அத்தியாயம் 1
பைக் கீயை கையில் சுழற்றிக் கொண்டே, ஆர்ப்பரிக்கும் அலைகளின் சத்தத்தை காதிலும் அதன் அழகை கண்களிலும் நிரப்பிக் கொண்டிருந்தான் ஒருவன்..
வந்து அரைமணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. கையில் உள்ள வாட்சை ஒருமுறை பார்த்து விட்டு, "எப்போ என்னை வரச் சொன்னா? ஆனா அவள இன்னும் காணோம்.. இவளுக்கு காத்திருந்த நேரத்தை எல்லாம் நான் யூஸ் பண்ணிருந்தா வாழ்க்கைல உருப்படவாது செஞ்சுருப்பேன் போல.. இருந்தாலும் அவ வந்து அதுக்கு சாரி சொல்ற அழகுக்கு எவ்வளவு நேரம்னாலும் காத்திருக்கலாம்" என்று தன் காதலியை நினைத்து எப்போது வருவாள் என்று காத்திருந்தான்.
"ஹாய் வந்து நேரமாச்சா? சாரி.." என்று வந்தமர்ந்தாள் அவன் காதலி.
அவளை கூர்ந்து கவனித்தான். முகத்திலும் குரலிலும் மாற்றம். எப்போதும் தாமதமானால் அவள் வந்து கேட்கும் சாரியில் வருத்தமும் அவனைக் கொஞ்சலும் சேர்த்து இருக்கும். இன்று அவள் கேட்ட சாரியில் கூட உயிர்ப்பு இல்லை. அதை விட வந்ததும் தோள் சாய்ந்து கை கோர்த்துக் கொள்வாள். இன்று இரு அடி இடைவேளை. அதுவே சொல்லியது ஏதோ பெரிய குண்டாய் தூக்கிப் போடப் போகிறாள் என்று.
எல்லாத்தையும் யோசித்துக் கொண்டே, "என்னாச்சு.. ஏன் அவசரமா வரச் சொன்ன?" என்றான்.
எதுவும் பேசாமல் கைப்பையில் இருந்து ஒரு இன்விடேஷனை எடுத்து நீட்டினாள்.
"என்னதிது? உங்க ரிலேஷன் யாருக்காவது மேரேஜ் ஆ" என்று கேட்டுக் கொண்டே அதை வாங்கி பிரித்து பார்த்தவன் அதிர்ந்தான். மணமகள் இடத்தில் அவன் காதலியின் பெயர்.
முதலில் கேட்ட என்னதிது வார்த்தை இப்போது ஆக்ரோஷமாக வந்து விழுந்தது. "என்னதிது?" என்று அந்த இன்விடேஷனை தூக்கிக் காண்பித்து கேட்டான்.
"என் மேரேஜ் இன்விடேஷன்"
"உனக்கு மேரேஜ்?.. அப்போ நான் யாரு? டைம் பாஸா?" என்றவனின் குரலில் கடுமை கூடியிருந்தது.
"என்னை புரிஞ்சுக்கோடா ப்ளீஸ். வீட்ல நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம முடிவு பண்ணிட்டாங்க. நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கலனா குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்குவோம்னு மெரட்டுறாங்க. அதுனால தான்.." என்று இறைஞ்சும் பார்வை பார்த்தாள்.
"அதுனால தான் கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்ட?" என்று பல்லிடுக்கில் வார்த்தையைக் கடித்துத் துப்ப..
"இல்லடா.. நான் எவ்வளவோ சொல்லிட்டேன். அதுவுமில்லாம உனக்கு நல்ல வேலையும் இல்ல.. அது இதுனு காரணம் சொல்லி வேண்டாம்னு சொல்றாங்க. என்னை என்ன பண்ண சொல்ற? நீயும் நல்லா சம்பளம் வாங்கி இன்னும் லைஃப்ல செட்டில் ஆகல.. எதை வச்சு அவங்க கிட்ட சொல்றது?"
"நான் இப்போ எவ்ளோ சம்பளம் வாங்குறேன், என் குடும்பம் என்ன, நான் எப்படினு எல்லாம் தெரிஞ்சு தான லவ் பண்ண?. அப்படி உன்னை கல்யாணம் பண்ணி உன்னை என்ன நடுத்தெருவுலயா நிப்பாட்டிர போறேன்.. உன்னை வச்சு காப்பாத்துற அளவுக்கு சம்பளம் வாங்குறது போதாதா? அப்டினா வெல் செட்டிலாகுனவனே தேடிப் பார்த்து லவ் பண்ணிருக்க வேண்டியது தான?. என்னை ஏன்டி லவ் பண்ண?" என்று கத்தினான்.
"இங்க பாரு இதுமாதிரி நடக்கும்னு எனக்குத் தெரியாது. உனக்குத் துரோகம் பண்ணனும்னு நான் நினைக்கவே இல்ல. எல்லாமே விதி.. எங்கப்பா அம்மாவை எக்கேடோ கெட்டு போகட்டும்னு எதிர்த்து வந்து என்னால உங்கூட வாழ முடியாது. அதுனால் நாம பிரிஞ்சுறலாம். என்னை மறந்துரு" என்று அலுங்காமல் சொல்ல..
"ஓ விதி.. ம்.. அப்ப என்ன ம*த்துக்கு எனக்கு ஓகே சொல்லி என்கூட சுத்துனடி? ஏன் உனக்கு முன்னாடியே உங்கப்பன் உங்குடும்பத்தை பத்தி தெரியாதா?. சாதி குடும்பம் குலம் கோத்திரம் சொத்து பத்துலாம் பார்ப்பாங்கனு தெரியும்ல?. அப்போ மூடிக்கிட்டு அன்னைக்கே நோ சொல்லிருந்தா அன்னைக்கே ஒருதலைக் காதல் அவ்வளவு தானு நெனச்சு என் காதல மனசுல போட்டு ஓரமா பூட்டிருப்பேன்ல.. உங்களுக்குலாம் கல்யாணம் முடிவு பண்ற வரைக்கும் ஊரு சுத்த உங்களுக்கு செலவு பண்ண ஒரு பையன் வேனும். அப்புறம் வீட்ல போண்டாக்கோழிய உறிச்சு வச்ச மாதிரி மொலுக்குனு ஒரு பையனா வீட்ல பாக்கவும் பல்ல இளிச்சிக்கிட்டு எங்களுக்கு டாட்டா காண்பிச்சுட்டு போயிட வேண்டியது அப்டிதான? நாங்களும் எங்கிருந்தாலும் நல்லா இருமானு தண்ணி தம்முனு தாடி வளர்த்துக்கிட்டு அலையனும். ம்?" என்று விழிகளில் அனல் பறக்க வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.
ஏற்கனவே அவன் இப்படித்தான் பேசுவான் என்று எதற்கும் தயாராக வந்தவளோ, "இங்க பாரு என் குடும்பத்தை பத்தி ஏதாவது பேசுன அவ்வளவு தான்?. சே நீ புரிஞ்சுப்பனு உன்கிட்ட சொல்ல வந்தேன் பாரு. என்ன சொல்லனும். உன்கிட்டலாம் போன்லயே சொல்லிட்டு ப்ரேக்கப் பண்ணிருக்கனும்" என்றாள்.
"ஓ அப்போ முன்னாடியே எல்லாத்துக்கும் தயாரா தான் இருந்துருக்க? பொண்ணு பார்க்குறதுல இருந்து நிச்சயம் பண்ணி கல்யாணத்துக்கு பத்திரிகை அடிக்குற வரைக்கும் கமுக்கமா இருந்துட்டு இப்போ வந்து சொல்ற?. நீ என்னை உண்மையிலே லவ் பண்ணிருந்தா உன்னை பொண்ணு பார்க்க வந்தனைக்கே சொல்லிருக்கனுமா இல்லையா?"
"இங்க பாரு நானே சமாளிச்சரலாம்னு இருந்தேன். அவ்வளவு தான். உன்கிட்ட என்னால விளக்கம் சொல்ல முடியாது. சே உன்கிட்ட பேச என்னால முடியாது" என்று எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டாள்.
"போடி போ.. ஆனா உன்னை நினைச்சு நான் தண்ணி அடிச்சுக்கிட்டு தாடி வளர்த்துக்கிட்டு வாழ்வே மாயம்னு அலைவேனு மட்டும் நினைக்காத. உனக்கு உண்மையா இருந்த என்னையவே மறந்துட்டு நீ கல்யாணம் பண்ணும் போது எனக்கு துரோகம் பண்ண உன்னை மறந்துட்டு நான் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்க மாட்டேனா? உனக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணி காண்பிக்கல..?" என்று சவால் விட்டவன் கடல் மணலைக் காலில் எட்டி சிதறினான்.. அதற்குள் அவன் காதலி அவன் மனதிலிருந்து மட்டுமல்ல அவன் பார்வையிலிருந்தும் தூரமாய் சென்றிருந்தாள்.
'இவன் சபதம் என்ன புது வித சபதமா இருக்கு. லவ் பெயிலர் ஆனா ரெண்டு சொட்டு கண்ணிராவது விடனும் இல்ல சோகமாவது இருக்கனும்.. ரெண்டும் இல்லாம அவளுக்கு முன்னாடி கல்யாணம் பண்றேனு சவால் விடுறான்?' என்று கடற்கரையில் காதல் ஜோடிகளாய் அமர்ந்திருந்த சிலர் அவனை விசித்திர ஜந்துவாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவனை நம்பி கதைக்குள்ள போலாமானு சந்தேகமா இங்கேயே நிக்காம தைரியமா நம்பி கதைக்குப் போலாம் வாங்க..
அலைகளில் பார்வையை பதித்துக் கொண்டே, ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து ஒரு கையை இடுப்பில் வைத்து மறுகையில் சிகரெட்டை இழுத்து புகை விட்டான். மனதில் காதலிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்று வரை இருந்த நினைவுகளை ஓட்டிப் பார்த்தான். அதை அப்படியே ரிவர்ஸில் டெலிட் செய்து முடிக்க.. அதற்குள் சிகரெட்டும் காலியாக.. அவள் நினைவுகளோடு சிகரெட்டையும் கீழே போட்டு நசுக்கி விட்டு அவசரமாக வீட்டுக்குச் சென்றான். உலகத்திலே ஒரு சிகரெட்ல லவ் பெயிலியரானதை மறந்தது இவனாத் தான் இருக்கும்.
அதே கோவத்தோடு, "ம்மா ம்மா.." என்று கத்தியபடியே வீட்டுக்குள் நுழைந்தான் ஆதி என்ற ஆதிப்ரனவ்.
"ஏன்டா இப்டி காட்டு கத்து கத்துற?. உள்ளே தானே வர்ற. உள்ளே வந்து கூப்ட வேண்டியது தான?. நாலு தெருவுக்கு முன்னாடியே கத்திட்டு வர்ற. என்னனு சொல்லு" என்று கிச்சனில் இருந்து வெளியே வந்தார் ஆதியின் அன்னை கலையரசி.
"எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க" என்று பட்டென்று உரைக்க..
அவன் சொன்னதில் விழித்தவர், "டேய்.. என்னடா சொல்ற?" என்க..
"எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைங்க"
அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்த அவனது தந்தை அருணாச்சலம் அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தார். அதெல்லாம் அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
"உடனே வா?. உடனே கல்யாணம் பண்ணி வைக்க பொண்ணு என்ன செய்யவா குடுத்துருக்கு?. அதுக்குலாம் நேரம் காலம் பொண்ணு பாக்க வேண்டாமா. லூசு மாதிரி பேசாத. போய் வேலையை பாரு.." என்று நகரப் போனவரை,
"அதெல்லாம் தெரியாது எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கிறேங்க. இருபத்தி ரெண்டாம் தேதிக்குள்ள எனக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சுருக்கனும். அதுக்கு அரேஞ்ச் பண்ணுங்க" என்று உறுதியாய் நின்றவனை..
"ஏன்டா இன்னைக்கு தேதி பத்து.. இன்னும் பத்து நாள்ல கல்யாணம் பண்றதுனா என்ன அவ்வளவு ஈசியான வேலையா?. ஏதாவது ஜோசியம் பாத்துட்டு வந்தியா டா? எதுக்கு இருபத்தி ரெண்டாம் தேதிக்குள்ள முடிக்கனும்ங்குற. நாம வேணா நம்ம எப்பவும் பாக்குற ஜோசியரை பாத்துட்டு வரலாம். நீ எங்களுக்கு தலைப்புள்ள உன் கல்யாணத்தை சிறப்பா பண்ண வேண்டாமா?"
"ஒரு சிறப்பும் வேண்டாம் எனக்கு. நீங்களா கல்யாணம் பண்ணி வைக்கல அப்புறம் நானா ஏதாவது ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டி வந்துருவேன்" என்று மிரட்டி விட்டுச் செல்லும் மகனை அவன் என்ன லூசா என்கிற ரீதியில் பார்த்து வைத்தனர் அருணாச்சலமும் கலையரசியும்.
பின்னே ஏதாவது காதல் கீதல் என்று வந்து நின்றால் கூட பரவாயில்லை. உடனே திருமணம் செய்து வைத்து விடலாம். திடுதிடுப்பென்று வந்து கல்யாணம் பண்ணி வைங்க என்றால் பெற்றவர்களுக்கு வேறு மாதிரி தானே நினைக்கத் தோன்றும்.
அவன் செல்லவும், "துரைக்கு கல்யாணம் பண்ண அவ்வளவு அவசரமோ?. பெத்தவங்களா பார்த்து பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணுவாங்கனு கண்டுருக்கு. இங்க இவன் அவசரமா கல்யாணம் பண்ணி வைங்கனு வந்து நிக்குறான். என்ன சொல்றதுன்னு தெரியல. நல்லா புள்ளைய பெத்த தலைமகனா?" என்று நொந்தவர் அவன் வேறு ஏதாவது பெண்ணைக் கூட்டி வந்து அசிங்கப்படுத்தி விடும் முன் நாமே திருமணம் செய்து வைத்து விடலாம் என்று தரகரிடம் தகவல் சொல்ல..
அவசரம் என்று சொல்லவும் தரகரும் அவர் கையில் வெகுநாளாய் மாப்பிள்ளை அமையாமல் இருந்த பெண்ணின் தகவலைக் குடுத்து பார்க்க சொல்ல.
"பொண்ணு போட்டோலாம் பார்க்க வேண்டாம். நேரா பொண்ணு வீட்லயே போய் பாத்துக்கலாம்" என்று அழைத்து வந்து பொண்ணு வீட்ல உட்கார்ந்தாச்சு.. ஆதி படபடப்போடு அமர்ந்திருந்தான். அவனுக்கு எப்டியாது பத்து நாளைக்குள் கல்யாணம் முடியனும் அவ்வளவு தான்.
பெண்ணை அலங்காரம் செய்து சபையில் வந்து நிறுத்த.. அவளின் பூசினாற் போன்ற தேகமதைக் கண்ட கலையரசி, "பொண்ணு போட்டோல வேற மாதிரி இருந்துச்சு" என்று முகத்தைக் கோணலாக்கி சொல்ல..
'ஆரம்பிச்சுட்டாங்க.. வர்றவுங்களாம் சொல்ற ஒரே வார்த்தை குண்டாயிருக்கேன். இந்த அப்பா அம்மாவுக்கும் அறிவு இல்ல. நான் எப்டி இருக்கேனோ அப்படியே போட்டோ எடுத்துக் குடுக்காம போட்டோகிராபர்கிட்ட சொல்லி போட்டேவுல ஒல்லியா காம்பிச்சா போதுமா? வந்து பாக்குறவங்களுக்கு கண்ணு நொள்ளையா?. பார்க்குறவங்களுக்குத் தெரியாது நான் எப்டி இருக்கேனு. இவனும் வேண்டாம்னு சொல்லிட்டு போவப் போறான். இதுக்கு அலங்காரம் வேற.. கடைசி வரைக்கும் கல்யாணமே வேண்டாம்னு இருந்தாலும் இந்த சமூகமும் என்னைப் பெத்தவங்களும் விடாதுங்க'' என்று சலித்தபடி தலைகுனிந்தபடி நின்றிருந்தாள்.
'இந்தப் பெண் வேண்டாம். வீட்ல போய் பேசிட்டு சொல்றோம்னு தட்டிக் கழிச்சிட வேண்டியது தான்' என்று மனதில் நினைத்த கலையரசி , வாயைத் திறந்து சொல்வதற்கு முன்..
"நான் பொண்ணு கிட்ட பேசனும்" என்றான் ஆதி.
அப்போது தான் குனிந்திருந்தவள் விழுக்கென்று நிமிர்ந்தாள் அவள். இன்பமுகிலா.. புன்னகையை பூட்டி வைத்திருக்கும் முகிலவள்.. வெண்மேகங்களை திரட்டி செய்த கொழுக் மொலுக்கென்ற சிலையாய் நின்றிருந்தாள்.
ஆதியின் அம்மாவும் அப்பாவும் முறைத்துக் கொண்டிருக்க.. அவன் இன்பமுகிலாவுடன் பேச அறைக்குள் சென்று விட்டான்.
"ஹாய் என் பேரு ஆதி. என்னை உங்களுக்கு புடிச்சுருக்கா?" என்று நேரிடையாகவே கேட்க..
அவள் தான், 'ஙே'வென விழித்தாள்.
"எனக்கு உங்களை புடிச்சிருக்கு. உங்களுக்கு ஓகேனா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றவனை இமைக்காமல் பார்த்தாள்.
"உங்களைத் தான் கேட்குறேன்" என்று மீண்டும் கேட்க..
"உங்களுக்கு எப்டி என்னை பிடிச்சது?. வந்ததுல இருந்து என்னைப் பாக்கவே இல்லையே. படபடப்பா ஏதோ யோசிச்சுக்கிட்டு தான் இருந்தேங்க"
"ஓ அப்படி சொல்றேங்களா?" என்றவன் தள்ளி நின்று அவளைத் தலை முதல் கால் வரை அளந்தான்.
அவன் செய்கையில், "எ.. என்ன பண்றேங்க" என்றாள் புருவம் சுருக்கி.
"நீங்க தான நான் பாக்கலனு பீல் பண்ணேங்க. இப்போ பாத்துட்டேன். எனக்கு ஓகே.. உங்களுக்கு ஓகே வா?"
அவனின் முகம் சுளிக்காத பார்வையில் கொஞ்சம் அவன் வசம் மனம் சாய்ந்தது. அவளின் சப்பி முகத்தைக் கானும் சிலர் முகத்துக்கு கீழ் உள்ள பாகங்களின் சதைப் பிடிப்பில் முகம் சுளிக்காமல் எவரும் பார்த்ததில்லை. முதல்முறை தன்மேல் படிந்த ரசனைப் பார்வையில் மனம் சிலுசிலுத்தது.
"என்னோட டீடெய்ல்ஸ்லாம் உங்க வீட்ல சொல்லிருப்பாங்களே?. என்னோட சம்பளம் கம்மி தான். ஆனா அதை வச்சு உங்களை சந்தோஷமா எந்தக் குறையுமில்லாம வச்சுக்க முடியும். உங்களுக்கு ஓகே வா?" என்று படபடவென பொரிய.. அவனின் வெளிப்படையான பேச்சு இன்பமுகிலாவுக்கு பிடித்திருந்தது.
"உங்களோட டீடெய்ல்ஸ் எனக்குத் தெரியும். என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா?. நிஜமாவே போட்டோ பாத்துட்டு தான் பொண்ணு பார்க்க வந்தேங்களா?" என்று கையைக் கட்டிக் கொண்டு நிமிர்ந்து அவன் விழி பார்த்து கேட்க..
"உங்களைப் பத்தி எதுவும் தெரியாது. நான் போட்டோ கூட பார்க்காம தான் வந்தேன். எனக்கு பிஸிக்கல் அப்பியரென்ஸ் முக்கியம் இல்ல"
"எனக்கும் உங்களுக்கும் சேம் ஏஜ் தெரியுமா?"
"சேம் ஏஜ் தான? அதுனால என்ன?" என்று தோளைக் குலுக்க..
"அப்போ நான் உங்களை பேரு சொல்லி தான் கூப்டுவேன் மேரேஜ்க்கு அப்புறம்" என்று விளையாட்டாய் தான் கேட்டாள்.
"கூப்டுறதுக்கு தான் பேரு வச்சுருக்காங்க" என்றவன் அதுலாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை என்பது போல் இருந்தான்.
"எப்டி உங்களுக்கு என்னை பார்த்ததும் பிடிச்சது?" என்றவள் கோலிக்குண்டு கண்களில் ஆர்வத்தைத் தேக்கி கேட்டாள்.
"ஃபிராங்க்ஆ சொல்லனும்னா.." என்று அவளிடம் நடந்ததை சொல்ல..
அவன் லவ் பெயிலியர் என்று சொல்லவும் முகம் சுருங்கி விட்டது.
"இது அவசரத்துல எடுத்த முடிவா இருந்தாலும் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு".
"எப்டி ரெண்டு நாளைல ரெண்டு வருஷ லவ்வை மறந்தேங்க?. ஒருவேளை உங்களுக்கு இப்போ அவசரத்துல என்னை பிடிச்சிருந்தாலும் நாளைக்கே என்கூட லைஃப் போரடிக்கலாம். சப்போஸ் நாளைக்கே நீங்க லவ் பண்ண பொண்ணு உங்களை மறக்க முடியல. உன்னை நினைச்சுட்டு அவர்கூட வாழ முடியலனு உங்ககிட்ட வந்தா என்ன பண்ணுவேங்க?. அப்படி நடக்காது. இருந்தாலும் கேட்குறேன்" என்று சந்தேகமாக கேட்க.. எங்கே ஆசை வைத்து வாழ்க்கையை ஒப்படைத்த பின் இன்னொருத்திக்கு சொந்தமாகி விடுவானோ என்று அவள் வாழ்க்கையை நினைத்து பயம் தான்.
"எனக்கு இறந்த காலத்தை தூசி தட்டவும் பிடிக்காது. எதிர்காலத்தில் வாசம் புரியவும் விரும்ப மாட்டேன். நிகழ்காலத்தை மகிழ்ச்சியா திருப்தியா வாழனும் அவ்வளவு தான்" என்றவன் டேக் இட் ஈஸியாக சொல்ல.. அவன் கேர்பிரி ஸ்பிரிட் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
"அப்படி நடந்துச்சுனா?" என்று மீண்டும் அழுத்திக் கேட்க..
"நடந்துச்சுனா?"
"நடந்துச்சுனா.." என்றவள் வலது கையைத் தூக்கி இடது கையால் வலது கையிலிருந்த வளையலை கீழே இழுத்து விட்டு ஒரு மாதிரி பார்த்து முறைக்க..
"புரிஞ்சுருச்சு. அப்டி நடந்துச்சுனா கும்மிருவேங்க. அதான?. ச்சீ ச்சீ நான் அந்த அளவுக்குலாம் போக மாட்டேன். நான் கிரேஸி பாய் தான் பேட் பாய் இல்ல. யூ க்நோ?" என்று அவனுக்கு அவனே செர்ட்டிபிகேட் குடுக்க..
உள்ளுக்குள் பொங்கி எழுந்த சிரிப்பை இதழுக்குள் அடக்கிக் கொண்டாள்.
"இப்போவாது ஓகே சொல்வேங்களா இன்பமுகிலா" என்று எதிர்பார்ப்புடன் கேட்க..
அவள் ம்ம் என்று முழித்துக் கொண்டே தலையாட்ட..
"அப்போ ஓகே" என்று கிளம்ப எத்தனித்தவன் எதையோ யோசித்து பட்டென்று திரும்பவும் அவள் பயத்தில் பின்வாங்கி கண்களை விரித்து நிற்க..
"நீங்க பப்ளியா கும்முனு.." என்று சொல்ல வந்தவன், "ஹான்?.." என்றவளின் அகன்ற விழிகளில், "ஷ்ஷ்" என்று நாக்கைக் கடித்தவன், "அது வந்து பப்ளியா புசுபுசுனு மார்ஷ்மெல்லோ மாதிரி இருக்கேங்க. ஒரு தடவை சீக்ஸ் மட்டும் தொட்டுப் பாத்துக்கட்டுமா?" என்றவன் அவளின் பதிலை எதிர்பாராது கட்டை விரலை ஒரு கன்னத்திலும் மற்ற நான்கு விரலையும் மறு கன்னத்திலும் வைத்து ஹார்ன் அடிப்பது போல் இரண்டு முறை அழுத்தி அவளின் கன்னங்களின் மென்மையைத் தொட்டுப் பார்க்க.. அவள் இதழ்களோடு விழிகளிலும் ஓவல் ஷேப்பில் விரிந்தது.
"சோ சாஃப்ட். பை பப்ளி" என்று கிளம்பி விட்டான் அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டு.
தொடரும்..

Last edited: