அத்தியாயம் 7
"பேசாம படுடி. தூக்கம் வருது" என்ற ஆதியின் குரலில் ஒருநொடி உள்ளுக்குள் அதிர்ந்து மகிழ்ந்தாலும் மறு நொடியே கோவம் தலை தூக்க..
"விடுங்க.. விடுங்க என்னை. உங்களை யாரு இங்க வர சொன்னா?. என்னை தான் பிடிக்கலனு சொல்லிட்டேங்கள. அப்புறம் எதுக்கு என்கிட்ட வர்றேங்க. போங்க இங்கிருந்து" என்று அவன் பிடியில் இருந்து உருவிக் கொள்ள முயல.. முயற்சி மட்டும் தான் செய்தாள். மற்றபடி இரண்டு நாட்கள் பிரிவின் ஏக்கம் அவளுக்கும் இருக்க தான் செய்தது. அவனின் நெருக்கம் வேண்டுமென்று மனமும் உடலும் கேட்டது.
"உன்னை பிடிக்கலனு நான் எப்போ சொன்னேன்?. நீயா கற்பனை பண்ணிக்கிட்டா நான் பொறுப்பாக முடியாது. ரெண்டு நாளு தூக்கம் இல்ல பப்ளி. அலைச்சல் வேற. ரொம்ப டயர்டா இருக்கு. ப்ளீஸ் எனக்கு தூங்கனும். அமைதியா படு. மாமியார் வீடு தான மெதுவா லஞ்ச்க்கு எழுந்துக்கலாம்" என்றவனை கொலைவெறியில் முறைத்துத் தள்ளினாள்.
"நீங்க என்ன மாமியார் வீட்டுக்கு விருந்துக்கா வந்துருக்கேங்க?. நல்லா தூங்கி எழுந்துச்சு மதியம் கறி விருந்து சாப்பிட.."
"ஏன் இப்போ கறிவிருந்து கேட்டா உங்கப்பா போட மாட்டாரா?. நாம இன்னும் புதுமண ஜோடிங்க தான்" என்று இன்னும் இறுக்க.
"நான் கோச்சுக்கிட்டு இங்க வந்திருக்கேன். அதாவது ஞாபகம் இருக்கா?. உங்களுக்கு தூக்கம் வந்தா உங்க வீட்ல போய் தூங்குங்க. நான் யாரு உங்களுக்கு?. டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டு உங்க காதலியை கரம் பிடிப்பேங்களோ இல்ல உங்களுக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணுவேங்களோ.. அது உங்க இஷ்டம்" என்று முடிக்கவில்லை..
நெஞ்சில் சாய்ந்து கண் மூடியிருந்தவன், அவள் கன்னமிரண்டும் வலிக்கும் அளவுக்கு இறுக்கிப் பிடித்தவன், "இன்னொரு தடவை கிறுக்குத்தனமா இப்டி பேசுன.. என்ன பண்ணுவேனு எனக்கேத் தெரியாது. டைவர்ஸ் பண்ற அளவுக்கு என்னடி நடந்துச்சு?. நான் சொன்னேனா நீ நல்லா இல்லனு?. வாழ்வோ சாவோ கடைசி வரைக்கும் உன்கூட தான். ஏதாவது லூசுத்தனமா பண்ண.." என்று கடுங்கோவத்தில் கத்தியவன், "போடி.." என்று அவளை விட்டு விலகி அருகில் குப்புற கவிழ்ந்து படுத்து விட்டான்.
அவள் தான் அவன் கன்னத்தைப் பிடித்த வேகத்திலும் அவனின் வார்த்தை வீரியத்திலும் மிரண்டு போய் இருந்தாள். 'அதிகமாய் பேசிவிட்டோமோ?' என்று தோன்றினாலும், 'அதெப்புடி அவன் மட்டும் அப்படி சொல்லலாம்?. அவளை ரொம்ப மிஸ் பண்றளவுக்கா அவன் கூட நான் வாழ்ந்தேன்' என்று கிறுக்குத்தனமாக விடாப்பிடியாக மனம் அதிலே நின்றது.
அணைக்காவிடிலும் அவளின் அருகாமையே போதும் என்று நினைத்தவன் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று யோசனையிலே தூங்கியும் விட்டான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், 'தூங்கிட்டாரா?. டயர்டா இருக்கு அலைச்சல்னு வேற சொன்னாரே. எங்க போனாரு ரெண்டு நாளா என்னை சமாதானம் கூட பண்ணாம?. பாவம் நான் தான் அவரு தூக்கத்தை கெடுத்துட்டேன்' என்று சோர்வாய் தெரியும் அவன் முகத்தைப் படித்தவள் எழுந்து காலை கடன்களை முடித்து அன்னைக்கு உதவ கிளம்பினாள். அன்னையுடன் சேர்ந்து ஆதிக்கு பிடித்த உணவை சமைத்தவள் அவன் வரும் நேரத்திற்காக காத்திருந்தாள்.
எழுந்து வந்தவன், "அத்தை, மாமா நான் வேற ஜாப்ல ஜாயின் பண்ணப் போறேன். ரெண்டு நாளா அந்த வேலையா நான் அலைஞ்சேன். ஐடி வொர்க் தான். கம்பெனி நம்ம வீட்ல இருந்து தூரம். டெய்லி போய்ட்டு வர்றது கஷ்டம்" என்க..
'அப்போ.. அப்போ என்ன பண்ணப் போறாராம்?. அங்கேயே தங்கி வேலை பாக்கப் போறானா?. லீவ்க்கு தான் வருவானா?. அஞ்சு நாள் ஆதியை பார்க்காம இருக்கனுமா?. நான் இல்லாம இருக்க முடியுமா ஆதியால.. இல்ல அவன் இல்லாம என்னால இருக்க முடியுமா?. இந்த ரெண்டு நாளே எனக்கு நரகமா இருந்துச்சு' என்று பயத்துடன் அவன் சொல்வதைக் காதில் வாங்கினாள்.
"அதுனால கம்பெனி பக்கத்துலே ஒரு வீடு பார்த்தாச்சு. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். சன்டே அங்க போயிட்டா வீடு செட் பண்றதுக்கெல்லாம் சரியா இருக்கும். மன்டேல இருந்து நான் ஜாப் ஜாயின் பண்ணனும்"
"நல்லது மாப்ள. வீட்டுக்கு திங்க்ஸ்லாம் வாங்கிட்டேங்களா?. என்னென்ன வாங்கனும்னு சொல்லுங்க. நாங்க வாங்கிறோம்" என்று முகியின் தந்தை கேட்க.
"கல்யாணத்துக்கு நீங்க குடுத்த வீட்டு சாமானே போதும் மாமா. எல்லாத்தையும் அங்க கொண்டு போய் வச்சாச்சு. முகிக்கு ஏத்த மாதிரி அவ வீட்டை செட் பண்றது மட்டும் தான் பாக்கி" என்று அனைத்தையும் செய்து முடித்தவன் செய்தியை மட்டும் கொடுக்க..
"என்ன தம்பி எல்லாத்தையும் தனியா பண்ணிட்டேங்க. சொல்லிருந்தா உங்க மாமா கூட வந்து பாத்துருப்பாருல" என்று முகியின் அன்னை குறைபட்டுக் கொள்ள..
"மித்ரன் இருந்தான் த்தை. பரவால்ல இருக்கட்டும். நீங்க நாளைக்கு நேரா காலையிலே அங்க வந்துருங்க. அப்பா மார்னிங் ஆறு மணி போல பால் காய்ச்சிடலாம்னு சொன்னாரு" என்றான் ஒருத்தி பக்கத்தில் அதிர்ந்து அமர்ந்திருப்பதை கண்டு கொள்ளாமல்.
அதன் பின் காலை உணவை முடித்து விட்டு மதியமே கிளம்பி விட்டனர். வண்டியில் செல்லும் போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அந்த கோவத்துடனே புது வீட்டில் பால் காய்ச்சி அவர்களை விட்டு விட்டு, "சனி ஞாயிறு அங்க வீட்டுக்கு வந்துருங்க. தனியா வந்துட்டோம்னு இங்கேயே இருந்துறாதீங்க" என்று கலையரசி சொல்ல.. இருவரின் பெற்றவர்களும் கிளம்பி விட்டனர்.
மறுநாள் அலுவலகம் செல்லும் நேரம், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள் முகி. ஆதி கண்டு கொள்வதாக இல்லை. மனைவியிடம் லஞ்ச் பேக்கை வாங்கிக் கொண்டு, "வீட்டை பூட்டிக்கோ. நான் சீக்கிரம் வந்துருவேன். ஏதாவதுனா கால் பண்ணு" என்று வேலைக்கு கிளம்பி விட்டான்.
'கொஞ்சமாது சமாதானப்படுத்துறானா கல்நெஞ்சக்காரன். பொண்டாட்டி கோவமா இருக்காளேனு கொஞ்சமாச்சும் கண்டுக்குறானா. கண்ணே மணியேனு கொஞ்சவா சொல்றேன்?. ஆறுதலா நாலு வார்த்தை பேசுறதுக்கு என்னவாம்' என்று கணவனை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் அவன் சென்ற பின்.
மாலை வந்தவனும் எதுவும் பேசாமல் இரவுணவை முடித்து அறைக்குள் சென்று படுக்க.. இவளுக்கு கோவம் வர அறைக்குச் செல்லாமல் ஹால் சோபாவிலே அமர்ந்து கொண்டாள்.
அரை மணி நேரமாக பொறுத்திருந்து பார்த்தவன் அவள் வராமல் போகவும் வெளியே வந்து பார்க்க சோஃபாவிலே கண்ணயர்ந்திருந்தவளை கண்டு, அருகில் சென்று கைகளில் அள்ளி ஏந்த, அந்தரத்தில் மிதப்பது போல் உணர்ந்தவள் பட்டென்று முழித்துக் கொண்டு அதிர்ந்து விழித்தாள்.
"எ.. என்ன பண்றேங்க?. விடுங்க ஆதி. கீழ இறக்கி விடுங்க" என்று திமிறியவளை..
"கம்முனு வா முகி. அப்புறம் கீழே போட்டா என்னை சொல்லக்கூடாது" என்று அசால்டாக நடக்க..
"என்னைத் தூக்கி உங்க இடுப்பை உடைச்சுக்காதீங்க. அடிபட்ட விரல் வேற வலிக்கப் போகுது. சொன்னா கேளுங்க ஆதி.. மொத இறக்கி விடுங்க" என்று விட்டால் கீழே விழுந்து விடுவோமோ என்று அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்தாள்.
"கை விரல்ல அழுத்தம் குடுக்கல. ஏன் உன்னைத் தூக்குறது என்ன அவ்வளவு கஷ்டமா?. மார்க்கெட்ல மூட்டை தூக்குறவன் ஐம்பது கிலோ தான் இருப்பான். ஆனா நூறு கிலோ மூட்டையத் தூக்குறது இல்லையா?. சொல்லப்போனா நீ பாக்கத்தான் பப்ளியா இருக்க. என் வெயிட் தான் இருப்ப போல. ஈசியா தான் இருக்க"
என்று தூக்கி வந்து கட்டிலில் படுக்க வைக்க..
'இவனுக்கு மட்டும் பெரிசா இருக்குறதுலாம் எப்டி தான் சின்னதா தெரியிதோ. கவலையா இருந்தாலும் சரி, பிரச்சினையா இருந்தாலும் சரி இவ்வளவு தானானு ஈசியா ஊதி தள்ளிறான்' என்று மனதில் மெச்சிக் கொண்டாள்.
"உனக்கு என்ன கோவம் முகி என்மேல?. நான் ஆசைப்பட்ட ஜாப் போயிடுச்சுனு ஒரு விரக்தி.. அதுனால கொஞ்சம் எமோஷனலா பேசிட்டேன். அதுவும் உன்னை நான் எதுவுமே தப்பா சொல்லியே. எங்க உன்னை கூட பாத்துக்க முடியாத நிலை வந்துருமோனு தான் பீல் பண்ணேன். அதான் அப்படி பேசிட்டேன். என்னை நீ புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தானா?." என்று அவள் விழி பார்த்து கேட்க..
'உன் மேல் தான் தப்பு' என்று அவன் முகத்திற்கு நேராக சொல்ல அவளுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. அப்படி அவன் நடந்து கொண்டாலல்ல சொல்ல முடியும். ஒருநாள் கூட குண்டு என்ற வார்த்தை கூட அவன் வாயில் இருந்து வரவில்லை. பின்னே எப்டி அவன் மீது பழி போடுவது.
"நான் பேசுனது உன் மனசைக் கஷ்டப்படுத்தி இருந்தா ஐ ஆம் சாரி. நீ நினைக்கிற மாதிரி மீனிங்ல சொல்லல. உனக்கு எப்படின்னு தெரியல. பட் ஐ ஆம் ஹண்ட்ரெடு ப்ரஷென்ட் ஹேப்பி வித் யூ. என் வாழ்க்கை முழுக்க முகி ஒருத்தி தான். நோ பாஸ்ட் மெமரிஸ். அதை நான் நினைக்க கூட விரும்பல.."
"அதுக்காக என்கிட்ட பேசாம கூட இருப்பேங்களா?"
"மொத கோச்சுக்கிட்டது நீ தான்"
"சரி.. அதுக்கு சமாதானம் கூட பண்ண மாட்டேங்களா?"
"சமாதானம் பண்ண வந்தவன் கிட்ட டைவர்ஸ் கேட்டு கோவப்பட வச்சது நீ.."
"எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சுருங்க. பேசிப் பேசியே என்னை மயக்கிறேங்க" என்று தோளில் பட்டென்று போட்டவள், "போனா போதும்னு மன்னிச்சு விடுறேன். ஆமா புது கம்பெனில வேலை எப்டி இருந்துச்சு". அவ்வளவு தான் கோவம் போய் விட்டது. அதற்கு மேல் கோவத்தை தொடர இருவருக்கும் முடியவில்லை.
"ம் ஓகே. புடிக்காத வேலை தான். ஆனா போய் தான ஆகனும்" என்று சலிப்போடு சொல்ல.. அதிலே அவனுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டாள். எப்பவும் துறுதுறுவென்று ஓரிடத்தில் அமராமல் ஓடிக் கொண்டிருப்பவன். இப்போது ஒன்பது மணி நேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர வைத்தாள் எப்படி இருக்கும்?. மேலிருந்து கீழே தூக்கிப் போட்ட பொருளை கீழே விழாதே என்று சொல்வது போல் தான்.
ஒரு மாதம் கூட முழுதாக அந்த கம்பெனிக்கு செல்ல முடியவில்லை ஆதியால். 'கை வலித்தாலும் பரவாயில்லை திரும்பவும் பழைய கம்பெனிக்கே சென்று விடலாமா. மெக்கானிக்கல் படிச்சுட்டு ஐடி வேலை. சே அந்தக் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து கீ போர்டை தட்டவே எரிச்சலா இருக்கு. நான் மட்டும்னா பரவால்ல. எனக்கேத்த மாதிரி வேலையை மெதுவா தேடிக்கலாம். இப்போ என்னை நம்பி முகி இருக்கா. கல்யாணம் முடிச்சப்புறமும் அப்பா அம்மாவை எதிர்பாக்குறது எனக்கு மட்டுமில்ல முகிக்கும் அசிங்கம். அய்யோ என்னதான் செய்யிறதுனு தெரியலயே' என்று பள்ளி செல்ல மறுக்கும் குழந்தை போல அவன் மனம் வேலைக்குச் செல்ல முரண்டுபிடித்தது.
மூன்று வருடங்கள் வீட்டிலே சுத்தி ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை திடீரென பள்ளியில் கொண்டு போய் விட்டால் எப்டி அக்குழந்தையால் ஓரிடத்தில் அமர முடியாதோ அப்படித்தான் ஆதியும்.. அமர்ந்த இடத்திலே உட்கார்ந்து தொடர்ந்து வேலை செய்ய பிடிக்காமல் அரை மணிக்கொருமுறை வெளியே சென்று வர.. அவன் மேனேஜரே ஒரு தடவை வார்னிங் குடுத்து விட்டார். மனதளவில் அவ்வேலையை வெறுத்தாலும் தன்னை நம்பி வந்த முகிக்காக பல்லைக் கடித்துக் கொண்டு சென்றான்.
ஆதியின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த முகி, "ஆதி உங்களுக்கு இந்த வேலை பிடிக்கலைனா வேற வேலை ட்ரை பண்ணுங்க. உங்களுக்கு விருப்பமில்லாம போக வேண்டாம். விருப்பமில்லாத வேலை உடலோடு சேர்த்து மனசையும் கெடுத்துடும்"
"இனிமே பழைய வேலைக்குலாம் போக முடியாது முகி. கைல அழுத்தம் குடுக்காம இருக்கனும்னா இந்த கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டு தான் அழனும்" என்று விரக்தியாய் சொல்ல.
"அப்போ வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க ஆதி. ஸ்கூல்க்கு வேண்டா வெறுப்பா பேக்கைத் தூக்கிட்டுப் போற பசங்க மாதிரி தினமும் போறேங்க"
"ஆமா முகி. என்ன பண்றது?. எனக்கு ஒரு யோசனையும் தோனலடி.."
"உங்களுக்கென்ன மெஷின், ஸ்பேர் பார்ட்ஸ் அதுமாதிரி கூட வேலை பாக்கனும் அவ்வளவு தான?" என்று அசால்டாக கேட்க..
"என்ன அவ்வளவு தானனு ஈசியா சொல்ற முகி. இனிமே நான் அதெல்லம் நினைச்சுக்கூட பார்க்க முடியாது" என்றவனின் குரலில் அவனுக்கு பிடித்த வேலையை செய்ய முடியாத ஏக்கம் கொட்டிக் கிடந்தது.
"நீங்க ஏன் யார் கிட்டயும் போய் வேலை பார்க்கனும்?. உங்களுக்கு பிடிச்ச பீல்டுலயும் இருக்கனும் உங்க கைக்கு அழுத்தம் கொடுக்காத வேலையாவும் இருக்கனும்னா பேசாம நாமலே ஏதாவது ஸ்பேர் பார்ட்ஸ் சேல்ஸ் பண்ற மாதிரி கம்பெனி ஸ்டார்ட் பண்ணலாமா?. உங்களுக்கு பிடிச்ச ஃபீல்டுல இருந்த மாதிரியும் இருக்கும்.." என்று சொல்ல..
குரல் மாறுபாட்டில் அவன் மனநிலையைக் கணித்த அவளை மனதில் மெச்சியவன் கண்களில் ஒளி மின்ன, "அய்யோ பப்ளி சூப்பர் ஐடியாவே இருக்கே. எனக்கு இது தோணல பாரு" என்று அவள் கன்னங்களை முத்தங்களால் எச்சில் செய்தவன், "ஆனா அதுக்கு அமௌன்ட் இன்வெஸ்ட் பண்ணனுமே. சேவிங்ஸ்ல அவ்ளோலாம் பணம் இல்லடி" என்று சோகமானான்.
தொடரும்.

Last edited: