப்படில்லாம் அழகா உதட்டை கடிச்சு யோசிச்சா நா என்னடி பண்றது.... "
"ம்க்கும் என்ன தெரிஞ்சுதா.."
அவள் தெரியாதென உதட்டை பிதுக்க..அதில் ஒருநொடி நிலைத்தவன் பார்வை.. கண்ணியமாய் கண்ணில் வந்து நின்றது..
"இல்ல நெடுமரம்..அப்படி எதுவும் இல்லையே...அம்மா யாராவது ஏதாவது சொல்வாங்கன்னு வெளிலயே விடமாட்டாங்க..பவி என்னை வச்சு ஓட்டும்போது முப்பதுக்கு மேல போகமாட்டான்..சோ வாய்ப்பே இல்லையே.."
"இல்லமா நல்லா யோசி..உனக்கே தெரியாம எங்கயோ செமயா அடிபட்டிருக்கு.. அதான் இப்படி நட்டு கழண்டு சுத்திட்டு இருக்க.." சொல்லிவிட்டு முதுகு குலுங்க சிரித்து வைக்க...அபியோ கொதித்து போனாள்..
அவன் விடாத சிரிப்பில் ஒரு நொடி எதையோ யோசித்தவள்...
"ஆமா நாங்க வருவோம்னு முதல்லயே தெரியுமா நெடுமரம்.."
"ம்ம்..தெரியும்..."
"எப்படி..எப்படி..எப்படி.."
"அடியே..கீழ இருக்குறவரு என்ன சாதாரண செக்யூரிட்டின்னு நினைச்சியா.. ரிடையர்டு மிலிட்டரி மேன்..அவருகிட்ட போய் அந்த பொடிசுங்க என் பிரண்ட்ஸ்னு சொல்லி வச்சுருக்குங்க.. அவனுங்க சைஸ்க்கு நாகூட படிச்ச பிரண்ட்ஸா..அதான் அவரு வந்து கேட்டாரு.."
"என்ன கேட்டாரு.."
"ஆங்...பசங்கள போட்டுரட்டுமான்னு.."
"எதே.."
"ம்ம்..நாந்தான் வேண்டாம்..பசங்க பாவம்..மண்டை சூடாகிப்போய் இப்படி சுத்திட்டு இருக்கானுங்க...சோ பார்த்து கம்மியா செய்ங்கன்னேன்.. அதான் மிலிட்டரி ஸ்டைல்ல கீழ ரன்னிங் பிராக்டீஸ் குடுத்துட்டு இருக்காரு...ஆமா இரண்டு நாள் முன்னவே விசாரிச்சீங்களே...அப்புறம் ஏன் லேட்டா வந்தீங்க??.."
அவன் ஆர்வமாய் கேட்க..அவளோ அசடு வழிந்தாள்..
"அது வந்து..இதுவரை நாங்க போய் கலவரம் பண்ண வீடெல்லாம்..கீழ இல்ல பர்ஸ்ட் ப்ளோர்ல இருக்கும்..உன் வீடுதான் மூனு மாடில இருந்துச்சு..அதான் இரண்டு நாள் நல்லா ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்தோம்.."
"ஆளுங்களும் சைசுங்களும் பாரு..ஏண்டி இந்த பொடியனுங்க என்கூட படிச்சானுங்காளா..பொய் சொன்னாலும் நம்புற மாதிரி சொல்ல மாட்டீங்களா... நீதான் லூசுன்னா அவனுங்க அதுக்கும் மேல...அதான் வரவச்சு எப்படி சுத்தவிட்டேன் பார்த்தியா..ரோஜாக்கூட்டம் மாதிரி நீங்க மூனும் லூசுக்கூட்டங்க.."
மாறன் பேசப்பேச..இங்கு இவளுக்கு அனலேறியது.. தாங்கள் இவனை வைத்து செய்ய வந்தால்..அவனோ அவர்களுக்காக அழகாய் வலைவிரித்து காத்திருக்க... கேட்டவளுக்கோ முகமெல்லாம் சிவந்து போனது கோவத்தில்..
"கவுத்துட்டல்ல நெடுமரம்.. கடைசில செட்டிங் வச்சு கவுத்துட்டல்ல...உன்ன இருடி..."
வந்த கோவத்தில் சட்டென வீச அங்குமிங்கும் தேடி எதுவும் கிடைக்காமல் விருவிருவென அவனருகினில் வேகமாய் போகவும்..அவள் வந்த வேகத்தில் பயந்து மாறனே நகர்ந்து பின்னால் போனவன்...வார்ட்ரோப் முட்டி அப்படியே நின்றுவிட.. அப்போதும் வேகமாய் வந்தவள் அவன் மேலேயே முட்டி நின்றாள்..
"யார பார்த்துடா லூசுங்குற..யாரு... இந்த அபி..என்னை பார்த்து லூசுங்குற...அன்னைக்கும் அப்படித்தான சொன்ன..நா யாரு என்னன்னு ..போய் என் காலேஜ்ல கேட்டுப்பாருடா..என் பேரக் கேட்டாலே.. அய்யோ அபியா அவங்க ரொம்ப சாதுவான பொண்ணாச்சேன்னு எவ்ளோ பயபக்தியா சொல்வாங்க தெரியுமா..நீ என்னன்னா..."
பேசப்பேசவே பேச்சிழந்து போனாள் மாறனின் கண்பார்த்து..
"என்..ன்ன??"
"ஏய் லூசு தள்ளிப்போடி..."
கரகரத்து வந்த மாறனின் குரலில் மெதுவாய் குனிந்து இருவரையும் பார்க்க..அபியோ மொத்தமாய் மாறனின் மேல்..அவனுக்கு அளவெடுத்து செய்தது போல் அபியின் தலை சரியாய் வந்து அவன் மார்பை ஒட்டி நிற்க...கிட்டத்தட்ட அவளை அணைத்த நிலையில் உறைந்து போய் நின்றிருந்தான் விலகாத பார்வையோடு..
அபிக்கு எதுவோ மொத்தமாய் வாரிச்சுருட்டும் உணர்வு..அவன் சொல்லியும் சட்டென விலக முடியாமல் சிலையென நின்றவள்...அவனுக்குள் எதையோ அங்குமிங்குமாய் தேட...அவன் விழி சொன்ன பதிலில் பயந்து இறுக்கமாய் கண்ணை மூடிக்கொண்டாள்..
"நா..நா..போகணும்..."
சொல்லியபடி திரும்பியவள்... கையை இழுத்து பற்றிக் கொண்டான்...
"நா போன்னு சொன்னா போய்டுவியாடி.."
"ப்ளீஸ்...கைய விடுங்க நா போகணும்.."
"அபி.."
பெண்ணவள் மெளனம் ஆணுக்கிங்கே பேரவஸ்தையாய் இருக்க...தவித்துதான் போனான்..
"அபி என்னைப்பாரு.."
..........
"நீ வரமாட்டியான்னு இரண்டு நாளா தூக்கமில்லாம தவிச்சுட்டு இருந்தேன்..உன்கூட தனியா பேசத்தான் அவனுங்கள கீழ புடிச்சு வச்சேன்..அது ஏன்னு உனக்கு புரியலயா?."
........
"டீ...குள்ளச்சி..பேசுடி"
......
"சரி ஒரு தடவை என்னை திரும்பி பார்த்து போறேன்னு சொல்லிட்டு போ.."
அப்போதும் அவள் அப்படியே அசையாமல் நிற்க...
"அப்ப உனக்கு என்னை தெரிஞ்சிருக்கு...ரைட்.."
இறுக்கமாய் வாய்திறவாமல் இருந்தவளை பார்த்து.. நீண்டதொரு பெருமூச்சு விட்டவன்..
"சரி போ.."
சொன்ன நிமிடம் விசுக்கென திரும்பினாள்..
"நிஜமா.."
"ம்ம்..நிஜமாத்தான் போ.."
சொன்னவன் முகம் முழுதாய் கனிந்திருந்தது...
"கோவமில்ல..."
"இல்ல.."
"இந்த ரூம் இப்படி பண்ணதுக்கு கோவம்..."
"ம்ஹும்..இப்பதான் என்ரூம் அழகா இருக்கு..."
"அந்த டிரஸ்ல எல்லாம் கிறுக்கி வச்சுருக்கேன்...அதுக்கு.."
"பத்திரமா எடுத்து தொவைக்காம வச்சுப்பேன்.."
"அப்ப அந்த சுவருல வரைஞ்சதுக்கு.."
"ஓய்..அது டிராயிங்கா.."
"இல்லையா பின்ன..."
"அப்ப அதுக்கு அவுட்லைன் போட்டு பத்திரமா பார்த்துக்கறேன்.."
"நிஜமா சொல்லு நெடுமரம்...இந்த ரூம இப்படி பண்ணதுக்கு உனக்கு கொஞ்சம்கூட கோவம் வரல..தோ இவ்ளோ... இவ்ளோண்டு...வரலை.."
கேட்டவள் முகமருகில் நெருங்கி வந்தவன்...
"ம்ஹீம்...இத்தனை வருஷத்துல இப்பதான் என் ரூம் கொள்ளை அழகா இருக்கு..கலைச்சு போட்ட இந்த பொருளுங்களுக்கு மத்தியில..கலையாத ஓவியம் மாதிரி நீ இருக்கும்போது எனக்கெதுக்கு கோவம்..."
அபியையே ரசனையாய் பார்த்தபடி சொன்னவன்.. அவள் முகத்தில் விழுந்திருந்த முடியை ஒதுக்க..மெது மெதுவாய் கீழிறங்கிய அவன் விரல்களின் தாக்கத்தில்.. பெண்ணவள் அனிச்சையாய் விழி மூடிக்கொண்டாள்..
"டீ குள்ளச்சி..விட்டு போய்டுவியா.."
காதருகில் கேட்ட அவன் குரலில் தேகம் கூச சிலிர்த்தவள்..பட்டென கண்விழிக்க..மாறன் அங்கில்லை..
"அடி அபி எரும்...ம்ம மாடே..இங்க வந்து ஒரு கைகுடு வா.."
சுற்றும் முற்றும் மாறனைக் காணாமல் தேடியவள் முகம் சோகமாகிவிட..விச்சுவின் கதறலில் நடப்புக்கு வந்து...அவசரமாய் அவர்களிடம் ஓடினாள்..
"ஏய் எரும..அதான் நாங்க வர்றோம்னு சொன்னனோம்ல... அதுக்குள்ள உன்னை யாரு உள்ள வர சொன்னது.. அவசரகுடுக்கை.. அவசரகுடுக்கை.."
வழக்கம்போல் விச்சுவிடம் கொட்டு வாங்க...
"ச்சீ போடா.."நன்றாய் தலையை தேய்த்து கொண்டாள்..
"ஏண்டா லேட்டு.."
"அது ஒரு சின்ன பாம்பு பஞ்சாயத்து..பாவம் ரூட்டு தெரியாம வந்துட்டாரு....அதான் அவருக்கு கரெக்ட் அட்ரஸ குடுத்துட்டு வர்றதுக்குள்ள கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..."
"உஷ்ஷ் அடங்குடா..."
மெதுவாய் எட்டி பார்த்த பவி..
"அபிமா யாராவது உள்ள இருக்காங்களா.."
அவள் என்ன சொல்வதென தெரியாமல் திருதிருவென விழிக்க.. விச்சுவோ அதற்குள் ஜன்னல் வழி எட்டி பார்த்து.."யாருமில்லடா...வா போலாம்..."
ஏதோ போருக்கு போவது போல் மெதுவாய் இறங்கி உள்ளே போக..அபியோ கையை பிசைந்து கொண்டாள்..
இருவரும் உள்ளே வந்து அபியை போலவே வாய் பிளந்து அந்த அறையின் பிரமாண்டத்தை ரசித்தவர்கள்... அபியின் கலைவண்ணத்தில் பெருமையாய் பார்த்து கொண்டனர்..
"வெல்டன் மை கேர்ள்...இதுவரை நாங்க குடுத்த பிராக்டீஸ கரெக்டா எக்ஸிக்யூட் பண்ணிருக்க..இன்னைல இருந்து நம்ம கேங்கோட கலாச்சார பிரிவு தலைவியே நீதான்...என்ன நா சொல்றது.."
"போடாங்க..."அபி விச்சுவை அடிக்க..விச்சு அவளை போட்டு மொத்த..கொஞ்ச நேரம் அடித்து உருண்டவர்கள்..பிறகு ஒரு அவசர உடன்படிக்கைக்கு வந்து இன்னும் அறையை அலங்கோலமாக்கினர்..
முதலில் தயங்கிய அபியும்.."ப்ச்ச்..நம்ம நெடுமரம்தான.. ஒன்னும் சொல்லமாட்டான்..." தோளை உலுக்கிக்கொண்டு முழுவீச்சில் இறங்கிவிட்டாள்..
"டேய் விச்சு..எனக்கு இந்த வாட்ச் சுத்தமா பிடிக்கவே இல்லடா... நம்பரே இல்லாம மொட்டயா இருக்கு பாரு.." பவி தூக்கி வீச..
"அப்ப இப்படி தூக்கிப்போட்டு..ஏறி இப்படி நின்னு..அழுத்தி ஒரு மிதி மிதிச்சா..உடைஞ்சிட்டு போகுது..ம்ம் சிம்பிள்.."
அதேபோல் செய்து காட்டினான்..
"இங்க பார்த்தியா..நா இந்த யானையோட தும்பிக்கைய அதுக்கு வலிக்காம அழகா உருவிட்டேன்.."
சொன்னபடி உடைக்க...அது பட்டென கையோடு வந்தது..
"இருடா உன்னை பாரெஸ்ட் ஆபிசருங்க கிட்ட மாட்டி விடறேன்.."
பவி கையை அந்த ஆட்டு ஆட்டினான்..
முடிந்தவளவு எல்லா பொருளிலும் எதையாவது உடைத்தோ கிறுக்கியோ அவர்களின் கைவரிசையை தாரளமாய் காட்ட.. அங்கிருந்த கர்டன்ஸில் இஷ்டத்திற்கு தூளி கட்டி ஆடியவர்கள்... பெட்டில் ஏறி குதியாட்டம் போட்டனர்..வரமாட்டேன் என்ற அபியையும் வம்படியாய் ஏற்றி குதிக்க...பக்கத்து அறையிலிருந்து காமிரா வழி இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த மாறனுக்கு கண்ணெல்லாம் கட்டியது.
"டேய் அந்த வாட்ச் ஒன்றரை லட்சம்டா..பாவிங்களா..மூனும் பாரு மூச்ச புடிச்சுட்டு ஒன்னா குதிக்கறத..அடியேய் விழுந்துராதடி...பார்த்து குதி..பயமா இருக்கு.."
"ஐ..ஐஐ..ஐ..ஏய் அபி இப்படி குதி.."
விச்சு குதித்து தள்ளினான்..
ஒருவழியாய் சோர்ந்து போய்...மூச்சு வாங்க தரையில் விழுந்தவர்கள் அப்படியே கிடக்க...மெதுவாய் எழுந்த விச்சுதான் அபி வரைந்ததை பார்த்து கத்தினான்..
"ஏய் அபி என்னடி பண்ணி வச்சிருக்க.."
"நிறைய பண்ணேன்..நீ எதக் கேட்குற....ஓஹ் இதா... அன்னைக்கு கிளாஸ்ல வரைஞ்சு பிராக்டிஸ் பண்ணேன்னு சொன்னேன்லடா..அது இதான்..ஏண்டா நல்லா இல்லையா.."
ஆம்..அன்று பேப்பரில் வரைந்ததையே சிலபல மாற்றங்கள் செய்து சுவரில் வரைந்திருந்தாள்... பேரை எழுதாமல் படத்தை மட்டும் வரைந்தவள்... வேலுக்கு பதிலாய் இதில் அம்பு விட்டிருக்க..பார்த்த விச்சுவிற்கு காதில் புகை வந்தது..
"அது எப்பவும் போல கேவலமாத்தான் இருக்கு...ஆனா என்னடி இதுல நீங்க மூணு பேரும் அழகா இருக்கீங்க...என்னைய மட்டும் ஏதோ நாய்க்கு போட்ட எலும்பு துண்டு மாதிரி போட்டு வச்சுருக்க...ஜிம் பாடிடி நா.."
சிலிர்த்து கொண்டான்..
"போடாங்க எம் பாடி சோடா.."
"ஆமா அது என்ன...உனக்கு பின்னாடி மட்டும் ஹார்ட் சிம்பல் தெரியுது..எங்களோடதுல அது மிஸ்ஸிங்...வொய் வொய்.."
ஆம்..அன்று நெடுமரம் என எழுதி ஹார்டின் விட்டவள் இன்று இவள் பேருக்கு பின்னாலும் சின்னதாய் வரைந்து வைத்திருக்க..விச்சுவின் கழுகுப்பார்வையில் அது பட்டு விட்டது..
"அது..அது...ஹார்ட்னா...அது அப்படியில்ல...நா முழுமனசா..அவன என் புல் ஹார்ட்டா தாக்குறேன்னு அர்த்தம்..அதான் வேற ஒன்னுமில்ல.."
"ப்பூ..இதுல என்ன கஞ்சத்தனம்...நாங்களும் எங்க புல் ஹார்ட்டோட அவன தாக்கிட்டு போறோம்...சோ நாங்களும் எங்களுக்கு ஹார்ட்ட போட்டுப்போம்.."
சொன்னவன் எழுந்து போய் அவனுக்கு பின்னால் வரைய.."இருடா நானும் நானும்".. பவியும் போய் அழுத்தமாய் வரைந்து தள்ளினான்..
"நா அழகா வரைஞ்சத வேணும்னே கெடுக்கறீங்களா... விடுடா..விடுடா பவி...
அபி எவ்வளவு தடுத்தும் வரைந்த பின்பே ஓய்ந்தனர்..
"எப்பூடி.."விச்சுவின் கேள்விக்கு..
"டேய் இதுல நம்ம மூணுபேருமே அவன்மேல நம்ம ஹார்ட்ட தூக்கி வீசுற மாதிரியிருக்கு... இதப்பார்த்தா நாளைக்கு இந்த உலகம் நம்மளபத்தி என்ன நினைக்கும்..."
பவி தீவிரமாய் நக்கலடிக்க..
"ம்ம்...அப்படி அப்படி நினைக்கும்..சரி சரி வா..அவன் வர்றதுக்குள்ள போயிடலாம்..எப்படியும் நாளைக்கு ஜெயில் சோறு கன்பார்ம்.. அதுக்குள்ள ஒரு வாய்..வீட்டு சாப்பாடு சாப்டு மனச ஆத்திக்கலாம் .. வாங்கடா போலாம்...ஏய் அபி என்ன திரும்பி திரும்பி பார்த்துட்டு வர்ற..இனி மறுபடியெல்லாம் வரமுடியாது... ஏன்னா பரோல் கிடைக்கறது ரொம்ப கஷ்டம்..அதுனால ஏதாவது விட்டுப்போச்சுன்னா போய் முடிச்சு வுட்டுரு போ...நாங்க வேணா வெயிட் பண்றோம்.."
விச்சு ஓட்டியெடுக்க..பவி அவன் தலையில் தட்டி மூவரையும் இழுத்து போனான்...
அவர்கள் போய் வெகுநேரம் கழித்துதான் மாறன் அறைக்கு வந்தான்.. முழுதாய் கலைந்திருந்த அவன் அறையை பார்வையால் அளந்தவன் ஒவ்வொரு இடமாய் நின்று அவர்கள் அங்கு நடத்திய கூத்தை எண்ணி சிரித்து கொண்டான்.. மெதுவாய் நடந்து அந்த சுவரிடம் வந்தவன்..மூவரும் சேர்ந்து வரைந்ததையே வெகுநேரம் பார்த்து நின்றான்...
"நானும்.. நாங்களும்.....நம்ம மூணு பேரு ஹார்ட்டும் அவன்மேல.."
மாறி மாறி..அவர்கள் மூவரின் குரலும் வந்து போக..
அவசரமாய் தேடி எடுத்த பர்மெணன்ட் மார்க்கரில் மொத்த படத்தையும் பெரிதாய் வரைந்த ஒரு இதயத்தில் அடக்கினான்..
மழை வரும்...

Last edited: