• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாலைசூடி மஞ்சம் தேடி 25

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
மலரிடம் விக்ரம் தன்னோடு ஷூட்டிங் வருகிறாயா என்று கேட்தற்கு மலர் பதில் ஏதும் கூறாமல் அதிர்ந்து முழித்திட, அவளுக்கு விருப்பம் இல்லை என்று நினைத்துக்கொண்டு, "கட்டாயம் இல்லே... உனக்கு விருப்பம் இல்லேனா வேண்டாம்..." என்று கூறிச் சென்றிருந்தான்.

ஆனால் இப்போது படப்பிடிப்பின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் தமிழமுதன்,

"இந்த நிகழ்ச்சிய நம்மலோட சேர்ந்து கொண்டாட, நம்மை மகிழ்விக்க இன்னும் ஒரு ச்சீஃப் கெஸ்ட்டும் வந்திருக்காங்க... அவங்க யாருனு பார்த்திடலாம்... ஒரு பெரிய கைதட்டலுடன் லெட்ஸ் வெல்கம் மிஸஸ். விக்ரம் பார்த்திபன் அவர்கள்..." என்று அழைத்திட மேடைக்கு எதிர்ப்புறம் நின்றிருந்த தன்னவளைக் கண்டு விழிகள் விரிய அதிர்ந்து பார்த்தான் விக்ரம்.

திரையின் மறுபக்கம்...... மேடையில் அதிர்ந்து நிற்கும் விக்ரமைக் கண்டு உதியும், மலரும் ஹைஃபை செய்து கொள்ள, விக்ரமின் கண்கள் நெருப்பைக் கக்கியது. அதிலும் குறிப்பாக உதியைக் கண்டு.... மலர் இங்கே வரப்போகிளாள் என்று தெரிந்தும் தன்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டானே என்று உதியின் மேல் கோபம்.

அதே கோபத்தோடு மலரையும் நோக்கிட, அவளது உடையே கூறியது, இது ப்ரீ-ப்ளான்டு செக்மெண்ட் என்று. விக்ரமின் உடைக்கு பெருத்தமான வெண்மை நிற டிசைனர் ப்ளௌஸும், ரோஜா மலரை தூவியது போல் கோரல் பின்க் நெட் சாரியும் அணிந்திருந்தாள் மலர்.

அதுக்கு தான் மார்னிங் என்னை இந்த ட்ரெஸ் போட சொல்லி ஃபோர்ஸ் பண்ணினாளா! நான் கூட வர்றேயானு கேட்டபோது திருதிருவென முழித்தாளே ஒழிய வாய் திறந்து ஒரு வார்த்தை சொன்னாளா!!! திருடி... என்று மலரை திட்டிடவும் மறக்கவில்லை.

'கூட்டுக் களவாணிங்களா!' என்று மனதிற்குள் மலரையும், உதியையும் பாராட்டிவிட்டு, முறைக்கும் பணியை செவ்வனே செய்தான் விக்ரம்.

"என்ன உதி ண்ணா!!! ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்து சந்தோஷப்படுத்தலாம்னு பாத்தா, இப்படி ஆங்கிரிபேட்-ஆ மாறி முறைக்கிறாரு!!! இன்னைக்கு ரெண்டு பேரும் காலி...." என்று மனதிற்குள் பயப்பந்து உருள உதியிடம் வினவினாள்.

"சரி... சரி... பயத்தை முகத்துல காட்டாதே... உனக்கு துணைக்கு நான் இருக்கேன் டா பாப்பா... நான் பாத்துக்கிறேன்... இப்போ கேமரா ரோலிங்ல இருக்கு... நீ ஸ்டேஜ்க்கு போ..." என்றான்

"ஏது? நீ பாத்துக்கிறேயா!!! சிங்கத்தை அதோட குகைல ஸோலோ-வா மீட் பண்ண போறது நானு... அவரு கடிச்சு கொதறினதுக்கு அப்பறம் எங்கெங்கே ரத்தம் வருதுனு பாத்துப்பேயா!!! என்னை ஆளைவிடு நான் இப்படியே பின்னாடி வாசல் இருந்தா எகிறி குதிச்சு ஓடிருறேன்..."

"உனக்கு எல்லாம் மறந்திடுச்சுனு நாங்க தான் சொல்லிக்கனும்... இன்னமும் கொஞ்சம் கூட மாறாம அதே சேட்டை செய்யதான் செய்யிறே... பின் வாசல் வழியா கோழி திருட வந்தவ தானே நீ!!!" என்று நேரம் காலம் தெரியாமல் உதி வம்பு வளர்த்தான்.

"ஹிஹிஹி...." என்று அசடு வழிந்தபடி "சும்மா இரு உதி ண்ணா! எப்போ பார் அதையே சொல்லி கிண்டல் பண்றே!!!"

அதற்குள் அங்கே மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் தமிழின் வேண்டுகோளுக்கு இணங்கி அவளை அழைத்துச் சொல்ல மேடையின் விழிம்பில் வந்து நின்றான் விக்ரம்.

"சரி... சரி... நீ போ... உனக்காக வெய்ட் பண்றான் பார்..."

"ம்ம்ம்... போறேன்...." என்று பயத்தை மறைத்து உதியிடம் விரைப்பாக கூறிவிட்டு விக்ரமின் அருகே சென்றாள்.

"மாமா.... கோபமா இருக்கிங்களா?" என்று தன்னையும் மறந்து அவனை எப்படி அழைக்க நினைத்திருந்தாளோ அப்படி விழித்திருந்தாள்.

அதனை கவனித்தவனின் வதனம் மேலும் கொஞ்சம் இருக்கம் கொண்டது. அவளுக்கு மைக் பொறுத்தப்படவில்லை என்று தன் எக்ஸ்ரே பார்வையில் கண்டறிந்து கொண்டவன், தனது மைக்கையும் அணைத்துவிட்டு,

"ஷ்ஷ்... இங்கே நிறைய கேமராவும், மைக்கும் இருக்கும்.... என்ன பேசுறதா இருந்தாலும் யோசிச்சு பேசு..." என்று முறைத்தபடி கூறினான். அப்போதும் பெண்ணவள் தன் அழைப்பை உணர்ந்திடவில்லை.

எதிரில் நிற்பவளின் அழகே முதலில் கண்ணில் தெரிந்தபோதும், அதனைத் தாண்டி சில விஷயங்களை கவனித்துவிட்டு,

"என்னடி இது? புதுசா லிப்ஸ்டிக்லாம் போட்டுகிட்டு!!! என்ன சாரி இது? உனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லே தானே! உன்னை யாரு இதெல்லாம் செய்ய சொன்னது?" என்று வார்த்தைகளால் கடித்துக் குதறினான்.

விக்ரம் கூறியது போல் மலரின் உதடுகள் அப்படி ஒன்றும் விகாரமாகவெல்லாம் தெரியவில்லை. சொல்லப் போனால் அவளுக்கு அவளே செய்து கொண்ட சிறிய அளவிலான ஒப்பனைகளே அவளை அழகாகக் காட்டியிருந்தது.

"என்னை யாரும் எதுவும் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தலே... எனக்கும் ஓரளவு என்னை அழகு படுத்திக்கத் தெரியும்... சோ நானே தான் செய்துகிட்டேன்...

அப்பறம் யாரும் உங்களை மாதிரி திட்டவும் இல்லே... எல்லாரும் நல்லா இருக்குனு தான் சொன்னாங்க... ஏன்? உங்க கண்ணுக்கு மட்டும் நான் அழகா தெரியலேயோ!!!" என்று அவனது கோபத்தையும் மறந்து பதில் கூறினாள்.

"என் கண்ணுக்கு பேரழகியா தெரியிறே... ஆனா அது மட்டும் போதும்..... இப்படி ஊருக்கே காண்பிக்க வேண்டியதில்லே..." என்றவனின் குரலில் கோபமோ? காதலோ? என்ன இருந்தது! அவனுக்குமே அது புரியவில்லையே.

மலருக்கோ அவனது வார்த்தைகள் தேனாய் அவளது காதில் பாய்ந்தது. அவனது கோபம் கூட தான் அவனுக்காக தன்னை மாற்றிக் கொண்டதாக நினைத்து வந்த கோபம் என்று அறிந்து கொண்டாள்.

"தேங்க் யூ என் புஜ்ஜி மாமா... என்னை பேரழகினு சொன்னதுக்கு..." என்று மூக்கை சுருக்கி கண்களால் கொஞ்சினாள்.

பதிலுக்கு விக்ரம் முறைத்திட பெண்ணவளின் முகம் சுருங்கியது.

"சரிஈஈஈ... சரிஈஈஈ... இவ்ளோ மேக்-அப் பண்ணிட்டு மூஞ்சிய உம்முனு வெச்சிக்காதே... நல்லாயில்லே..." என்று எப்போதும் போல் உர்ரான்கொட்டான் விக்ரமாய் மொழிந்தான்.

உதட்டை இடவலமாக சுழித்து வக்கனை செய்துவிட்டு நீட்டியிருந்த அவன் கைகளைப் பிடித்துபடி மேடையில் ஏறினாள் பெண்ணவள்.

வாடி என் தங்க சிலை
நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல
என் ஜோடியா நீ நிக்கயில
வேறென்ன வேணும் வாழ்கையில


என்று BGM அதிர மலரின் முகம் முதன்முறையாக திரையில் தெரியப் போகிறோம் என்ற கூச்சத்தில் சிவந்திருந்ததோடு, வெட்கமும் தொற்றிக்கொள்ள கொள்ளை அழகாக மாறிப்போனாள்..

நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ருதியோ மலரைப் பார்த்து, "உண்மையாவே தங்க செல மாதிரி இருக்கிறதுனால தான் நாங்கெல்லாம் உங்க வொய்ஃப்-அ பாத்து கண்ணுபோட்றுவோம்னு எங்க கண்ணுல காண்பிக்காம வெச்சிருந்திங்களா?" என்று விக்ரமிடம் வினவிட, அவனோ பதிலுக்கு கடையிதழை மட்டும் சற்றே வளைத்து புன்னைகை ஒன்றை பதிலாகக் கொடுத்தான்.

தொகுப்பாளர் தமிழ், மலரைப் பார்த்து "மேடம் உங்களுக்கு எப்போ மேரேஜ் ஆச்சு?" என்றான்.

"2 இயர்ஸ் ஆச்சு"

"உண்மையாவா? ரெண்டு வர்ஷமா?"

விபத்தினால் திருமணம் நின்றது அனைவருக்கும் தெரியும்... ஆனால் அதன்பின் நடந்த எதுவுமே யாருக்கும் தெரியாத நிலையில், பனியின் விருப்பத்திற்காக உதியின் மூலம் விக்ரமிற்கு திருமணமான செய்தி அதுவும் இப்போதுதான் அனைவரையும் சென்றடைந்தது.

"ஹாங்..." என்று ஆமோதித்தவள் ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு விக்ரமைத் திரும்பிப் பார்த்தாள். அவனோ புருவ மத்தியில் முடிச்சுகள் விழ ஒரு நொடி அவளைப் பார்த்துவிட்டு பின் தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

"குழந்தைங்க எந்த கான்வென்ட்ல படிக்கிறாங்க மா?!!!" என்று தமிழ் கேலிக் குரலில் வினவிட, அவனை குண்டு முழி கொண்டு அதிர்ச்சியாக நோக்கினாள் மலர்.

"இல்லே... ஏன் கேட்குறேன்னா! இங்கே செட்ல பல பேருக்கு சாருக்கு மேரேஜ் ஆனதே தெரியாது.... உங்களை எங்ககிட்டே இருந்து பதுக்கி வெச்சிருக்காரு.... அதான் குழந்தைய எங்கே ஒழிச்சு வெச்சிருக்கிங்கனு கேட்டேன்..." என்று ஏற்ற இறக்கத்தோடு கூறினான்.

தொகுப்பாளினி ஸ்ருதி இப்போது விக்ரமிடம் வினவினாள்.

"நீங்க ஏன் உங்களுக்கு மேரேஜ் ஆனதை இதுவரைக்கும் இன்ஸ்டா-ல கூட ஷேர் பண்ணிக்களே!!! என்ன தான் நீங்க இப்போலம் திரையில வர்றது இல்லேனாலும் பல பெண்களின் மனதை, மார்டலிங் கேர்ள்ஸ் ஹார்ட்டை திருடினவர், இன்க்ளூடிங் மீ...... அப்படி ஒரு இதயத் திருடன் இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் செய்துகிட்டது எந்த விதத்துல நியாயம்?"

"சொல்லிருந்தா என்ன செய்திருப்பிங்க!!!"

"சொல்லிருந்தா புண்பட்ட மனதை புகைவிட்டு ஆத்துன்ற மாதிரி நாங்களும், நமக்கெல்லாம் தமிழ் மாதிரி பீஸு தான் மாட்டும்னு நெனச்சு எங்களை நாங்களே தேத்திக்குவோம்ல..." என்று வருத்தப்படுவது போல் முகத்தை வைத்துக் கூறினாள்.

"அதுக்கு தான் சொல்லலே..." என்று தமிழைப் பார்த்து கண்ணடித்துக் கூறினான், தன்னால் ஒரு ஆண்மகன் வாழ்வு காப்பாற்றப்பட்டது என்ற பாணியில்.

விக்ரமின் பேச்சும் முகபாவனையும் இப்போது சிரித்தானா!!! என்று உற்றுநோக்கச் செய்வது போல் தான் பெறும்பாலும் இருந்தது.

"இப்படி நாலு பேர் இருந்தா போதும்... லவ் யூ என்று வார்த்தைய நாங்களும் யாருக்கும் சொல்ல முடியாது... எங்களுக்கும் யாரும் சொல்லமாட்டாங்க.... இதுக்கு பேர் தான், தானும் படுக்காம தள்ளியும் படுக்காம இருக்குறது..." என்று விக்ரமை குறைகூறிவது போல் கூறினாள்.

பதிலுக்கு விக்ரமோ "இப்போ கூட நான் சொல்ல ரெடி தான்... லவ் யூ பேபி" என்று, ஸ்ருதியைப் பார்த்துக் கூறிட, மலர் வாய்பிளந்து விக்ரமைப் பார்த்தாள். சற்று நேரத்திலேயே அவளது பார்வை அனலாய் மாறியது தெரிந்தும் விக்ரம் அதனை கண்டுகொள்ளவில்லை.

"அனல் காத்து பயங்கறமா வீசுது... அது புயல் காத்தா மாறுறதுக்குள்ள இந்த டாப்பிக்கை இதோட நிறுத்திகலாம்னு நெனைக்கிறேன்" என்று ஸ்ருதி கூறிட,

தமிழோ "உனக்கு தேவையானதும் கெடச்சுருச்சு... ஒரு அன்பான குடும்பத்துக்குள்ள கொலுத்தியும் போட்டாச்சு....?" என்றான்.

மேலும் பல பல கேலிக் கூத்துகள் அந்த மேடையில் அரங்கேறியது. விக்ரமையும், மலரையும் நடனமாடும்படி கூறிட, முடியவே முடியாது என்று மறுத்துவிட்டான் விக்ரம்.

அதேபோல் இறுதிவரை விக்ரமின் பார்வை நடிப்புக்காக கூட மலரை காதலாகப் பார்த்திடவில்லை. அதிலிருந்தே அவனது கோபம் இன்னும் குறையவில்லை என்று உணர்ந்து கொண்டாள் பெண்ணவள்.

படப்பிடிப்பு முடிந்து அனைவரும் புறப்பட, மலரின் கையைப் பிடித்தபடி கீழே இறங்கி வந்த விக்ரம் நேரே உதியிடம் சென்றான். உதியை நெருங்கும் முன்பாகவே மலர் அவனிடம் கெஞ்சத் தொடங்கியிருந்தாள்.

"உதி ண்ணா உங்ககிட்ட சொல்லிடலாம்னு தான் சொன்னாங்க... நான் தான் சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்னு சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்... உங்க கோபத்தை என்மேல மட்டும் காண்பிங்க ப்ளீஸ்..."

ஒருநொடி நின்று அவளைத் திரும்பிப் பார்த்தவன், அவளது கையை மேலும் கொஞ்சம் அழுத்தமாகப் பற்றி இழுத்துச் சென்றான்.

"இந்த வீடியோ எடிட் பண்றதுக்கு முன்னாடியும் எனக்கு அனுப்பு... எடிட்டிங் சீக்கிரம் முடிச்சிட்டு என் ப்ரைவேட் மெயிலுக்கு அனுப்பி வை..." என்று கூறிவிட்டு அடுத்த நொடி அங்கே நிற்கவில்லை.

விக்ரமின் இழுப்பில் தட்டுத்தடுமாறி நடந்து சென்ற மலர் உதியைத் திரும்பிப் பார்க்க, அவனோ 'கால் பண்றேன்' என்று சைகை செய்தான்.

மகிழுந்தில் அவளை அமர்த்தி மறக்காமல் இருக்கை பட்டையும் அவனே அணிவித்து அதன்பின் தான் மகிழுந்தைச் செலுத்தினான்.

சற்று நேரத்தில் மலரின் திறன்பேசி அதிர, அது உதி தான் என்று அறிந்தவன், அவள் கையிலிருந்து பரித்து,

"உன் பாப்பா இன்னும் பத்திரமா தான் இருக்கா... சும்மா சும்மா ஃபோன் பண்ணி தொல்லை பண்ணாதே... அப்பறம் உனக்கும் சேத்து அவளே மொத்தத்தையும் வாங்க வேண்டி வரும்" என்று கூறி இணைப்பை துண்டித்த கையோடு ஸ்விட்ச் ஆஃப் செய்து பின் சீட்டில் தூக்கி எறிந்தான்.

அந்த இரவு நேர இருட்டில், விக்ரமின் கையில் மகிழுந்து நெறிசலான சாலையில் லாவகரமாக வளைந்து தெளிந்து சென்று கொண்டிருந்தது. கொஞ்சம் தவறினாலும் நிச்சயம் அப்பளம் போல் நொருங்கவும் வாய்ப்புண்டு. அதனைக் கண்டவள் துணிவை வரவழைத்துக் கொண்டு,

"என்ன? இன்னொரு ஆக்ஸிடன்ட் பண்ணி ஆளையே காலி பண்ணிடலாம்னு பாக்குறிங்களா? செத்தாலும் ஆவியா வந்து உங்ககூட தான் குடும்பம் நடத்துவேன் பாத்துக்கோங்க..." என்று மிரட்டினாள்.

அவளது பேச்சைக் கேட்ட நொடி கொள்ளென சிரித்தான் விக்ரம்.

'எனக்கு இன்னும் சரியாகவில்லை என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறார், எனக்கு எப்பவோ நினைவு வந்துவிட்டது' என்று கூற நினைத்து தான் மலர் அவ்வாறு கூறினாள். அதுவும் விக்ரமின் அதிர்ச்சி பார்வையை எதிர்பார்த்து... ஆனால் அவனோ சிரித்துவிட, அவனும் அனைத்தும் தெரிந்து தான் தெரியாதது போல் நடித்திருக்கிறான் என்று புரிய, தைரியமாக மற்றொரு காரியம் செய்தாள்.

அவனது சிரிப்பை ரசித்தபடி "இப்படி சிரிச்சிட்டே இருந்தா எவ்ளோ அழகா இருக்கு... இப்படி இருக்குறதை விட்டுட்டு எப்போ பார் டெரர் லுக் விட்டு மொறைச்சிக்கிட்டே இருக்க வேண்டியது." என்று கூறிக் கொண்டே அவளும் உடன் இணைந்து சிரித்தபடி இருக்கைப் பட்டையை தளர்த்தி அவனை நெருங்கி அமர்ந்தாள்.

மீண்டும் முகம் இறுகியபடி "ஏய்... நகந்து உக்கார்... ஒழுங்கா சீட் பெல்ட் போடு" என்று அவளை எச்சரித்தபடி மகிழுந்தை ஓரம் கட்டினான்.

மலர் பதிலேதும் சொல்லாமல் சிணுங்கினாள். விக்ரம் சுற்றும் முற்றும் ஒருநொடி பார்வையை சுழலவிட்டு,

"பனி அதோ அந்த டர்னிங்ல திரும்பினா வீடு வந்திடும்... இன்னும் த்ரீ மினிட்ஸ் தான்... சொன்னா கேளு..."

"மாம்ஸ்... மாம்ஸ்... இன்னு கொஞ்ச தூரம் தானே... நான் உங்க பக்கத்துலேயே உக்காந்துப்பேனாம்... நீங்க ரெம்ப கேர் ஃபுல்லா ட்ரைவ் பண்ணுவிங்கலாம்..." என்று கெஞ்சினாள்.

"சொன்னா கேளுடி... என் உயிரை வாங்கவே வந்திருக்கிறே ராட்சசி... இதுல மாமா, மாம்ஸ்னு கொஞ்சிகிட்டு என்னையும் கிறுக்கு பிடிக்க வெக்கிறே" என்று தேளாய் கொட்டினான்.

அவன் ராட்சசி என்ற போதும் அதில் நிறைந்திருந்த காதல், மாமா என்ற அழைப்பில் பித்தனாகினேன் என்றுரைத்ததில் மொத்தமாய் பெண்ணவளை குளிர்வித்திருந்தது.

அதனாலேயே அவளும் அவனை விட்டு விலகி அமர்வதற்கு பதிலாக இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்து "நான் கூப்பிடுறது பிடிச்சிருந்தா அதை ரசிக்கனும்... இப்படி திட்டக் கூடாது... நான் நகர்ந்து உக்காரமாட்டேன்.. இப்படி இடிச்சிட்டு தான் உக்காருவேன்..." என்றாள் என்றும் இல்லாத உரிமையோடு...

விக்ரமோ செய்வதறியாது சற்று நேரம் அவளையே பார்த்துவிட்டு,

"பனி மா... டூ இயர்ஸ் பேக்... இதே போல ஒரு இரவு... இதே போல் ஒரு கார் ட்ரைவ்... அடுத்த டர்னிங்ல வீடு, ஆனா அன்னைக்கு என் பனி வேண்டா வெறுப்பா என்னை தீண்டினாள்... இன்னைக்கு டன் கணக்கா காதலோட ரெம்ப நெருக்கமா இருக்கா...." என்ற கூறிக் கொண்டே இடது கையால் அவளை அணைத்து, அவளது உச்சியில் தாடை பதித்து,

"இந்த காதலோட அவ கூட நான், என் லைஃப் டைமின் ஒருநாளைக் கூட வீனடிக்காம சந்தோஷமா வாழனும்..... அதனால இப்போ எந்த ரிஸ்க்கும் எடுக்க நான் தயார் இல்லே... சொன்னா புரிஞ்சிக்கோ... தள்ளி உக்காந்து ஷீட் பெல்ட் போடு" என்று கூறி மீண்டும் அவளின் மேலிருந்த கையை எடுத்துக் கொண்டான்.

இப்போது மலர் தன் பத்தனின் பனித்த கண்களை கண்டபடி தன் இருக்கை சென்று அமர்ந்து இருக்கைப் பட்டையையும் அணிந்து கொண்டாள் அவனுக்காக மட்டுமே. இல்லம் வந்து சேரும் வரை மகிழுந்தில் இன்னிசை மட்டுமே அவ்வெற்றிடத்தை நிரப்பியிருந்தது. ஆனால் மனதை இதமான இன்பமும், மூளையை அவரவர் துணைகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளும் நிறைத்திருந்தது.

தங்கள் அறைக்குள் நுழைந்தவுடன், விக்ரம் நேரே பால்கனி சென்று நின்று கொண்டான். மலர் குளித்து முடித்து வந்ததும், விக்ரமையும் குளிக்கச் செல்லும்படி கூறிவிட்டு, அடுமனை சென்றவள் இருவருக்குமாக தோசை வார்த்துக் கொண்டு, வீட்டில் அறைத்து வைத்திருந்த இட்லி பொடியும், நல்லெண்ணெயுமாக அறைக்குள் நுழைந்தாள்.

குளித்து முடித்து மீண்டும் பால்கனி சென்று நின்றிருந்த விக்ரம், மலரைக் கண்டதும் அவளருகே வந்து ஒரு கையில் வைத்திருந்த தட்டை வாங்கிக் கொண்டான்.

இருவரும் வெளிமாடத்திலேயே அமர்ந்து கொள்ள, விக்ரம் எப்போதும் போல் அவளுக்கு ஊட்டிவிட வேண்டி உணவுத் தட்டிற்கு கை நீட்ட, மலரோ அவனிடம் தர மறுத்து தான் ஊட்டிவிட்டாள்.

அதனை மறுக்காமல் உண்டவன் அவளையே இமைக்க மறந்து பார்த்திருந்தான். என்னவென்று புருவம் உயர்த்தி வினவியவளைக் கண்டு, "ஒன்னு இல்லே..." என்று இடவலமாகத் தலையசைத்தான்.

உணவுண்டு முடித்ததும் பாத்திரத்தை எடுத்து வைக்கக் கூட விடாமல் அவளைத் தடுத்து நிறுத்தி, அருகில் இழுத்து அமர்த்திக்கொண்டு

"நாளைக்கு நீ........ நாம உங்க வீட்டுக்கு போலாமா?" என்றான்.

அவன் என்ன கேட்க வருகிறான் என்று தெரிந்தும் "இது தான் என் வீடு மாமா.... என்னை இதைவிட்டு எங்கே போக சொல்றிங்க?" என்றாள்.

"உனக்கு நான் என்ன சொல்றேன்னு புரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறே பனிமலர்." என்று உர்ரென முகத்தை வைத்துக்கொண்டு உரைக்க

"இப்போ எதுக்கு என்னை எங்க வீட்டுக்கு அனுப்ப நினைக்கிறிங்க.... நீங்க தானே சொன்னிங்க... எனக்கு எல்லாம் நியாபகம் வந்தா நாமலும் நார்மல் கணவன், மனைவியா வாழ ஆரம்பிக்கலாம்னு... இப்போ என்னடானா என்னை விரட்டப் பாக்குறிங்க!!!" என்று அவளும் தன் சத்தத்தை உயர்த்தினாள்.

"ஒரு ஒன் மந்த் அங்கே இரு நான் உன்னை கூப்பிட வரேன்..." என்று குரலைத் தனித்து இறங்கி வந்தான்.

"முடியாது" என்று ஒற்றை வார்த்தையில் நிறுத்திக் கொண்டதோடு, அவனையும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

"பனி சொன்னா கேளுடி.... பிடிவாதம் பிடிக்காதே" என்று மீண்டும் பல்லைக் கடித்தபடி அவளை விலக்க முயற்சித்தான்.

அவனைவிட்டு நகர்ந்து நின்றவளின் கண்கள் ஏன் என்றே தெரியாமல் கலங்கி நின்றது. அதனைக் காணப் பொறுக்காதவன், "நீ என்ன பிடிவாதம் பிடிச்சாலும் நாளைக்கு ஊருக்குப் போறே... அவ்ளோ தான்" என்று கட்டளை போல் கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

காலை எப்போது எழுப்பும் மலரின் மலர்ந்த முகமும், மனமனக்கும் தேநீரும் இல்லாமல், அலார்ம் தான் ஒலித்தது. அதுவே விக்ரமின் மனதிற்குள் சிறிய அச்சத்தைப் பரப்பிட, சட்டென எழுந்து வீடு முழுதும் தேடிப் பார்த்தான். அவன் நினைத்தது போலவே பனிமலர் அங்கே இல்லை.

-தொடரும்.​