அத்தியாயம் 3
தன்னை மறந்து கணவனை ரசித்துக் கொண்டிருந்தவள் நேரமாவதை உணர்ந்து அவனை விலக்கி விட்டு எழ முயற்சிக்க..
"ஹே பப்ளி.. எங்க போற? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம். நைட் ஓவர் டியூட்டி பார்த்து ஐ ஆம் டயர்டு" என்று இன்னும் இறுக்கி அணைத்து படுக்க..
"அய்யோ ஆதி.." என்று அவனின் வாயை மூடியவள், "வெளிப்படையா பேச வேண்டியது தான். அதுக்காக இப்படியா?"
"உன்கிட்ட தான பேசுறேன்.. பொண்டாட்டி கிட்ட பேசலாம் தப்பில்ல"
"அதுலாம் மெதுவா பேசலாம். டைம் ஆச்சு.. விடுங்க.. நான் போறேன்" என்று எழுந்தவளிடம்,
"பப்ளி.. நல்லா புசுபுசனு வாட்டர் பெட்ல படுக்குற மாதிரி தூங்கிட்டேன். நீ போய்ட்டா தூக்கம் போயிடுமே" என்று மூகத்தை சுருக்கியவனிடம், "தூக்கம் போச்சுனா எழுந்துச்சு வேலையை பாருங்க.." என்று அவள் குளியலறை ஓடி விட்டாள்.
மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா
அய்யோ பஞ்சுமிட்டாயா
சோஜாவா படுத்துக்குவேன்
உன் மடியில சாஞ்சி
சும்மா வாட்டமா இருக்குறியே
வாட்டர் பாக்கெட் மூஞ்சி
ஏய் காஞ்ச மொளகா போல
நான் இருக்குறேனே காஞ்சி
என் மனச உசுப்புரியே
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி..
என்று கொஞ்சம் சத்தமாவே பாட, குளியலறையில் இருந்தவள் சிரித்தபடி தலையிலடித்துக் கொண்டாள்.
குளித்து முடித்து வர பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் போல் படுத்திந்தவன் அவளைக் கண்டவுடன்..
உன்ன பாத்ததும் எனக்கு
ஏறுது கிக்கு ஹே
உன்ன பாத்ததும் எனக்கு
ஏறுது கிக்கு
நீ தாண்டி மாமனுக்கு ஏத்த
தக்காளி தொக்கு.. என்று பாடிவிட்டு,
"எக்ஸ்பிரிமெண்ட் பண்ணதுக்கப்புறம் இன்னைக்கு தான் பப்ளி இந்த பாட்டோட அர்த்தமே நல்லா புரியுது" என்று கண்ணடிக்க..
"அழிச்சாட்டியம் பண்றேங்க. உங்களை சமாளிக்கிறதே பெரிய வேலையா இருக்கும் போலயே. அத்தை எப்டி தான் இவ்ளோ நாள் உங்களை சமாளிச்சாங்களோ?. மொத போய் குளிங்க" என்று அவனை குளியலறைக்குள் தள்ளியவள் கிளம்பி வெளியே வந்தாள்.
கலையரசி கிச்சனில் உருட்டிக் கொண்டிருந்தார். "குட் மார்னிங் அத்தை" என்று போய் நிற்க.. அவர் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு, "வாமா முகிலா.. ப்ரேக்பாஸ்ட் செஞ்சுட்டேன். நீயும் ஆதியும் சாப்டுங்க" என்றார் சலிப்போடு.
"சரிங்கத்தை" என்றவள், "எல்லாரும் சாப்டாச்சா அத்தை?" என்று கேட்க..
"ம் நாங்களாம் சாப்டோம். நீயும் அவனும் தான்"
"எல்லாரும் சாப்டாச்சா?. ரெண்டு பேருக்கு எதுக்குத்தை இவளோ இட்லி செஞ்சு வச்சுருக்கேங்க?" என்று ஒருவேளை கல்யாணத்திற்கு வந்த சொந்தங்கள் இன்னும் வீட்டில் இருக்கிறார்களோ என்று சாதாரணமாக கேட்க..
"ம் நீ வீட்டுக்கு புதுசுல. எவளோ சாப்டுவனு தெரியாதுலமா. அதான்" என்று நக்கல் தொனியில் சொல்ல..
இட்லியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளின் கை அப்படியே நின்றது. அதுவரை இருந்த சந்தோஷமான மனநிலை போய் மனதில் சோகம் வந்து ஒட்டிக் கொண்டது. பெண் பார்க்க வந்த அன்றே அவருக்கு அவளை பிடிக்கவில்லை என்பது தெரியும். மகனின் மனைவியான பின்னும் அதே மனநிலையில் தான் இருப்பார் என்று அவள் அறியவில்லை. இன்று வெடுக்கென்று சொல்லவும் அவளின் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கி முகம் சுருங்கியது.
தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்த ஆதி, "வா முகிலா சாப்டலாம்.." என்று அவளையும் இழுத்து வந்து டேபிளில் அமர்ந்து ஹாட்பாக்ஸில் இருந்து இட்லியை எடுத்து வைத்துக் கொண்டே, "ம்மா எல்லாரும் சாப்டுருப்பேங்களே.. எதுக்கு இவ்ளோ செஞ்சு வச்சுருக்கேங்க?. யாராவது உங்க சொந்தக்காரங்க வர்றாங்களா?" என்று கேட்க..
க்ளுக் என்று முகிலா சிரிக்க மூக்குடைபட்டது போல் ஆன கலையரசிக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது.
"ம் உனக்கு கொழுப்புடா. என் சொந்தக்காரங்க என்ன அவ்வளவா சாப்டுறாங்க?" என்று கலையரசி முறைக்க..
"உண்மையை சொன்னா கோவம் வருதா மம்மி. விடு விடு ம்மா.. சும்மா.." என்று சிரித்து விட்டு சாப்பாட்டில் கவனம் வைத்தான்.
"சீக்கிரம் சாப்டு கிளம்பி இருங்க. முகிலா வீட்ல இருந்து விருந்துக்கு கூப்ட வருவாங்க. போய்ட்டு வாங்க" என்க.. இருவரும் சரி என்றனர்.
மதியம் போல் முகிலா வீட்டுக்குச் செல்ல அவளின் பெற்றவர்கள் சண்முகராஜ் மற்றும் கோகிலா சந்தோஷமாய் வரவேற்றனர். தன் ஒற்றை மகளுக்கு வரன் அமையாமல் கோவில் கோவிலாய் சுற்றியவர்களுக்கு பப்ளி பப்ளி என்று கொஞ்சும் ஜோவியலான மாப்பிள்ளை அமைந்தால் அவர்களின் மனநிலையை சொல்ல வேண்டுமா என்ன?. அதனால் தான் பத்து நாளில் திருமணம் என்றாலும் சரி என்று சம்மதித்து விட்டனர்.
அன்று பெண் பார்க்க வந்ததன்று அவ்வளவாய் வீட்டில் கண் பதிக்கவில்லை. இன்று வீடு முழுவதும் கலைநயப் பொருட்கள் அலங்கரித்ததை கண்டு, "வீடே கலைநயமா இருக்கு மாமா. கிராஃப்ட்ஸ் எல்லாம் அழகா இருக்கு.." என்று சொல்ல..
"எல்லாம் முகிலாவோட வேலை மாப்ள. எப்பவும் ஏதாவது பண்ணிட்டே இருப்பா அவள் ஃபேஷன் டிசைனிங் தான படிச்சா.."
"ஓ பப்ளி.. எல்லாம் உன்னோட வேலையா?. உள்ளே நிறைய திறமை இருக்கும் போலயே. வீடே ஓவியம் மாதிரி மாத்தி வச்சுருக்க.." என்று மனைவியை மெச்ச..
"இதுக்கே இப்டி சொன்னா எப்டி மாப்ள. அவ ரூம்ல போய் பாருங்க. இதை விட நிறைய வச்சுருக்கா.. ட்ரெஸ் கூட நல்லா டிசைன் பண்ணுவா"
"பின்ன ஏன் முகிலா நீ எந்த ஜாப்பும் ட்ரை பண்ணல?"
"எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல. நான் ரூம்ல இருக்கேன். நீங்க பேசிட்டு வாங்க" என்று சென்று விட்டாள். அவள் முகத்தில் வந்து போன சிறு மாறுதலை குறித்து வைத்துக் கொண்டான்.
"சின்ன வயசுல இருந்து அவ உடல்வாகை நினைச்சு அவ என்னைக்கும் கவலைப்பட்டதே இல்ல மாப்ள. நாங்களும் கவலைப்பட விட்டதில்லை. அவ ஜீன் அப்டி. என் ரெண்டாவது தங்கச்சி அப்படித்தான் இருப்பா. அவ மாதிரி முகிலா. அதுனால நாங்களும் குறையா பாக்கல. காலேஜ் செகன்ட் இயர் படிக்கிற வரைக்கும் நல்லா தான் இருந்தா. ஒருநாள் காலேஜ்ல இருந்து ரொம்ப கோவமா அழுதுட்டே வந்தா.. அவ உடல்பருமனை வச்சு யாரோ கிண்டல் பண்ணாங்கனு சொன்னா. ஆனா அதுக்குலாம் அவ பீல் பண்ற ஆளே இல்ல. ரெண்டு நாளா காலேஜ் கூட போகாம சோகமா இருந்தா. அதுக்கப்புறம் அவளே நார்மல் ஆகிட்டா. பழையபடி காலேஜ் போனா. காலேஜ் எப்படியோ முடிச்சுட்டா. ஆனா வேலைக்குப் போக விருப்பம் இல்லனு வீட்லயே இருந்துட்டா. நானும் ஒத்தப் பொண்ணு வேலைக்குப் போக வேண்டாம்னு விட்டுட்டேன். வீடே கதினு இருப்பா. அப்பப்போ ஏதாவது டிசைன் பண்ணுவா. ஆனா யார்கிட்டயும் காண்பிக்க மாட்டா. அவ பீரோலயே போட்டு பூட்டி வச்சுப்பா. எங்க பொண்ணை நினைச்சு கவலைப்பட ஆரம்பிச்சது கல்யாணத்துக்கு வரன் பார்க்கும் போது தான். எல்லாருக்கும் அவ உடல்வாகு மட்டுமே தான் தெரிஞ்சுச்சு. அவ தைரியமான பொண்ணு. எல்லாத்தையும் புரிஞ்சு நடந்துப்பா. மனசளவுல குழந்தை தான். நல்லா பாத்துக்கோங்க மாப்ள" என்று வேண்டுகோள் வைக்க.. அவருக்கு ஆறுதலாய் பதில் சொன்னவன் முகிலா பற்றிய சிந்தனையில் அமர்ந்தான்.
எவ்வளவு நேரம் மாமனாருடன் கதையடிப்பது உள்ளே சென்ற பப்ளியைக் காண வந்தவன், "ஹே பப்ளி.. புருஷன் ஒருத்தனை தனியா விட்டுட்டு வந்தியே. என்ன செய்றான்னு பார்த்தியா?" என்று வர..
"நீங்க அப்பா கூட சின்சியரா பேசிட்டு இருந்தேங்க. அதான் டிஸ்டர்ப் பண்ணல. நீங்க என்ன சின்னப் புள்ளையா தனியா விட்டுட்டு பயந்து போய் இருக்க.."
"சின்னப்புள்ள இல்ல தான். ஆனா புது மாப்பிள்ளையாச்சே. பொண்டாட்டி முந்தானைய புடிச்சுட்டே அலைஞ்சா தான புது மாப்பிள்ளை பீல் இருக்கும்" என்றவன் புருவம் உயர்த்த..
"கிரேஸி.." என்று புன்னகை செய்தாள் நாடியில் குழி விழ..
அவள் ரூமை ஆராய ஆரம்பித்தான்.
"இதான் நம்ம ரூம்மா?. ரொம்ப ரசனையா இருக்கு பப்ளி உன்னை மாதிரி.." என்று ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கேட்க.. என்ன, ஏது, எப்போது செய்தாள், எப்படி செய்தாள் என்று கண்களில் ஒளி மின்ன சொல்ல.. அவள் கண்களில் தெரிந்த ஆர்வத்தை குறித்துக் கொண்டவன், 'இவ்வளவு ஆர்வம் இருப்பவள் எதற்கு இதை அப்படியே விட்டாள்?. முயற்சியாது செய்திருக்கலாமே.. இதுல ஏதாவது விஷயம் இருக்குமா?' என்று தோன்றியது.
இரண்டு நாட்கள் விருந்தை முடித்தவர்கள் வீடு வந்து சேர்ந்தனர். அவசர கல்யாணம் என்பதால் நிறைய நாள் விடுப்பு எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு வாரம் தான் ஆதிக்கு லீவ் கொடுத்தார்கள். அவன் ஒரு மெஷின் கன்ட்ரோலரா ஒரு சின்ன கம்பெனில வேலை பாக்குறான். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சுட்டு ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தாலும், 'முழுநேரமும் கம்யூட்டரில் உட்கார எனக்கு பிடிக்காது' என்று அது வேண்டாம் என்று உதறி விட்டு அவன் படித்த படிப்பிற்கேற்ற வேலையிலே அமர்ந்து விட்டான். சம்பளம் குறைவு தான். ஆனால் அவனுக்கு நிறைவான வேலை. இன்னும் இரண்டு நாளில் வேலையில் ஜாயின் பண்ண வேண்டும். அதற்குள் நண்பர்கள் மேரேஜ் ட்ரீட் கேட்க.. சரி என்று ஒப்புக் கொண்டான்.
முகிலாவிடம் அதுபற்றி சொன்னவன், "முகி.. நாம ரெண்டு பேரும் நாளைக்கு என்னோட ப்ரண்ட்ஸ் ட்ரீட்க்கு போறோம்"
"நானுமா?. நான் எதுக்கு?" என்று தயங்க..
"மேடம் இது பேஜ்லர் பார்ட்டி இல்ல நான் மட்டும் போக. இப்போ வீ ஆர் மேரிட். நீ இல்லாம எப்டி போக முடியும்?"
"இல்ல ஆதி.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு ப்ளீஸ்" என்று விழிகளால் கெஞ்ச..
"நான் இருக்கும் போது என் பப்ளிக்கு என்ன தயக்கம். நாம போறோம். டாட்" என்றவன் அவளின் தயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான். ஆனால் அவளுக்கோ உள்ளுக்குள் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.
'பெருந்தன்மையாக ஆதி என்னை மனதார ஏற்றுக் கொள்ளலாம். எல்லாரும் அப்படி இருப்பாங்களா? யாராவது கிண்டல் பண்ணா?' என்றவளுக்கு, 'மத்தவங்க என்ன நினைப்பாங்கனு நீ ஏன் யோசிக்கிற? நீ உன் புருஷனுக்காக போற. உன் ஆதி கேட்டு நீ போகாம இருந்தா நல்லா இருக்குமா?' என்று மனசாட்சி எடுத்துரைக்க..
'ஆதிக்காக தான் போக வேண்டாம்னு யோசிக்கிறேன். கேலியும் கிண்டலும் எனக்கு புதிதில்லை. ஆனா ஆதிக்கு?. என்னை வச்சு அவருக்கு ஒரு அசிங்கம் வந்துச்சுனா?'.
'ஆதி உன்னை எப்டி பாக்குறானு உனக்கு இந்த அஞ்சு நாளைல தெரிஞ்சுருக்கும். அவன் உன் உடலை ஒரு குறையாவே நினைக்கல. நீ இப்டி நினைக்குறது தெரிஞ்சா ஆதி பீல் பண்ணுவான்'..
'ஆமா பீல் பண்ணுவாங்க. அதுக்காக தான் சரினு சொன்னேன். ஆதிக்காக.. என்னைக் கொண்டாடுற மனுஷனுக்காக என்ன வேணாலும் பண்ணலாம்' என்றவள் கொஞ்சம் தைரியமாக இருந்தாள்.
மறுநாள் பல யோசனைகளுக்குப் பின் ரெடியானவள் ட்ரெஷிங் டேபிள் முன் தலைவாரிக் கொண்டிருந்தவனின் அருகில் நின்றவள், "நான் நல்லா இருக்கேனா?. இந்த ட்ரஸ் ஓகே வா?. உங்க பக்கத்துல நான் நல்லா இல்லேல.." என்று தலைகுனிந்தவளின் முகத்தில் சோகம் வடிய..
"ஆமா நல்லா இல்ல.." என்று பட்டென்று சொல்ல.. விழுக்கென்று நிமிர்ந்தவளின் கண்ணில் நீர் துளிர்த்தது.
"ஹே பப்ளி.. எதுக்கு இப்போ பீல் பண்ற?. சுடிதார் நல்லா தான் இருக்கு. ஆனா உனக்கு சுடிதாரை விட சேரி சூப்பரா இருக்கு. சேரில சும்மா மார்ஷ்மெல்லோ மாதிரி கும்முனு இருப்ப. அப்படியே சாப்டலாம்னு தோனும்" என்று ஒரு மார்க்கமாக சொல்ல..
"போங்க ஆதி. நீங்க பேட் பாய்.." என்று அவன் நெஞ்சில் சாய..
"எனக்காக சேரி கட்டுறியா ப்ளீஸ். கம்பர்ட்ஆ இல்லனா வேண்டாம்" என்க.. அதற்கு மேல் அவனின் ஆசையை நிறைவேற்றாமல் இருப்பாளா?. உடனே மாற்றிக் கொண்டாள்.
அவளை இழுத்து அணைத்து தோளில் கைபோட்டுக் கொண்டவன், "க்யூட்ஆ இருக்க பப்ளி.. இந்த கேர் ஸ்டைல் மட்டும் கொஞ்சம் சேஞ்ச் பண்ணி ஃப்ரீ கேர் விடு.." என்று அவளுக்கு அவனே உதவி செய்ய.. அவன் அருகில் தேவதை போல் உணர்ந்தாள்.
"கியூட் டி பப்ளி.." என்று அவள் நாடிக் குழியில் முத்தமிட்டவன், "இப்போ ஓகே போலாமா?" என்று அவளின் கைகோர்த்து அழைத்துச் சென்றான்.
ஹோட்டலில் நண்பர்கள் அனைவரும் வாழ்த்து சொல்ல, சாப்பிட ஆரம்பித்தனர். பெண் தோழிகளும் வந்திருந்தனர். சிலர் முகியிடம் சகஜமாக பேச.. சிலர் அவளின் உடல்வாகை கண்டு கேலியாய் இதழ் வளைத்தனர். 'இவன் எப்டி இவளைக் கல்யாணம் பண்ணான்?. இவனுக்கு பொண்ணு கிடைக்கலையா இல்ல இவ லக்கியா?' என்று நினைத்தவர்கள் அவன் அருகில் அவன் மனைவி என்ற ஒரு ஜீவன் இருப்பது போல் கூட கண்டு கொள்ளவில்லை. அவன் நண்பர்களுடன் ஐக்கியமாகி விட்டான். அவள் தான் சிலரின் கேலிப் பார்வையில் சாப்பிட முடியாமல் சாப்பாட்டை அளந்து கொண்டிருந்தாள்.
"முகி.. உனக்கு இது பிடிக்கலையா?. இந்த டிஷ் சாப்பிட்டு பாரு. இது உனக்கு பிடிக்கும். டேஸ்ட் பண்ணி பாரு.." என்று அவளுக்கு ஊட்டி விட்டு அவளை அனைவரின் முன்னிலையிலும் நெளிய வைத்தான்.
பயந்து பயந்தே இருந்தவள் சாப்பிட்டு விட்டு கை கழுவி விட்டு வரும் போது கால் தடுக்கி விட, "ஹே முகி.. பாத்துமா.." என்றவன் அவளின் கைப்பிடித்து நிறுத்தி, "இரு.." என்று கீழே அமர்ந்து கலைந்திருந்த சேலை மடிப்பை எடுத்து விட.. சுற்றி இருந்த நண்பர் பட்டாளங்கள் 'ஹோ'வென கோஷம் போட்டனர்.
"டேய்.. சும்மா இருங்கடா" என்றவனை அவள் காதலாய் கண்டவள், 'A heart with zero ego is a true blessing' என்று எங்கோ படித்த வாக்கியம் அதற்கு அவனை ஒப்பிட்டது.
அவள் குண்டுக் கண்கள் விரிய அவனை ரசிக்க, "ஹே பப்ளி.. நான் ரொம்ப நல்லவன்லாம் இல்ல. இப்டியே பார்த்தேனா எக்குத்தப்பாக ஏதாவது பண்ணிடுவேன்." என்று காதருகில் அவனின் மூச்சுக்காற்று பட பேச, "கிரேஸி பையா.." என்று சிரித்தவள், 'காதலில் தோற்று வந்தவன் மீந்ததை கொடுக்கவில்லை. மொத்த அன்பையும் அவளுக்கு கொடுக்கிறான்' என்பது அவளுக்கு தெளிவாய் விளங்கியது.
நேற்று அவனுக்கு வாட்ஸப் குரூப்பில் திருமண வாழ்த்து சொல்லும் போது சிலர் வாழ்த்தோடு இலவச இணைப்பாய் ஒரு கேலி ஸ்மைலியையும் போட்டிருந்தவர்களுக்கு இந்த செயல் தக்க பதிலாக இருக்கும் என்று நம்பினான். நேற்றே அவனுக்கு புரிந்து போனது எக்ஸ்ட்ரா இணைப்பாக இந்த ஓப்பன் மௌத் ஸ்மைலி எதற்கு என்று. அந்த இடத்திலே கேட்டு விவாதித்து தன் மனைவியை கேலிப்பொருளாக்க விரும்பாதவன் சிலருக்கு செயல் மூலமே நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தவன் செயலில் காட்டி அவர்களின் கேலி பார்வைக்கு, இவள் என்னவள்' என்று ஒரு முற்றுப்புள்ளி வைத்தான். தனக்கும் நல்ல மனது இருக்காது. யாரோ ஒருவன் பெருந்தன்மையாய் இருந்தாலும் அவனையும் இந்த சமூகம் கேலி செய்து நல்லவனாய் இருக்க விடாது.
தொடரும்..