அத்தியாயம் 5
ஆதி வேலை செய்து கொண்டிருந்த போது தெரியாமல் மெஷினில் கை விட இரு விரல்கள் கட்டாகி விட்டது. நல்லவேளை முழுவதும் கட்டாகாமல் நூலிழைத் தொங்கிக் கொண்டிருந்ததால் உடனே மருத்துவமனை அழைத்து வந்ததால் மருத்துவர்கள் விரல்களை சேர்த்து தையல் போடும் முயற்சியில் ஆஃப்ரேஷன் தியேட்டரில் இருக்கின்றனர்.
மொத்தக் குடும்பமும் மருத்துவமனையில் குவிந்திருந்தது. ஆதிக்கு உள்ளே ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருந்தது. முகிக்கு சுற்றம் நடப்பது எதுவும் மூளையில் பதியவில்லை. கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. ஆதியின் நிலை என்னவென்று தெரியும் வரை அவள் ஜீவன் அவளிடம் இருக்காது.
கலையரசி ஒருபக்கம் தலையிலடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார். அருணாச்சலமும் மித்ரனும் ஒருபக்கம் மருத்துவர் வந்து சொல்லும் பதிலுக்காக சோகமாக காத்திருந்தனர். ஆதியுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர் மருத்துவமனையில் இருந்தார்.
அவரிடம், "என்னாச்சு தம்பி?. எப்டி இப்டி ஆச்சு?. இதுவரைக்கும் இந்த மாதிரி சின்னக் காயம் கூட ஆனது இல்ல?" என்று அருணாச்சலம் கண்கலங்கினார்.
"எப்பவும் கவனமா தான் வேலை செய்வான் ஆதி. இன்னைக்கு ஏதோ கவனக்குறைவால இப்டி ஆகிடுச்சுங்க. நிறைய ரத்தம் போறதுக்குள்ள ஹாஸ்பிட்டல் கூப்டு வந்துட்டோம். டாக்டரும் விரலை ஒட்ட வச்சுரலாம்னு சொல்லிருக்காங்க. ஒன்னும் ஆகாது கவலைப்படாதிங்க" என்று ஆறுதலளித்தார்.
இருந்தும் பெற்ற மனம் கேட்குமா?. அழுது கொண்டு தான் இருந்தனர்.
"இதுவரைக்கும் எம்புள்ள இப்டி ஹாஸ்பிட்டலை வந்து படுத்ததே இல்ல. என்ன நேரமோ என்னமோ இப்டி வந்து கெடக்குறான்?. சொல் பேச்சை எங்க கேட்டான். இந்த மெக்கானிக்கல் வேலை வேண்டாம்னு சொன்னோம் கேட்கல. கல்யாணம் உடனே பண்ணனும்னு குதிச்சு பண்ணான். இப்போ இப்படி வந்து கிடக்குறான். ஏதாவது பெத்தவங்க சொல்றதை கேட்டா தான.." என்று கலையரசி ஒப்பாரி வைக்க..
அவரின் வார்த்தைகள் மனம் வெந்து போய் அமர்ந்திருந்தவளின் மனதை மேலும் காயப்படுத்தியது. ஏற்கனவே அவர் மகனுக்கு பொருத்தமில்லாதவள் என்றதோடு ராசியில்லாதவள் என்பதையும் சேர்த்துக் கொண்டார். அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளும் நிலையிலில்லை அவள். அவள் எண்ணம் முழுதும் ஆதியைச் சுற்றியே இருந்தது. கேட்காமல் துருதுருவென அவளின் மேனியில் ஊறும் அவன் விரல்களின் ஞாபகங்களில் கண்ணீர் பெருக்கடுத்தது முகிக்கு. எப்போதடா அவனைக் காண்போம் என்று மனம் அவனின் முகத்தினை காண ஏங்கிக் கொண்டிருந்தது.
டாக்டர் ட்ரீட்மெண்ட் முடித்து வெளியே வர, என்ன ஏதென்று கேட்க, "ஒன்னும் பிரச்சினை இல்லை. விரல் அட்டாச் பண்ணியாச்சு. இப்போ மயக்கத்துல இருக்காங்க. ஒருத்தர் மட்டும் உள்ளே போய் டிஸ்டர்ப் பண்ணாம பாத்துட்டு வாங்க" என்று அவர் சென்று விட்டார்.
"நான் போய் என் பையனை பாத்துட்டு வர்றேன்" என்று யார் பதிலையும் எதிர்பாராமல் உள்ளே சென்றார் கலையரசி. இந்த அம்மாக்களுக்கு மட்டும் திருமணம் ஆனாலும் அவன் மனைவியை விட தனக்குத் தான் உரிமை அதிகம் என்று எண்ணிக் கொள்வது. அதுவும் மூத்தப் பிள்ளையாக இருந்தால் சொல்லத் தேவையேயில்லை. ஆனால் தன் கணவன் என்று வரும் போது மட்டும் எல்லாம் உல்டாக நடக்க வேண்டும். சரி இது சமூகப் பிரச்சினை. நம்ம கதைக்கு வருவோம்.
அனஸ்தீஸ்யா மற்றும் வலி நிவாரணி கொடுத்ததால் ஆதி இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தான். கலையரசி வெளியே வந்தவுடன் முகிலா சென்றாள் உள்ளே.
சட்டையில் ஆங்காங்கே ரத்தக் கரையோடு படுத்திருந்தவனைக் காண காண உள்ளமெல்லாம் வலித்தது. 'ஓவென' அவன் மார்பிலே புதைந்து கத்தி அழ வேண்டும் போல் இருந்தது. அவனைத் தொந்தரவு செய்ய விரும்பாதவள் வாயை மூடிக் கொண்டு அழுதாள்.
அவன் கண் திறக்கும் நேரத்திற்காக காத்திருந்த முகியை, "நீ வீட்ல போய் ஆதிக்கு தேவையான ட்ரெஸ்லாம் எடுத்துட்டு அவன் சாப்டுற மாதிரி டாக்டர் சொன்னபடி செஞ்சு எடுத்துட்டு வா.." என்று விரட்டினார் கலை. நான் போறேன்மா என்று சொன்ன மித்ரனை, "நீ சமைச்சு எடுத்துட்டு வந்துருவியா?. உனக்கு விவரம் தெரியாது. அமைதியா இரு" என்று தடுத்து முகியை அனுப்பி வைத்தார். அவளுக்கு அவன் கண்திறந்து அவனின் ஒரு வார்த்தையாவது கேட்டு விட்டுப் போகலாம் என்றிருந்தது. வேறு வழியின்றி சென்றாள்.
ஆதி கண் விழிக்கும் போது அனைவரும் உள்ளே நின்றிருந்தனர். "ஏன்டா பாத்து பண்ண மாட்டியாடா?. இதுக்குத் தான் செவனேனு ஐடி கம்பெனில போய் ஜாயின் பண்ணுனு சொன்னேன். இதுலாம் தேவையா?. நல்லவேளை இத்தோட போச்சு வேற ஏதாச்சும் ஒன்னுனா என்னடா பண்ணுறது" என்று கலை அழ.
"ப்ச் அதான் ஒன்னும் பெரிசா ஆகலேல. இப்போ எதுக்குமா ஒப்பாரி வைக்குற.." என்றவன் விழிகள் அவன் பப்ளியைத் தேடியது.
"முகி எங்க?" என்றான். ஒருவேளை தனக்கு இப்டி நடந்ததால் தன்னை பார்க்க வராமல் இருக்கிறாளோ என்ற சந்தேகம் அவனுக்கு.
"அம்மா தான் வீட்டுக்கு அனுப்பிருக்காங்க" என்று மித்ரன் உண்மையை போட்டு உடைக்க..
"ஆமா நான் தான் அனுப்புனேன். உனக்கு ட்ரெஸ் சாப்பாடு எடுத்துட்டு வர போயிருக்கா" என்று சிடுசிடுத்தார்.
'ஏன் அதை மித்ரன் எடுத்துட்டு வர மாட்டானா?. நான் கண்ணு முழிக்குற வரைக்கும் வெயிட் பண்ண மாட்டாளா?. அம்மா சொன்னதுக்காக போனாளா இல்லை என்னை பார்க்க விருப்பம் இல்லாம போனாளா?. யார் சொன்னாலும் இவ போயிருக்கலாமா?' என்று கோவமாக இருந்தான் ஆதி. என்ன தான் தாய் தந்தை என்று பாசம் காட்டும் அத்தனை பேர் உடன் இருந்தாலும் அவனுக்கு ஒன்று என்றால் முதலில் பாதிக்கப்படப் போவது தாரம் தானே. இப்போது அவளால் அவனுக்கு ஆறுதல் தேவைப்படுவதை விட அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தான் அவன் விழிகள் அவளை எதிர்பார்த்தது. ஆனால் அவன் பப்ளி இப்டி செய்வாள் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.
கை வலியை விட அவன் பப்ளியின் மனநிலை என்ன என்று தெரியாமல் தான் அவனுக்கு மனம் வலித்தது. இதுவரை இந்த மாதிரி மனநிலையிலெல்லாம் இருந்ததில்லை. ஏதாவது ஒரு விஷயத்தை மனதில் போட்டு உழன்று கொண்டிருக்கும் ரகமே இல்லை அவன். இப்படிக் கையை வைத்துக் கொண்டு சுற்றி நான்கு பேர் அவனைக் கவனித்துக் கொண்டு.. இதெல்லாம் கனவிலும் நினைத்ததில்லை. எல்லாம் நேரம் என்று முதன்முறை நேரத்தின் மேல் பழி போட...
அப்போது தான், "எல்லாம் நேரம்.. இந்த வேலையே வேண்டாம்னு சொன்னா கேட்கல.. அவசர அவசரமா கல்யாணத்தை பண்ணி வைக்கச் சொன்ன.. அதுலாம் ஒன்னுக்கு பத்து பொண்ணா பார்த்து எல்லாத்துக்கும் நேரம் காலம் பார்த்து நடந்தா நல்லா இருந்திருக்கும். இருக்குற தேதில கல்யாணத்தை முடிக்க வச்ச. எந்த நேரத்துல கல்யாணம் பண்ணியோ இப்டி கொண்டு வந்து விட்டுருக்கு.." என்று கலையரசி புலம்ப..
அவனுக்கு சுள்ளென்று கோவம் வர, "ம்மா.. என்ன வார்த்தை பேசிட்டு இருக்க?. கல்யாணமான நேரம் சரியில்லை அது இதுனுட்டு. அதான் ஒன்னுக்கு நாலு ஜோசியரா பாத்து தான தேதி குறிச்சு கல்யாணம் பண்ண?. நீ என் கல்யாணமான நேரம் சரியில்லைனு சொல்றியா இல்லை முகியைக் கல்யாணம் பண்ணது சரியில்லனு சொல்றியா?.." என்று எரிந்து விழுந்தான்.
"நல்லா கேளுணே. இப்படிதான் அண்ணி இருக்கும் போதும் பேசுனாங்க. அதுலே அவங்க முகம் வாடிப் போச்சு. அண்ணியை உன்னை பாக்க கூட விடாம வீட்டுக்கு தொரத்தி விட்டாங்க" என்று மித்ரன் போட்டு விட..
"ஆமா நீ அவனுக்கு ஒத்து ஊது. நானென்ன அவளை விரட்டியா விட்டேன். புருஷனுக்கு எல்லாமே அவ தான பண்ணனும். வீட்ல வேறு யாரு இருக்கா செய்றதுக்கு?. நீ போய் சமைச்சு எடுத்துட்டு வந்துருவியா?. கையில புண்ணு ஆறுற வரைக்கும் பாத்து பக்குவமா தான் சாப்பாடு குடுக்கனும். பெத்தவளை விட அவ உசத்தியா போச்சா உனக்கு?. நான் வந்து உன்னை பாக்கக்கூடாதாடா ஆதி?" என்று சேலையில் கண்ணீரைச் சிந்த..
"அய்யோ மா.. ஏற்கனவே கை வலி உயிர் போகுது. இதுல நீ வேற உயிரை எடுக்காத. செவனேனு இருமா" என்று சுள்ளென்று விழுந்தான்.
"கலை.. கம்முனு இருக்க மாட்டியா நீயி?. அவனே கையில அடிபட்டு வலில படுத்துருக்கான். ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்க. மொத வாங்க எல்லாரும் வெளில. அவன் தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்" என்று அருணாச்சலம் அவரை வெளியே இழுத்துக் கொண்டு போனார்.
எரிச்சலாய் இருந்தது ஆதிக்கு. 'கேஷீவலா இருக்குற நமக்கே இவ்வளவு கடுப்பா இருக்கு. அதான் கல்யாணமான ஆம்பளைங்களாம் பொண்டாட்டிக்கும் அம்மாவுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு திணறுறாங்க. நல்லவேளை அம்மாவா நானானு கிடுக்குப்பிடியா கேட்குற பொண்டாட்டி நமக்கு அமையல. நம்ம பப்ளி குட் கேர்ள். ஆனா என்னை பார்க்கக்கூட தோனாம எப்டி அவ வீட்டுக்குப் போகலாம்?. புருஷன் மேல அவ்வளவு தான் லவ்வா?.. வரட்டும்' என்று அவள் வருகைக்காக காத்திருந்தவன் வலிக்கு இன்னொரு மருந்து டிரிப்ஸில் ஏற்ற அப்படியே வலி மறந்து கண்ணயர்ந்தான்.
மூடியிருந்த விழிகளுக்குள் கருமணிகள் அங்குமிங்கும் உருள இமைகளுக்கிடையில் அவனின் பப்ளி அழுது வடிந்த முகம் தெரிய பட்டென்று கண் விழித்தான் ஆதி. அவனின் பப்ளி அவன் டிரிப்ஸ் ஏறிய கையை அவளின் ஒரு கை மேல் வைத்து பெட்டில் தலைவைத்து சேரில் அமர்ந்தபடி துயில் கொண்டிருந்தாள்.
அவளின் வெண்மேக முகம் அழுது வடித்ததில் சிவந்து கண் பட்டையெல்லாம் வீங்கிப் போய் இருந்தது. தூங்கிய முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது. தன்னையறியாமல் மெதுவாய் டிரிப்ஸ் ஏறிய கையால் அவள் தலையை வருட, அதில் பட்டென்று கண்விழித்தவள் தலை நிமிர அவன் டிரிப்ஸ் ஏறிய கை உயர்ந்ததில், "ஸ் ஆ" என்றான் வலியில்.
"அய்யோ சாரிங்க.. ரொம்ப வலிக்குதா?. இப்போ பரவாயில்லையா?. ரொம்ப வலிக்குதா?. டாக்டர் கூப்பிடவா?" என்று பதற..
"வேண்டாம்" என்று திரும்பிக் கொண்டான். அவனின் கோவம் அவளுக்குப் புரியவில்லை.
"டைம் என்ன? பத்து மணியாச்சா?. இவ்வளவு நேரமா தூங்கிட்டேன். சே.. இருங்க உங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறேன்" என்றவள் இரவுணவை எடுத்து வைக்க..
"அம்மா அப்பாலாம் எங்க?"
"மாமா தான் என்னை மட்டும் இருக்கச் சொல்லிட்டு அத்தையை வீட்டுக்கு கூப்டு போயிட்டாங்க"
"நைட் நீ எதுக்கு ஸ்டே பண்ண?. அப்பா இல்லை மித்ரன் யாராவது இருக்கலாம்ல?"
"ஏன் நான் இருந்தா என்ன?. நான் உங்களை பாத்துக்க மாட்டேனா? அவ்ளோ விவரம் இல்லாமலா இருக்கேன்" என்று மாமியாரிடம் வாங்கிய வசவுகளின் விளைவுகளை கணவனிடம் இறக்க..
"புருஷன் மேல அக்கறை இருக்குறவ தான் எப்போடா கண்ணு முழிப்பேன்னு பக்கத்துலே உட்கார்ந்து காத்துருந்தியாக்கும்.." என்று முகத்தை தூக்கி வைக்க..
"அப்டியே நீங்க பொண்டாட்டியை கானும்னு தேடுன மாதிரி தான்.." என்று இவள் சலித்துக் கொள்ள..
"உன்னைத் தேடாம தான் அப்பா உன்னை இங்க இருக்க சொல்லிட்டு போயிருக்காரா?. நல்லவேளை என் மனசு அவருக்காது புரிஞ்சுருக்கே. யார் சொன்னாலும் விட்டுப் போய்டுவியா?. கண்ணு முழிச்சதும் உன்னைத் தான் தேடுனேன். ஒருவேளை எனக்கு இப்படி ஆனதால இவனால இனிமே வேலைக்குப் போக முடியுமா?. சம்பாதிப்பானானு உன் வாழ்க்கையை நினைச்சு உனக்கு பயம் வந்துருச்சோனு நினைச்சுட்டேன்" என்றவனை முடிந்த மட்டும் முறைத்தாள்.
"ஏன் உங்க எக்ஸ் அதுக்கு தான் உங்களை விட்டுப் போனாளா?. அதுனால தான் நானும் அப்படி இருப்பேன்னு நினைச்சுட்டேங்க?" என்று விழிகள் கடுமையைக் கூட்டிக் கேட்க..
'அய்யயோ கரெக்டா கண்டுபிடிச்சுட்டா.. தவளை தன் வாயால் கெடும் என்பது இதுதானா?' என்று திருதிருனு முழிக்க..
"அப்போ அது தான் உண்மை?.." என்று இடுப்பில் கை வைத்து மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க..
"இங்கரு இது ஹாஸ்பிட்டல்டி இப்படிலாம் நீ நின்னா எனக்கு வேற மூடாகிடும். மூஞ்சியை பாக்க சகிக்கல. எதுக்குடி இப்டி அழுது வடிச்சுருக்க.. நானென்ன செத்தா போயிட்டேன்" என்க..
"ஆதிஇஇ.." என்று அதிர்ந்தவள் அவசரமாக அவன் வாயை கையால் மூட.. "என்ன வார்த்தை சொல்றேங்க. ஏற்கனவே உங்கம்மா என்னால தான் உங்களுக்கு இப்டி ஆகிடுச்சுனு பேசுறாங்க. இப்படிலாம் பேசி என்னைக் காயப்படுத்தாதீங்க. உங்களை மாதிரி என்னால எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துக்க முடியாது. உள்ளுக்குள்ள ரணமா இருக்கு. கொஞ்சம் விட்டா விரலே போயிடுக்கும்னு அந்த அண்ணா சொன்னாங்க. உங்களை மாதிரி டேக் இட் ஈஸியா என்னால எடுத்துக்க முடியாது. ப்ளீஸ் இனிமே இப்படி பேசாதீங்க" என்று அழுதவளின் கண்ணீரைத் துடைத்தவன்..
"ஹே பப்ளிமா. ஒரு பேச்சுக்கு சொன்னேன்டி. யார் சொன்னாலும் என்னை விட்டுப் போய்டுவியா?. கண்ணு முழிச்சதும் உன்னை எவ்ளோ தேடுனேன் தெரியுமா?. நீ பீல் பண்ணுவனு தெரியும். உனக்கு ஆறுதல் சொல்லத் தான்டி உன்னேத் தேடுனேன்" என்றவன் எப்போதும் அதிசயப் பிறவியாக தெரிந்தான். விரல்கள் உடைந்து ஒட்டுப் போட்டு வைத்திருக்க அவன் இவளுக்கு ஆறுதல் சொல்கிறானாம்.
"இந்தாங்க சாப்டுங்க.." என்று அவளே அவனுக்கு ஊட்டி விட..
"கை ஒருபக்கம் வலிச்சாலும் இப்டி குட்டிப்புள்ளய கவனிக்குற மாதிரி கவனிக்கிறது ஒரு மாதிரி பீல்லா இருக்கு பப்ளி" என்று சிரித்தபடி அவள் ஊட்டுவதை வாங்கிக் கொண்டிருந்தான்.
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு, "கொஞ்ச நாளைக்கு அந்த கைக்கு ரொம்ப அதிகமான வேலை குடுக்கக் கூடாது. கொஞ்சம் பிரஷ்ஷர் போட்டாலும் பெயின் இருக்கத்தான் செய்யும். ரொம்ப பெயின் இருந்தா ஹாஸ்பிட்டல் வாங்க" என்று வீட்டிற்கு அனுப்பி வைத்தார் மருத்துவர்.
தொடரும்.