அத்தியாயம் 2
சாளரத்தின் வழியே முகிலுக்குள் ஓடி ஒளிந்து கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருந்த நிலவில் விழி பதித்தபடி படுத்திருந்தாள் முகிலா.
அவன் கைகள் இன்னும் கன்னத்தில் ஊர்வது போல குறுகுறுத்தது. அவள் கைகள் கன்னத்தை மெதுவாய் தடவிப் பார்த்துக் கொண்டது. 'அவன் பாட்டுக்கு வந்தான். புடிச்சுருக்குனான். பட்டாசு மாதிரி பொறிஞ்சிட்டு கிளம்பி போயிட்டான். அவன் புடிச்சுருக்குனு சொன்னான். ஆனா அவங்க வீட்ல வீட்டுக்குப் போய் கலந்துட்டு சொல்றோம்னு கிளம்பிட்டாங்க. இந்த சம்மந்தம் அமையுமா?' என்று யோசனையில் உழன்றாள்.
அமையாவிடிலும் பரவாயில்லை என்று தான் தோன்றியது அவளுக்கு. இதுவரை எத்தனையோ பேர் வந்து பெண் பார்த்து விட்டுச் சென்றிருக்கின்றனர். அவளின் வெளித்தோற்றம் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தவர்களுக்கு அவளின் மனமோ குணமோ தேவைப்படவில்லை. 'இந்தக் காலத்துல நல்லா இருக்குற பொண்ணுங்களுக்கே குழந்தை குட்டி உண்டாகாம எத்தனையோ பிரச்சனை வருது. இதுல இவ இப்டி குண்டா இருக்கா. என்னென்ன பிரச்சினை இருக்கோ' என்ற பேச்சுகளும்.. 'இப்போ கும்முனு இருக்கா நல்லா இருக்கும்னு கட்டிக்கலாம். ஆனா ஒல்லியா இருக்குற பொண்ணுங்களே ஒரு புள்ளைய பெத்துட்டா வெயிட் போட்டுறாளுங்க. இவ இப்பவே இப்டினா.. கல்யாணத்துக்கு அப்புறம் எப்டி மாறுவா. வேண்டாம்டா சாமி'. இப்படி சில ஆண்களின் வெளிப்படையான பேச்சுகளையும் காதில் கேட்டிருக்கிறாள். அவர்களுக்கெல்லாம் கல்யாணம் என்பது உடல் தேவையே தீர்த்துக் கொள்வதற்கான லைசென்ஸ் போல என்று எண்ணிக் கொள்வாள்.
முதன் முதலில் அவள் மேல் விழுந்த முகம் சுளிக்காத புருவம் சுருக்காத பார்வை. அவளின் உடல் பருமனை ஒரு குறையாகவே பார்க்காமல் அவன் சம்பளக்குறைவை குறைபோல் சொல்லி அதில் நிறைவாய் உன்னை வைத்திடுவேன் என்று சொன்ன அவனின் வெளிப்படையான பேச்சு என்று ஆதியின் அனைத்து குணங்களும் பிடித்திருந்தது. அவனின் உன்னைப் புடிச்சுருக்கு என்ற வார்த்தையில் பாலைவனமாய் வெறித்துக் கிடந்த நெஞ்சம் நனைந்தது. நிகழ்காலத்தை திருப்தியா வாழனும்ங்குற அவன் கொள்கை அவளை ரொம்பவே கவர்ந்தது.
இங்கே வீட்டுக்கு வந்த ஆதியின் அம்மா தாம் தூம் என்று குதித்தார். "உனக்கென்ன பைத்தியம் கிண்டு புடிச்சுருச்சாடா. போயும் போயும் ஒரு குண்டு பூசணிக்காவ உனக்கு கல்யாணம் பண்ணவா உன்னை இப்டி வளர்த்தேன்.."
"ம்மா.." என்று கத்தியவன், "ஒரு டீச்சரா இருந்துக்கிட்டு நீங்களே இப்படி பேசலாமா?. இந்த ஒற்றுமை ஏற்றத்தாழ்வு இல்லாமை எல்லாம் ஸ்கூல்க்கு மட்டும் தானா?"
"அதுலாம் பள்ளிக்கூடத்துல படிக்குறதுக்கு வேணா நல்லா இருக்கும். நிஜ வாழ்க்கைல அதுப்படிலாம் நடக்க முடியாது. எனக்கு அந்தப் பொண்ணை சுத்தமா புடிக்கல. ஏன் தான் ரெண்டு நாளா பைத்தியம் புடிச்ச மாதிரி பிகேவ் பண்றனு தெரில ஆதி. கல்யாணம்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு பண்ற விஷயம் இல்ல. ஆயிரம் காலத்துப் பயிர். விதை ஒழுங்கா போடலைனா பயிரே முளைக்காது. அதை புரிஞ்சுக்கோ"
"ப்ச் ம்மா. ஒழுங்கா போட்ட விதை கூட சில நேரம் முளைச்சு வராது. அதேபோல எங்க போட்டோம்னே தெரியாம தூர எரியிற விதை கூட மொளைச்சு வரும். லைஃப்க்கு ஷேப் முக்கியம் இல்ல.."
"இந்த வியாக்கானம்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது" என்றவர் மேலும் சில புலம்பலை ஆரம்பிக்க..
அருகில் நின்ற அவன் தம்பி மித்ரன், "ஏன்டா நிஜமாவே உனக்கு பொண்ணை புடிச்சுருந்ததா?. இல்லை நமக்குலாம் பொண்ணு கிடைக்காதுனு பயந்துகிட்டு கிடைச்சது போதும்னு ஓகே சொல்லிட்டியா?. அவ்ளோ அவசரமாடா கல்யாணத்துக்கு? நீ ஒரு மார்க்கமா தான் இருக்க" என்று ஆதியை மேலும் கீழும் பார்த்து கேலி செய்ய..
அவன் சொன்ன பின்னே தந்தை அன்று அவனைப் பார்த்த பார்வைக்கான அர்த்தம் புரிந்தது. 'அய்யயோ அந்த அளவுக்கு அலையிறேனு நம்மளை நினைச்சுட்டாங்களோ.. சரி விடு நமக்கு கல்யாணம் நடந்தா போதும்' என்று அவனுக்கு அவனே சமாதானம் செய்து கொண்டான்.
கலையரசி லவலவனு விடாமல் புலம்ப, "ம்மா வாழப்போறது நான். நீங்க வொரிப் பண்ணிக்காதீங்க. பொண்ணு வீட்ல ஓகே சொல்லிட்டு இருபதாம் தேதியே மேரேஜ் வைக்கிறது பத்தியும் சொல்லி கன்ஃபார்ம் பண்ணிடுங்க" என்று சொல்லி விட்டு அவன் பாட்டுக்குச் சென்று விட்டான்.
அவன் தந்தை எதுவும் பேசவில்லை. நினைத்ததை செய்ய வேண்டும் என்று நிற்பவன் என்று அவருக்குத் தெரியாதா?. கல்லுரி சேரும் போது இளையவன் மித்ரன் அவர் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து அவர் சொன்ன குரூப்பை எடுத்தான். இவனோ நான் மெக்கானிக்கல் தான் எடுப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்று நினைத்ததை சாதித்தவன். அவன் போக்கிலே விடலாம். 'கல்யாணம் பண்ணி வச்சுட்டா ரெண்டும் என்ன வேணா பண்ணுதுங்க. அதுக்கப்புறம் அதுங்க பாடு. நம்ம கடமை முடிஞ்சா போதும்' என்று தன் கடமையைச் செய்ய தயாரானார்.
திருமண நாள்.. மாப்பிள்ளைக் கோலத்தில் ஜம்முனு அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தான் ஆதி. மனதிலோ முகத்திலோ முதல் காதல் பற்றி சிறு கலக்கமும் கிடையாது. அந்த நிமிடத்தை என்ஜாய் பண்ணி அனுபவித்துக் கொண்டிருந்தான்.
வானவில்லின் நிறமெடுத்து தங்க ஜரிகையில் ஆடை நெய்து அணிந்த வெண்பஞ்சு முகிலைப் போல் நடந்து வந்தாள் இன்பமுகிலா. அன்று சில விநாடிகள் பெயருக்கு பார்த்தவன் இன்று முழுதாய் அவளின் அழகினை உள்வாங்கினான். அவள் மேடையேறி அருகில் வந்து அமரும் வரை விழிகளால் ரசித்துப் பருகியவன், "ஹே பப்ளி.. செம க்யூட்டா இருக்க.." என்று காதருகில் குனிந்து கிசுகிசுத்து அவளின் மார்ஷ்மெல்லோ கன்னங்களுக்கு ரோஸ் வண்ணமேற்றினான் அவளை நாணத்தில் சிவக்க வைத்து.
கீழே அருணாச்சலமும் கலையரசியும் வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தனர். இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அவர்களுடன் பணிபுரிபவர்கள் கல்யாணத்துக்கு வந்திருந்தனர். வந்தவர்கள் சும்மாயிராமல், "என்ன கலை.. பெரிய இடமா உம்பையனுக்கு புடிக்கனும்ட்டு இருந்த. இப்போ பொண்ணே பெரிசாவுல புடிச்சுருக்க. கில்லாடி தான் போ.." என்று சிரிக்க.
அவர்க்கு முகம் கறுத்து கோவம் மொத்தமும் மேடையில் அமர்ந்திருந்த முகிலா மேல் திரும்பியது. 'சே எல்லாம் நான் பெத்த கிறுக்குப்பயலால வந்தது. ஏதோ உலகத்துல இல்லாத ரதியைக் கட்டிக்கிற மாதிரி பல்லைக் காட்டிட்டு வேற உட்கார்ந்துருக்கான் மேடையில. இவளுக்கு சோறு போடவே இவன் ஓவர் டைம் வேலை பாக்கனும். அனுபவப்படட்டும் அப்போ தான் தெரியும்' என்று உள்ளுக்குள் பொறுமியவர், "யாருக்கு என்ன எழுதிருக்கோ அதான்ன அமையும். பொண்ணு நல்ல பொண்ணு தான். நீங்க போய் சாப்டுங்க" என்று பெயருக்கு ஏதோ சொல்லி போலிப் புன்னகையை உதிர்த்து விட்டு நகர்ந்தார்.
முகிலாவின் பெற்றவர்களுக்கு அத்தனை சந்தோஷம். ஒற்றை மகள் கடைசி வரை தங்களுடனே இருந்து விடுவாளோ என்று பயந்து கொண்டிருந்தவர்களுக்கு இப்படியொரு நல்ல இடம் அமையவும் பத்து நாளில் திருமணம் என்றாலும் உடனே சம்மதம் தெரிவித்து விட்டனர். தன் மகள் சாமர்த்தியசாலி. எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
நல்ல நேரத்தில் மங்களநாண் பூட்டி இன்பமுகிலாவை மிஸ்ஸஸ் ஆதிப்ரணவ்ஆ மாற்றி வீட்டுக்கு அழைத்து வந்தாச்சு. இரவு சடங்குகளுக்கு ஏற்பாடு செய்ய முகிலாவை தனியறையில் அமர்த்தி வைத்திருக்க.. ஆதி அவனது அறையில் மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் கால்நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்தவன் மொபைலில் வந்திருந்த குறுஞ்செய்திகளை ஆராய்ந்தான். பத்து நாளில் திருமணம் வைத்ததால் நெருங்கிய நண்பர்கள் சிலர் திருமணத்திற்கு வந்திருந்தனர். சிலரால் வர முடியவில்லை. அவனது காலேஜ் வாட்ஸப் குரூப்பில் குவிந்த வாழ்த்து மெசேஜ்களை பார்த்து விட்டு ரிப்ளை செய்து கொண்டிருந்தான். மேரேஜ் இன்விடேஷன் அனுப்பும் போதே மணப்பெண் இடத்தில் அவனின் காதலியின் பெயரைத் தேடி இல்லாது போக.. ப்ரேக்கப் என்று சொல்லாமலே புரிந்து கொண்டனர் குரூப்பில் இருந்தவர்கள்.
எல்லாவற்றையும் பார்த்து விட்டு இன்னொரு குரூப்பில் அவன் காதலியும் இருக்கிறாள். 'போடுவோமா வேண்டாமா?' என்று பலமுறை யோசித்தவன் ஒருமுடிவோடு, 'வளைவுகள் நிரம்பிய வசந்தப்பாதையில் புதியதொரு உலகத்தில் அடியெடுத்து வைக்கிறேன் என் துணையோடு..' என்ற வசனத்தோடு அவன் திருமண புகைப்படத்தை பகிர்ந்தான். அவள் கண்டிப்பாக பார்ப்பாள் என்ற திருப்தியில் மொபைலை அணைத்து விட்டான். அவளைப் பற்றிய நினைவுகளே இல்லாதிருப்பவனுக்கு எதற்கு இந்த வேலையோ. சவாலில் ஜெயித்து விட்டேன் என்று சொல்லி விட்டு அடுத்து அவனது வாழ்க்கையைப் பற்றிய யோசனையில் திரும்பினான்.
மயக்கும் ரூம் ஸ்பிரை வாசனையோடு மலர்களின் வாசமும் சேர்ந்து மதியை மயக்கச் செய்ய.. அவனின் பப்ளிக்காக காத்திருந்தான் முதலிரவு அறைக்குள்.
கொலு பொம்மை ஒன்று கொடிமுல்லை போல் நடந்து வர, "ஹே பப்ளி வெல்கம் டு அவர் ரூம்" என்று கை விரித்து வரவேற்று கைப்பிடித்து அழைக்க..
அவன் வரவேற்பில் மெதுவாய் புன்னகைத்தவள் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள். முதல் நாள் அவனைப் பார்க்கும் போது இருந்த தைரியம் இப்போது இல்லை. புது இடம், புது உறவுகள், ஆடவனுடனான தனியறை என்று பெண்களுக்கே உரித்தான வெட்கம் வந்து ஒட்டிக் கொள்ள என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.
"வீடு ரூம் லாம் ஓகேவா பப்ளி. உனக்கு பிடிச்சுருக்கா?" என்றவனுக்கு பதில் தராமல் அவனையே அதிசயமாக பார்த்தாள். பார்த்த முதல் நாளிலே செல்லப்பெயர். இதுவரை குண்டு, பூசனி, ட்ரம் என்று எத்தனையோ பெயர் வைத்து கேலி செய்தவர்கள் மத்தியில் அவனின் பப்ளி என்ற செல்லப்பெயர் அவ்வளவு பெருமையாக இருந்தது அவளுக்கு.
"என்ன ஏன் எப்போ பார்த்தாலும் அதிசயத்தை பாக்குற மாதிரி பாக்குற?. நான் இப்டித்தான் என் மனசுல தோனுறதை பட்டுனு பேசிடுவேன். ஒரு இடத்துலே நிக்காம கடந்து போயிட்டே இருப்பேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்று கண்ணடித்து சொல்ல..
அதில் சிவந்தவள், "எல்லாராலயும் இது மாதிரி இருக்க முடியாது. அதுலாம் கடவுள் குடுத்த கிப்ட். நீங்க வெளிப்படையா பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. நீங்க நீங்களா இருங்க. நான் குண்டா இருக்குறதை கூட நீங்க பாசிட்டிவா பேசும் போது ஒரு மாதிரி நல்லா இருக்கு.." என்றவளின் உணர்வுகள் கண்ணீர்த்துளியாய் சிறிது வெளிப்பட..
"ஏய் பப்ளி.. நீ ஸ்போர்ட்டிவான கேர்ள்னு நினைச்சேன். இதுக்குலாம் பீல் பண்ணுவியா என்ன?. நான் உனக்கு வாழ்க்கை குடுத்தேனு தப்பா நினைச்சுறாதமா.. நீ தான் எனக்கு வாழ்க்கை குடுத்து என்னை பாத்துக்கனும். தப்பு பண்ற நேரம் தலைல கொட்டி திருத்தனும். அடங்காம அலையிற நானு உங்கிட்ட அடங்கிப் போனும். இன்னும் நிறைய இருக்கு.. சில்லியான விஷயத்துக்கு பீல் பண்ணி என்னை டீல்ல விட்டுறாத.." என்றவனின் ஜாலியான பேச்சில் இலகுவானாள்.
"குண்டா இருக்குறது என்ன குறையா?. இல்ல அதுதான் கொள்ளை அழகு.." என்றவன் அவள் கைகளை ஏந்தி அவன் கன்னம் உரச.. அவனின் டிரிம் செய்த தாடியின் குறுகுறுப்பில் உடல் கூசியது. வானத்தில் பறக்காத குறையாக சிறகடித்துக் கொண்டிருந்தாள்.
"கன்னம் பன்னு மாதிரி.." என்று இரு கன்னங்களையும் பிய்த்து சிவக்க வைத்துவிட்டு, "கோலிக்குண்டு கண்ணு.. மூக்கு முந்திரிப் பழம்.. வாய் சொப்பு வாய்.. மொத்தத்துல ஜீராவுல முக்கி எடுத்த குலோப்ஜாமூன் மாதிரி நல்லா கொலுகொலுனு அழகா இருக்க. குண்டு மல்லி மாதிரி கும்முனு இருக்க. பார்க்க டெட்டி மாதிரி இருந்தாலும் மனசு குழந்தை மாதிரி.." என்று அடுக்குத் தொடர்களை அடுக்கிக் கொண்டே போக..
"போதும் போதும் ரொம்ப நீளமா போது.. எங்க இருந்து காப்பி அடிச்சேங்க இதை.." என்று வெட்கப் புன்னகையோடு கேட்க..
"சொந்தமா கவிதை எழுத நானென்ன கவிஞனா?. சொந்தமா கவிதை எழுதி தான் பொண்ணுங்களை கரெக்ட் பண்ணனும்னா எவனும் கிரிடிட் கார்டு குடுத்து ப்ரோபோஸ் பண்ண முடியாது. காப்பி அடிச்சாலும் உண்மை தான?. எல்லாமே உனக்கு அப்படியே பொருந்தும். கன்னத்துல குழி விழுந்தா தான் அழகா?. நீ சிரிக்கும் போது நாடில குழி விழுகுறது செம கியூட்டா இருக்கு. யுவர் ஸ்மைல் இஸ் யுவர் பிரைடு (Your smile is your pride). மை பப்ளி.." என்று கன்னத்தை வலது இடது ஆட்டி சிரிக்க..
"இப்போ அமைதி ஆகிட்டேங்களா?. நீங்க விட்ட சவால்ல வின் பண்ணிட்டேங்க. இப்போ ஹேப்பியா?" என்றவள் அவன் மனதில் அதற்கு மட்டும் தான் இந்த திருமணமா இல்லை அதற்கு மேல் அவன் எண்ணம் என்ன என்று அறிந்து கொள்ள கேட்டாள்.
"ஹே வொய்ஃப்பி.. அதுலாம் அந்த நேரத்துல வர்ற கோவம். அப்படி நான் ஒரு சவால் விடலனா உன்னை மாதிரி மார்ஷ்மெல்லோ சிலை என் லைஃப்ல கிடைச்சுருக்குமா?. அதுலாம் முடிஞ்ச போன கதை. அதைப் பத்தி பேச வேண்டாம். நம்மளைப் பத்தி பேசலாமா?. இட்ஸ் அவர் டே. லெட்ஸ் மேக் இட்ஸ் அன்பர்கெட்டபிள் டே.." என்று அவள் மடியில் சொகுசாய் சாய்ந்து கொண்டு சிலபல ஸ்வீட் நத்திங்ஸ் பேசிக் கொள்ள..
அதுவரை இருந்த சஞ்சலங்கள் மனக் குழப்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பொங்க.. அந்த நாளை மறக்க முடியாத பொன்னாளாக மாற்ற இருவரும் மனதால் மட்டுமல்ல உடலாலும் கலந்து ஈருடல் ஓருயிராகினர்.
'அவன் மனதில் அவளை இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறானோ?. அவளை மனதில் வைத்து தன்னுடன் வாழ்வானோ?. வேறொருத்தி இருந்த மனதில் தான் இருப்பதா?. அவனின் முதல் காதல் நானில்லையா?' என்ற எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை. அவளை பிடிச்சுருக்கு என்று சொல்லி விட்டான். அவளுக்கு அவனை பிடிச்சுருக்கு. வேறென்ன வேண்டும். வீணாய் அவனைக் குழப்பி எடுத்து.. இவளும் மனதளவில் குழம்பி முதல் காதலை தினமும் குத்திக் காண்பித்து நாட்களை வீணாய் நகர்த்துவதில் அவளுக்கு விருப்பமில்லை. இறந்த காலம் என்று அவன் சொன்ன பின் அதை ஏன் நிகழ்காலத்தில் கொண்டு வந்து தங்களின் நிம்மதியைக் கெடுத்துக் கொள்ள வேண்டும். கண்டு கொள்ளப்படாமல் கூட இருந்தவளுக்கு கொண்டாட ஒருவன் கிடைத்தால் எப்படி இருக்கும் அவள் மனநிலை?. 'இது என் வாழ்க்கை. இவன் என்னவன்' என்று மனதில் பதிய வைத்தாள்.
இரவோடு கதவடைத்து இனிதாய் ஒரு யுத்தம் முடித்து பகலவனின் கதிர்வீச்சில் துயில் கலைந்தனர். காலம் காலமாக கணவனின் கைகவளைவுக்குள் அவன் நெஞ்சைத்தை மஞ்சமாக்கி துயில் கொள்ளும் பெண்களுக்கு எதிர்மறையாக இங்கோ வாட்டர் பெட் போல இல்லாளின் நெஞ்சமதில் முகம் புதைத்து தூங்கிக் கொண்டிருந்தான் அவளின் இல்லாளன். முதல் இரவு என்ற பயத்தோடும், பலரின் கேலிப் பார்வைகளுக்கு ஆளான தன் உடலின் பாகங்களை அவனிடம் காண்பிக்கும் போது எப்டி இருக்கும் அவன் மனநிலை என்ற சங்கடத்தோடும் உள்ளே நுழைந்தவளின் அழகை ஆராதித்து கூடலில் அவளின் காதில் கிசுகிசுக்க.. ஒரு அழகோவியம் இனிதே மலர்ந்தது மனையாளாக.. நேற்றைய இரவின் மிச்சம் முகத்தில் வானவில்லின் முதல் நிறத்தைத் தத்தெடுத்தது.. ஒன்றும் செய்யாத குழந்தை போல் உறங்கும் கணவனின் அழகை ரசித்தபடி படுத்திருந்தாள்..
தொடரும்..

Last edited: