அத்தியாயம் 8
முகிலா சொன்ன யோசனையை ஒன்றுக்கு பத்து முறை தன்னால் முடியுமா என்று யோசித்தான். கண்டிப்பாக ஒன்பது மணிநேர கணினி வேலை அவனுக்கு ஒத்துவராது என்று அவன் மனம் அடித்துச் சொன்னது. 'கல்யாணம் ஆகிடுச்சு. வேலைக்குப் போகாம வீட்டில் இருக்கவா முடியும்?. தன்னவளின் குறைந்தபட்ச ஆசையை கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு இருந்தால் நானென்ன மனுஷன். நாம படிச்சத்துக்கு ஏத்த வேலை செய்யனும். நாம ஏன் மெக்கானிக்கல் ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப் ஓப்பன் பண்ணக்கூடாது?' என்று நினைத்தவன் முதல் கட்ட வேலையாக அதனை உருவாக்குவதற்கு என்னென்ன தேவை என்ற தேடலில் இறங்கினான்.
உடனே வேலையை விட்டு விடவும் இல்லை. இதுபோல் மனம் ஒப்பாமல் எந்த வேலையும் இதுவரை செய்ததில்லை. ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழ். உன்னை நல்லா வச்சுப்பேன் என்று வாக்கு குடுத்து திருமணம் செய்து விட்டு முகிலாவை எந்த விஷயத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அவனின் புது முயற்சிக்கான தேடல் ஒருபுறம் பிடிக்காத வேலை ஒருபுறம் என்று பிஸியாக இருந்தான். முகிலாவும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தால் அவனுக்கு.
"முகி.. நான் நல்லா யோசிச்சுட்டேன். கார் ஸ்பேர் பார்ட்ஸ் சேல் கம்பெனி ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன். இப்போதைக்கு இந்தக் கம்பெனிலாம் செலக்ட் பண்ணி வச்சுருக்கேன். இவங்ககிட்ட பேசனும். அவங்க நமக்கு டீலர்ஷிப் குடுத்தா நல்லா இருக்கும். எல்லார்கிட்டயும் பேசனும்.. நிறைய வேலை இருக்கு. ஆபிஸ்ல வேற இந்த ப்ரோகிராம் பண்ணு.. அதை பாத்தியா இந்த எர்ரர் ரிசால்வ் பண்ணியானு டார்ச்சர் பண்றாங்க" என்று சலித்துக் கொள்ள..
"ஜாப் ரிசைன் பண்ணிடுங்க"
"என்ன விளையாடுறியா முகி?. ரிசைன் பண்ணிட்டு நாம ரெண்டு பேரும் பூவாக்கு என்ன பண்றதாம்?"
"எல்லாமே ப்ளான் பண்ணிட்டேங்கள?. இப்போலாம் நிறைய கம்பெனிஸ் டீலர் கிடைக்காம அலையிறாங்க. கண்டிப்பா உங்களுக்கு ஓகே ஆகிடும். அப்புறம் நாம வொர்க் ஸ்டார்ட் பண்ற வேலை தான் மிச்சம். அதுக்கு நிறைய அலையனும் நேரம் வேனும். இந்த வேலையும் பாத்துட்டு அந்த வேலையும் பார்க்க முடியாது. மூனு மாசம் ஆகுமா?. சமாளிச்சுக்கலாம்" என்று தைரியமூட்ட..
"நீ ரொம்ப பாஸ்டா இருக்க பப்ளி. மொத கம்பெனி எங்க வைக்கலாம்னு இடம் பாக்குறதுக்கே டைம் ஆகும். அதுக்கு மொத இன்வெஸ்ட்மென்ட் ரொம்ப முக்கியம். அதை ரெடி பண்ணனும். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிட கூடாது டா செல்லம்"
அவன் சொன்னதில் சிரித்தவள், "அதெல்லாம் பாத்துக்கலாம். பைனான்ஸ்க்கு என்ன பண்ணலாம்னு அதுக்கு அரேஞ்ச் பண்ணுங்க. என்னோட அக்கௌன்டல கொஞ்சம் மணி இருக்கு. அதை வச்சு பேமிலி ரன் பண்ணிக்கலாம். கொஞ்ச நாள் என்னை பத்தியோ வீட்டை பத்தியோ யோசிக்கிறதை விட்டுட்டு எப்டி புது ப்ளானை ஸ்டார்ட் பண்ணலாம்னு யோசிங்க" என்று அவனுக்கு தைரியமூட்ட..
"மை சுவீட்டு பப்ளிடி. நான் பண்ற இம்சையெல்லாம் தாங்கிட்டு நான் என்ன பண்ணாலும் சப்போரட் பண்ற உன்னை நினைச்சா கர்வமா இருக்கு. என் விரல் கட் ஆனப்போ எவ்ளோ பயந்தேன் தெரியுமா?" என்றவனுக்கு அன்றைய நாளின் பரிதவிப்பு இப்போது கண்ணில் தெரிய..
"ஆதி இப்போ எதுக்கு அதுலாம் ஞாபகப்படுத்துறேங்க. ஏதோ இத்தோட போச்சேனு நானே மனசை தேத்திட்டு இருக்கேன். கல்யாணம் ஆனதுல இருந்து உங்கள அப்படி நான் பார்த்ததே இல்ல. அன்னைக்கு சட்டையெல்லாம் ரத்தக் கறையோட கையை மொத்தமா சேர்த்து கட்டுப் போட்டுருந்ததை பார்த்து எனக்கு உயிரே போய்டுச்சு.. " என்று அவளும் கலங்க..
"என் விரலை பத்தி கவலைப் பட்டதை விட நீ இதை எப்டி எடுத்துக்குவியோனு தான் ரொம்ப பயந்தேன் முகி. கல்யாணம் ஆகிட்டு நமக்கு வீட்ல சாப்பாடு போடுறதே கஷ்டம். இதுல உன்னை யாரு முன்னாடியும் நிக்க வைக்கக் கூடாதுனு அவ்ளோ யோசிச்சேன். மனசு புல்லா உன்னை அந்த மாதிரி சங்கடமான நிலைல நிக்க வைக்கக் கூடாதுனு தான் ஓடிட்டு இருந்துச்சு.."
"அன்னைக்கு பொண்டாட்டியை நினைச்சு நீங்க பீல் பண்ண மாதிரி இல்லையே.. காதலியை மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்ண மாதிரில இருந்துச்சு" என்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள..
"அடியே இதுக்கு அன்னைக்கே விளக்கம் குடுத்து சமாதானமும் ஆகியாச்சு. திரும்பவும் முதல்ல இருந்தா?. என் பாடி தாங்காதுமா. ஒரு வார்த்தை வாய்தவறி வந்ததுக்கு மாசத்துக்கு ஒருவாட்டி அதையே சொல்லி வெறுப்பேத்துவியாடி?.."
"பழைய காதலை பேசனவுடனே கொஞ்சம் கோவம் எட்டிப் பாக்குற மாதிரி இருக்கே"
"நான் எங்கேடி கோவப்பட்டேன்? உண்மையை சொன்னது ஒரு குத்தமா?" என்றவன், "உண்மை விளம்பியா பொண்ணு பார்க்க போன அன்னைக்கே எல்லாத்தையும் உளறிக் கொட்டுனது தப்பா போச்சு" என்று புலம்ப..
"என்ன புலம்பல்?.."
"இல்லடா செல்லம்.. உன்னை மாதிரி பொண்டாட்டி கிடைக்க குடுத்து வச்சுருக்கனும்னு சொன்னேன். மனுஷனுக்கு தலைவலி உடம்பு வலினு எதுவும் வராது. தலைவலிச்சா உன் பஞ்சுக்கையால தலையை லைட்டா மசாஜ் பண்ணா தலைவலி காணாம போய்டுது.."
"வஞ்சப் புகழ்ச்சி மாதிரி தெரியிதே.." என்று புருவம் சுருக்க..
"உண்மை டி பப்ளிமா. நைட் பெட்டே தேவையில்லை புஷூ புஷூனு இருக்குற உன் நெஞ்சுல சாஞ்சுடடு தூங்குனா சொர்க்கத்துல இருக்குற மாதிரி பீல் வரும் பாரு.. ப்பா.. அதுலாம் என்னை மாதிரி மார்ஷ்மெல்லோ பெட்டை கல்யாணம் பண்ணி அனுபவிக்குறவனுக்கு தான் அந்த பீல் தெரியும்.." என்று அனுபவித்துக் கூற..
கணவனின் வர்ணனைப் பேச்சை ரசித்துக் கொண்டு, "ச்சீ ஆதி.." என்று அவன் தோளில் பட்டென்று அடித்து வெட்கம் கொள்ள..
"அய்யோ பப்ளி இப்டிலாம் வெட்கப்படாத. சூப்பர் சில்க்கி சாஃப்ட் டி நீ. உடல் மட்டுமில்ல மனசு கூட ரொம்ப சாஃப்ட் அன்ட் பேபி மாதிரி தான்" என்று இன்னும் ரசித்துக் கூற..
"ஆதி இன்னைக்கு ரொம்ப புகழ்ந்து தள்ளுறேங்க. எனக்கு ஒரு மாதிரி ஷையா இருக்கு. பேசாம தூங்குங்க. நாளைக்கு ஆபிஸ் போனும்னு நினைப்பு இல்லையா?" என்று அவளின் சிவந்த முகத்தை அவனிடம் இருந்து மறைக்க போராட..
"வெட்கம் கொள்ளாதேடி ரெட் வெல்வெட் மார்ஷ்மெல்லோ பெண்ணே
உன் மென்மையில் கரைந்து
உன் வெட்கம் களைந்து
விஷயம் அறிந்து கொள்வதற்குள்
போதும் போதும் என்றாகிவிடுகிறது
கவிதை கிறுக்கத் தெரியாத
இந்தக் கள்வனை பித்தனாக்கும்
சதிகாரியடி நீ.." என்றவனின் உலறலில் பித்தாகிப் போனது முகியே. அவளிடம் அவன் செய்யும் செல்ல சில்மிஷங்களுக்கு கமர்கட்டாகிய அவனும் மார்ஷ்மெல்லோவாகிய அவளும் காதல் செய்த கலப்படம் என்று பெயர் சூட்டினாள்.
இடம், டீலர்ஸிப், லைசென்ஸ் ப்ராஸஸ் என்று அனைத்தையும் ப்ளான் பண்ணியாச்சு. அனைத்தையும் செயல்படுத்த பணம் மட்டுமே வேண்டும். பாதி அமௌன்ட் லோன் மூலம் கிடைத்து விடும் என்றாலும் மீதி அமௌன்ட் அவன் போட்டே ஆக வேண்டும் என்ற நிலை. அப்போது தான் ஆதிக்கு ஒன்று புரிந்தது. வாங்கும் சம்பளம் மூன்று வேளை சாப்பாடு வீட்டு வாடகை என்று அன்றாட செலவுக்கே சரியா இருக்கும். அதைத் தான்டி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சேமிப்பு மிக அவசியம் என்று. இதுனால் வரை சேமிப்பைப் பற்றி நினைத்துக் கூட பார்க்காத தன் மடத்தனத்தை எண்ணி நொந்தான்.
அவன் தொடங்கப் போகும் பிஸினஸ் பற்றி பெற்றவர்களிடம் கூறி விட்டு அவர்களிடம் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்று அந்த வார இறுதியில் அங்கு சென்றனர்.
அவன் திட்டத்தைப் பற்றி தாயிடமும் தந்தையிடமும் கூறியவன், "எல்லாமே ப்ளான் பண்ணிட்டேன். லோன் பாதி. மீதி நாம தான் அரேஞ்ச் பண்ணனும்" என்க..
"சரிப்பா யோசிக்கலாம்" என்றார் அருணாச்சலம். கலையரசி ஒன்றும் சொல்லவில்லை.
வார விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு கிளம்பியவர்கள் போகும் போது பெற்றவர்களிடம் சொல்லி விட்டுச் சொல்லலாம் என்று அவர்கள் அறையைத் தட்டுவதற்கு முன் அவர்கள் பேசியது காதில் விழ அப்படியே நின்றான் ஆதி.
"ஏன் கலை. நீ என்ன ஒன்னுமே சொல்லல?. ஆதியோட ப்ளான் நல்லாதான் இருக்கு. இந்த பிஸினஸ் சக்ஸஸ் ஆச்சுன்னா அவன் லைஃப் செட்டிலாகிடும். நம்மகிட்ட பேங்க்ல இருக்குற சேவிங்க்ஸை எடுத்துற வேண்டியது தான்" என்றது தான் தாமதம்..
"நல்லா பேசுறேங்க நீங்க.. இருக்குற சேவிங்க்ஸ் எடுத்துக் குடுத்துட்டு நாம என்ன பண்றதாம்?. இன்னும் நம்ம கடமை முடியல. மித்ரன் கல்யாணச் செலவு வேற இருக்கு. இன்னைக்கு காசத் துக்கிக் குடுத்துட்டு நாளைக்கு அவன் கல்யாண செலவுக்கு அவங்க குடுப்பாங்கனு எப்டி நம்புறது?. நாம என்ன பொண்ணா பெத்து வச்சுருக்கோம். ஆம்பளப் புள்ளேங்க செய்யலேன்னா பொம்பளப்புள்ள சாப்பாடு போடும்னு இருக்க. நமக்குனு வேனும். அதெல்லாம் எடுக்க முடியாது. அதான் ஊர்ல இல்லாத மகாராணியைக் கட்டுவேனு ஒத்தக்கால்ல நின்னு அவசர அவசரமா கல்யாணம் பண்ணான்ல. அவன் மாமனார் வீட்ல கேட்குறதுக்கு என்ன?. நல்லா இளிச்சவாயன் கிடைச்சானு அவசரம்னாலும் பரவால்லனு கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னாங்கள. ஒத்தைப் பொண்ணு. அவங்க பொண்ணு நல்லா இருக்குறதுக்கு செய்ய வேண்டியது தான?. நீங்க பாட்டுக்கு பேங்க்ல இருக்குனு சொல்லி வச்சுறாதீங்க. அது அவங்க பாடு. கல்யாணம் பண்ணதோட நம்ம கடமை முடிஞ்சு போச்சு.." என்ற கலையரசின் பேச்சில் வந்தவன் அப்படியே நின்று விட்டான். கிளம்பும் போது கிளம்புறோம் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
வேலை பார்க்கும் இடம் தூரம் என்பதால் தான் வாடகை வீட்டில் தங்க வேண்டியதா போச்சு. எப்போதும் அன்னை வீட்டிற்கு வார இறுதியில் வந்து விட்டுச் செல்லும் போது ஒரு புத்துணர்வு கிடைக்கும். பிறந்தது முதல் அத்தனை வருடங்கள் இருந்த வீடல்லவா. இன்று ஏனோ அந்த வீடு அந்நியப்பட்டது போல் உணர்ந்தான்.
வீட்டில் இருந்து அவர்கள் இருக்கும் வீடு மூன்று மணி நேர பயணம் என்பதால் கையில் அடிபட்டதில் இருந்து பேருந்து பயணமே மேற்கொள்கின்றனர். அந்த இரவு நேரக் குளுமை ஏனோ அவன் மனதைக் குளிர்விக்கவில்லை. எப்போதும் தென்றல் காற்றுக்கு போட்டியாக தீண்டி சிலிர்க்க வைத்து பல சில்மிஷங்கள் புரியும் கணவன் அமைதியாக வரவும், "ஆதி.. என்னாச்சு? ஏன் அமைதியா வர்றேங்க?" என்றாள் முகி.
"ப்ச் ஒன்னுமில்ல. தலை வலிக்குற மாதிரி இருக்கு" என்று நெற்றியைத் தேய்க்க..
"கொஞ்ச நேரம் படுத்துக்கோங்க" என்று முகி மடியில் இடம் கொடுக்க.. அவள் மடியில் சாய்ந்து கண் மூடினான். மெதுவாய் அவன் நெற்றியில் அவள் விரல்களால் நீவி விட்டாள். அவன் வாடிய வதனத்தை பார்த்துக் கொண்டே வந்தாள்.
இந்த வாழ்க்கை எப்பேர்பட்ட நேர்மறை எண்ணம் கொண்டவனையும் ஒருமுறையாவது சோதித்துப் பார்த்து விடுகிறது. சோதனை காலத்தை கடந்தால் தானே சாதனை என்ற மிகப்பெரிய சந்தோஷம் இருக்கிறது.
வீட்டிற்கு வந்த பின்னும் அவன் அதே மனநிலையில் இருக்க.. முகிக்கு அவள் பெற்றவர்களிடம் இருந்து அழைப்பு வர பேசிக்கொண்டிருந்தவள், "பணம் அரேஞ்ச் பண்ண முடியலனா அப்பா பேர்ல பேங்க்ல இருக்குறதை எடுத்துடலாம் முகிலா. ஒத்தப் பொண்ணு ஒன்ன விட்டா யாருக்கு செய்யப் போறோம்" என்று அவள் தந்தை சொல்ல..
"இல்லப்பா வேண்டாம். உங்க காலம் என்ன முடிஞ்சுருச்சா. இன்னும் காலம் இருக்கு. எப்போ என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. அதுவுமில்லாம அவரு உங்க கிட்ட வாங்கி பிஸினஸ் பண்ணா அவருக்கு மரியாதையா இருக்காது. இது எங்க ரெண்டு பேரு பிரச்சினை. நாங்களே பாத்துக்குறோம்" என்று பேசி முடித்தவளின் வார்த்தைகள் ஆதியின் காதிலும் விழ.. தனது சுயமரியாதையின் மேல் அக்கறை கொண்டவளின் மீது இன்னும் அதிக நேசம் தான் கூடியது. அவளுக்கு தன்மேல் இருக்கும் நம்பிக்கை கூட நமக்கு இல்லையே என்ற எண்ணம் கூட தோன்றியது.
மறுநாள் வழக்கம் போல் வேலைக்குச் சென்றவன்.. அதன் பின் ஒரு வாரமும் அவர்கள் ஆரம்பிக்கப் போகும் பிஸினஸ் பற்றி எதுவும் பேசாமல் இருக்க.. "ஆதி என்ன பிரச்சினை உங்களுக்கு?. ஒன்னு ஆரம்பிக்கனும்னு முடிவு பண்ணிட்டா வெற்றியோ தோல்வியோ இறங்கி பாத்துறனும். கால் வைக்குறதுக்கே இவ்ளோ யோசனைனா எப்டி முன்னேறிப் போறது. பணம் தான் பிரச்சினையா?. இருங்க" என்றவள் உள்ளே சென்று அவள் நகை மொத்தத்தையும் எடுத்து வந்தாள்.
"இந்தாங்க. இதுலாம் வீட்ல சும்மா தான் கிடக்கு. இதை அடகு வச்சாலும் சரி பத்தலனா வித்தாலும் சரி.. இதை வச்சு ரெடி பண்ணுங்க" என்று மொத்த நகைகளையும் கொடுக்க..
"ஏய் முகி. இதுலாம் உன்னோடது". அவனுக்கு அவள் வீட்டில் எவ்வளவு நகை போட்டார்கள் என்று கூட தெரியாது. அந்நேரம் கல்யாணம் என்ற ஒன்று மட்டுமே அவன் சிந்தனையில் இருந்தது. வரதட்சணை நகை பாத்திரம் பண்டம் என்றெல்லாம் அவன் யோசித்துக் கூட பார்க்கவில்லை.
"என்னோடதா?. அப்போ நாளைக்கே நீங்க புது பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணி எல்லாம் வாங்குனா அது உங்களோடதுன்னு சொல்வேங்களா?"
"ப்ச் அப்படி இல்லடி.."
"போதும். புடிங்க. இது போனா என்ன?. நீங்க அப்புறம் எனக்கு புதுசா வாங்கி குடுங்க. இதெல்லாம் பழசாகிடுச்சு" என்று கண்சிமிட்ட..
"தேங்க்ஸ் பப்ளி.." என்று கட்டிக்கொள்ள..
"மொதல்ல ஜாப் ரிசைன் பண்ணிடுங்க. அப்போதான் இதுல கான்ஷென்ட்ரேட் பண்ண முடியும்" என்று தினிக்காத குறையாக அவனிடம் கொடுக்க.. அவன் அடுத்த கட்ட வேலையில் இறங்கினான்.
வேலையை ரிசைன் செய்து விட்டு ஒரு மாதத்தில் பிஸினஸ் விஷயமாக மட்டுமே அலைந்தான்.
இடையில் ஆதியின் தந்தை ஒருநாள் வீட்டுக்கு வந்து, "ஆதி.. இதுல கொஞ்சம் பணம் இருக்கு. என்னோட சேவிங்க்ஸ் தான். இதை வச்சுக்கோ" என்று கொடுக்க..
மகன்கள் எல்லாம் தந்தையை விட தாயே தன் மேல் பாசமாக இருப்பவள் என்று நினைத்துக் கொண்டு தந்தையிடம் கொஞ்சம் தள்ளியே நிற்கின்றனர். ஆனால் தந்தை திட்டுவதெல்லாம் வாழ்வில் அவன் எந்தக் கஷ்டமும் படக்கூடாது என்று தன்னை பொறுப்பாக்கத்தான் என்பதை தான் குடும்பஸ்தனாகும் போது தான் புரிகிறது.
"இல்லைப்பா வேண்டாம். நான் பணம் அரேஞ்ச் பண்ணிட்டேன்" என்று மறுக்க..
அவர், "எப்படி?" என்று விழிகளை சுருக்க..
"முகியோட ஜூவல்ஸ் பாதியை வித்துட்டேன். பாதி அடகு வச்சுருக்கேன்"
"ஏன்பா.. தங்கம் விக்குற விலைக்கு விக்கனுமா?. அப்டி என்ன அவசரம்?. நான் தான் அரேஞ்ச் பண்றேன்னு சொன்னேன்ல" என்று ஆதங்கப்பட..
"பரவால மாமா. அப்புறமா வாங்கிக்கலாம். இப்போ அவர் பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணட்டும்" என்றவளின் பேச்சில் அவருக்கு மனநிறைவாக இருந்தது. இனி ஆதியின் வாழ்க்கை அவள் கையில். அவனை நல்லா கொண்டு வந்துருவா என்ற நம்பிக்கை அவருக்கு.
ஒரு இடத்தில் அமர்ந்து செய்யும் வேலையை விட ஓடியாடி உடலுழைப்பு போட்டு செய்யும் வேலை ஆதிக்குப் பிடிக்கும் என்பதால் கடகடவென வேலையை முடித்து திறப்பு விழாவும் வைத்து முதலாளியாக அமர்ந்து விட்டான்.
தொடரும்..

Last edited: