மாய கண்ணன்...
பல காலங்களாக
அன்பிற்கு ஏங்கியவளை
கண்டு கடவுளே
இறங்கி வந்தானோ!
அவன் கண்கள்
பேசும் வார்த்தைகளுக்கு
தனியகராதி உண்டோ?
தன் பின்பக்காட்டியில்
என்னைக் காணும்பொழுது
பின்னால் நின்று
இரசிப்பவன் அவனே...
இருபது ஆண்டுகளாய்
என்னுடன் இருந்த
மனதுடன் சேர்த்து...
நானாய் உண்ணும்
பழக்கத்தையும் பறித்துக்கொண்டான்...
இல்லையெனில் தாயைத்
தேடும் பிள்ளை போல
உணவைக் கண்டதும்
அவன் கரம் தேடுவேனோ!!
அவனை விடவும்
அவன் நினைவுகளுக்கே
குறும்பு அதிகம்போல...
தனிமையில் அந்நினைவுகள்
சுகமாய் தோன்றும்...
ஆனால் அனைவருடன்
இருக்கும் பொழுதோ
தோன்றி ரணமாய் கீறும்...
அனைத்து நொடிகளிலும்
உயிராய் உணர்வாய்
கலந்தவன் இன்று
ஏனோ விலகிவிட்டான்...
இறைவா...!
நான் கண்டது கனவா?
இல்லை காண்பது கனவா?
காண்பது கனவாயின்
விடியலைத் தா....
கண்டது கனவாயின்
என் கனவை
மீட்டுத் தா...
நினைவுகளின் மத்தியில்
என் மாய கண்ணனின் மீராவாக நான்.
~
பல காலங்களாக
அன்பிற்கு ஏங்கியவளை
கண்டு கடவுளே
இறங்கி வந்தானோ!
அவன் கண்கள்
பேசும் வார்த்தைகளுக்கு
தனியகராதி உண்டோ?
தன் பின்பக்காட்டியில்
என்னைக் காணும்பொழுது
பின்னால் நின்று
இரசிப்பவன் அவனே...
இருபது ஆண்டுகளாய்
என்னுடன் இருந்த
மனதுடன் சேர்த்து...
நானாய் உண்ணும்
பழக்கத்தையும் பறித்துக்கொண்டான்...
இல்லையெனில் தாயைத்
தேடும் பிள்ளை போல
உணவைக் கண்டதும்
அவன் கரம் தேடுவேனோ!!
அவனை விடவும்
அவன் நினைவுகளுக்கே
குறும்பு அதிகம்போல...
தனிமையில் அந்நினைவுகள்
சுகமாய் தோன்றும்...
ஆனால் அனைவருடன்
இருக்கும் பொழுதோ
தோன்றி ரணமாய் கீறும்...
அனைத்து நொடிகளிலும்
உயிராய் உணர்வாய்
கலந்தவன் இன்று
ஏனோ விலகிவிட்டான்...
இறைவா...!
நான் கண்டது கனவா?
இல்லை காண்பது கனவா?
காண்பது கனவாயின்
விடியலைத் தா....
கண்டது கனவாயின்
என் கனவை
மீட்டுத் தா...
நினைவுகளின் மத்தியில்
என் மாய கண்ணனின் மீராவாக நான்.
~